Thursday, May 31, 2018

உபநிஷத்தில் உள்ள உக்கிர ந்ருஸிம்ஹனின் வர்ணனம் ...........


தே³வா ஹ வை ப்ரஜாபதிமப்³ருவந்நத² கஸ்மாது³ச்யத
உக்³ரமிதி ஸ ஹோவாச ப்ரஜாபதிர்யஸ்மாத்ஸ்வமஹிம்நா
ஸர்வாꣳல்லோகாந்ஸர்வாந்தே³வாந்ஸர்வாநாத்மந: ஸர்வாணி
பூ⁴தாந்யுத்³வ்ருʼஹ்ணாத்யஜஸ்ரம் ஸ்ருʼஜதி விஸ்ருʼஜதி
விவாஸயத்த்யுத்³க்³ராஹ்யத உத்³க்³ருʼஹ்யதே ஸ்துஹி ஶ்ருதம் க³ர்தஸத³ம்
யுவாநம் ம்ருʼக³ம் ந பீ⁴மமுபஹந்துமுக்³ரம்
ம்ருʼடா³ஜரித்ரே ருத்³ரஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்நிவபந்து ஸேநா:
var ஸிம்ஹஸ்தவாநோ
தஸ்மாது³ச்யத உக்³ரமிதி ॥
இனி தேவர்கள், யாரை உக்கிரன் என்று போற்ற வேண்டும் என்று கேட்க, ப்ரம்மா விளக்கம் தருகின்றார். எவன் தன மகிமையால் அனைத்து உலகத்தையும் , அனைத்து ஜீவர்களையும்,தேவர்களையும் அனைத்து படைப்புகளையும், அனைத்தையும் படைக்கவும் அளிக்கவும் செய்கின்றானோ அவனே உக்கிரன் எனப்படுகின்றன.
அடுத்த படியாக, ஸ்ரீ ருத்ரத்தில் உள்ள ஸ்லோகம் இங்கு வருகின்றனது:
ஸ்துஹி ஶ்ருதம் க³ர்தஸத³ம் யுவாநம் ம்ருʼக³ம் ந பீ⁴மமுபஹந்துமுக்³ரம்
ம்ருʼடா³ஜரித்ரே ருத்³ரஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்நிவபந்து ஸேநா:
எவன் என்னுடைய இதய குகையில் வாழ்கின்றானோ, எவன் அழகு நிறைந்த யுவாவாக இருக்கின்றானோ, எவன் சத்ருக்களை அழிப்பதில் உக்ராமமாய் இருப்பானோ, எவன் சிம்மத்தை போன்ற வீரம் உள்ளவனோ, எவன் மிகவும் ப்ரஸித்தமானவனோ, அவனை துதிக்கின்றேன். அழியக்கூடிய இந்த சரீரத்தில், அழியாத நிரந்தரமான (ஆத்ம ஞானம்) சுகத்தை எனக்கு அளிப்பீர்களாக! தங்களுடைய சைன்யங்கள் எங்கள் சத்ருக்களை அளிக்கட்டும்!
என்ன அற்புதம் என்று பார்த்தீர்களா? லக்ஷ்மிந்ருஸிம்ஹன் தன பரமேரமேஸ்வரன் என்று கொண்டாடும் ஒரு அற்புதமான ஸ்லோகம். பரமேஸ்வரனும், ந்ருஸிம்ஹனும் ஒன்று என்று சொல்லும் உபநிஷத்தை கொண்டாடுவோம்.
உக்கிரம் என்ற பதத்திற்கு மேற்கூறியவாறு ப்ரம்மா விளக்கம் கொடுத்தார்.

ந்ருஸிம்ஹ தாபினி உபநிஷத்தின் பெருமை - 4

ருʼதம் ஸத்யம் பரம் ப்³ரஹ்ம புருஷம் க்ருʼஷ்ணபிங்க³லம் ।
ஊர்த்⁴வரேதம் விரூபாக்ஷம் ஶங்கரம் நீலலோஹிதம் ॥
இந்த மந்திரம் நமக்கு அனைவருக்கும் தெரிந்த மந்திரமே. சந்தியா வந்ததில் சமஷ்டி அபிவாதனத்தில் , ஹரிஹர வந்தனம் செய்யும் மந்திரம். உபநிஷத்துக்கள் ஒரு போதும் பேதத்தை போதிக்கத்து. எந்த புருஷன், சத்யமாகவும், பரப்பிரம்ம வடிவாகவும் இருக்கின்றானோ, எவன் திருமாலின் கருநிறத்துடனும், சிவனின் செந்நிறத்துடனும் இருக்கின்றானோ, எவன் சங்கரனாக இந்த உலகை காக்கின்றானோ, எவன் நீல நிறம் உள்ள கழுத்தை உடையவனோ அவனுக்கு நமஸ்காரம். ந்ருஸிம்ஹனும் சிவன் ஒன்று என்று பொருள் படுகின்றது.(எனவே தான் ந்ருஸிம்ஹனுக்கு பிரதோஷ பூஜை செய்ய படுகின்றது. சிவன் வேறு ந்ருஸிம்ஹன் வேறு அல்ல).
உமாபதி: பஶுபதி: பிநாகீ ஹ்யமிதத்³யுதி: ।
ஈஶாந: ஸர்வவித்³யாநாமீஶ்வர: ஸர்வபூ⁴தாநாம்
ப்³ரஹ்மாதி⁴பதிர்ப்³ரஹ்மணோঽதி⁴பதிர்யோ வை யஜுர்வேத³வாச்யஸ்தம்
ஸாம ஜாநீயாத்³யோ ஜாநீதே ஸோঽம்ருʼதத்வம் ச க³ச்ச²தி
எவன் உமாபதியாக, பசுபதியாக, பினாகம் என்னும் வில்லை உடையவனாக, இருக்கின்றானோ , எவன் அணைத்து வித்யைகளுக்கும் முடிவாக இருக்கின்றானோ, அணைத்து படைப்புகளுக்கும் ஈஸ்வரனாக இருக்கின்றானோ, பிரும்மமாகவும், ப்ரும்மாவிற்கு தலைவனாகவும் உள்ளானோ - அவனை அறிவார்கள் அம்ருதத்வம் அடைவார்கள். மேற்கூறிய மந்திரங்கள் அனைத்தும் பஞ்ச ப்ரஹ்மமா உபநிஷத்திலும் இருக்கின்றன. எனவே சிவன் வேறு நரசிம்மன் வேறு அல்ல என்று இந்த உபநிஷதம் சொல்கின்றது.



ந்ருஸிம்ஹ தாபினி உபநிஷத்தின் பெருமை - 3

ந்ருஸிம்ஹனின் பெருமைகளை என்னவென்று சொல்ல ... 

