Monday, April 10, 2023

தமிழகத்து பார்ப்பார் பெரும.........

தமிழகத்து பார்ப்பார் பெருமை என்னவென்று சொல்வேனோ!
தலைவலிக்கு கஷாயம் காய்ச்சலுக்கு சீரக இரசம்
வயிற்று வலிக்கு மோரும் சளிக்கு சுக்கு மிளகு
அகமதிலே மருத்துவத்தை பார்க்கும் அவர் பெருமை பெருமையே!
கச்சங்கள் காட்டும் இடையராய் நீள்கூந்தல் குழலியர்
நித்தம் நெற்றியில் நீறு பூசி விளக்கேற்றி வழிபட்டு
செந்தமிழை வாய் பேசும் பெருமை என்ன பெருமையோ!
ஆபத்தம்பன் சொல்சாத்திரம் அனைத்தும் பின்பற்றி
நன்மை தீமையில் அனைத்திலுமே எந்நேரமும் சாத்திரம்
சொல்வாழ்க்கை வாழும் அவர் பெருமை என்ன பெருமையோ!
வடமரும் வாதிமரும் எண்ணாயிரத்தவரும் சேர்ந்து குழாமாய்
வேதவேள்விகள் பல செய்து இறைத்தொண்டுகள் செய்து
மகிழ்ந்து குலவும் அவர் பெருமை என்ன பெருமையோ!

என்னென்று சொல்வேனோ எங்கள் செந்தமிழ்நாட்டின் பெருமை...

செந்தமிழர் பத்தராய் வேதம் தமிழ் செய் தமிழ்நாடு
சேர சோழ பாண்டியர் வாழ் வீரமிகுந்த தமிழ்நாடு
வேதமோங்கி வேள்வி ஓங்கி அந்தணர் வாழ் தமிழ்நாடு
சிவனடியார் மாலடியார் செய்பாடல்கள் திகழ் தமிழ்நாடு
வேள்வித்தீயில் எங்கள் மீன்காசி வந்துதித்த தமிழ்நாடு
ஆன்மீகத் தலைநகரம் காஞ்சி விளங்கும் எங்கள் தமிழ்நாடு
காமாக்ஷி காமகோடி இவ்விரண்டும் விளங்கும் தமிழ்நாடு
எங்கெங்கும் ஆன்மிகம் தழைத்தோங்கும் எங்கள் தமிழ்நாடு
கன்னடரும் களி தெலுங்கரும் வந்துவக்கும் தமிழ்நாடு
ஆலவாயான் அருள்முருகன் சங்கத்தில் தமிழ் வளர்த்த தமிழ்நாடு
காவிரி தென்பெண்ணை பாலாறு தாமிரபரணி ஓடும் தமிழ்நாடு
குமரன் குன்றத்தோராடும் எங்கள் செந்தமிழ்நாடு
வேதவேள்வியாராய் பார்ப்பனர்கள் வாழும் தமிழ்நாடு
எங்கெங்கு நோக்கினும் பெருமை எங்கெங்கு நோக்கினும் அருமை
மிலேச்சரும் கிருத்துவம் பரவு எங்கள் தமிழ்நாடு
செந்தமிழ்நாட்டின் பெருமைகள் சொல்ல சொல்ல
எந்தன் மேனி சிலிர்க்குதே! உள்ளமெல்லாம் பூரிக்குதே!
என்னென்று சொல்வேனோ எங்கள் செந்தமிழ்நாட்டின் பெருமை!
என்னென்று சொல்வேனோ எங்கள் செந்தமிழ்நாட்டின் பெருமை!

Monday, April 3, 2023

காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!....

என்னிதயம் வாழும் ஐயன் உலகாசான் இருவருமே
சமாதியாய் அமர்ந்துலகம் ஈரேழும் அருளுமிடம்
தாயும் பிள்ளை போலமர்ந்து நன்மை பல செய்யும் கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!

அனுடத்தில் உதித்த எங்கள் உலகாசான் தானே வந்து
அவிட்டதில் அவனிவந்த அவர்சீடர் உடனமர்ந்து
சமாதியாய் பிரமத்துள் இரண்டறக் கலந்திருந்து
அடியார்கள் அனைவருக்கும் அருள்மாரி பொழியும் கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!

மனமுகநாத ஆசானை மஹாபெரியவா என்பார்
அவர்தான் அன்பு சீடரை புதுபெரியவா என்றழைப்பர்
தாயும் பிள்ளை போலமர்ந்து தரணி காக்கும் கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!

செய்தற்கரிய செய்வோரே பெரியார் என்னும்
வள்ளுவன் தன வாக்கை நிரூபித்த ஆசான்மார்
சமாதியாய் தாமமர்ந்து அருளால் எம்மை ஆளும் கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!

