Sunday, April 29, 2018

ந்ருஸிம்ஹனும் சிவனும் ஒன்று - ந்ருஸிம்ஹ தாபினி உபநிஷத்து



ருʼதம் ஸத்யம் பரம் ப்³ரஹ்ம புருஷம் க்ருʼஷ்ணபிங்க³லம் ।
ஊர்த்⁴வரேதம் விரூபாக்ஷம் ஶங்கரம் நீலலோஹிதம் ॥


இந்த மந்திரம் நமக்கு அனைவருக்கும் தெரிந்த மந்திரமே. சந்தியா வந்ததில் சமஷ்டி அபிவாதனத்தில் , ஹரிஹர வந்தனம் செய்யும் மந்திரம். உபநிஷத்துக்கள் ஒரு போதும் பேதத்தை போதிக்கத்து. எந்த புருஷன், சத்யமாகவும், பரப்பிரம்ம வடிவாகவும் இருக்கின்றானோ, எவன் திருமாலின் கருநிறத்துடனும், சிவனின் செந்நிறத்துடனும் இருக்கின்றானோ, எவன் சங்கரனாக இந்த உலகை காக்கின்றானோ, எவன் நீல நிறம் உள்ள கழுத்தை உடையவனோ அவனுக்கு நமஸ்காரம். ந்ருஸிம்ஹனும் சிவன் ஒன்று என்று பொருள் படுகின்றது.(எனவே தான் ந்ருஸிம்ஹனுக்கு பிரதோஷ பூஜை செய்ய படுகின்றது. சிவன் வேறு ந்ருஸிம்ஹன் வேறு அல்ல).

உமாபதி: பஶுபதி: பிநாகீ ஹ்யமிதத்³யுதி: ।
ஈஶாந: ஸர்வவித்³யாநாமீஶ்வர: ஸர்வபூ⁴தாநாம்
ப்³ரஹ்மாதி⁴பதிர்ப்³ரஹ்மணோঽதி⁴பதிர்யோ வை யஜுர்வேத³வாச்யஸ்தம்
ஸாம ஜாநீயாத்³யோ ஜாநீதே ஸோঽம்ருʼதத்வம் ச க³ச்ச²தி

எவன் உமாபதியாக, பசுபதியாக, பினாகம் என்னும் வில்லை உடையவனாக, இருக்கின்றானோ , எவன் அணைத்து வித்யைகளுக்கும் முடிவாக இருக்கின்றானோ, அணைத்து படைப்புகளுக்கும் ஈஸ்வரனாக இருக்கின்றானோ, பிரும்மமாகவும், ப்ரும்மாவிற்கு தலைவனாகவும் உள்ளானோ - அவனை அறிவார்கள் அம்ருதத்வம் அடைவார்கள். மேற்கூறிய மந்திரங்கள் அனைத்தும் பஞ்ச ப்ரஹ்மமா உபநிஷத்திலும் இருக்கின்றன. எனவே சிவன் வேறு நரசிம்மன் வேறு அல்ல என்று இந்த உபநிஷதம் சொல்கின்றது.


ராமன் போதிக்கும் கைவல்ய முக்தி...


இயம் கைவல்யமுக்திஸ்து கேநோபாயேந ஸித்³த்⁴யதி ।
மாண்டூ³க்யமேகமேவாலம் முமுக்ஷூணாம் விமுக்தயே ॥ 26॥

நால்வகை முத்திகளை பற்றி சொல்லி முடித்த ராமன், அந்த கைவல்ய முக்தியை அடைய, மாண்டூக்ய உபநிஷத்தை மட்டும் படித்தாலே போதுமானது என்கிறான். மோக்ஷத்தில் இச்சை உள்ள முமுக்ஷுக்கள், மாண்டூக்ய உபநிஷத்தை  மட்டும் படித்தாலே போதும்.

ததா²ப்யஸித்³த⁴ம் சேஜ்ஜ்ஞாநம் த³ஶோபநிஷத³ம் பட² ।
ஜ்ஞாநம் லப்³த்⁴வா சிராதே³வ மாமகம் தா⁴ம யாஸ்யஸி ॥ 27॥

மாண்டூக்யத்தை மட்டும் படித்து ஞானம் சித்திக்காவிடின், முதற் பத்து உபநிஷத்துக்களை படி. அப்படி உபநிஷத்துக்களை படித்து பெரும் ஞானத்தால் நிரந்தரமாக எந்தனை அடைவாய்.

ததா²பி த்³ருʼட⁴தா ந சேத்³வித்³ஜ்ஞாநஸ்யாஞ்ஜநாஸுத ।
த்³வாத்ரிம்ஶாக்²யோபநிஷத³ம் ஸமப்⁴யஸ்ய நிவர்தய ॥ 28॥

முதற்பத்து உபநிஷதங்களை படித்து  திடமான ஆத்ம ஞானம் - ஆன்மாவை பற்றிய அறிவானது கிட்டா விடின், முதல் முப்பத்தி இரண்டு உபநிஷதங்களை படிப்பதனால், அனைத்து ஐயங்களும் தீரும்.

விதே³ஹமுக்தாவிச்சா² சேத³ஷ்டோத்தரஶதம் பட² ।
தாஸாம் க்ரம ஸஶாந்திம் ச ஶ்ருணு வக்ஷ்யாமி தத்த்வத: ॥ 29॥

விதேஹ முக்தி - அதாவது, இந்த உடல் இல்லாமல் முக்தி அடைய ஒரு நூற்று எட்டு உபநிஷதங்களை படிக்க வேண்டும். அந்த உபநிஷதங்கள் வரிசை கீழ் வருமாறு - என்று பட்டியல் இடுகின்றான்.

ஏவமஷ்டோத்தரஶதம் பா⁴வநாத்ரயநாஶநம் ।
ஜ்ஞாநவைராக்³யத³ம் பும்ஸாம் வாஸநாத்ரயநாஶநம் ॥ 40॥

இப்படி ஒரு நூற்று எட்டு உபநிஷத்துக்கள் உடல், மனம் இந்திரியங்கள் என்ற மூன்று பாவனைகளையும், அழித்து ஞான , வைராக்கியங்களை அளித்து , மூன்று விதமான வாசனைகள் - லோக வாசனை, தேஹ வாசனை, சாஸ்திர வாசனை - ஆகிய அனைத்து வாசனைகளையும் அகற்றும்.

பூர்வோத்தரேஷு விஹிததத்தச்சா²ந்திபுர:ஸரம் ।
வேத³வித்³யாவ்ரதஸ்நாததே³ஶிகஸ்ய முகா²த்ஸ்வயம் ॥ 41॥

குருவின் திருவாக்கில் இருந்து , இல்லா விடின் சந்யாசிகள் இடத்திலோ இப்படி ஷாந்தி பாடம் போன்றவற்றை படிக்க வேண்டும்.

க்³ருʼஹீத்வாஷ்டோத்தரஶதம் யே பட²ந்தி த்³விஜோத்தமா: ।
ப்ராரப்³த⁴க்ஷயபர்யந்தம் ஜீவந்முக்தா ப⁴வந்தி தே ॥ 42॥

இருபிறப்பாளர்கள் இப்படி ஒரு நூற்று எட்டு உபநிஷதங்களை படிப்பதனால், இந்த உலகியல் வாழ்க்கை என்ற ப்ராரப்தம் அழிந்து அவர்கள் ஜீவன் முக்தர்கள் ஆகின்றனர். அதாவது தங்களுடைய ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்தவர்களாகி, ஜீவ பேதத்தை  ஒழித்தவர்களாகி, தங்கள் ஆத்மாவை உணர்ந்தவர்களாகி ஜீவ பேதத்தில் இருந்து விடுதலை பெறுகின்றார்கள்.

தத: காலவஶாதே³வ ப்ராரப்³தே⁴ து க்ஷயம் க³தே ।
வைதே³ஹீம் மாமகீம் முக்திம் யாந்தி நாஸ்த்யத்ரஸம்ஶய: ॥ 43॥

அப்படியே காலப்போக்கில் அவர்கள் , ப்ராரப்தம் என்பது அழிந்து, விதேஹ முக்தி அடைந்து ப்ரம்மத்துள் கலந்து விடுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஸர்வோபநிஷதா³ம் மத்⁴யே ஸாரமஷ்டோத்தரஶதம் ।
ஸக்ருʼச்ச்²ரவணமாத்ரேண ஸர்வாகௌ⁴க⁴நிக்ருʼந்தநம் ॥ 44॥

பல (ஆயிரம்) உபநிஷத்துக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த நூற்று எட்டு உபநிஷத்துக்கள் அனைத்து உபநிஷத்துக்கள் சாரம். இந்த ஒரு நூற்று எட்டு உபநிஷத்துக்களை கேட்ட மாத்திரத்திலேயே அனைத்து பாபங்களும் துலைந்து விடும்.


ஜ்ஞாநதோঽஜ்ஞாநதோ வாபி பட²தாம் ப³ந்த⁴மோசகம் ।
ராஜ்யம் தே³யம் த⁴நம் தே³யம் யாசத: காமபூரணம் ॥ 45॥

பூர்ண ஞானத்துடனோ, பூர்ண ஞானம் இல்லாமலோ படித்தாலும் இந்த உபநிஷத்துக்கள் உலகியல்  பற்றை (பந்தம்) நாசம் செய்யும். ராஜ்ஜியம், செல்வம் எதனை வேண்டுமானாலும் தரலாம்.

இத³மஷ்டோத்தரஶதம் ந தே³யம் யஸ்ய கஸ்யசித் ।
நாஸ்திகாய க்ருʼதக்⁴நாய து³ராசாரரதாய வை ॥ 47॥

ஆனால் இந்த நூற்று எட்டு உபநிஷதங்களை மட்டும் பார்த்தவர்களுக்கு எல்லாம் அளித்து விட முடியாது. நாஸ்தீகர்கள், நன்றி மறந்தவர்கள்,  ஒழுங்கீனமானவர்கள் - இவர்களுக்கு எக்காரணத்தி கொண்டு இந்த உபநிஷதங்களை கற்று தர கூடாது.

மத்³ப⁴க்திவிமுகா²யாபி ஶாஸ்த்ரக³ர்தேஷு முஹ்யதே ।
கு³ருப⁴க்திவிஹீநாய தா³தவ்யம் ந கதா³சந ॥ 48॥

பக்திக்கு எதிரானவன், தப்பான சாஸ்திரங்களால் மதி இழந்தவன், குருபக்தி இல்லாதவன் - இவர்களுக்கு இந்த உபநிஷதடி ஒருக்காலும் சொல்லித் தரக் கூடாது.

ஸேவாபராய ஶிஷ்யாய ஹிதபுத்ராய மாருதே ।
மத்³ப⁴க்தாய ஸுஶீலாய குலீநாய ஸுமேத⁴ஸே ॥ 49॥

பக்தர்கள், நல்லொழுக்கம் உள்ளவர்கள், சேவை செய்பவர்கள், சீடர்கள், நற்குலத்தில் பிறந்தவர்கள், நல்ல புத்தி உடையவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த நூற்று எட்டு உபநிஷதங்கள் கற்று தரப்படலாம்.

ஸம்யக் பரீக்ஷ்ய தா³தவ்யமேவமஷ்டோத்தரம் ஶதம் ।
ய: படே²ச்ச்²ருʼணுயாத்³வாபி ஸ மாமேதி ந ஸம்ஶய: ।

மாணவனுக்கு உண்மையிலேயே சிரத்தை இருக்கின்றதா என்று பரீக்ஷித்து விட்டு, பிறகு தான் சொல்லித் தர வேண்டும்.