ருʼதம் ஸத்யம் பரம் ப்³ரஹ்ம புருஷம் க்ருʼஷ்ணபிங்க³லம் ।
ஊர்த்⁴வரேதம் விரூபாக்ஷம் ஶங்கரம் நீலலோஹிதம் ॥
உமாபதி: பஶுபதி: பிநாகீ ஹ்யமிதத்³யுதி: ।
ஈஶாந: ஸர்வவித்³யாநாமீஶ்வர: ஸர்வபூ⁴தாநாம்
ப்³ரஹ்மாதி⁴பதிர்ப்³ரஹ்மணோঽதி⁴பதிர்யோ வை யஜுர்வேத³வாச்யஸ்தம்
ஸாம ஜாநீயாத்³யோ ஜாநீதே ஸோঽம்ருʼதத்வம் ச க³ச்ச²தி


ஸ்ரீ ருத்ரத்திலும், பஞ்ச ப்ரம்ம (சிவ) மந்திரங்களிலும் உள்ள அனைத்துமே ந்ருஸிம்ஹ தாபினி உபநிஷத்தில் உள்ளது. சர்வேஸ்வரனான ந்ருஸிம்ஹன் சிவன் வடிவாகவே உள்ளான். உமையின் பதியாகவும், உலகத்தில் உள்ள (பசு) ஜீவர்களின் தலைவனாகவும், பினாகம் என்னும் வில்லை உடையவனாகவும், அனைத்து உயிர்களுக்கும் ஈஸ்வரனாகவும், ப்ரஹ்மமாகவும், பிரம்மாவுக்கு தலைவனாகவும், எவன் ஒருவன் ஸ்ரீ ந்ருசிம்ஹனை உபாசிக்கின்றானோ அவன் அமர தன்மையை அடைவான் என்கிறது இந்த உபநிஷதம்.


ந்ருஸிம்ஹ தாபினி உபநிஷத்தின் பெருமை - 2

தஸ்ய ஹ வா உக்³ரம் ப்ரத²மம் ஸ்தா²நம் ஜாநீயாத்³யோ
ஜாநீதே ஸோঽம்ருʼதத்வம் ச க³ச்ச²தி வீரம் த்³விதீயம் ஸ்தா²நம்
மஹாவிஷ்ணும் த்ருʼதீயம் ஸ்தா²நம் ஜ்வலந்தம் சதுர்த²ம்
ஸ்தா²நம் ஸர்வதோமுக²ம் பஞ்சமம் ஸ்தா²நம் ந்ருʼஸிம்ஹம்
ஷஷ்ட²ம் ஸ்தா²நம் பீ⁴ஷணம் ஸப்தமம் ஸ்தா²நம்
ப⁴த்³ரமஷ்டமம் ஸ்தா²நம் ம்ருʼத்யும்ருʼத்யும் நவமம் ஸ்தா²நம்
நமாமி த³ஶமம் ஸ்தா²நமஹமேகாத³ஶம் ஸ்தா²நம்
ஜாநீயாத்³யோ ஜாநீதே ஸோঽம்ருʼதத்வம் ச க³ச்ச²தி ஏகாத³ஶபதா³
வா அநுஷ்டுப்³ப⁴வத்யநுஷ்டுபா⁴ ஸர்வமித³ம் ஸ்ருʼஷ்டமநுஷ்டுபா⁴
ஸர்வமித³முபஸம்ஹ்ருʼதம் தஸ்மாத்ஸர்வாநுஷ்டுப⁴ம் ஜாநீயாத்³யோ
ஜாநீதே ஸோঽம்ருʼதத்வம் ச க³ச்ச²தி ||


ந்ருஸிம்ஹனின் மந்த்ரராஜ மந்திரத்தை பற்றி, தேவர்கள் வினவ ப்ரம்மா அவர்களுக்கு உபதேசம் செய்கின்றார். உக்கிரம் வீரம் என்று துவங்கும் ந்ருசிம்ஹனைன் மந்திரத்தை, முழுவதுமாக உபதேசம் செய்கின்றார் ப்ரம்மா. முப்பத்தி இரண்டு அக்ஷரங்களை கொண்ட இந்த அனுஷ்டுப் என்னும் , சந்தஸ்ஸில் உள்ள மந்திரத்தின் மஹிமையை பலவாறாக வர்ணிக்கின்றார் ப்ரம்மா. ஸ்ருஷ்டி, ஸ்திதி , சம்ஹாரம் என்ற முத்தொழில்களுக்கும் ஆதாரம் இந்த அனுஷ்டுப் தான் என்று சொல்கின்றார் ப்ரம்மா. அனுஷ்டுப் சந்தஸ்ஸில் அமைந்துள்ள ந்ரிசிம்மனின் மந்த்ரத்தை , அறிந்தவர்கள் சாகா நிலை (அம்ருதத்வம்) அடைவார்கள் என்கிறார் ப்ரம்மா.

ந்ருஸிம்ஹ தாபினி உபநிஷத்தின் பெருமை - 1

தே³வா ஹ வை ப்ரஜாபதிமப்³ருவந்நத² கஸ்மாது³ச்யத
உக்³ரமிதி ஸ ஹோவாச ப்ரஜாபதிர்யஸ்மாத்ஸ்வமஹிம்நா
ஸர்வாꣳல்லோகாந் ஸர்வாந்தே³வாந் ஸர்வாநாத்மந: ஸர்வாணி
பூ⁴தாந் யுத்³வ்ருʼஹ்ணாத் யஜஸ்ரம் ஸ்ருʼஜதி விஸ்ருʼஜதி
விவாஸயத் த்யுத்³க்³ராஹ்யத உத்³க்³ருʼஹ்யதே
ஸ்துஹி ஶ்ருதம் க³ர்தஸத³ம்யுவாநம் ம்ருʼக³ம் ந பீ⁴மமுபஹந்துமுக்³ரம்
ம்ருʼடா³ஜரித்ரே ருத்³ரஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்நிவபந்து ஸேநா:
தஸ்மாது³ச்யத உக்³ரமிதி ॥

