Monday, December 26, 2016

ஆண்டாளும் திருப்பாவையும்..



ஆண்டாள் என்னும் பெண்மணி மிகவும் பெருமை வாய்ந்தவள் - ஏன் தெரியுமா ? நம்முடைய தமிழ்நாட்டிலே பிறந்து , தமிழிலே பாடி, இறைவன் அடியை  சேர்வதற்கு எளிய மார்கத்தை இந்த உலகத்திற்கே காட்டிய பெண் அவள் தான். ஸ்ரீமத் பாகவதம் என்னும் நூல் வடமொழியில் உள்ளது - சாமான்யமாக எல்லோராலும் படித்து, புரிந்து கொள்ள முடியாது. அந்த நூல் மிகவும் அருமையான பக்தி நூல் ஆகும். கண்ணனின் வாழ்கையும், லீலைகளை  எல்லாம்  மிகவும் அருமையாக சொல்ல பட்டுள்ளது அந்த நூலில். அது மட்டும் அல்ல ஒன்பது விதமான பக்தி முறைகளையும் மிகவும் விரிவாக அந்த வடமொழி கிரந்தத்தில் தெள்ளத் தெளிவாகச் சொல்லப் பட்டுள்ளது.

ஒன்பது விதமான பகுதி என்றால் என்ன?
  1. சிரவணம் - இறைவன் புகழை இடைவிடாது கேட்டல் 
  2. கீர்த்தனம் - இறைவன் பெருமைகளை காதால் பாடுதல்
  3. சுமரணம் - இறைவன் பெருமைகளை மனத்தால் நினைத்தல்
  4. பாதசேவகம் - இறைவன் திருவடிகளைத் தொழுதல் 
  5. அர்ச்சனம்  - இறைவனை மலர்களால் பூஜித்தல்
  6. வந்தனம் - இறைவனை வணங்குதல் 
  7. தாஸ்யம் - இறைவனுக்கு அடிமை செய்தல் 
  8. சக்யம் - இறைவனைத்  தன்  நண்பனாக பாவித்து  பக்தி  பண்ணுதல் 
  9. ஆத்ம நிவேதனம் - தன்னையே இறைவனுக்கு அற்பணித்தல்
மேற்கூறிய பக்தி  வகைகளில் ஆண்டாள் செய்யாத பக்தியே இல்லை. அத்தனையும் தாண்டி, கண்ணனுக்கு , சரணாகதி செய்து , தன்னையே அர்பணித்துக் கொண்டாள். அது மட்டுமா? இன்னும் இருக்கின்றது -  பெரியாழ்வார்  என்ற விஷ்ணுசித்தன் தினமும்  இறைவனாகிய வடபத்ரசாயீ எனப்படும் ஆலின் இலை மேல் கிடந்த பெருமாளுக்குத் தொடுத்துச் செல்லும் பூ மாலையைத் தான் அணிந்த பிறகு இறைவனுக்குச் சமர்ப்பித்து - சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற பெயரையும் பெற்றாள் நம் ஆண்டாள். இவ்வளவு பெருமைகள் பெற்ற , நம் ஆண்டாள் - தெள்ளிய தமிழில் அருமையான பாடல்கள் பாடி தன்னுடைய அந்தத் திருமேனியுடன் இறைவனிடத்தில் சென்று அடைந்தாள்.  எப்படிப் பட்ட பெருமை என்று பார்த்தீர்களா? ஒவ்வொரு சாமான்யமான  மனிதனும் எப்படி இறைவனை வணங்க வேண்டும் என்றும், எப்படி இறைத்தொண்டு  செய்ய வேண்டும் என்றும் இந்த உலகத்துக்கே எடுத்து சொன்ன நம்முடைய தமிழ்ப் பெண் ஆண்டாள்.

காசு வாங்கி  கொண்டு கேவலமான கவிதைகளை அவிழ்த்து விட் விட்டு, "சுய மரியாதை" என்று பிதற்றிக் கொண்டிருக்கும் வெட்கம்  கெட்டவர்கள் எல்லாம் - ஆண்டாளின் பக்தியைப் பார்த்து ஒரு நல்ல பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தப் பூவுலக மாந்தர்கள் லோரும் ஒன்றாகச் சென்று  இறைவனைப் பாடினால், மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து, அதன் பிறகு இறைவனைச் சென்று அடையலாம் என்னும் விஷயத்தை , தெள்ளத் தெளிவாக கட்டி விட்டாள் நம் ஆண்டாள்.