ததே³தத்³ருʼசாப்⁴யுக்தம் ।
வித்³யா ஹ வை ப்³ராஹ்மணமாஜகா³ம
     கோ³பாய மா ஶேவதி⁴ஷ்டீঽஹமஸ்மி ।
அஸூயகாயாந்ருʼஜவே ஶடா²ய
     மா மா ப்³ரூயா வீர்யவதீ ததா² ஸ்யாம் ।
யமேவ வித்³யாஶ்ருதமப்ரமத்தம்
     மேதா⁴விநம் ப்³ரஹ்மசர்யோபபந்நம் ।
தஸ்மா இமாமுபஸந்நாய ஸம்யக்
     பரீக்ஷ்ய த³த்³யாத்³வைஷ்ணவீமாத்மநிஷ்டா²ம் ॥ 1॥ இதி ॥

இப்படி,  யாருக்கு வேதங்களை சொல்லி தர வேண்டும் என்பதை பற்றிய வேத வாக்கியத்தை ராமர் இங்கு உறைக்கின்றார். வித்யை ஆனவள், ப்ராம்மணனிடத்தில் வந்து, கீழ் வருமாறு கூறினாள். "நான் உன்னுடைய சொத்து. எந்தனை காப்பாற்ற வேண்டியது உந்தன் கடமை. எனவே பொறாமை கொண்டவர்கள், வஞ்சகர்கள், பொய்யர்கள் - ஆகியோருக்கு எந்தனை சொல்லி தர கூடாது. தீர பரிக்ஷித்த பிறகு  மேதாவிகளுக்கும், ப்ரஹ்மச்சாரிகளுக்கும் சொல்லி தரலாம்."

முக்திகோபநிஷத்தில் ராமர் உபதேசிக்கும் சாலோக்கியம், சாரூப்பியம், சாமீப்பியம், சாயுஜ்ஜியம் போன்ற முக்திகள்...



சாலோக்கியம் - இறைவனுடன் ஒரே உலகத்தில் வசிப்பது, சாரூப்பியம் - இறைவனுடைய அதே ரூபத்தை தரிப்பது, சாமீப்பியம் - இறைவனுடன் அருகாமையில் வசிப்பது, சாயுஜ்யம் - இறைவன் திருவைத்யாய் அடைதல்

கைவல்யமுக்திரேகைவ பரமார்தி²கரூபிணீ ।
து³ராசாரரதோ வாபி மந்நாமப⁴ஜநாத்கபே ॥ 18॥

ஸாலோக்யமுக்திமாப்நோதி ந து லோகாந்தராதி³கம் ।
காஶ்யாம் து ப்³ரஹ்மநாலேঽஸ்மிந்ம்ருʼதோ மத்தாரமாப்நுயாத் ॥ 19॥

கைவல்ய முக்தியே மிக சிறந்தது. ஆனால் தீய ஒழுக்கம் உடையவர்கள் கூட, என் நாமத்தை வழிபடுவதால் சாலோக்கியம் போன்ற முக்தியை அடைகின்றார்கள். காசியில் ப்ராம்மணாளம் என்னும் இடத்தில மரிப்பவர்கள், தாமே ராம தாரக மந்திரத்தை பெற்று  என்னிடத்தில் வந்து அடைகின்றார்கள் என்கிறார் ராமர்.

புநராவ்ருʼத்திரஹிதாம் முக்திம் ப்ராப்நோதி மாநவ: ।
யத்ர குத்ராபி வா காஶ்யாம் மரணே ஸ மஹேஶ்வர: ॥ 20॥

காசியில் அங்கு இங்கு என்று அனைத்து இடங்களிலும் மரிப்பவர்களுக்கு , சாலோக்கியம் போன்ற முக்தியை அளிக்கின்றார் மகேஸ்வரன். அதாவது ஜனன மரணங்களுக்கு அப்பாற்பட்ட சாலோக்கியாதி நால்வகை முக்தியை அளிக்கின்றார் மகேஸ்வரன்.

ஜந்தோர்த³க்ஷிணகர்ணே து மத்தாரம் ஸமுபாதி³ஶேத் ।
நிர்தூ⁴தாஶேஷபாபௌகோ⁴ மத்ஸாரூப்யம் ப⁴ஜத்யயம் ॥ 21॥

உயிரினங்களின் வலது காதுகளில் ராம தாரக மந்திரத்தை ஓதி,  அவர்கள் பாபங்களை அழிக்கின்றார். அதனால் அவர்கள் என்னைப்போலவே உருவம் - சாரூப்பியம் பெற்று, என்னிடத்தில் அடைகின்றனர் என்கிறார் ராமர்.

ஸைவ ஸாலோக்யஸாரூப்யமுக்திரத்யபி⁴தீ⁴யதே ।
ஸதா³சாரரதோ பூ⁴த்வா த்³விஜோ நித்யமநந்யதீ:⁴ ॥ 22॥

இதுவே  சாரூப்பியம், சாலோக்கியம் என்ற இருவகை முக்திகள் ஆகும். பிறப்பொழுக்கத்தை கடைபிடிக்கும் துவிஜர்கள் , என்னுடைய அருகாமையை அடைகின்றார்கள்.

மயி ஸர்வாத்மகோ பா⁴வோ மத்ஸாமீப்யம் ப⁴ஜத்யயம் ।
ஸைவ ஸாலோக்யஸாரூப்யஸாமீப்யா முக்திரிஷ்யதே ॥ 23  ||

எந்தனை யார் ஒருவர் அனைத்திலும் உறைபவனாகி , எப்பொழுதும் உபாசிக்கின்றார்களோ, அவர்கள் என்னுடைய சாயுஜ்யத்தை அடைகின்றார்கள்.  அதே போல சாலோக்கியம், சாரூப்பியம், சாமீப்பியம், சாயுஜ்ஜியம் போன்ற நால்வகை முத்திகளும் எந்தனை வணங்குவதால் அடைய பெரும்.

கு³ரூபதி³ஷ்டமார்கே³ண த்⁴யாயந்மத்³கு³ணமவ்யயம் ।
மத்ஸாயுஜ்யம் த்³விஜ: ஸம்யக்³ப⁴ஜேத்³ப்⁴ரமரகீடவத் ॥ 24॥

ஸைவ ஸாயுஜ்யமுக்தி: ஸ்யாத்³ப்³ரஹ்மாநந்த³கரீ ஶிவா ।
சதுர்விதா⁴ து யா முக்திர்மது³பாஸநயா ப⁴வேத் ॥ 25॥

குருவுபதேசத்தினால் மட்டும் ஒருவன் தியானம் போன்ற வழிமுறைகளால், எவன் எந்தனை உபாசிக்கின்றானோ, அவன் எப்படி ஒரு புழுவானது தேனியாக மாறுகின்றதோ அப்படி என்னுடைய சாயுஜ்யத்தை அடைகின்றான். அந்த சாயுஜ்யம் என்னும் முக்தியே ப்ரம்மானந்தத்தை பிறப்பிக்க கூடியது. அதே போல , சாயுஜ்யம் , சாலோக்கியம், சாமீப்பியம், சாரூப்பியம் என்ற நால் வகை முதிகளையும் அவன் அடைகின்றான்.

Tuesday, April 24, 2018

கீதாச்சார்யன் போதிக்கும் ஞானமும், மாயையும்.....



अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन्।
प्रकृतिं स्वामधिष्ठाय संभवाम्यात्ममायया।।4.6।।

।4.6।। अजोऽपि जन्मरहितोऽपि सन् तथा अव्ययात्मा अक्षीणज्ञानशक्तिस्वभावोऽपि सन् तथा भूतानां ब्रह्मादिस्तम्बपर्यन्तानाम् ईश्वरः ईशनशीलोऽपि सन् प्रकृतिं स्वां मम वैष्णवीं मायां त्रिगुणात्मिकाम् यस्या वशे सर्वं जगत् वर्तते यया मोहितं सत् स्वमात्मानं वासुदेवं न जानाति तां प्रकृतिं स्वाम् अधिष्ठाय वशीकृत्य संभवामि देहवानिव भवामि जात इव आत्ममायया आत्मनः मायया न परमार्थतो लोकवत्।।तच्च जन्म कदा किमर्थं च इत्युच्यते

பிறப்பு அற்றவனாகவும்,  எப்பொழுதுமே தூய்மையாக இருக்கும் தன்மை உடையனனாகவும், குறைவற்ற, நிலையான  சக்தியை உடையவனாகவும்,
ஆத்ம ஸ்வரூபனாகவும், படைப்புகளுக்கு அனைத்திற்கும் ஈஸ்வரனாகவும், இருக்கும் கண்ணன் மாறுதல்களுக்கு அப்பாலாகி இருக்கின்றான்.  முக்குணங்கள் படைத்தவளாகிய ப்ரக்ருதியியாக இருக்கும் தன்  மாயையால், தன்னுடைய சொந்த விருப்பதாலும் பல பிரிவைகளை, - நாம, ரூபங்களை எடுக்கிறான் கண்ணன். ஸர்வவ்யாபியாக , சர்வாந்தர்யாமியாக இருப்பதே கண்ணனின் நிஜ ஸ்வரூபம் . ஆனால், மாயைக்கு உட்பட்டு பல பிறவிகள் (விபவங்கள்)  , நாம ரூபங்களை தரிக்கிறான் கண்ணன்.


दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया।
मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते।।7.14।।

।7.14।। दैवी देवस्य मम ईश्वरस्य विष्णोः स्वभावभूता हि यस्मात् एषा यथोक्ता गुणमयी मम माया दुरत्यया दुःखेन अत्ययः अतिक्रमणं यस्याः सा दुरत्यया। तत्र एवं सति सर्वधर्मान् परित्यज्य मामेव मायाविनं स्वात्मभूतं सर्वात्मना ये प्रपद्यन्ते ते मायाम् एतां सर्वभूतमोहिनीं तरन्ति अतिक्रामन्ति ते संसारबन्धनात् मुच्यन्ते इत्यर्थः।।यदि त्वां प्रपन्नाः मायामेतां तरन्ति कस्मात् त्वामेव सर्वे न प्रपद्यन्ते इत्युच्यते

கண்ணன் இங்கு சொல்லும் பொழுது, தன்னுடையதான   மாயை முக்குணங்கள் உண்டாயவள். அதாவது , சத்வம், ராஜஸ்ஸு, தமஸ்ஸு என்ற குக்குணங்களும், ப்ரக்ருதி ரூபிணியாக இருப்பவள்.  எனவே, சாமான்ய ஜீவர்களை மோஹிப்பித்து, அவள் அந்த ஜீவர்களுடைய ஆத்ம ஸ்வரூபத்தை மறைத்து ஜாலம் காட்டுகின்றாள். கண்ணனிடத்தில், மற்ற அனைத்து தர்மங்களையும் ஒழிந்து, எவன் சரணாகதி செய்கின்றானோ, அவனே அந்த
மாயை கடந்து பூர்ண ஞானத்தை  அடைகின்றான். அதன் பிறகு, விவேகத்தால் ஆத்மா எது, ஆத்ம எது இல்லை(அனாத்மா) என்று அறிந்து பூர்ண ஞானத்தையும், ஜீவன் முக்தியையும் பெறுகின்றான்.