முதலில் ந்ருஸிம்ஹனின் மந்த்ராராஜ மந்திரத்தை உபதேசம் செய்த பிரும்மா, தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க , அந்த மந்திரத்தில் உள்ள பாதங்களின் அர்த்தங்களை விரிவாக வ்யாக்யானம் செய்கின்றார். என்ன பெருமை! உபநிஷத்தில், அதுவும் ஸ்ருஷ்டிகர்த்தா ஆகிய ப்ரம்மாவின் வாயிலே வந்த உன்னதமான வ்யாக்யார்த்தங்கள் - வேறு எந்த ஒரு மந்திரத்திற்கும் இல்லாத பெருமை இந்த ந்ருஸிம்ஹனின் மந்திரத்திற்கு . இந்த உலகில் வாழ பொருளும், வீடு பேரு பெற அருளும் தரும் ஒரே தெய்வம் ந்ருஸிம்ஹன் தான்.
தேவர்கள், உக்கிரம் என்று எதனால் ந்ருசிம்ஹனை சொல்கின்றீர்கள் என்று வினவ, ப்ரம்மா அதற்க்கு பொருள் சொல்கின்றார் கேளுங்கள். அனைத்து உலகங்களையும், தேவர்களையும், மனிதர்களையும், படைப்புகளையும் - தன் பால் ஈர்க்கும் சக்தி படைத்தவனும், அனைத்தையும் இடைவிடாது
ஸ்ருஷ்டித்தும், ரக்ஷித்தும், அழித்தும் காக்கும் பெருமை கொண்டவன் ந்ருஸிம்ஹன்.
ஸ்துஹி ஶ்ருதம் க³ர்தஸத³ம்யுவாநம் ம்ருʼக³ம் ந பீ⁴மமுபஹந்துமுக்³ரம்
ம்ருʼடா³ஜரித்ரே ருத்³ரஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்நிவபந்து ஸேநா:
மேற்காணும் மந்திரம் ஸ்ரீ ருத்ரத்திலும் உள்ளது. பரமேஸ்வரனும் ந்ருஸிம்ஹனும் ஒன்று என்னும் ஞானத்தை அளிக்கின்றார் ப்ரம்மா நமக்கு. இதய குகையில் வாழபவரும், நித்ய யுவாவாக இருப்பவரும், மிருகம் என்னும் சிம்மத்தை போல வீரம் மிகுந்த உக்கிர ரூபத்தை தரித்தவரும், மிகவும் புகழ் பெற்றவருமாகிய ந்ருசிம்ஹனை துதிப்போமாகுக! ருத்திரனாகி இருக்கும் ந்ருஸிம்ஹனே! அழியக்கூடிய இந்த சரீரத்திலேயே சாசுவதமான சுகத்தை (பூரணமான ஞானத்தை) அளிக்க வேண்டும்! உங்களுடைய சைன்யங்கள் எங்களின் (அகம், புறம்) எதிரிகளை அழித்து ஒழிக்கட்டும்!
மேற்கூறிய மந்திரத்தின் பொருளால், ந்ருஸிம்ஹனிடத்தில் (பிரமேஸ்வரனிடத்திலும்) பிரார்த்தனை - நம்முடைய உள்ளே உள்ள காம க்ரோதங்களை அழித்து , பூர்ணனான ஞானத்தையே அருள வேண்டும் என்று. அதே போல வெளியிலே உள்ள வஞ்சகர்களான நம் எதிரிகளை அழிக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை.
இப்படி உக்கிரமான ரூபத்தை தரித்து , தன பக்தர்களை காத்து, துஷ்டர்களை அழிப்பதில் அபரிமிதமான சக்தியை படைத்திருப்பதால் ந்ருசிம்ஹனை உக்கிரம் என்னும் பதம் வர்ணிக்கும்.
இதை விட அழகாக, எவரேனும் சொல்ல முடியுமா? இறைவன் கொள்ளும் கோபமும், பக்தர்களை anugruham செய்வதற்கே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கருணை கடலாகிய லட்சுமி ந்ருஸிம்ஹன் நம்மையும், நம் தமிழ்த் திருநாட்டையும், பாரத நாட்டையும் துஷ்டர்கள், பிரிவினை வாதிகள், மிலேச்சர்களிடத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்தித்து கொள்வோம்.

Tuesday, May 29, 2018

ஊர்த்வ புண்ட்ர தாரண விதியும் பலனும் - வாசுதேவ உபநிஷத்




வாசுதேவ உபநிஷத்தில் எப்படி ஊர்த்வ புண்ட்ரம் இட்டு கொள்ள வேண்டும் என்ற நியமம் சொல்ல பட்டிருக்கின்றது. விஷ்ணு காயத்ரி, அல்லது கண்ணனின் பன்னிரு நாமங்களால் தான் இட்டுக் கொள்ள வேண்டும் என்று உள்ளது. அப்படி சங்க, சக்ர கதாதாரியாக கண்ணனை தியானித்து , பன்னிரண்டு ஊர்த்வ புண்டரங்களை தரிப்பவர்களுக்கு ஆன்ம ஞானம் ஏற்பட்டு , ஆத்ம ஸ்வரூபம்வெளிப்படும் என்கிறான் வாசுதேவ கிருஷ்ணன். கோபி சந்தனம் கிடைக்காவிட்டால், துளசி செடியின் அருகில் உள்ள மண்ணால் ஊர்த்வ புண்ட்ரம் இட்டுக் கொள்ளலாம் என்கிறது அந்த உபநிஷத்.

கோபி சந்தனத்தை, கங்கை நீரில் குழைத்து மோதிர விரலால் இட்டுக் கொள்ள வேண்டும். கேசவாதி பன்னிரு நாமங்களை சொல்லிக்கொண்டே இட்டுக் கொள்ளுதல் வேண்டும். அதிராத்ரம், அக்னிஹோத்ரம் ஆகிய வேள்வியின் சாம்பலை குழைத்து இடையில் இட்டுக் கொள்ள வேண்டும்.சிகை, யக்னோபவீதம் இல்லாத பரமஹம்ச சந்யாசிகள் ஓம்காரத்தை மட்டும் சொல்லி புண்ட்ரத்தை தரிக்க வேண்டும். தங்கள் நெற்றி(லலாடம்)-1 , கழுத்து(முன்னும்,பின்னும்)-2, மார்பு-3, வயிறு(குக்ஷி)-3, தோள்பட்டை (பஹு மூலம்) - 2 , வயிற்றின் பின்புறம் -௧, உச்சந்தலை - 1 மொத்தம் பதிமூன்று புண்டரங்கள். மோதிர விரலால் தான் இட்டு கொள்ள வேண்டும். 

அத² கோ³பீசந்த³நம் நமஸ்க்ருʼத்வோத்³த்⁴ருʼத்ய ।
கோ³பீசந்த³ந பாபக்⁴ந விஷ்ணுதே³ஹஸமுத்³ப⁴வ ।
சக்ராங்கித நமஸ்துப்⁴யம் தா⁴ரணாந்முக்திதோ³ ப⁴வ ।
இமம் மே க³ங்கே³ இதி ஜலமாதா³ய விஷ்ணோர்நுகமிதி மர்த³யேத் ।
அதோ தே³வா அவந்து ந இத்யேதந்மந்த்ரைர்விஷ்ணுகா³யத்ர்யா கேஶவாதி³-
நாமபி⁴ர்வா தா⁴ரயேத் ।

நெற்றியில் புண்ட்ரம் இட்டுக் கொள்ளும் மந்திரம் :
சங்க சக்ர கதை பானே துவாரகா நிலாயகியுத
கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் ஷரணாகதம் 

(ப்³ரஹ்மசார்யாதீ³நாம் தா⁴ரணாப்ரகார:)

ப்³ரஹ்மசாரீ வாநப்ரஸ்தோ² வா
லலாடஹ்ருʼத³யகண்ட²பா³ஹூமூலேஷு வைஷ்ணவகா³யத்ர்யா
க்ருʼஷ்ணாதி³நாமபி⁴ர்வா தா⁴ரயேத் । இதி த்ரிவாரமபி⁴மந்த்ர்ய
ஶங்க²சக்ரக³தா³பாணே த்³வாரகாநிலயாச்யுத । கோ³விந்த³ புண்ட³ரீகாக்ஷ ரக்ஷ மாம் ஶரணாக³தம் । இதி த்⁴யாத்வா
க்³ருʼஹஸ்தோ² லலாடாதி³த்³வாத³ஶஸ்த²லேஷ்வநாமிகாங்கு³ல்யா
வைஷ்ணவகா³யத்ர்யா கேஶவாதி³நாமபி⁴ர்வா தா⁴ரயேத் ।
ப்³ரஹ்மசாரீ க்³ருʼஹஸ்தோ² வா லலாடஹ்ருʼத³யகண்ட²பா³ஹூமூலேஷு
வைஷ்ணவகா³யத்ர்யா க்ருʼஷ்ணாதி³நாமபி⁴ர்வா தா⁴ரயேத் ।
யதிஸ்தர்ஜந்யா ஶிரோலலாடஹ்ருʼத³யேஷு ப்ரணவேநைவ தா⁴ரயேத் ।

மற்ற பன்னிரண்டு புண்டரங்களுக்கும் கேசவாதி பன்னிரண்டு நாமங்களை சொல்லிக்கொண்டே இட்டுக் கொள்ள வேண்டும்.