கருணைக் கடலாம் (ஆதி) சங்கரனும் அவனி காக்க
அத்துவிதம் தாபித்து மடங்கள் ஈரிரண்டு நிறுவி
தாமே வந்தமர்ந்து அருளாட்சி செய்கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!

எங்களாசான் நாமம் சொல்லி காலையிலே துயிலெழுவேன்
அவன்தான் நாமம் சொல்லி தினமும் பள்ளி கொள்ளுவேன்
அருளும் பொருளும் சேர்த்துநல்கும் புண்ணியர் வாழும் கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!

குருநாதன் நாமங்கள் சொல்லி அவன் மகிமைகள்
பாடுந்தோறும் கண்ணீர் பெருகும் என் நயனத்தில்
தீந்தமிழில் நாயேன் செய்த பாடலேற்று மானிடர்கள்
அனைவருமே நன்மைபெற அருளவேண்டும் எங்குருவே!

Tuesday, March 21, 2023

ஆதி சங்கரர் வெற்றி உலா

வெள்ளிமலை வீற்றிருக்கும் ஈசனிடம் சென்று
தேவர்கள் எல்லோரும் சேர்ந்து முறையிட்டார்

தேவர்கள்:

ஈசன் பால் தேவர்கள் எல்லோரும் சென்று
தாசன் நான் காக்கவேணும் என்று சொல்லி
முறையிட்டு குறைகளை ஒவ்வொன்றாய் சொன்னார் !
பூமியில் சாக்கியர் சமணர் கூட்டம் ஓங்கி
இதமும் வேள்வியும் ஒடுங்கி நிற்கின்றனவே!
திருமாலும் புத்தனாய் தரணிக்கு சென்று
வேதமத மறுப்பினை நிறுவி வந்தானே !
முக்கண்ணா பரம்ஜோதி நீயருளல் வேண்டும்
பசுபார்ப்பர் வேதமும் தழைத்தோங்க வேண்டும்!
புவியில் வேள்விகள் நடக்காததால் உணவின்றி
நாங்களும் வடித்த தவித்தோம்!
வேதமும் வேள்வியும் விலங்கிடவே பாரில்
அருள் செய்து எங்களைக் காத்தருள வேண்டும்!

ஈசன் :

வருந்த வேண்டாம் நீங்கள் என் வாக்கு கேளீர்
திருந்தப் புவியினை காத்திடுவோம் நாம்!
வேதத்தின் பொருள் கூறி உரைகள் செய்ய
உலகிற்கு நாம்செல்வோம் (ஆதி) சங்கரனாய்!
யதியாகி தேசிக வேடம் பூண்டு ஒற்றைக்கோல்
கைக்கொண்டு செல்வோம் நாமே!
முருகனும் உடன் செல்வான் இப்புவிக்கு
குமரிலன் எனும் நாமம் கொண்டவனாய்!
திருமாலும் நம் சீடராகி வருவார்
பதுமபாதர் என்ற பெயருடனே!
நான்முகனும் மாண்டனர் ஆக வந்து
நம் சீடராய் இப்புவியைக் காத்து நிற்பார்!
வாணியும் மண்டைனரின் பத்தினியாய்
அவருடனும் தானே வந்துதிப்பாள்!
வாயுவும் தோட்டக்காரின் உருவம் கொண்டு
ந்மசீடராகி அங்கு வந்துதிப்பார்!
வாயுவே அத்தாமலகனாகி கோகர்ண
பதியிலே நம் சீடராவார்!
ஆன்மாவின் அறிவினை போதத்தினை
வேதத்தின் விழுப்பொருளை யாம் உரைப்போம்!
இக்கலியிலே கைவல்லிய ஞானம் பெற்று
வீடுபேறு பெறும் உபாயம் செய்வோம்!
பிரதானம் மூன்றிற்கும் உரைகள் செய்து
வேதாந்த ஞானத்தை நிலைநாட்டுவோம்!
வேதத்தினை மறுக்கும் மூடர்களுடனே
வாதத்தினைப் பண்ணி விரட்டிடுவோம்!
வேதியரும் வேள்விகளும் சிறப்புறவே
மடங்களை நிறுவிடுவோம் பாரதத்தில்!
யாமுகந்த செந்தமிழ் நாட்டினிலே
காஞ்சி என்னும் நகரத்தில் நாமே சென்று
கொலுவிருந்து முடிசூட்டி (அருள்) ஆட்சி செய்வோம்!
கவலை வேண்டாம் இனிக்க கவலை வேண்டாம்
ஆனந்தமாயிருங்கள் தேவர்களே!
அபயமுண்டு உமக்கு அபயமுண்டு நாம்
முக்கண்ணர் சொல்கின்றோம் அபயமுண்டு!