न मां दुष्कृतिनो मूढाः प्रपद्यन्ते नराधमाः।
माययापहृतज्ञाना आसुरं भावमाश्रिताः।।7.15।।

।।7.15।। न मां परमेश्वरं नारायणं दुष्कृतिनः पापकारिणः मूढाः प्रपद्यन्ते नराधमाः नराणां मध्ये अधमाः निकृष्टाः। ते च मायया अपहृतज्ञानाः संमुषितज्ञानाः आसुरं भावं हिंसानृतादिलक्षणम् आश्रिताः।।ये पुनर्नरोत्तमाः पुण्यकर्माणः

மேற்கூறியபடி , எதனால் சிலர் கண்ணனிடத்தில் சரணாகதி செய்வதில்லை என்பதற்கு கருணாமயனாகிய  கண்ணன்  இங்கே விளக்கம் தருகின்றான். மாயையால் தங்கள் ஞானத்தை இழந்த மூடர்கள், தீவினைகளை செய்தவர்கள், அந்த கண்ணனிடத்தில் பிரபத்தி பண்ணுவதில்லை. அதனால் அவர்களுக்கு அசுர பாவம் ஏற்படுகின்றது. அதனால் அவர்கள் கொடூரம், பொய் போன்ற தமோ குணவந்தர்களாக ஆகிவிடுகின்றார்கள்.

अव्यक्तं व्यक्ितमापन्नं मन्यन्ते मामबुद्धयः।
परं भावमजानन्तो ममाव्ययमनुत्तमम्।।7.24।।

।।7.24।। अव्यक्तम् अप्रकाशं व्यक्तिम् आपन्नं प्रकाशं गतम् इदानीं मन्यन्ते मां नित्यप्रसिद्धमीश्वरमपि सन्तम् अबुद्धयः अविवेकिनः परं भावं परमात्मस्वरूपम् अजानन्तः अविवेकिनः मम अव्ययं व्ययरहितम् अनुत्तमं निरतिशयं मदीयं भावमजानन्तः मन्यन्ते इत्यर्थः।।तदज्ञानं किंनिमित्तमित्युच्यते

சர்வேஸ்வரனான கோபாலன் இங்கு, தன்னுடைய நிஜ ஸ்வரூபம் அவ்யக்தம் அதாவது , நிர்குண ஸ்வரூபம். நாம் ரூபங்களுக்கு அப்பாற்பட்டதாக ஸ்வரூபமே அவனுடைய ஸ்வரூபம் என்கிறான். ஆத்ம ஞானம் சிந்தித்த பேர்களுக்கே அவனுடைய அந்த ஸ்வரூபம்  புலப்படும். ஆனால், ஞானம் அற்ற அஞ்ஞானிகள் அவனை ஒரு வ்யக்தி - அதாவது ஒரு தேவனாகவோ , நாம ரூபங்கள் உள்ளவனாகவோ , மாறுதல்களுக்கு உட்பட்டவனாகவோ நினைத்துக் கொள்கின்றார்கள். ஞானிகளுக்கு மாத்திரமே அவன் அவ்யக்தன்,
ஆத்ம ஸ்வரூபன், மாறுதல்களுக்கு அப்பாற்பட்டவன், என்ற அறிவும், விவேகமும் ஏற்படும்.

नाहं प्रकाशः सर्वस्य योगमायासमावृतः।
मूढोऽयं नाभिजानाति लोको मामजमव्ययम्।।7.25।।

।।7.25।। न अहं प्रकाशः सर्वस्य लोकस्य केषांचिदेव मद्भक्तानां प्रकाशः अहमित्यभिप्रायः। योगमायासमावृतः योगः गुणानां युक्ितः घटनं सैव माया योगमाया तया योगमायया समावृतः संछन्नः इत्यर्थः। अत एव मूढो लोकः अयं न अभिजानाति माम् अजम् अव्ययम्।।यया योगमायया समावृतं मां लोकः नाभिजानाति नासौ योगमाया मदीया सती मम ईश्वरस्य मायाविनो ज्ञानं प्रतिबध्नाति यथा अन्यस्यापि मायाविनः मायाज्ञानं तद्वत्।।
यतः एवम् अतः

கண்ணன், மேற்கூறிய அஞ்ஞானத்திற்கு காரணம் சொல்லுகின்றான் . அனைவருக்கும் பூர்ண ஞானம் , சித்தித்து அவனுடைய நிஜ ஸ்வரூபம்  வெளிப்படாமல் இருப்பதற்கு காரணம் யோகமாயை  தான்.  மூடர்களான அந்த  அஞ்ஞானிகள், மாயைக்கு உட்பட்டு இருப்பதால், கண்ணனின் நிஜ ஸ்வரூபம் அவ்யயம்  - அதாவது வாக் மனங்களுக்கு அப்பாற்பட்டதாக, ஆத்ம ஸ்வரூபமாக, பாரமார்த்திக வஸ்துவாக அவர்களுக்கு புலப்படுவதில்லை. கண்ணனை ஒரு தேவனாகவோ, ஒரு நாம ரூபமாகவோ அவர்கள் மாயை காண்பித்து அவர்களை மூடர்களாக ஆக்குகின்றது.

ईश्वरः सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति।
भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया।।18.61।।

।।18.61।। -- ईश्वरः ईशनशीलः नारायणः सर्वभूतानां सर्वप्राणिनां हृद्देशे हृदयदेशे अर्जुन शुक्लान्तरात्मस्वभावः विशुद्धान्तःकरणः -- अहश्च कृष्णमहरर्जुनं च (ऋ. सं. 6।9।1) इति दर्शनात् -- तिष्ठति स्थितिं लभते। तेषु सः कथं तिष्ठतीति? आह -- भ्रामयन् भ्रमणं कारयन् सर्वभूतानि यन्त्रारूढानि यन्त्राणि आरूढानि अधिष्ठितानि इव -- इति इवशब्दः अत्र द्रष्टव्यः -- यथा दारुकृतपुरुषादीनि यन्त्रारूढानि। मायया च्छद्मना भ्रामयन् तिष्ठति इति संबन्धः।।

ஈஸ்வரன் அனைவரின் ஹ்ருதயத்திலும் வசிக்கின்றான்.  சர்வேஸ்வரனான ஸ்ரீமன் நாராயணன், அனைத்து உயிர்களின்  இதயத்திலும் இருக்கின்றான். அவன் மாயை என்னும் அச்சாணியில் சுற்றும் இயந்திரங்களை போல , அனைத்து உயிர்களையும் சுழல செய்கின்றான். அதவாது மாயையால் மனமானது சுழன்று கொண்டிருக்க,  ஈஸ்வரன் இதயத்தில் அசைவின்றி வீற்றிருக்கின்றான். இதனை திரோதானம் என்பார்கள். மாயையால், உலக வஸ்துக்களை மறைத்து வைத்து, உலகத்தை இயக்குபவன் ஈஸ்வரன். இதே அர்த்தத்தில்  தான் லலிதா சஹஸ்ரநாமத்திலும் (திரோதானகரீ , ஈஸ்வரி) என்ற நாமங்கள் உள்ளன.


Monday, April 23, 2018

ப்ரக்ருதியும் புருஷனும்...

உபநிஷத்துக்கள் நம் பெருமாளையும் தாயரையும் ப்ரக்ருதி புருஷன் என்றே கொண்டாடுகின்றன. ப்ரக்ருதி என்றால் வெறும் ஜடமான இயற்கை மட்டும் அன்று, அதனுள் , முக்குணங்கள், உலகில் உள்ள ஜீவராசிகளை படைத்தல் அனைத்துமே அடங்கும்.
கண்ணன் கீதையில் குணத்ரய விபாக யோகத்தில், கீழ் வருமாறு கூறுகின்றான்:
மம யோநிர்மஹத்³ப்³ரஹ்ம தஸ்மிந் க³ர்ப⁴ம்
த³தா⁴ம்யஹம் । ஸம்ப⁴வ: ஸர்வபூ⁴தாநாம் ததோ ப⁴வதி பா⁴ரத ॥
ப்ரக்ருதி என்னும் யோனிக்குள் , என்னால் விதைக்கப் படுகின்ற சைதன்யம், நாம ரூபங்களாக பரிணமிக்கின்றன. அதாவது கண்ணனாகிய திருமால் புருஷன் என்றும், ப்ரக்ருதியாகிய தாயே லட்சுமி என்றும் பொருள் படும் ஸ்லோகம்.
ஆச்சார்யாள் பண்ணிய விஷ்ணு கேஷாதி பாத வருணனை ஸ்லோகத்திலும் இதே போல தான் உள்ளது.
வாக்³பூ⁴கௌ³ர்யாதி³பே⁴தை³ர்விது³ரிஹ முநயோ யாம்
யதீ³யைஶ்ச பும்ஸாம்
காருண்யார்த்³ரை: கடாக்ஷை: ஸக்ருʼத³பி பதிதை: ஸம்பத:³ ஸ்யு: ஸமக்³ரா: ।
குந்தே³ந்து³ஸ்வச்ச²மந்த³ஸ்மிதமது⁴ரமுகா²ம்போ⁴ருஹாம் ஸுந்த³ராங்கீ³ம்
வந்தே³ வந்த்³யாமஸேஷைரபி முரபி⁴து³ரோமந்தி³ராமிந்தி³ராம் தாம் ॥ 8 ॥
ஆச்சார்யாள், இங்கு ஸ்ரீ தேவியான லக்ஷ்மியை, அனைத்து தேவதைகளின் ஸ்வரூபியாக, சர்வ ஜெகன் மாதாவாக காண்கிறார். அவளே வாக்தேவி,பூ தேவி, கவுரி, என்று முனிவர்களால் போற்றப் படுகின்றாள். அழகிய கைகளை உடைய அந்த திருமகள், முரன் என்ற அரக்கனை வென்ற திருமாலின் மார்பை உடையவள். அவளுடைய தாமரை முகமானது, அழகிய முல்லைப்பூ போன்ற சிரிப்பாள் மிளிர்கின்றது. அவளுடைய க்ருபா கடாக்ஷம் , அன்பர்கள் மீது படுங்கால், சகல செல்வங்களையும் அவர்கள் பெறுகின்றார்கள்.
யா ஸூதே ஸத்த்வஜாலம் ஸகலமபி ஸதா³ ஸம்நிதா⁴நேந பும்ஸ:
த⁴த்தே யா தத்த்வயோகா³ச்சரமசரமித³ம் பூ⁴தயே பூ⁴தஜாதம் ।
தா⁴த்ரீம் ஸ்தா²த்ரீம் ஜநித்ரீம் ப்ரக்ருʼதிமவிக்ருʼதிம் விஶ்வஶக்திம் விதா⁴த்ரீம்
விஷ்ணோர்விஶ்வாத்மநஸ்தாம் விபுலகு³ணமயீம் ப்ராணநாதா²ம் ப்ரணௌமி ॥ 9
ஸ்ரீமன் நாராயணனுடைய சம்பந்தத்தினால் , அவன் அனைத்து சேதன அசேதனங்களும் பிறப்பிக்கின்றாள். இப்படி அனைத்து சேதன, அசேதனங்களையும் பிறப்பித்து, காத்து, தன்னுள் தாங்கி, இயற்க்கை (ப்ரக்ருதியாகி) , மாறுபாடுகள் விகுர்தி அற்றவளாகி, பிரபஞ்ச ஷக்தியாகி, ஜீவர்களுக்கு அனுகிருஹம் செய்பவளாகி உள்ளாள். எண்ணற்ற கல்யாண குணங்களை உடையவளாகி, சர்வேஸ்வரனான விஷ்ணுவுக்கு மிகவும் உகந்தவளாகி, திருமாலின் உயிர்க்கு உயிரானவளை வணங்குகின்றேன். இவ்வாறாக ஆதி சங்கரர் புராண, உபநிஷத, ஆகம கிரந்தங்களில் உள்ள அனைத்து விஷயங்களையும் இந்த ஸ்லோகத்தில் அருளி உள்ளார்.
ஆச்சார்ய புங்கவனாகிய, நம் ஆதி சங்கரர் - உபநிஷத்துகளில் சொன்ன ஷண்மதங்களின் தேவதைகள் மீதும் இப்படி பக்திபூர்வமாக , பரமாத்புதமான கிரந்தங்களை அருளியுள்ளார்


ஆதி சங்கரரின் உயிர் காத்த லட்சுமி ந்ருஸிம்ஹன் ...