இப்படி இட்டுக் கொள்வதால் , ஒருவனுடைய விந்து, யோகபலம், தண்டம், 
புண்ட்ரம்,ஆகிய நான்கு விஷயங்கள் மேலோங்கி சென்று அவன் எல்லாவற்றிற்கும் மேலான ஆத்ம ஞானத்தை பெற்று மேலான பதவியை அடைகின்றான்.

முமுக்ஷுக்கள் அதாவது மோக்ஷத்தில், ஆத்ம ஞானத்தில் இச்சை உள்ளவர்கள் நித்யமும் த்ரிபுண்ட்ரத்தை தரிப்பதால், கண்ணுக்கு தெரியாத அந்த ஆத்ம சித்தி ஏற்படும்.


(கோ³பீசந்த³நப⁴ஸ்மநோர்தா⁴ரணவிதி:⁴)

ப்³ராஹ்மாணாநாம் து ஸர்வேஷாம் வைதி³காநாமநுத்தமம் ।
கோ³பீசந்த³நவாரிப்⁴யாமூர்த்⁴வபுண்ட்³ரம் விதீ⁴யதே ।
யோ கோ³பீசந்த³நாபா⁴வே துளஸீமூலம்ருʼத்திகாம் ।
முமுக்ஷுர்தா⁴ரயேந்நித்யமபரோக்ஷாத்மஸித்³த⁴யே ।
அதிராத்ராக்³நிஹோத்ரப⁴ஸ்மநாக்³நேர்ப⁴ஸிதமித³ம்விஷ்ணுஸ்த்ரீணி
பதே³தி மந்த்ரைர்வைஷ்ணவகா³யத்ர்யா ப்ரணவேநோத்³தூ⁴லநம் குர்யாத் ।
ஏவம் விதி⁴நா கோ³பீசந்த³நம் ச தா⁴ரயேத் ।
யஸ்த்வதீ⁴தே வா ஸ ஸர்வபாதகேப்⁴ய: பூதோ ப⁴வதி ।
பாபபு³த்³தி⁴ஸ்தஸ்ய ந ஜாயதே । ஸ ஸர்வேஷு தீர்தே²ஷு ஸ்நாதோ ப⁴வதி ।
ஸ ஸர்வைர்யஜ்ஞைர்யாஜிதோ ப⁴வதி । ஸ ஸர்வைர்தே³வை: பூஜ்யோ ப⁴வதி ।
ஶ்ரீமந்நாராயணே மய்யசஞ்சலா ப⁴க்திஶ்ச ப⁴வதி ।
ஸ ஸம்யக்³ஜ்ஞாநம் ச லப்³த்⁴வா விஷ்ணுஸாயுஜ்யமவாப்நோதி ।
ந ச புநராவர்ததே ந ச புநராவர்ததே இத்யாஹ ப⁴க³வாந்வாஸுதே³வ: ।
யஸ்த்வேதத்³வாதீ⁴தே ஸோঽப்யேவமேவ ப⁴வதீத்யோம் ஸத்யமித்யுபநிஷத் ॥

இப்படி விதி பூர்வமாக ஊர்த்வ புண்ட்ரம் தரிப்பதால், எல்லா பாபங்களும் துலையும். அனைத்து புண்ய தலங்களிலும் நீராடிய புண்யம் கிடைக்கும், அனைத்து வேள்விகளையும் செய்த நற்பயன் கிடைக்கும் ,அனைத்து தேவர்களாலும் வணங்க தக்கவன் ஆவான். ஸ்ரீமன் நாராயணன் மீது அசைக்க முடியாத பக்தி உண்டாகும். குற்றமில்லாத, (ஆத்ம) சரியான ஞானம் ஏற்படும். விஷ்ணு சாயுஜம் ஏற்பட்டு, பிறப்பு இறப்பு இல்லாத உன்னத ஸ்திதி ஏற்படும் - என்று அறுதி இட்டு சொல்கின்றார் வாசுதேவன்.

இந்தப் படத்தில் ஸ்ரீ ஸ்ரீ அண்ணா இட்டுக்கொண்டுள்ளது தான் உபநிஷத் பிரகாரமான ஊர்த்வ புண்ட்ர தாரணம்.


அங்குரார்ப்பணம்

அங்குரார்ப்பணம் என்பது கிருஹ்ய சூத்திரங்களில் ஒரு முக்கியமான அம்சம். நவ தானியங்களை முளை கட்டி ( நெல், கோதுமை, துவரை, பச்சை பயறு, கொண்டை கடலை,மொச்சை, எள்,உழுந்து, கொள்) , அவற்றை விதைப்பது தான் பாலிகை தெளித்தால் அல்லது அங்குரார்ப்பணம் எனப்படும். திக் பாலகர்கள் (திசை காவலர்கள்) - கிழக்கில் இந்திரன், தெற்கில் யமன், மேற்கில் வர்ணன், வடக்கில் சோமன் ,நடுவில் பிரம்மா - என்று ஐந்து மண் கிண்ணங்களில் , மண் கிராபி - அவர்களை ஆவாஹனம் செய்து, இந்த விதை கலவையில் பாலை கலந்து, எஜமானன் முதலில் தெளிக்க , பிறகு சுமங்கலிகளை விட்டு தெளிக்க வைப்பார்கள். அந்த பாலிகையை, 5 -7 காலி, மாலி வழிபட்டு, பிறகு ஆற்றில் கரைத்து விட வேண்டும். அந்த தேவதைகளின் சக்தியால் விதைகள் வளருவதை கண்டு மகிழ்ச்சி உற்று , திசை காவலர்களை வாங்குவது இந்த கிராமம். அணைத்து சுப காரியங்களுக்கும் பூர்வாங்கமாக செய்யப்பெறும் ஒரு கர்மா தான் இந்த அங்குரார்ப்பணம். அங்குரம் என்றால் விடை அல்லது முளை என்று பொருள். அர்ப்பணம் என்றால் சமர்ப்பித்தல் என்று பொருள் படும்.

