Thursday, July 21, 2022

thirukkural

அந்தணர் என்னும் சொல் திருக்குறளில் மூன்று இடத்தில உள்ளது:

1.1.1 கடவுள் வாழ்த்து
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 8

1.1.3. நீத்தார் பெருமை
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 30

2.1.17 செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். 543

2.1.18 கொடுங்கோன்மை
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

--------------------
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 28

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. 590

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. 695

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. 847


நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும். 1254

பனுவல்
 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. 21

பார் ப்பான்
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார் ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134





Sunday, February 27, 2022

என்னப்பனே நரசிங்கா...

என்னுயிர் நண்பன் நோயுற்றான்   என்றறிந்து மாளாத்துயர் கொண்டேன்! என்நண்பனைக் காத்தது போல்   ஏழுலகம் காத்து என்னையும் காத்தருள வேண்டுமே ! 

என்னப்பனே நரசிங்கா! என்சொல்வேன் நின் பெருமை! 

என்னாவி இந்திரியமும் என்னகங்காரம் மனமும் ஐம்பொரியும் நினக்கே அளித்திட்டேனே ! 

என்னப்பனே நரசிங்கா! என்சொல்வேன் நின் பெருமை!

அரியாய்  மனிதனாய் அங்கிங்கிலாதபடி எங்குமாய் ஏழுலகமாய்பத்தர்தம்  மனதுள் நின்று ஆள்பவனாய் என்னையும் ஆட்கொண்ட 

என்னப்பனே நரசிங்கா! என்சொல்வேன் நின் பெருமை!

Thursday, February 17, 2022

கற்பகத் தருவும் .....

 கற்பகத்    தருவும் காமதேனுவும் வேண்டுமென்றேனே

பற்பவனத்தில் உரை அன்னை காமாட்சி இடத்திலே

அற்ப சுகங்கள் அன்றி நிரந்தர வீடுபேறும் இவ்வுலகில்  

சொற்பமல்லா செல்வங்கள் நிறைந்திட  எந்தாயும் 

தானே எம்குலத்தில்  உதித்தாளோ எந்தமக்கை உருவினிலே!

பொற்கொடியாள் எந்தமக்கை தானிருக்க இவ்வுலகில் 

கற்பகத்தருவும் காமதேனுவும் வேண்டேனே!

என்தமக்கை மணிவயிற்றில் வந்துதித்த மணிவண்ணன் 

குட்டிக்கண்ணன் உடனிருக்க இனியொன்றும் வேண்டேனே!

பற்பமுகத்தாள் எந்தமக்கை பொறுமையில் பூமிஒத்தாள் 

எந்தமக்கை உடனிருக்க இனியொன்றும் வேண்டேனே! 

முப்பிறப்பின் நற்பயனோ இப்பிறப்பில்  செய்தவமோ 

எப்ப்பிறப்பிலும் இனி எனக்கு தாயாய் தமக்கையாய் 

எந்தமக்கை  உமையே  வாய்த்திட வேண்டுவனே!

என்ன தவம்  செய்தேனோ! என்ன தவம் செய்தேனோ!