திருப்பவவை என்னும் நூலில் 30 பாடல்கள் -  மிகவும் பிரசித்தி பெற்ற பாடல்கள். அந்தப் பாடல்கள் வைணவர்களுள்க்கு மட்டுமே தெரிந்து கொண்டு இருந்தன. கஞ்சி பரமாச்சாரியார், அரியக்குடி இராமானுஜ ஐயங்காரை, அழைத்து அப்பாடல்கள்  முப்பத்தையும் இனிமையான கர்நாடக இராகங்களில்  இசைப் படுத்தும் படி கூறினார். ஆச்சாரியாருடைய வேண்டுகோளுக்கு இணங்க , அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் மிகவும்  அழகான இராகங்களில் இசை அமைத்தார். அவற்றை காலம் சென்ற கலைஞர் திரு  (MLV)  வசந்தகுமாரி அவர்கள் மிகவும் அருமையான குரலில் பாடவும் செய்தார். அப்படி ஆகத்தானே நம் அனைவரும் இன்றைக்கு அப்பாடல்களை, அனுபவித்து வருகின்றோம்.

அதே போல, பாவை நோன்பு இருந்து, அதன் பிறகு ஆண்டாள் இறைவனுடன் திருமணம் நடப்பதை போல கனவு காண்கின்றாள். அந்தக் கனவையும் தெள்ளு தமிழில் வரணமும் ஆரியம் என்று துவங்கும் பிறகு பாடல்களாகப் பாடி உள்ளாள்.

அதன் பிறகு இறைவனை அடைய, அவனுடைய ஆயுதங்களாகிய சங்கு, சக்கரம் போன்றவற்றை தூதாக அனுப்பி பாடல்கள் பாடினாள்.

இப்படியாகத் தானே மொத்தம் நூற்று நாற்பது மூன்று  பாடல்கள் நாச்சியார் திருமொழி என்றும், முப்பது பாடல்கள் திருப்பாவை என்றும் ஒரு நோற்று எழுபது மூன்று பாடல்கள்  பாடி நம் தமிழ் நாட்டு மக்களை மட்டும் அல்லது உலகில் உள்ள யாவரையும்  அனுக்கிரஹம் எய்தல் ஆண்டாள்.

பெரியாழ்வார் ஆண்டாளை ஒரு பல்லக்கில் வைத்து , திருவரங்கத்திற்கு எடுத்துச் செல்ல, ஆண்டாள்   தன்னுடைய அந்த உடலோடு அப்படியே திருவரங்கனுடன் ஒன்றாக இணைந்தாள். தன்னுடைய மக்களை இழந்த சோகம் தாளாமல் , பெரியாழ்வார் இறைவனையும் ஆண்டாளையும், ஸ்ரீ வில்லிப்புத்தூரில்   வந்து வைதிக முறைப் பாடி  திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார். வேதோக்தமாக, எல்லா சடங்குகளையும் செய்து, தன்னுடைய மகளாகிய ஆண்டாளை , திருவரங்க நாதருக்குத் திருமணம்  செய்து கொடுத்த்தார் பெரியாழ்வார். அப்படியாகத்தானே பாண்டிய நாடே மெச்சும் அளவிற்கு  ஆண்டாள், ரெங்கமன்னர் திருமணம் நடந்து முடிந்தது.

தன்னுடைய ஆசை மகளுடைய, ஞாபகத்திற்கு , ஆண்டாள் முகச்சாயல் உடனே ஒரு   விக்ராஹத்தை, நிறுவி அவளுடனே தன்னையும் (தன்னுடைய மருமகன் ஆகிய ரங்கம்னார்யும் சிலை வைடிவமாக நிறுவினார் பெரியாழ்வார். என்ன பெருமை பார்த்தீர்களா? தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும், தமிழர்களுக்கும்  ஆண்டாள்  மற்றும் பெரியாழ்வார் இயற்றிய சேவையை , நம் எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும்.

தமிழர்களுக்கு, இதைவிடப் பெருமை வேறு என்ன இருக்க முடியும் ? அரசியல் காரணங்களுக்கு   ஆகவும், சுயநலமான காரணங்களுக்கு ஆகவும் சுய மரியாதை என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றும் தலைவர்கள் எல்லோரும் ஆண்டாள் செய்த சேவையை மனதில் கொள்ள வேண்டும்.