ப்ரதிஸர பந்தம் / கங்கண தாரணம்



  1. ஆண்களுக்கு  - சொளும், அன்னப்ராசனம், சமவர்தனம், உபநயனம், விவாஹம் 
  2. பெண்களுக்கு - அன்னப்ராசனம், விவாஹம், பும்ஸவனம், சீமந்தம் 


ஆகிய விஷேஷங்களின் பொழுது, காப்பு கட்டுதல் என்ற ப்ரதிஸர பந்தம் நடை பெறுகின்றது. கும்பத்தில் வருணனை ஆவாஹனம் செய்து, உபசாரங்கள் செய்து, அதன் பிறகு கும்பத்திற்கு வடக்கில் அரிசியை பரப்பி, அதன் மீது  சந்தனம் பூசிய சூத்திரம் (கயிறு) வைத்து, ப்ராம்மணர்களை கொண்டு ப்ரதிஸர பந்த ஜபம் செய்விக்க வேண்டும். (இதற்க்கு வேத மந்திரங்கள் உண்டு).

ஒரு காரியத்தை செய்யும் பொழுது, உறுதி பூண்டு ஏக மனதாக , அந்த காரியம் முடியும் வரை இருப்பதற்கு ஹேதுவாக , கையில் கட்டிக்கொள்ளும் கயிறே  கங்கணம்  எனப்படும். இதனையே, "கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பி விட்டான்" என்பார்கள்.

மந்தஜெபம் செய்து, மந்திரத்தால் ப்ரோக்ஷித்து, அதன் பிறகு மகா மிருத்யுஞ்சய மந்திரத்தால், அந்த கயிற்றை, மும்முறை, விபூதியில் தோய்த்து, பெண்ணுக்கு - இடது கையிலும், ஆணுக்கு - வலது கையிலும் கட்டுதல் வேண்டும். சரட்டை கட்டும் பொழுது , கைகளில், பழம் அட்சதை நிறைந்திருக்க வேண்டும்.

எந்த காரியத்திற்காக, கங்கணம் கட்டிக்கொள்கிறோமோ, அந்த க்ரமம், நிறைவேறிய பிறகு, அன்று சாயம் வேளையில் ஓம் பூ : ஓம் புவ : ஓம் சுவ:
ஓம் பூர் புவ சுவ : என்று சொல்லி, அந்த கயிற்றை கழட்டி , ஆற்றில் அல்லது குளத்தில்  இட்டு விட வேண்டும்.(கங்கணத்தை கட்டி விடும் புண்ணியவான்கள், அதனை விசர்ஜனம் செய்யும் கிராமத்தை சொல்லி தருவதில்லை).


திக் பாலகர்களை ஆவாஹனம் செய்து, மாத்திரத்தால் தெளிக்கும் பாலிகையை, மண்டபத்திலேயே விட்டு விட்டு வருதல் தோஷம். அதனை, பெண் வீட்டிக்கு எடுத்து சென்று, முறையே குளத்திலோ, ஆற்றிலோ விசர்ஜனம் செய்ய வேண்டும்.   அதே போல தான் கையில் கட்டிக்க கொள்ளும் காப்பியும், விஷேஷம் முடிந்த பிறகு கழற்றி ஆற்றிலோ, குளத்திலோ ஐடா வேண்டும் என்பது விதி.

இப்படியாக ப்ரதிஸர பந்தம் என்னும் கங்னதாரணம் முற்றும்.

Saturday, May 19, 2018

வேதோக்த உபநயனம்..........

வேதோக்த உபநயனம் - அறிவோமா?

இன்றய தினங்களில் லௌகீக உபநயங்களும், சொந்த பந்தங்களை எல்லாம் அழைத்து ஒரு திருவிழா போல ஒரே நாளில் முடிக்கும் இந்த கிராமத்தின் விவரங்களை அறிவோமா?

க³ர்பா⁴ஷ்டமேঽப்³தே³ குர்வீத ப்³ராஹ்மணஸ்யௌபநாயநம் ।
க³ர்பா⁴தே³காத³ஶே ராஜ்ஞோ க³ர்பா⁴த் து த்³வாத³ஶே விஶ: ॥  2.36

தாயின் கர்பத்தில் இருந்து எட்டு வருடங்களில் ப்ராம்மணனும், பதினோரு வருடங்களில் அரசனும், பன்னிரண்டாவது வருடத்தில் வைசியனும் உபநயனம் செய்து கொள்ள வேண்டும்.

ஆ ஷோத³ஶாத்³ ப்³ராஹ்மணஸ்ய ஸாவித்ரீ நாதிவர்ததே ।
ஆ த்³வாவிம்ஶாத் க்ஷத்ரப³ந்தோ⁴ரா சதுர்விம்ஶதேர்விஶ: ॥ 2.37

பதினாறு வயதிற்குள்  ப்ராம்மணனும், இருப்பது இரண்டு வயதிற்குள்  க்ஷத்ரியனும், இருப்பது நான்கு வயதிற்குள் வைச்யனும்  உபநயம் செய்து கொண்டு, சாவித்ரி என்ற காயத்ரி மந்த்ர உபதேசம்  பெற்றுக் கொள்ள வேண்டும்.

அத ஊர்த்⁴வம் த்ரயோঽப்யேதே யதா²காலமஸம்ஸ்க்ருʼதா: ।
ஸாவித்ரீபதிதா வ்ராத்யா ப⁴வந்த்யார்யவிக³ர்ஹிதா: ॥ 2.39

மேற்கூறிய வயது வரம்பிற்குள் , உபநயனம் ஆகி, ப்ரம்மோபதேசம் என்னும் சாவித்ரி மந்திர உபதேசம் ஆகா விடின் அந்த சிறுவர்கள் உபநயனம் செய்து கொள்ளும் யோக்கியதையை இழந்து விடுகிறார்கள்.அப்படிப்பட்டவர்கள் வ்ராத்யர்கள் அல்லது தம் குடிமையை இழந்தவர்கள் என்று சான்றோர்களால் (ஆரியர்களால்) இகழ  படுவார்கள்.

கார்ஷ்ணரௌரவபா³ஸ்தாநி சர்மாணி ப்³ரஹ்மசாரிண: ।
வஸீரந்நாநுபூர்வ்யேண ஶாணக்ஷௌமாவிகாநி ச ॥  2.41

இனி பிரம்மச்சாரிகள் அணியும் ஆடை பற்றிய விவரங்கள் . மேல் துணி - கரு  மானின்  (க்ருஷ்ணாஜினம்)   தோல் - பிராம்மணன், புள்ளி மானின் தோல் - க்ஷத்திரியன், ஆட்டின் தோல் - வைசியன் , மேல் வஸ்திரமாக அணிய வேண்டும்.  கீழ் வஸ்திரம் - சணல் துணி - பிராம்மணன், நார் துணி - க்ஷத்திரியன், கம்பளி துணி - வைசியன் அணிதல் வேண்டும்.