லட்சுமி ந்ருஸிம்ஹரை அனுபவித்த முதல் வேதாந்தி, நம் ஆச்சார்யாள் தான். ப்ரஹ்லாதனை காக்க, நரஹரி ஸ்தம்பத்தில் இருந்து, தான் மட்டுமே அவிப்பாவிதான். ஆனால், ஆச்சார்யாளைக் காக்க, செஞ்சு லட்சுமி தாயாருடன் வந்து அங்கு அனுகிரஹித்தான். ஆச்சார்யாள், அவனை அனுபவிக்கும் விதம் மிக அருமை.

ஸம்ஸாரஸர்பவிஷதி³க்³த⁴மஹோக்³ரதீவ்ர-
        த³ம்ஷ்ட்ராக்³ரகோடிபரித³ஷ்டவிநஷ்டமூர்தே: ।
நாகா³ரிவாஹந ஸுதா⁴ப்³தி⁴நிவாஸ ஶௌரே
        லக்ஷ்மீந்ருʼஸிம்ஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 7॥

உலகியல் வாழ்க்கை என்னும் சர்ப்பம் தன்னுடைய வாயை திறந்துள்ளது , அதன் விஷமானது மிக கொடியதாகி உள்ளது.  அதனுடைய கோரமான விஷப் பற்கள் என்னை அழித்து விட்டன ! நாகங்களின் எதிரியான கருடன் மீது வீற்றிருக்கும் லட்சுமி ந்ருஸிம்ஹனே! எனக்கு உதவிக்கரம் கொடுத்து காத்தருள்வாய்!

அந்த⁴ஸ்ய மே ஹ்ருʼதவிவேகமஹாத⁴நஸ்ய
       சோரைர்மஹாப³லிபி⁴ரிந்த்³ரியநாமதே⁴யை: ।
மோஹாந்த⁴காரகுஹரே விநிபாதிதஸ்ய
       லக்ஷ்மீந்ருʼஸிம்ஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 11॥

ப்ரபோ! (ஆதாம்நாத்மத்தை பகுத்தறியும் அறிவை) என்னுடைய விவேகத்தை , இந்திரியங்கள் என்னும் திருடர்கள் கவர்ந்து சென்று விட்டார்கள். எனவே நான் குருடனாகி விட்டேன். ஞானம் என்னும் பார்வை இழந்தமையால், மோகம் என்னும் பாழும் கிணற்றுள் விழுந்து விட்டேன்! லட்சுமி ந்ருஸிம்ஹா  உன் உதவிக்கரங்களை அளித்து என்னைக் காக்க வேண்டும்!

ப³த்³த்⁴வா க³லே யமப⁴டா ப³ஹு தர்ஜயந்த:
       கர்ஷந்தி யத்ர ப⁴வபாஶஶதைர்யுதம் மாம் ।
ஏகாகிநம் பரவஶம் சகிதம் த³யாலோ
       லக்ஷ்மீந்ருʼஸிம்ஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 12॥

யமனுடைய சேவகர்கள் ஆயிரக் கணக்கில் பாசக் கயிற்றை என் கழுத்தில் கட்டி, ஆளுக்கு ஓர் பக்கமாக இழுக்கிறார்கள்! இந்த உலகியல் பற்று என்னும் கயிற்றை அவர்கள் என் கழுத்தில் கட்டி இழுக்கின்றார்கள்! தன்னம் தனியாக , மிகவும் சோர்ந்தும், பயமுற்றவனாகவும் உள்ளேன்! கருணைக்கு கடலே! லட்சுமி ந்ருஸிம்ஹா  உன் உதவிக்கரங்களை அளித்து என்னைக் காக்க வேண்டும்!

ஏகேந சக்ரமபரேண கரேண ஶங்க²-
       மந்யேந ஸிந்து⁴தநயாமவலம்ப்³ய திஷ்ட²ந் ।
வாமேதரேண வரதா³ப⁴யபத்³மசிஹ்நம்
       லக்ஷ்மீந்ருʼஸிம்ஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥

ஒரு கையில் சக்கரமும் , மற்றொரு கையில் சங்கமும், மூன்றாவது கைகளால்  திருப்பாற்கடல் மன்னனின் மக்களாகிய லக்ஷ்மியை தழுவியபடி, நான்காவது கையால் வரதம், அபாயம் என்ற முத்திரைகளையும், காட்டி லட்சுமி ந்ருஸிம்ஹா  உன் உதவிக்கரங்களை அளித்து என்னைக் காக்க வேண்டும்

லக்ஷ்மீந்ருʼஸிம்ஹசரணாப்³ஜமது⁴வ்ரதேந
       ஸ்தோத்ரம் க்ருʼதம் ஶுப⁴கரம் பு⁴வி ஶங்கரேண ।
யே தத்பட²ந்தி மநுஜா ஹரிப⁴க்தியுக்தா-
       ஸ்தே யாந்தி தத்பத³ஸரோஜமக²ண்ட³ரூபம் ॥ 17॥

இந்த பதினேழு ஸ்லோகங்களை கொண்ட பாடலை படிப்பதால் என்ன பயன் என்று, ஆச்சார்யாள் மிகவும் அழகாக் இங்கு அருளியுள்ளார்.
சங்கரன் என்னும் ஒரு தேனீ  லட்சுமி ந்ருஸிம்ஹனின் திருவடிகளின் தேனைப் பருகி பாடிய இந்த பாடலை, ஹரி பக்தியுடன் படிக்கும்  அனைத்து மனிதர்களும், அந்த லட்சுமி ந்ருஸிம்ஹனின் திருவடிகளை அடைந்து பூர்ண பிரம்மத்தில் இணைவார்கள்.

தன்னுடைய உயிர் பிரியும் தருணத்திலும் கூட ஆச்சார்யாள், உயிரைக் காத்தமைக்கு நன்றி என்று கூறவில்லை - இந்த சம்சாரத்தில் இருந்து தம்மை காக்கும் படி நம் அனைவர் சார்பிலும் பிரார்திக்கின்றார். ஞானிகளுக்கு சரீர அபிமானம் என்பது எள்ளளவும் இருக்காது என்பதற்கு இது
மிகப் பெரிய ஒரு உதாரணம்.

லட்சுமி ந்ருஸிம்ஹன் அருளால் நாம் அனைவரும் அனைத்து நன்மைகளும் பெற வேண்டும் என்று பிரார்தித்துக் கொள்கிறேன்.



Thursday, April 19, 2018

ஆச்சார்யாள் பண்ணிய ராம புஜங்கத்தின் பெருமைகள்.....



இன்றைக்கு ஆச்சார்யாள் பண்ணிய ராமபுஜங்கத்தை அனுபவிப்போம் வாருங்கள்
அன்பர்களே. நூற்று எட்டு உபநிஷத்துக்கள் பட்டியலை முக்திக உபநிஷத்தில் சொல்லி உள்ளார் ராமர். அந்த உபநிஷத்தில் ராமர் , தன் நாமத்தை எவன் ஒருவன் ஜெபிக்கின்றானோ அவன் நால்வகை முக்தியை அடைகின்றான் என்கிறார். அதே போல காசியில் மரணிப்பவர்கள் அனைவரும், தங்கள் காதுகளில் சிவ பெருமானால் ராமா ராமா ராமா என்று ஓதப்பெற்று, போக்கு வரத்து இல்லாத பரமபதத்தை அடிக்கின்றனர் என்கிறார் ராமர். ஆசார்யாளும் அதே போல, ராம புஜங்கத்தில் சொல்கின்றார்.

ஶிவம் நித்யமேகம் விபு⁴ம் தாரகாக்²யம்
ஸுகா²காரமாகாரஶூந்யம் ஸுமாந்யம் ।
மஹேஶம் கலேஶம் ஸுரேஶம் பரேஶம்
நரேஶம் நிரீஶம் மஹீஶம் ப்ரபத்³யே ॥ 2 ॥

ஆச்சார்யாள் இந்த ஸ்லோகத்தில் மாண்டூக்கிய உபநிஷத்தில் உள்ள பதங்களை பயன் படுத்தி, ராமரும் அந்த சிவமாகிய பிரம்மத்தின் வடிவமே என்கிறார். அப்படி சிவமாக, நித்தியமாக, தன்னிகரற்றவனாக , தாரக ரூபனாக, சர்வ வ்யாபியாக, சச்சிதானந்த வடிவமாக, உருவம் அற்ற நிர்குண பிரம்மமாக, எல்லோர்க்கும் ஈஸ்வரனாக, பரமேஸ்வரனாக , தனக்கு மேல் எவரும் இல்லாதவனாக, இந்த இயற்கையின் நாயகனாக இருக்கும் ராமனிடத்தில் நான் சரண் புகுகின்றேன் என்கிறார். அதாவது ராமரும் சிவனும் ஒன்று தான் என்று சொல்கின்றார்.

யதா³வர்ணயத்கர்ணமூலேঽந்தகாலே
ஶிவோ ராம ராமேதி ராமேதி காஶ்யாம் ।
ததே³கம் பரம் தாரகப்³ரஹ்மரூபம்
ப⁴ஜேঽஹம் ப⁴ஜேঽஹம் ப⁴ஜேঽஹம் ப⁴ஜேঽஹம் ॥ 3 ॥

காசி க்ஷேத்ரத்தில் மரணிக்கும் உயிர்களின் வலது காதுகளில் எந்த ராம நாமத்தை பரமேஸ்வரன் , முணு முணுக்கின்றாரோ, அந்த தாரக மந்திரம் பிரம்மத்தின் ஸ்வரூபம். அந்த தாரக நாமத்தை நான் வணங்குகின்றேன் என்கிறார்.

ஆதி சங்கரர் அருளிய கணேஷ பஞ்சரத்னம் ....


இந்த ஸ்லோகத்தை இங்கே கேட்டு மகிழுங்கள். 

நம் தமிழ் நாட்டில் எளியோர்க்கு எளியோனாக, அரச மரங்களெங்கும், தெருக்கோடிகள் எங்கும், இருந்து அருள் பாலிக்கும் விநாயகப் பெருமானை பற்றி தெறியாத மனிதரே இருக்க மாட்டார். உபநிஷத்துக்கள் விநாயகனை, சிவ பூத கணங்களுக்கு தலைவனாக கொண்டாடுகின்றன. ஆசார்யாளும் உபநிஷத்துக்கள் சாரமாகவே மஹாகணேஷ பஞ்ச ரத்னம் என்ற இந்த ரத்தினம் போன்ற ஸ்லோகத்தை எழுதி அருளினார்.

மிக அழகான இந்த ஐந்து ஸ்லோகங்கள் மிகவும் அருமையாக தளத்துடன் பாட உகந்ததாக உள்ளது.வேத, புராண, உபநிஷத்துக்களின் சாராம்சமாக   விளங்கும் இந்த ரத்னத்தை அனுபவிப்போம் வாருங்கள்.