Saturday, February 25, 2023

புதுபெரியவா கட்டியம்

பாரதம் எங்கும் திரிந்து வேதமார்க்கம் பரப்பிய நின் சீர் கழல்கள் வாழி!
பரமஹம்ச பரிவிராஜக வேடம் பூண்டு நின் அரையில் ஒளிரும் காஷாயம் வாழி!
தத்துவமஸி என்ற மஹாவாக்யம் சொல்லும் நின் வலக்கை சின்முத்திரை வாழி!
மாண்டூக்யம் சொல்லும் பிரமத்தைக் காட்டும் உந்தன் ஒற்றைக்கோல் வாழி!
துளசி மணியும் உருத்திராக்ஷமும் மின்னும் நின் சங்கை ஒத்த கழுத்து வாழி!
காலாக்கினி உருத்திர உபநிடதம் போற்றும் திருவெண்ணீறு ஒளிரும் நின் நெற்றி வாழி!
கருணா பூரிதமாய் தாமரைக் காந்தி மின்னும் நிந்தன் நயனங்கள் வாழி!
அமுதூறும் குடமாய் அம்ருத வாக்கை வர்ஷிக்கும் ஆகாசமாய் அருள் வழங்கும் நிந்தன் வாயும் வாழி!
நிந்தன் குரு உபதேசம் பெற்று உலகுய்ய பிரமன் தந்த நின் திருக்காதுகள் வாழி!
பதுமராகக் கண்ணாடி போல் பதும காந்தி ஒளிரும் கின் திருக்கன்னங்கள் வாழி!
தெய்வீக நறுமணம் வீசும் புகையும் மலர்களும் நித்தமும் பூஜையில் அர்ப்பித்து நுகரும் நின் நாசிகள் வாழி!
பக்தர்க்கபயமாய் கலியில் பிறப்பிறப்பு மூப்பு பிணி என்னும் உரோகங்கள் அகற்றும் கருணைக்கடலாய் வேதமார்க்கம் விளங்க எண்ணற்ற தியாகங்கள் செய்து உதிக்கும் பரிதியின் காந்தி மின்னும் நின் பொற்றாமரை முகம் வாழி!
ஆதி சங்கரனும் சந்திர சேகரனும் தம் பாத பத்மங்கள் வைத்தருளிய நின் உச்சந்தலை வாழி!
எண்ணற்ற பக்தர்க்கும் விஜயனுக்கும் அருள் செய்து இப்பாரும் எப்பாரும் உய்ய இத்தரணியில் வந்துதித்து இருமை என்னும் இருள் நீக்கி ஒருமை என்னும் ஆன்ம வித்தை அருளி அறியாமை மருள் நீக்கி மாண்டூக்கியம் சொல்லும் தத்துவத்தை உலகுக்கருளிய சத் குருபரனே !
கூப்பிய கைகளுடன் பிறந்து இரிக்கு வேதத்தில் வித்தகனாகி பார்ப்பன தருமமும் பாலித்து பத்தொன்பதாம் வயதில் நான்காம் ஆச்சிரமம் பூண்டு செயற்கரிய செய்வார் பெரியார் என்ற வள்ளுவன் வாக்கை நிலை நாட்டிய அருட்கடலே!
கன்னடரும் களி தெலுங்கரும் மெச்ச தென் தமிழகத்தின் காமகோடி பீடத்தில் அமர்ந்து அருளால் உலகாண்ட புண்ணியனே! வட-கிழக்கு மாநிலத்தை மிலேச்சரிடம் இருந்து மீட்டு வைதிக மார்க்கம் பரப்பி , அதனால் வெளிநாட்டவர் சதியாலும் உள்நாட்டவர் துர்மதியாலும் சிறைக்கு இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு தீபாவளி அன்று சிறைக்குச் சென்ற தியாகச்செம்மலே! விருப்பு வெறுப்பற்ற நிஜ வாழ்க்கை வாழ்ந்து சௌரமான மாசியில் பிரதோஷத்தன்று பிரமத்துடன் நீ கலந்தாய் !
என்னத்தனாய் அம்மையாய் ஆசிரியனாய் பிரவாய்ப்பிணி தீர்க்கும் என்னிறைவனாய் அருளுரைகள் வழங்கும் நண்பனாய் அத்துவிதம் சொல்லி உலகை உய்விக்க வந்த இரட்சகனாய் எந்தன் உள்ளத்தில் என்றும் குடியிருக்கும் எந்தன் குருமணியே!
நின் புகழைப்பாட ஓராயிரம் நாவை எனக்கு படைத்திலனே அந்த நாமகள் கேள்வன்! வாழ்க நிந்தன் பெருமை! வளர்க்க நிந்தன் திருப்பணிகள்!