மௌஞ்ஜீ த்ரிவ்ருʼத் ஸமா ஶ்லக்ஷ்ணா கார்யா விப்ரஸ்ய மேக²லா ।
க்ஷத்ரியஸ்ய து மௌர்வீ ஜ்யா வைஶ்யஸ்ய ஶணதாந்தவீ ॥ 2.42

இனி மேகலை என்னும் (இடுப்பில் காட்டும் கயிறு) பற்றிய விவரங்கள். பிராம்மணன்  முஞ்சி என்னுள் புல்லால் ஆகிய மூன்று இழைகள் கொண்ட பின்னல் கயிற்றை கட்டிக் கொள்ள வேண்டும். முஞ்சி என்னும் புல்லால் ஆனதால் தான் மௌஞ்சி என்று பெயர். (முஞ்சி பில் இல்ல விட்டால் தர்ப்பை புல்லாலும் செய்யலாம்).  க்ஷத்ரியன் மூர்வ என்னும் வில்லின் நாணால் ஆன  மேகலையும், வைசியன் சணலால் ஆன மேகலையும் தரிக்க வேண்டும்.

கார்பாஸமுபவீதம் ஸ்யாத்³ விப்ரஸ்யௌர்த்⁴வவ்ருʼதம் த்ரிவ்ருʼத் ।
ஶணஸூத்ரமயம் ராஜ்ஞோ வைஶ்யஸ்யாவிகஸௌத்ரிகம் ॥ 2.44

இனி உபவீதம் பற்றிய விவரங்கள். பஞ்சு நூலால் ஆகிய பூணூல் ப்ராம்மணனும், சணலால் ஆகிய பொன்னால் அரசனும், கம்புளி நூலால் ஆகிய பூணலை வைசியனும் தரிக்க வேண்டும்.

ப்³ராஹ்மணோ பை³ல்வபாலாஶௌ க்ஷத்ரியோ வாடகா²தி³ரௌ ।
பைலவௌது³ம்ப³ரௌ வைஶ்யோ த³ண்டா³நர்ஹந்தி த⁴ர்மத: ॥ 2.45

உபநயம் செய்து கொண்ட பிரம்மச்சாரிகள், தங்கள் கைகளில் தரிக்கும் தண்டத்தின் வ்விவரங்கள் இனி. பிராம்மணன்  - பிளவை மரம், பலாச மரம், க்ஷத்திரியன்  -கருங்காலி, ஆலமரம் , வைசியன் - அத்தி  மரம், பிலு (ஒரு வகை புல்) ஆகிய கிளைகளை தண்டமாக தரித்தல் வேண்டும்.

கேஶாந்திகோ ப்³ராஹ்மணஸ்ய த³ண்ட:³ கார்ய: ப்ரமாணத: ।
லலாடஸம்மிதோ ராஜ்ஞ: ஸ்யாத் து நாஸாந்திகோ விஶ: ॥  2.46

இனி தண்டத்தின் நீளம். - பிராம்மணன் - தலை முடி வரை, க்ஷத்திரியன் - நெற்றி வரை, வைசியன் - மூக்கு வரையிலும் நீளம் உள்ள தண்டத்தை தரிக்க வேண்டும்.

ருʼஜவஸ்தே து ஸர்வே ஸ்யுரவ்ரணா: ஸௌம்யத³ர்ஶநா: ।
அநுத்³வேக³கரா ந்ரூʼணாம் ஸத்வசோঽநக்³நிதூ³ஷிதா: ॥ 2.47

தண்டம் என்பது கோணல் இல்லாமல், நீரானதாக, தீயால் கெட்ட படுத்த படாததாக இருத்தல் வேண்டும். தண்டத்தை கண்டால், எவருக்கும் காயம் ஏற்பட கூடாது.

ப்ரதிக்³ருʼஹ்யேப்ஸிதம் த³ண்ட³முபஸ்தா²ய ச பா⁴ஸ்கரம் ।
ப்ரத³க்ஷிணம் பரீத்யாக்³நிம் சரேத்³ பை⁴க்ஷம் யதா²விதி⁴ ॥ 2.48

மேற்கூறிய படி தண்டத்தை தரித்தவனாக, சூரியனை வணங்கி(சந்தியா வந்தனத்தால்), அக்னியை வணங்கி , ப்ரதக்ஷிணம் செய்து (ஷமிதா தானத்தால்) ஒரு ப்ரம்ம சாரி பிக்ஷைக்கு செல்ல வேண்டும்.

ப⁴வத்பூர்வம் சரேத்³ பை⁴க்ஷமுபநீதோ த்³விஜோத்தம: ।
ப⁴வந்மத்⁴யம் து ராஜந்யோ வைஶ்யஸ்து ப⁴வது³த்தரம் ॥2.49

பிராம்மணன் - பவதி பி⁴க்ஷாம் தேஹி , க்ஷத்திரியன் - பி⁴க்ஷாம் பவதி தேஹி , வைசியன் - பி⁴க்ஷாம் தேஹி பவதி  என்றும் பிக்ஷை கேட்க வேண்டும்.

இப்படி பிரம்மச்சர்யத்தை எச்சரிக்க வேண்டிய நியமத்தை பல லக்ஷம் ஆண்டுகளுக்கு முன்பே மனு தெள்ள தெளிவாக சொல்லி இருக்கின்றார்.



Sunday, May 6, 2018

கலி சந்தரண உபநிஷத்தில் ப்ரம்மா உபதேசிக்கும் உபாயம்

சில விஷமிகள் கள்ளத்தனமாக பத்ம புராணத்தில், இரண்டு ஸ்லோகங்களை சொருகி(ஒரிசா பகுதியில் உள்ள பத்ம புராணத்தில் மட்டும் தான் இது இருக்கின்றது) விட்டு நம் ஜெகதாசார்யனை மாயாவாதி என்று சொல்கின்றன்றார்.  கலி சந்தரண உபநிஷத்து, பகவத் கீதை, ப்ரஷ்ன உபநிஷத்து - இம்மூன்றிலும் மாயை, அவித்யை பற்றி உள்ள பிரமாணங்களை சேர்த்தி இதனை எழுத்து உள்ளேன். கஞ்சி மகா பெரியவாள் திருப்பாதத்தில் இதனை சமர்ப்பிக்கின்றேன்.




கலி சந்தரண உபநிஷத்தில் ப்ரம்மா ஆத்ம ஞானம் பெற , நாரதருக்கு உபதேசிக்கும் உபாயம் , இதோ பாருங்கள்.

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ।
ஹரே க்ருʼஷ்ண ஹரே க்ருʼஷ்ண க்ருʼஷ்ண க்ருʼஷ்ண ஹரே ஹரே ॥

இதி ஷோட³ஶகம் நாம்நாம் கலிகல்மஷநாஶநம் ।
நாத: பரதரோபாய: ஸர்வவேதே³ஷு த்³ருʼஶ்யதே ॥

உபநிஷத்துக்கள் எப்பொழுதுமே , ஆத்மஞானத்தை பற்றிய உபாயங்கள் மட்டுமே சொல்லும். ஒருபொழுதும் மூட பக்தியோ , அஞ்ஞானமோ  சொல்லாது.