அகிஞ்சநார்திமார்ஜநம் சிரந்தநோக்திபா⁴ஜநம்
     புராரிபூர்வநந்த³நம் ஸுராரிக³ர்வசர்வணம் ।
ப்ரபஞ்சநாஶபீ⁴ஷணம் த⁴நஞ்ஜயாதி³பூ⁴ஷணம்
     கபோலதா³நவாரணம் ப⁴ஜே புராணவாரணம் ॥ 4॥

தன்னிடத்தில் சரணடையும் பக்தர்களின் வினைகளை அகற்றுபவனே, மிகப் பழைய வேதங்களளால் துதிக்கப் பெறுபவனே , முப்புரம் அழித்த சிவனின் மூத்த மகனே, தேவர்களின் எதிரிகளை தன் வாயில் இட்டு மெல்லுபவனே,
மாயாமயமான  பிரபஞ்சத்தின் மாயையை அகற்றும் பயங்கர ஷக்தி படைத்தவனே, கருணா ரசம் பொழியும் கான்னங்களை உடையவனே, புராணங்களில் இருந்து வழியும் புகழை உடையவனே! விநாயகனே ! உன்னை துதிக்கின்றேன்.

நிதாந்தகாந்தத³ந்தகாந்திமந்தகாந்தகாத்மஜம்
     அசிந்த்யரூபமந்தஹீநமந்தராயக்ருʼந்தநம் ।
ஹ்ருʼத³ந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகி³நாம்
     தமேகத³ந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம் ॥ 5॥

யமனை அழித்த பரமேஸ்வரனின் மைந்தனே!  அன்பர்களின் மனத்தைக் கவரும்  ஒற்றை கொம்பை உடையவனே! யோகிகளின் ஹ்ருதயத்தில் நிரந்தரமாக வசிப்பவனே! அந்த ஒற்றை தந்தம் உடையவனை எப்பொழுதும்
வணங்குகின்றேன்!

கணபதி அதர்வஸீர்ஷ உபநிஷத்து இதேபோல தான் சொல்கின்றது.

त्वं गुणत्रयातीतः । त्वं अवस्थात्रयातीतः । त्वं देहत्रयातीतः ।
त्वं कालत्रयातीतः । त्वं मूलाधारस्थितोऽसि नित्यम् । त्वं
शक्तित्रयात्मकः ।त्वां योगिनो ध्यायन्ति नित्यम् । त्वं ब्रह्मा त्वं
विष्णुस्त्वं रुद्रस्त्वमिन्द्रस्त्वमग्निस्त्वं वायुस्त्वं सूर्यस्त्वं
चन्द्रमास्त्वं ब्रह्म भूर्भुवः स्वरोम् ॥ ६॥

விநாயகனே நீ இந்த பிரகிருதியின் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவன். நீ கனவு, நினைவு, உறக்கம் என்ற மூன்று அவஸ்தைகளும் அப்பாற்பட்டவன். ஸ்தூலம், சூக்ஷ்மம், காரணம் என்ற மூன்று உடல்களுக்கும் அப்பாற்பட்டவன்.
நிகழ் காலம், இறந்த காலம், வரும் காலம் என்று மூன்று காலங்களுக்கும் அப்பாற்பட்டவன். மூலாதாரத்தில் நித்யம் வசிப்பவன் நீ. இச்சா ஷக்த்தி, க்ரியா ஷக்தி , ஞான ஷக்தி என்று மூன்று சக்திகளின் வடிவம் நீ. யோகிகளால் நித்யமும் வழிபடப் படுபவன் நீ.  ப்ரம்ம, விஷ்ணு, சிவன், சந்திரன், சூரியன் என்று அனைத்துமாகி , பூலோகம், புவர் லோகம், சுவர்க்கம் என்று அனைத்துலகிலும் நிறைந்து, ஓம்கார மயனாகி,  பிரம்மமும் ஆகி இருக்கும் விநாயகனே!

மேற்கூறியவாறு அதர்வண வேதத்தில் உள்ள கணபதி அதர்வஸீர்ஷ உபநிஷத்  பிள்ளையாரை போற்றுகின்றது. நம் தமிழ் மூதாட்டி ஒளவையாரும் இதே கருத்துக்களை விநாயகர் அகவலில் கூறுகின்றாள்.



Thursday, April 12, 2018

சத தூஷணி - இருப்பது இரண்டாவது வாதம் .......

வேதாந்தம் என்பது எல்லையற்ற அந்த பிரம்மத்தை அனுபவிப்பதே. அனைவருக்கும் அந்த பூர்ண ஞானம் என்பது லபித்து விடுவது இல்லை. வேதாந்த தேசிகர் மிக சிறந்த பக்தர். ஆனால், அவர் சத தூஷணி என்று அத்துவைத்ததை பற்றி ஒரு நூறு குற்றங்களை ஒரு நூலாக எழுதி உள்ளார். இது பிரமாணங்களை இடையே உள்ள சண்டை தான். மனிதர்களுக்கோ, தெய்வங்களுக்கோ இடையில் உள்ளது அல்ல.

சங்கர ஜெயந்தியை முன்னிட்டு , ஒரு சில தூஷணைகளுக்கு பதிலளிக்கும் ஒரு சிறு பிரயத்தனம். மஹாபெரியவா சரணங்களிலும் , ஆதி சங்கரர் சரணங்களிலும் நமஸ்கரித்து இதனை துவங்குவோம்.

परिणामयति विश्वं यस्स्वयं निर्विकार:
परिणमति च योसौ तत्तदर्था अन्तरात्मा
विषम विषय तृष्णा धन्व कान्तार जातं
व्यपनय तु भयं मे विश्व जिष्णो स्व विष्णु:

किं च किमिदं निर्विकारत्वं नाम ? किं उत्तरावदि: आहित्यम्?

தேசிகன் இந்த ஸ்லோகத்தில் கீழ் வருமாறு வினவுகின்றார்:

இந்த உலக (மாயைக்கு) அப்பாற்பட்டது நிர்விகாரம். அந்த மாற்றத்தை உண்டாக்குவது நம்முள் இருக்கும் அந்தராத்மா. காட்டு கரும்பின் விஷம் மிகுந்த சுவையில் பேராசை கொண்டிருக்கும் எனக்கு பயத்தை நீக்குபவனாக இந்த உலகத்தை வென்ற விஷ்ணு இருக்கின்றான்.
நிர்விகாரத்துவம் என்றால் என்ன? அதன் பொருள் என்ன? அந்த அஹிதமான நிர்விகாரத்திற்கு வாதிடுவோர் யார்?

இந்த கேள்விக்கு உபநிஷதங்கள் விடை அளிக்கின்றன. அதாவது ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் நேதி நேதி என்று உள்ளது. ஐம்புலன்கள், மனம் ஆகியவற்றால் உணர கூடியவைகள் அனைத்துமே ஆத்மா ஆகாது. அவற்றை அனாத்மா என்று கூறுவார். அவற்றை விலக்கிக் கொண்டே சென்றால், எது மிஞ்சி இருக்கின்றதோ அதுவே நிர்விகார ப்ரம்மம். விகாரம் என்றால் மாறுதலுக்கு உட்பட்டது என்று பொருள்படும், கால, தேச ,வர்த்தமானங்களுக்கு அப்பாற்பட்ட வஸ்துவே ப்ரம்மம் என்பதால் , அது நிர்குணமானது , நிர்விகாரமானது. உபநிஷதங்களும் இவ்வாறே போதிக்கின்றன. சாந்தம், சிவம், அத்வைதம், அசிந்த்யம், அக்ராஹ்யம் என்று
நிர்குண பிரம்மத்தை மாண்டூக்கிய உபநிஷத்து போதிக்கின்றது.

ஆச்சார்யாள் அனுகிருஹதால் இந்த நிர்விகாரத்தை பற்றிய விளக்கம் பூர்த்தி.

சத தூஷணி - இருப்பது மூன்றாவது வாதம் .......

சத தூஷணி - இருப்பது மூன்றாவது வாதம் .......
ஸ்ரீ குருப்பியோ நமஹ
அடுத்து உள்ள இருப்பது மூன்றாவது வாதத்தில் , காயத்ரி மந்திரத்தை கொண்டு, அதன் அந்தரார்த்தமாக உள்ளவனும் விஷுவே என்றும் , ஆத்மா அல்ல என்றும் சொல்கின்றார் நம் தேசிகன். அதன் பொருள் கீழ் வருமாறு:
ஒவ்வொரு மனிதனுக்கும் பலவிதமான நிலைமைகள் இருக்கும். அப்படி அவர்களுள் ஒளிரும் ஒளியானது தனிஇச்சை ஆனது அல்ல. அனைத்து சேதனம், அசேதனம் வஸ்துக்கள் உள்ளும் , அந்தர்யாமியாக உறையும் அந்த விஷ்ஹ்ணுவே சூரியனாக ஒலிக்கின்றன. அந்த திருமாலின் ஒளியை இந்த ஜீவன் (அஹம்) ஆகிய சேதனன் உபாசிக்கின்றான்.
தேசிகர் பேரறிஞர் என்றும், மணதார்த்தங்களை நன்கு அறிந்தவர் என்றும், பரம வைஷ்ணவே என்றும் நம்மால் அறிய முடிகின்றது.
ஆனால், காயத்ரி மாத்ரியம் சொல்லும் சூரியன் ஆத்மா தான். அந்த நாதமா, கணவனு நினைவு, உறக்கம் என்று மூன்று நிலைகளுக்கும் அப்பாற்பட்டது என்கிறது மாண்டூக்ய உபநிஷதம். அதே போல காயத்ரி மந்திரத்தை பற்றி ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் நிரம்ப சொல்ல பட்டு இருக்கின்றது. அங்கு ஒரு தலைப்பட்ட இறைவனை பற்றி சொல்லப்படவில்லை. புருஷன் என்னும் தத்வம் ஷிவா, விஷ்ணுக்கள் இருவருக்குமே பொருந்தும். ஸ்வேதாஸ்வதஹ்ரா உபநிஷதம் இதனை நன்கு உணர்த்துகின்றது.
காயத்ரி மந்திரத்தை 8 எழுத்துக்களாக பிரித்துக் கொண்டு, முதல் எட்டு எழுத்துக்கள் மூன்று லோகங்களே என்றும், அடுத்த எட்டு எழுத்துக்கள் மூன்று வேதங்கள் என்றும், கடைசி மூன்று எழுத்துக்கள் மூன்று வாயுக்கள் என்றும் கூறுகின்றது பிருஹத் ஆரண்யக உபநிஷதம். அந்த 24 எழுத்துக்களுக்கும் மேற்பட்ட ஒரு பதம் இருக்கின்றது என்றும், அதுவே சூரியனை போல பிரகாசிக்கின்றது என்றும், அது சத்தியத்தின் மீதே நிற்கின்றது என்றும் அந்த உபநிஷதம் கூறுகின்றது. அப்படியாக கனவு, நினைவு, உறக்கம் என்ற மூன்று நிலைகளுக்கு அப்பாலாகி , துரீய ஸ்திதியாக இருக்கும் ஆத்மாவே சூரியனாக பிரசிக்கின்றது எனபதே அதன் பொருள். ஆனால், இடம் , பொருள் ,ஏவல் ஆகிய மூன்றாயும் கடந்து மேலே சென்றாலே , பூரணமான அனுபூதி ஏற்பட்டு ஆத்மாவை அனுபவிக்க முடியும். இதனை யோசித்தலே விவேகம் அல்லது பகுத்தஹ்ரிவு எனப்படும். எனவே கால தேச வர்த்தமானங்களுக்கு உட்பட்ட வஸ்துக்களை உபநிஷதங்கள் ப்ரம்மம் என்று ஒரு பொழுதும் ஏற்கவே ஏற்காது.
நம் வைதிக மதத்தரிக்கு உபநிஷதங்களே பிரதானம். புராணங்களோ, மற்ற பாடல்களோ அல்ல. எனவே உபநிஷத் வாக்கியங்களை உள்ளதை உள்ளவாறே ஏற்க வேண்டும். அப்பொழுது மன மாயை விலகி, பூர்ண ஞானத்தால் ஆத்ம ஸ்வரூபம் விளங்கி உபநிஷத் வாக்கியங்கள் அனுபூதியால் தெளியும்.


Image may contain: text

Wednesday, April 11, 2018

ஆச்சார்ய வைபவத்தை பறை சாற்றும் தோடகாஷ்டகம்...

Image result for shankaracharya and thotaka

विदिताखिलशास्त्रसुधाजलधे
महितोपनिषत् कथितार्थनिधे |
हृदये कलये विमलं चरणं
भव शंकर देशिक मे शरणम् ||१||
viditAkhilasAstrasudhAjaladhE
mahitOpanishat kathitArthanidhE |
hridayE kalayE vimalam charaNam
bhava sankara dEsika mE saraNam || (1)
விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே,
மஹிதோபநிஷத்கதிதார்தநிதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்,
பவ சங்கர தேசிக மே சரணம் || 1.
கடல் போன்ற சாத்திரங்களை அறிந்தவனே! உபநிஷத்துக்கள் தன் மெய்ப்பொருளை விளக்கியவனே! என் நெஞ்சில் வைத்தேன் நின் திருப்பாதத்தை ! சங்கர தேசிகனே! நீயே எனக்கு கதி! 
करुणावरुणालय पालय मां
भवसागरदुःखविदूनहृदम् |
रचयाखिलदर्शनतत्त्वविदं
भव शंकर देशिक मे शरणम् ||२||
karuNAvaruNAlaya pAlaya mAm
bhavasAgara dukhkha vidUnahridam |
rachayAkhiladarsanatattvavidam
bhava sankara dEsika mE saraNam || (2)
கருணா வருணாலய பாலய மாம்,
பவஸாகர து:க விதூநஹ்ருதம் |
ரசயாகில தர்சந்தத்வ விதம்,
பவ சங்கர தேசிக மே சரணம் || 2.
கருணைக் கடலே உன்னை போற்றுகின்றேன்! இந்த சம்சார சாகரத்தில் உழன்று தவிக்கன்றது  என் மனம். அனைத்து (அத்துவைத  ...) தர்ஷனைகளையும் எனக்கு புரியும் படி செய்வாய் ! சங்கர தேசிகனே! நின் திருப்பதங்களே எனக்கு கதி! 
भवता जनता सुहिता भविता
निजबोधविचारण चारुमते |
कलयेश्वरजीवविवेकविदं
भव शंकर देशिक मे शरणम् ||३||
bhavatA janatA suhitA bhavitA
nijabOdhavichAraNa chArumatE |
kalyEsvara jIvavivEkavidam
bhava sankara dEsika mE saraNam || (3)
பவதா ஜநதா ஸுஹிதா பவிதா,
நிஜபோத விசாரணசாருமதே |
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்,
பவ சங்கர தேசிக மே சரணம் || 3.
சம்சாரத்தில் உள்ள அனைத்து மக்களையும் சுகிப்பிப்பவனே!  துரீய ஸ்திதியான நிஜபோத விசாரத்தால், பூவுர்ணமி நிலவை போல ஒளிர்பவனே!ஆசார்யனே! எனக்கு ஜீவா - ஈஸ்வர சம்மந்தத்தை பற்றிய விவேகத்தை அருள்வாய்! சங்கர தேஷியானே! நின் திருப்பாதங்கள் எனக்கு கதி! 
भव एव भवानिति मे नितरां
समजायत चेतसि कौतुकिता |
मम वारय मोहमहाजलधिं
भव शंकर देशिक मे शरणं ||४||
bhava Eva bhavA niti mE nitarAm
samajAyata chEtasi kowtukitA |
mama vAraya mOhamahAjaladhim
bhava sankara dEsika mE saranam || (4)
பவ ஏவ பவாநிதி மே நிதராம்,
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |
மம வாரய மோஹ மஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 4.
தாங்கள் தான் ஈஸ்வரனின் ஸ்வரூபம் (ஈஸ்வரோ குரு அதேமாதி...) என்று அத்துவைத அம்ருதத்தை உணர்வதால், உள்ளத்தில் குதூகலம் பிரைக்கின்றது.அளவற்ற மொக்கடலில் இருந்து எண்ணெய் காத்து ரக்ஷிக்க வேண்டும்! சங்கர தேசிகனே!  நின் திருப்பதங்களே எனக்கு கதி! 
सुकृते | अधिकृते बहुधा भवतो
भविता समदर्शनलालसता |
अतिदीनमिमं परिपालय मां
भव शंकर देशिक मे शरणम् ||५||
sukritE(a)dhikritE bahudhA bhavatO
bhavitA samadarsanalAlasatA |
atidInamimam paripAlaya mAm
bhava sankara dEsika mE saraNam || (5)
ஸுக்ருதேதிக்ருதே பஹுதா ,
பவதோ பவிதா ஸமதர்சநலாலஸதா |
அதிதீநமிமம் பரிபாலய மாம் ,
பவ சங்கர தேசிக மே சரணம் || 5.
முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பாயானாலும் தங்கள் கிருபாயாலும் ஆத்ம ஞானம் (சம தர்ஷனம்) என்னும் விஷயத்தில் அதிக இச்சை ஏற்படும். ஏழையேன் ஆகிய என்னையும் காத்து ரக்ஷிக்க வேண்டும்! சங்கர தேசிகனே!நின் திருப்பாதங்களே எனக்கு சரண்!
जगतीमवितुं कलिताकृतयो
विचरन्ति महामहसश्छलतः |
अहिमांशुरिवात्र विभासि गुरो
भव शंकर देशिक मे शरणम् ||६||
jagatImavitum kalitAkritayO
vicharanti mahAmahasachalata: |
ahimAmsurivAtra vibhAsi gurO
bhavasankara dEsika mE saraNam || (6)
ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹாமஹஸச்சலத: |
அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக மே சரணம் || 6.
இந்த உலகத்தை உய்விக்க பெரிய மஹான்கள் பற்பல ரூபத்தில் உதிப்பார்கள்! என் ஆச்சார்ய ஸ்ரேஷ்டனே! அந்த புண்ய புருஷர்களுக்கு எல்லாம் சூரியினை போல திகழும் ஞான சூரியனே! சங்கர தேசிகனே! நின் திருப்பாதங்கள் எனக்கு கதி! 
गुरुपुंगव पुंगवकेतन ते
समतामयतां नहि को | अपि सुधीः |
शरणागतवत्सल तत्त्वनिधे
भव शंकर देशिक मे शरणम् ||७||
guru pungava pungava kEtanatE
samatAmayatAm nahi kOpi sudhIhi |
saraNAgatavatsala tattvanidhE
bhavasankara dEsikamE saraNam || (7)
குருபுங்கவ புங்கவகேதந நே
ஸமதாமயதாம் நஹி கோபி-ஸுதீ: |
சரணாகதவஸ்தல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம் || 7.
ஆச்சார்யர்களுள் உத்தமனே! காளை கொடியுடைய என் ஈசனே!  உனக்கு ஈடு இணை மற்றொருவர் இல்லை இந்த புவியிலும் வேறெங்கும்! நின்னிடத்தில் சரண் புகுந்தவர்களை காத்திடும்  கருணை கடலே! உபநிஷத்துக்கள் போதிக்கும் தத்துவங்கள் அனைத்திற்கும் உறைவிடம் நீயே! சங்கர தேசிகனே! நீயே எனக்கு அடைக்கலம்!
विदिता न मया विशदैककला
न च किंचन काञ्चनमस्ति गुरो |
द्रुतमेव विधेहि कृपां सहजां
भव शंकर देशिक मे शरणम् ||८||
viditA na mayA visadaikakalA
na cha kinchana kAnchana masti gurO |
drutamEva vidhEhi krupAm sahajAm
bhava sankara dEsika mE saraNam || (8)
விதிதா ந மயா விசதைககலா
ந ச கிஞ்சந காஞ்சநமஸ்தி குரோ |
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 8.
ஆச்சார்ய ஸ்ரேஷ்டனே!  ஆன்மீக சாத்திரத்தின் எந்த பகுதியையும் அறியாத பேதை நான்! பொண்ணோ பொருளோ கொஞ்சம் கூட இல்லாதவன் நான்! தங்களுக்கு பிறவியிலேயே (ஸஹஜாம்) உள்ள அந்த கருணை, கிருபையை என் மீது பொழிய வேண்டும். சங்கர தேசிகனே ! உன்னை அல்லல் சரண் வேறில்லை எனக்கு! 

Sunday, April 8, 2018

ஆதிசங்கரர் அனுபவித்த திருவரங்கன்................



திருவராங்கனை கண்டா ஆழ்வார்கள், பக்தி பரவசத்தில் பலவாறாக அவனை பாடினார். அதே போல தான் நம் ஆதி சங்கரரும் செய்தார். உபநிஷத்துக்களை எல்லாம் கரைத்து குடித்த ஆச்சார்யாள், பரம ஆஸ்தீகர். அவர் காலம் கழிந்து 1500 ஆடுகளுக்கு பின் வேற்று சித்தாந்தங்கள் உருவாயின.

நிர்பேதமான பக்தியையும், சைவ வைஷ்ணவ  ஒருமைப்பாட்டையும் போதித்தார் ஆச்சார்யாள். உபநிஷத்துக்கள் மார்கத்தை பிசகாமல் போதித்த நம் பகவத்பாதாள், திருவராங்கனை எங்கனம் போற்றுகின்றார் என்று பார்ப்போமா?

आनन्दरूपे निजबोधरूपे ब्रह्मस्वरूपे श्रुतिमूर्तिरूपे ।
शशाङ्करूपे रमणीयरूपे श्रीरङ्गरूपे रमतां मनो मे ॥१॥

ஆனந்த விடிவே, நிஜ போத வடிவே, (கனவு,நினைவு, உறக்கம் -ஆகிய 3 நிலைகளுக்கும் ஸாக்ஷிபூதமாக உள்ள ஆன்ம ஸ்வரூபம்) , பிரம்மத்தின் வடிவே, வேதங்களின் விழுப் பொருளே, சந்திரனைப் போன்ற குளுமையான வடிவினனே, அழகிய ரூபம் கொண்டவனே, திருவரங்கத்தின் உருவமானவனே உன் ரூபம் என் மனதை ஆனந்தத்தால் நிரப்புகின்றது!

திருப்பாணாழ்வார்    பாடிய அமலன் அதிப்பிரானை போலவே உள்ளது! ஆதி சங்கரர், பக்தியில் ஆழ்வார்களுக்கு  ஒப்பானவர். ஞானத்தில் உபநிஷதங்கள் சொல்லும் ரிஷிகளுக்கு சமானம் ஆனவர். அவர் பெருமைகளை கொண்டாட நமக்கு ஒரு நாவு இருந்தால் போதுமா?