நாரதருக்கு ப்ரம்மா உபதேசம் செய்கின்றார். ஹரே ராமா , மந்திரத்தை சொல்வதால் கலியின் உபாதைகள் நீங்கும் என்கிறார். இந்த மந்திரத்தை சொல்வதை தவிர வேதங்கள் அனைத்திலும் வேறொரு உபாயமும் இல்லை என்கிறார் ப்ரம்மா.

ஷோட³ஶகலாவ்ருʼதஸ்ய ஜீவஸ்யாவரணவிநாஶநம் ।
தத: ப்ரகாஶதே பரம் ப்³ரஹ்ம மேகா⁴பாயே ரவிரஶ்மிமண்ட³லீவேதி ॥ 2॥


அது மட்டும் அல்ல , இந்த 16 அக்ஷரங்கள் கொண்ட  மந்திரத்தை சொல்வதானால் ,வரும் பயன்களை சொல்கின்றார் ப்ரம்மா.
ஜீவனின் பதினாறு கலைகள் கொண்ட (மாயையின்) கோட்டை அழிந்து விடும். அதன் பிறகு எப்படி மேக மூட்டங்கள் விகையை பிறகு சூரியன் ப்ரகாஷிக்கின்றானோ, அப்படி இந்த ஜீவன் பேதங்கள் நீங்க பெற்றதாகி பிற ப்ரம்மமாகி பிரகாசிக்கும்.

மேற்கூறிய நாம ஜபம் செய்வதால் மாயை விலகி , ஆத்ம ஸ்வரூபம் தெளிந்து, ஜீவன் பரப்பிரம்மம் ஆகவே ஜொலிக்கும் என்கிறார் ப்ரம்மா.இனி , இங்கு ப்ரம்மா கூறிய அந்த பதினாறு விஷயங்கள்,ஏ வை ஜீவனை, தன் அதன் ஸ்வரூபத்தில் இருந்து மறைக்கின்றது என்று பார்ப்போம்:

ப்ரஷ்ன உபநிஷத்தின் ஆறாவது பகுதியை முழுவதும் இங்கு காண்போம், அப்பொழுது தான் இந்த பதினாறு கலைகள் எவை என்று நமக்கு புரியும்:


அத² ஹைநம் ஸுகேஶா பா⁴ரத்³வாஜ: பப்ரச்ச² । ப⁴க³வந்
ஹிரண்யநாப:⁴ கௌஸல்யோ ராஜபுத்ரோ மாமுபேத்யைதம் ப்ரஶ்நமப்ருʼச்ச²த । ஷோட³ஶகலம் பா⁴ரத்³வாஜ புருஷம் வேத்த² । தமஹம் குமாரம்ப்³ருவம் நாஹமிமம் வேத³ ।
யத்⁴யஹமிமமவேதி³ஷம் கத²ம் தே நாவக்ஷ்யமிதி । ஸமூலோ வா
ஏஷ பரிஶுஷ்யதி யோঽந்ருʼதமபி⁴வத³தி தஸ்மாந்நார்ஹம்யந்ருʼதம் வக்தும் ।
ஸ தூஷ்ணீம் ரத²மாருஹ்ய ப்ரவவ்ராஜ । தம் த்வா ப்ருʼச்சா²மி க்வாஸௌ
புருஷ இதி ॥ 1॥

பரத்துவாஜ கோத்திரத்தை சேர்ந்த சுகேசர் பிப்பலதர் இடத்தில் கூறினார்:

கோசல நகரத்து அரசனாகிய ஹிரண்யநாபன் , பாரத்வாஜ  சுகேசன் இடத்தில கீழ் வருமாறு வினவுகின்றார்: "பதினாறு கலைகள் (அங்கங்கள்) கொண்ட புருஷனை நீவிர் அறிவீர்களா ? " . அதற்கு சுகேசர், எனக்கு தெரிந்தால் நான் ஏன் மறைக்க வேண்டும்?அதனை கேட்டதும் கோசல தேசத்து மன்னன் தன ரத்தத்தில் ஏறிக்கொண்டு சென்று விட்டான். அதனால் , சுகேசனாகிய நான் (பிப்பலர் இடத்தில்) அந்த புருஷனை பற்றி கேட்கின்றேன்.

தஸ்மை ஸ ஹோவாச । இஹஈவாந்த:ஶரீரே ஸோப்⁴ய ஸ புருஷோ
யஸ்மிந்நதா: ஷோட³ஶகலா: ப்ரப⁴வந்தீதி ॥ 2॥

அதற்கு பிப்பலதர் கூறினார்: இங்கு இந்த சரீரத்தின் உள்ளில் , இந்த சரீரத்தினுள்ளில் அந்த புருஷன் இருக்கின்றான், இவனிடத்தில் இருந்தே அந்த பதினாறு கலைகள் எழுகின்றன.

ஸ ஈக்ஷாசக்ரே । கஸ்மிந்நஹமுத்க்ராந்த உத்க்ராந்தோ ப⁴விஷ்யாமி
கஸ்மிந்வா ப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டஸ்யாமீதி ॥ 3॥

அவன் நினைக்கிறான் - அந்த புருஷன் வெளியே சென்றால், நானும் போகி விடுவேன், அந்த புருஷன் உள்ளே இருந்தால் நானும் இருப்பேன் என்று.

ஸ ப்ராணமஸ்ருʼஜத ப்ராணாச்ச்²ரத்³தா⁴ம் க²ம் வாயுர்ஜ்யோதிராப:
ப்ருʼதி²வீந்த்³ரியம் மந: । அந்நமந்நாத்³வீர்யம் தபோ மந்த்ரா: கர்ம
லோகாலோகேஷு ச நாம ச ॥ 4॥

புருஷன் என்னும் ப்ராணனிடம்  இருந்து  ஸ்ருஷ்டிக்கப் பெற்ற இந்த பதினாறு விஷயங்கள்:(இதுவே அந்த புருஷனின் பதினாறு கலைகள்)

பிராணன், சிரத்தை, காற்று, வெளி, தீ, நீர், நிலம், இந்திரியங்கள், மனசு, அன்னம், (அன்னத்தால்) வீரியம், தவம் , மந்திரங்கள், கர்மம், லோகங்கள், (லோகங்களில் உள்ள) நாமங்கள்.

இப்படி பதினாறு வஸ்துக்கள் ஜீவன் மீது , அதனை  மறைத்துக்கொண்டு, அதன் உண்மை சரோப்பமான ஆத்மாவை மறைத்துக்கொண்டு , எப்படி சூரியனை மெகா மண்டலம் மறைத்துக் கொண்டு இருக்கின்றதோ அப்படி நிற்கின்றது.