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 




Image result for adi shankara and srirangam

1008 காய்கறிகள் சாப்பிட ஆசையா? இதோ பாருங்கள்....

1008 காய்கறிகள் சாப்பிட ஆசையா? இதோ பாருங்கள்....

திவசத்தில் விஸ்வாமித்ரர்  1008 காய்கள் வேண்டுமென்று கேட்க, வசிஷ்டர் மனைவி அருந்தத்தி கீழ் வருமாறு செய்தாள்.

காரவல்லி ஶதம் சைவ வஜ்ரவல்லி ஶதத்ரயம்
பனஸம் ஷட் ஶதம்சைவ ஶ்ரார்த்தகாலே விதீயதே

कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं
पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते

பாகல் - 100   , பிரண்டை -  300, பலாப்பழம் - 600 , ஆக 1000  கைகள். - இவைகளை ஸ்ரார்த்த காலத்தில் அவசியம் செய்ய வேண்டும் என்னும் ஸ்லோகம்.

பிரண்டை, பாகற்காய், பலாக்காய்/ பலாப்பழம்  - இந்த மூன்றுமே 1000 காய்களுக்கு சமானம். அதன் மேல் எட்டு கரி/ கூட்டு,பச்சடி வகைகளை செய்ய, ஆயிரத்து எட்டு காய்களின் கணக்கு வந்து விட்டது என்றாளாம். எனவே ஸ்ராத்தத்தில் பிரண்டை, பாகற்காய், பலாப்பழம் அவசியம் சேர்க்க வேடனும் என்பது நம் மரபு.

இப்படி தமிழர்களின் தொன்மையான உணவு முறைகளையும், பழக்க வழக்கங்களையும் காப்பது நாம் தான் என்று பெருமை கொள்ள வேண்டும்.

சேம்பு, காவத்து,சேனை, சர்க்கரைவள்ளிகிழங்கு, கொற்றவரை , அவரை, பாகல், மாம்பழம்/காய், பலாப் பழம் / காய், விளாம் பழம், இலந்தைப் பழம், இஞ்சி, குறுமிளகு, வாழைக்காய்/பழம், புடலை, வெள்ளை பூசணி , பிரண்டை, அரைக்கீரை, அகத்தி கீரை - இவைகளே சத்துவ குண காய் கறிகள். இவைகளே சாஸ்திரத்தால் அங்கீகரிக்க பட்ட காய் கறிகள். (வெண்டை, கத்திரி பரவாயில்லை , ஆனால் முருங்கை,பீர்க்கு, சுரை - தவிர்க்க வேண்டும்  என்று உள்ளது புராணங்களில்). சின்ன வெங்காயம், மலை வெங்காயம், வெள்ளைப் பூண்டு , காளான் - இவை உண்ணவே கூடாது என்று தர்மம் சாஸ்திரத்தில் உள்ளது. காளான், பிணத்தின் மீதும் கூட முளைத்து விடும். அது தாவரத்துக்கும், மிருகத்துக்கும் இடைப்பட்ட ஒரு உயிரினம்.

தக்காளி, வெங்காயம், பூண்டு,மிலேச்ச காய்கறிகள் அனைத்துமே பிற்காலத்தில் சேர்க்கப் பெற்றவை. இன்றைக்கு தமிழர்களின் இழிநிலை என்னவென்றால் - நம் பாரம்பரியம் எது என்றே தெரியாமல் , அந்த மோதிரச்ட்டை கிழவன் சொன்ன பொய் கதைகளை நம்பி கொண்டு அலைகின்றோம்.

No automatic alt text available.


Image may contain: plant, food and nature

 Image may contain: plant, flower, nature and outdoor

Tuesday, April 3, 2018

கீதாச்சார்யன் உபதேசிக்கும் ஆன்ம ஞானம் .....


ஜெகதாசார்யனான கண்ணன் ஒரு போதும் அஞ்ஞானத்தையும், மூட பக்தியையும் சொல்லவே மாட்டான்.  எப்படி ஒரு தாய் தன்னுடைய பிள்ளை  எவ்வளவு அறிவிலியாக இருந்தாலும் அவனை, சரி செய்து புத்திசாலியாக மாற்ற நினைப்பாளோ, அதே போல கண்ணனும் பதினெட்டு யோகா முகாரிகளை உபதேசிக்கின்றான். உபநிஷத்து வாக்கியங்களை பிரதானமாகக் கொண்டு தான் அவன் சொல்கின்றான். வேத, தர்மம் சாஸ்திர, உபநிஷத்துக்கள் ஓவர் சாராம்சமே பகவத் கீதை. தன்னை ஆஸ்ரயிக்கும் பக்தன், மூடனாக ஆத்ம ஞானம் , விவேகம் அற்றவனாக இருப்பினும், கூட மூட் பக்தியால் தேவதைகளை உபாசித்து புண்ய லோகங்களை அடையட்டும் என்று உபதேசம் செய்த கருணைக்கடல் நம் கண்ணன். ஆனால், பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலை குடிப்பதை போல, மூடர்களோ, எங்கள் விவேகத்தை நாங்கள் பயன் படுத்தி ஆன்ம ஸ்வரூபத்தை அறியவே மாட்டோம் என்று திடமாக நம்புகின்றனர். கண்ணன், பலவாறாக ஞானத்தை போதிக்கியின்றான் கீதையில். வாருங்கள் அனுபவிப்போம்.

ब्रह्मार्पणं ब्रह्महविर्ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम्।
ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्मसमाधिना।।4.24।।

ப்ரஹ்மார்ப்பணம்  பிரம்மாஹவிர் பிரம்மாஅஃநௌ  ப்ராஹ்மணாஹுதம்  
ப்ரஹ்மய்வ  தேன  கந்தவ்யம்  ப்ரஹ்மகர்மசமாதினா    .. 4\-24..

சர்வம் கல்விதம் ப்ரம்மா - என்ற சுருதி  வாக்கியத்தை கண்ணன், தேனைப் போல இங்கு பொழிகின்றான்.  வேள்வியில் உள்ள தீ,
வேள்வியில் அளிக்கப்படும் ஹவிஸ்ஸு, வேள்வியில் செய்யும் ஆஹுதி, என்று அனைத்தையும் ப்ரம்மமாகவே கண்டு, ப்ரம்மத்திற்கு அனைத்தையும் அர்ப்பணம் செய்து அந்த ப்ரம்மதுல் பூர்ணமாக தன்னை விலை நிறுத்திக் கொள்பவனுக்கு , அந்த பிரம்மத்தை அடைதல் மிக சுலபம். அனைத்திலும் பிரம்மத்தை காணும் நிலை, வர உபாயம் சொல்கின்றார் கண்ணன்.

सर्वाणीन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे।
आत्मसंयमयोगाग्नौ जुह्वति ज्ञानदीपिते।।4.27।।

ஸர்வான்   இந்திரிய கார்மாணி   பிராண  கர்மாணி ச பரே .
ஆத்ம சம்யமா யோகாக்னௌ   ஜுஹ்வதி  ஞான தீபிதே 4.27

பொருள்:  ஞானிகள், தங்களுடைய அனைத்து இந்திரியங்கள், வினைகள்,
பிராணன் என்னும் (5 வகை வாயுக்கள்) அனைத்தையும் ஆத்மாவில் அடக்குபவர்களாகி, ஞானாக்நியில் ஆகுதியாக அளிக்கின்றார்.


இதை விட ஞானத்தை எளிமையாக யாரேனும் சொல்லித் தர முடியுமா?

Image result for bhagavad gita - gnaana yoga

Sunday, April 1, 2018

சாந்தோக்கிய உபநிஷத் - சிதாகாசத்தை பற்றி......

பூரணமான ஆத்ம ஞானம் இல்லாமல், இந்த உலகத்தை விட்டு செல்லும் அஞ்ஞானிகள், தாங்கள் உபாசிக்கும் அந்தந்த தேவதைகளின் உலகத்தை சென்று அடைகின்றார்கள். பூர்ண ஞானம் பெற்றவர்கள் மட்டுமே ஸ்வயம் பிரகாசமான அந்த பிரும்மத்தில் இரண்டற கலைக்கின்றனர்.

இன்னும் ஒரு அற்புதமான ஒரு ஸ்லோகம் சாந்தோக்கிய உபநிஷத்தில் - இங்கு சிதாகாசத்தை பற்றி சொல்ல படுகின்றது. எனேவே தான் சிதம்பரம் ஆகாச க்ஷேத்திரம் என்பார்கள். சிதாகாசத்தில், இருக்கும் ஆத்ம ஸ்வரூபமே நடராஜர். உபநிஷத்தில் கூறும் அந்த பிரும்ம ஸ்வரூபம் அவரே.

Image may contain: 1 person


. சாந்தோக்கிய உபநிஷத...

ஆதி சங்கரர் பகவத்பாதர் , இந்த உலகத்தில் வேதாந்தத்தை நிலை நாட்ட
அவதரித்த புண்ய புருஷர். சாந்தோக்கிய உபநிஷதத்தில் வரும் இந்த ஸ்லோகத்தில், தாமரையின் நிறத்துக்கு குரங்கின் பின்புறத்தை உவமை காட்டி இருக்கின்றார் உபநிஷத்தில். இந்த உவமை தாமரையின் நிறத்திற்க்கே என்று உறுதி செய்கின்றார் பகவத்பாதர். அந்த தாமரையின் இதழ்களை ஒத்த
கண்களை உடைய புருடன் பொன்னிறமாக, சூரிய மண்டலத்தின் மத்தியில் பிரகாசிக்கின்றான் என்கின்றது இந்த உபநிடதம். இதில் சிவன், விஷ்ணு இருவரையும் இது குறிக்கும் - சிவனோ செந்நிற மேனியை உடையவர். விஷ்ணுவோ தாமரை கண்ணை உடையவர். எனவே பேதமும் அபேதமும், சைவ வைணவர் பேதமமும் பார்ப்பவர்கள் கண்களில் தான் உள்ளது. வேதங்களும், உபநிஷத்துக்களும் ஒரு பொழுதும் பேதத்தை போதிக்கத்து.
நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் உபநிஷத்துக்களை ஆதாரமாக கொண்ட ஒரே
சித்திதாந்தம் அத்துவைத சித்திதாந்தம். அத்துவைதம் என்ற பதமே மாண்டூக்ய உபநிஷத்தில் இரண்டு முறை வருகின்றது.108 உபநிஷத்துக்களில் பெரும்பாலானவை ஆன்ம அறிவையும், ஆத்ம ஸ்வரூபத்தையும் போதிக்கின்றன. அப்படி ஆனால், தெய்வ வழிபாடு எதற்கு என்று நமக்கு தோன்றும். தன்னுள் ஒளிரும் அந்த ஆத்ம போதமே, கண்ணனாகவும், சிவனாகவும் ஒளிர்கின்றன என்று இருமை இல்லாது, எல்லாவற்றிலும் அந்த ஆத்ம போதத்தையே காண்பார்கள் ஆத்ம ஞானிகள். அதனை விளக்கும் மகா வாக்கியங்கள் நான்கு வேதத்திலும் காண படுகின்றன. தொடரும்.... 


Image may contain: text



பிருஹத் அரண்யக உபநிஷதம்...........

பிருஹத் அரண்யக உபநிஷதம் ஒரு அருமையான பொக்கிஷம். ஆன்ம அறிவை புகட்டுவதில், இந்த உபநிஷதம் தான் முதல் இடத்தை பிடிக்கும் என்றால் மிகை ஆகாது. கீழே உள்ள ஸ்லோகங்கள் பொருள்:
இந்த ஆன்மாவானது முதலில் பிரும்மமாகவே இருந்தது. அது தன்னை "நான் பிரும்மம்" என்றே அறிந்தது.எனவே அது பிரும்மமாகவே ஆகியது. தேவர்களுக்கும் எவர் தம்மை இப்படி அறிந்தாரோ, அவர்களும் அந்த பிரும்மமாஜாவே ஆனார்கள்.இன்றய வரையிலின் எவர் ஒருவர் தம்மை இப்படி அறிகின்றாரோ அவர் அந்த ப்ரம்மமாகவே ஆகி விடுகின்றார். தேவர்களும், தெய்வங்களும் கூட அந்த பிரும்மம் இல்லாமல் இயங்க முடியாது - ஏனெனில், அவர்களுக்கும் ஆன்மாவை உள்ளது அந்த பிரம்மமே. யாரேனும் ,
:நான் வேறு அந்த பிரும்மம் வேறு" இரு நினைத்துக் கொண்டு பேதத்துடன் வழிபட்டால் , அவர்கள் அந்த இறைவனின் கொட்டிலில் உள்ள பசு மெட்டுக்களை போல ஆகி விடுகின்றார். இப்பட்டி, அவர்கள் வாங்கும் தேவர்களுக்கும் உட்பொருளாக விளங்கும் ப்ரும்மத்தை , அறியாமல் , மற்றைய தேவர்களுக்கு அடிபணியும் ஒரு மிருகத்தை போல அவதால் என்ன பயன்? எனவே எல்லா மனிதரும் இந்த ஆன்ம ஞானத்தை அறிதல் மிக்க அவசியம்.
இந்த விஷயங்களை எல்லாம் நாமே படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வெள்ளைக்காரன் எழுதிய நூல் மூலம் தெரிந்து கொள்ளும் இழிநிலை மாற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.

Image may contain: text

Image may contain: 2 people, including Sudhan Kalidas


பிரும்ம ஞானம் ........

எங்கு இருமை இருக்கின்றதோ , அங்கு பார்ப்பது,காண்பது,கேட்பது, நினைப்பது,உண்பது எல்லாமே வேறாக இருக்கும். ஆனால் பிரும்ம ஞானம் பெற்றவன் , தன்னுடைய ஆத்மாவாகவே ஆகி விடுகின்றான். அவனுக்கு எல்லாமே அந்த ஆத்ம ஸ்வரூபம் தான். தன்னுடைய இந்திரியங்கள் எல்லாமே அந்த ஆத்மா வாக இருக்கும் பொழுது, எதனால் நினைப்பான்? இதனால் முகர்வான்? எதனால் பர்ர்ப்பான்? அந்த ஒரு வஸ்துவை அறிவதனால் எல்லா விஷயத்தையும் அறிய துடிக்கின்றது என்று உணர வேண்டும். 


Image may contain: text

காயத்ரி மந்திரத்தின் பெருமைகள்.....

ஸுக்ல யஜுர் வேதத்தில் உள்ள ஒரு மிக பெரிய உபநிஷதம் ப்ருஹதாரண்யக உபநிஷதம். இந்த உபநிஷத்தில் தான் "ப்ரம்மஹைர் வா காம் அஸ்மி" என்ற மகா வாக்கியம் அமைந்துள்ளது. இந்த உபநிஷதம் , காயத்ரி மந்திரத்தை பற்றி சொல்லும் அதிசயமான விஷயங்களை அனுபவிப்போம் வாருங்கள்.
காயத்ரி - என்றால் 24 அக்ஷரங்களை கொண்ட செய்யுள் வடிவம் என்று பொருள். சூரியனை மையமாக கொண்டதால் இதனை சாவித்ரி என்றும் சொல்லுவார். உபநயன காலத்தில் ப்ரம்மோபதேச சமயத்தில் அதி ரஹஸ்யமாக உபதேசிக்கப்பெறும் இந்த மகா மந்திரத்தின் பெருமைகளை காண்போம் வாருங்கள்.
௧. காயத்ரியின் முதல் எட்டு எழுத்துக்கள் பூமி, அந்தரிக்ஷம், சுவர்க்கம் - ஆகியவற்றால் ஆனது. எனவே இந்த மூன்று உலகங்களும் காயத்ரியின் முதல் பாதம் ஆனது. இந்த மூன்று உலகங்களின் பெயர்களிலும் எட்டு அகஷ்ரங்கள் உள்ளதால், இது காயத்ரியின் வரேண்யம் வரையிலும் உள்ள முதல் எட்டு எழுத்துக்கள் ஆகின. எவென் ஒருவன் காயத்ரியின் முதல் பாதம் , மூன்று உலகங்கள் என்று அறிகின்றானோ அவன், இந்த மூன்று உலகங்களில் உள்ள அனைத்தையும் வெல்கின்றான்.
௨. ருக்கு, யஜூஸ்ஸு, சாமம் ஆகிய மூன்று வேதம்களும் காயத்ரியின் அடுத்த எட்டு எழுத்துக்கள் ஆகின. எனவே இந்த மூன்று வேதங்களும் காயத்ரியின் இரண்டாம் பாதம் ஆகின. எவன் ஒருவன் காயத்ரி மகா மந்திரத்தின் இரண்டாவது பாதத்தை , இப்படி மூன்று வேதங்களின் சாரமாக அறிகின்றானோ அவன் அந்த மூன்று வேதங்களில் உள்ள அனைத்து வித்தைகளையும் (அறிவையும்) அறிந்தவன் ஆவான்.
௩. பிராணன், வியானன், அபானன் - என்று சொல்லப்பெறும் மூன்று வாயுக்களும் காயத்ரியின் மூன்றாவது பாதம் (எட்டு எழுத்துக்கள்) ஆகின. எவன் ஒருவன் இப்படி இந்த மூன்று வாயுக்களும் , காயத்ரியின் மூன்றாவது பாதம் ஆகியது என்று அறிகின்றானோ அவன் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் வென்றவன் ஆவான்.
௪. இனி இந்த மூன்று பாதாம்களுக்கும் மேலான நான்காவது பாதம் - அதுவே கீழாக உள்ள வஸ்துக்களுக்கு மேலாகி பிரகாசிக்கும் அந்த சூரியன். அதாவது நாம் காணப்படும் இந்த வஸ்துக்களுக்கு மேலாகவும், அப்பாற்பட்டு பிரகாசிக்கின்ற அந்த சூரியனாகவே உள்ளது காயத்ரியின் நான்காவது பாதம். எவன் ஒருவன் இப்படி காயத்ரியின் நான்காவது பாதத்தை
சூரியனாக அறிகின்றானோ அவன் அப்படிப்பட்ட யஷஸ்(பெருமை), ஸ்ரீ ( செல்வம் / நற்குணங்கள்) உடையவனாக ஒளிர்கின்றான்.
௪. அந்த காயத்ரி ஆனவள் நான்காவது பாதத்தில் தான் நிற்கின்றாள். (உலகத்திற்கு அப்பாற்பட்டது) . அந்த நான்காவது பாதம் ஆகிய (சூரியன்) சத்தியத்தின் மீது நிற்கின்றது. இந்த (அக) கண்ணே உண்மையானது. கண்ணால் காண்பது மட்டுமே உண்மை என்பதால் கண்ணே சத்தியமானது. எனவே தான் இருவர் சண்டை இடும் பொழுது "நான் கேட்டேன்", "நான் பார்த்தேன்" என்று இருவர் சொன்னாலும் கண்ணால் கண்டவர்க்கே முக்கியத்துவம். அந்த சத்தியம் ஆனது பலத்தின் மீது உள்ளது - அந்த பலமானது பிராணன் மீது உள்ளது. எனவே அந்த சத்தியமானது பிராணனின் மீது நிற்கின்றது (ப்ரதிஷ்டித்து). எனவே அந்த காயத்ரி அத்யாத்மம் (ஆத்மா) என்ற தன்னுள் உள்ள பிராணனின் மீது நிற்கின்றாள்.கயா என்ற பிராணனை காப்பாற்றியதனால் காயத்ரி என்று பெயர். எந்த சாவித்ரியை குருவானவர் தம்முடைய சிஷ்யர்களுக்கு உபதேசிப்பாரோ அதுவே காயத்ரி எனப்படும்.
௬.மூவுலகங்களையும் ஏற்பதினால் காயத்ரியின் முதல் பாதத்தின் அறிவால் வரும் பலனையே ஒருவன் அடைகின்றான். அதே போல மூன்று வேதங்களில் உள்ள எல்லா வித்தைகளையும் அறியும் ஒருவன் காயத்ரியின் இரண்டாவது பாதத்தை அறிவதனால் அடையும் பலன்களையே அடைகின்றான். எவன் ஒருவன் அனைத்து பிராணிகளையும் ஏற்கின்றானோ, அவன் காயத்ரியின் மூன்றாவது பாதத்தை அறிவதனால் அடையும் பலனையே அடைகின்றான். ஆனால் அந்த கயாத்திரியின் நான்காவது பாதமாகிய , உலகிற்கு அப்பாற்பட்ட அந்த (ஆத்ம) ஒளிர்கின்ற சூரியனை அறிதல் எந்தது - எதற்குமே ஈடு கட்ட முடியாத ஒன்று. எத்துணை வஸ்துக்களை தான் ஒருவர் ஏற்க முடியும்? !!!!
சங்கரபாஷ்யம்: இப்படி காயத்ரியின் மூன்று பாதங்களை அறிவதால் கிடைக்கும் எந்த பலன்களையும் ஒருவன் ஏற்க முடியாது. மூன்று உலகங்களை ஒருவன் ஏற்க முடியுமா? இல்லை. எனவே இந்த காயத்ரியை அதன் பூர்ண வடிவமாகி தியானித்தால் வேண்டும். முதலில் கூறப்பட்ட (மூன்று பாதங்களின்) உவமைகளும் கூட அடைய இயாலாதவைகள் தாம்.
காயத்ரியின் வந்தனம்: ஒரு பாதம் உடையவளே, இரு பாதம் உடையவளே, முப்பதாம் உடையவளே, நான்கு பாதங்கள் உடையவளே, பாதங்கள் அற்றவளே! இந்த உலகற்றிக்கு அப்பாற்பட்டு ஒளித்தூரம் ஊறியனாகிய நான்காவது பதிவு உடையவளே உனக்கு வணக்கம்!
காயத்ரி மந்திரத்தை அறிந்தவன், எவர் மீதேனும் பகை இருக்குமாயின், "என் எதிரியின் இஷ்ட வாஸ்து சிந்திக்காமல் போகட்டும்" என்று காயத்ரி ஜபித்தால் எதிரிக்கு அபஜெயம் உண்டாகும். அதே போல தான் எதிரியின் இஷ்ட வாஸ்து தனக்கு சிந்திக்கட்டும் என்று ஜபிக்க , எதிரியின் காம்ய (பிரிய) வாஸ்து ஜெபிப்பவரை வந்து அடையும்.
காயத்ரியை உபாசிப்பதால் ஒருவன் அந்த ஆதம் ஸ்வரரோபதை, சூரியனைப் போல தான் அக கண்களால் கண்டு ஜவான் முக்தனாக ஆகின்றான் என்பதே இந்த உபநிஷத் வாக்கியங்களின் உட்பொருள் என்பது என்னுடைய கருத்து.

















Show more reaction