ஸ யதே²மா நத்⁴ய: ஸ்யந்த³மாநா: ஸமுத்³ராயணா: ஸமுத்³ரம்
ப்ராப்யாஸ்தம் க³ச்ச²ந்தி பி⁴த்⁴யேதே தாஸாம் நாமருபே ஸமுத்³ர இத்யேவம் ப்ரோச்யதே ।
ஏவமேவாஸ்ய பரித்³ரஷ்டுரிமா: ஷோட³ஶகலா: புருஷாயணா:
புருஷம்ப்ராப்யாஸ்தம் க³ச்ச²ந்தி பி⁴த்⁴யேதே சாஸாம் நாமருபே புருஷ இத்யேவம் ப்ரோச்யதே ஸ ஏஷோঽகலோঽம்ருʼதோ ப⁴வதி ததே³ஷ ஶ்லோக: ॥ 5 ||

எப்படி சமுத்திரத்தை நோக்கிப் பாயும் நதிகள் கடலில் கலந்து, அவற்றின் நாம ரூபங்கள் மறைந்து  சமுத்திரம் என்றே அவைகள் சொல்லப் பெறுகின்றன. அப்படியே பதினாறு கலைகள் கொண்ட அந்த புருஷனின் இடத்தில சேர்ந்து தங்கள் நாமரூபங்களை இழந்து அமரத்தன்மையை அடைகின்றனர்.

அரா இவ ரத²நாபௌ⁴ கலா யஸ்மிந்ப்ரதிஷ்டிதா: ।
தம் வேத்⁴யம் புருஷம் வேத³ யத² மா வோ ம்ருʼத்யு: பரிவ்யதா² இதி ॥ 6॥

எப்படி ஒரு தேர் சக்கரத்தின் நாளங்கள் அச்சாணியில் பிணைந்திருக்கின்றனவோ, அதே போல புருஷன் இடத்தில மேற்கூறிய பதினாறு கலைகளும் இணைந்து  இருக்கின்றன.  எப்படி தேறி சக்கரத்தின் நாளங்கள் அச்சாணியின் மீது நிற்கின்றனவோ, அதே போல புருஷனின் மாய ஷக்தி, அவன் மீது ஆதார படுகின்றன. அந்த பதினாறு அங்கங்கள் கொண்ட , மாய சக்தியினால் ஆவரணம் போல, தானே தன ஸ்வரூபத்தை மறைக்கின்றன புருஷன்.

தாந் ஹோவாசைதாவதே³வாஹமேதத் பரம் ப்³ரஹ்ம வேத³ । நாத:
பரமஸ்தீதி ॥ 7॥

இப்படி உபதேசம் செய்த பிறகு , பாரதிவாஜ சுகேஷர் இப்பொழுது அந்த பர பிரம்மத்தை பற்றி அறிந்து கொண்டேன் என்று கூறினார்.

தே தமர்சயந்தஸ்த்வம் ஹி ந: பிதா யோঽஸ்மாகமவித்⁴யாயா:
பரம் பரம் தாரயஸீதி । நம: பரமருʼஷிப்⁴யோ நம:
பரமருʼஷிப்⁴ய: ॥ 8॥

அங்கிருந்த பதினாறு சபையினரையும்  வணங்கி சுகேசர் கூறினார், "நீங்களே என்னுடைய (ஆன்மீக) தந்தை ! அவித்யை என்னும் அறியாமையை தாண்ட செய்து, பர வஸ்துவினிடத்தில் கொண்டு சென்ரீர்கள் "  பரம ரிஷிகளுக்கு வணக்கங்கள்! பரம ரிஷிகளுக்கு வணக்கங்கள்! என்றார்.

எனவே , மாயை என்பது ஆத்மாவாகிய புருஷனின் பதினாறு கலைகளாகி உள்ளது - அதனை அறிவதே வித்யை. அப்படி அறிவதால், மாயையின் கோட்டைகள் அல்லது  பதினாறு கலைகள் நீங்கி ஜீவ பேதம் விலகி, ஜீவன் பரம் ப்ரம்மாவாக ப்ராசிக்கின்றது.

குறிப்பு: கண்ணன் கீதையில் இதே கருத்தை கூறுகின்றான்:

ஈஶ்வர: ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருʼத்³தே³ஶேঽர்ஜுந திஷ்ட²தி ।
ப்⁴ராமயந்ஸர்வபூ⁴தாநி யந்த்ராரூடா⁴நி மாயயா ॥

ஜீவர்கள் இதயத்தில் இருக்கும் புருஷன், தன் மாயையால் ஜீவர்களை ப்ரமிக்கச்செய்கின்றான் என்று பொருள். மாயன் ஆவரண சக்தியை உபதேசிக்கின்றான் கண்ணன்.

 மேற்கூறிய, கீதை, ப்ரஷ்ன உபநிஷத்தில் கூறிய விஷயங்களையே கலி
சந்தரண  உபநிஷத்தில் , சொல்ல பட்டிருக்கின்றது. பதினாறு அக்ஷரங்கள் கொண்ட கிருஷ்ண நாமத்தை சொல்வதானால் ஜீவன் மீது படர்ந்துள்ள மாயையின் கோட்டை விலகி, ஆத்மஸ்வரூபம் தெளிந்து பர ப்ரம்மமாகி பிரகாசிக்கின்றது. எனவே ஆத்ம ஞானம் பெறுவதே நாம சங்கீர்த்தனத்தின் முக்கிய நோக்கம் எனபதை அறிய வேண்டும்.

மாயை, அவித்தை - இவைகள் அனைத்துமே உபநிஷத்தில் உள்ள விஷயங்களே - சங்கரர் எதையுமே தாமாக சொல்லவில்லை.

கண்ணன் அருளால் அனைவரும் பூர்ண ஞானம் பெற்று சிறக்க வேண்டும் என்று பிரார்தித்துக் கொள்கின்றேன்.

Image result for kali santarana upanishad

Saturday, May 5, 2018

चेतो-दर्पण-मार्जनं भव-महा-दावाग्नि-निर्वापणं
      श्रेयः-कैरव-चन्द्रिका-वितरणं विद्या-वधू-जीवनम् ।
   आनन्द-अम्बुधि-वर्धनं प्रति-पदं पूर्णामृतास्वादनं
      सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम् ॥ १॥

மனமென்னும் கண்ணாடியை நீர்தெளித்து சுத்தம் செய்தும், உலகியல் என்னும் காட்டுத்தீயை அணைக்கும் கண்ணன் நமாம் வெல்க வெல்க!

அதாவது சைதன்ய மகா பிரபு தம்முடைய முதல் ஸ்லோகத்திலேயே மனம் என்பது ஒரு கண்ணாடி அதாவது மாயையின் கோட்டை என்று சொல்கின்றார். வேதம் பயின்ற வேதியர் பரம்பரையில் வந்த அவர் ஒரு பொழுதும் ஆதி சங்கரரை மாயவாதி என்று சொல்ல விலை. பிற்காலத்தில் வந்த
விஷமிகள் கள்ளத்தனக்காமாக சில ஸ்லோகங்களை பத்ம புராணத்தில் நுழைத்து விட்டு , பிதற்றி கொண்டு திரிகிறார்கள். ஜாக்கிரதை மக்களே - மிலேச்சர்களை மதம் மற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டு நம் ஆச்சர்யனை தூஷிக்கும் இந்த மக்களுக்கு நற்புத்தி அந்த கண்ணன் தான் தரவேண்டும் என்று ப்ரார்த்தித்திக் கொள்கிறேன்.