Friday, July 29, 2016

அகஸ்திய முனிவரின் பெருமைகள்



சமஸ்க்ருதத்துக்கும் நம் தமிழுக்கும் நீண்ட நாள் தொடர்பு. சிவபெருமானுக்கு மிகவும் நெருங்கிய மொழி நம் தமிழ் மொழி. அதனால் தானோ என்னவோ, அகஸ்தியரை அனுப்பி தமிழ் வளர்க்க சொன்னார்  நம் சிவபெருமான். சிவபெருமான் தானே இவருக்குத் தமிழ் கற்பித்து தென்னாட்டுக்குச் சென்று அதனைப் பரப்புமாறு ஆணை இட்டார் என்பது புராணம்.பொதிகை மலைக்கு வந்து, தமிழ் இலக்கணம் வகுத்து , கபிலர் பரணர் எல்லாரோடும் சங்கம் நிறுவி  தமிழ் வளர்த்த பெருமை அவருக்கு உண்டு. அதே போல அத்யாத்ம கிரந்தங்கள் - ஸ்ரீ லலிதா நவரத்தின மலை போன்ற வற்றை இயற்றினார் அவர். ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் , த்ரிஷதி, அஷ்டோத்தரம் எல்லாம்  அவருக்கு ஸ்ரீமத் லட்சுமி ஹயக்ரீவரால் உபதேசம் பண்ணப் பட்டது. அவர் கலசத்திலே இருந்து பிறந்தார் என்பதால்  குறுமுனி, கும்ப முனி, காலசோத்பவர்  என்றெல்லாம் பல பெயர்கள்.கலியுகத்தில் மக்கள்  கஷ்டப் படுவார்கள் என்று தவம் புரிந்து ஸ்ரீ லலிதாம்பிக்யைன் ஆயிரம் நாமங்களை நமக்கு  அருள பண்ணிய அவருக்கு நாம் எல்லோரும்  எப்பொழுதும் கடன் பட்டிருக்கின்றோம்.

  1. வேதம் - அதர்வண வேதத்தில் அகஸ்த்ய சம்ஹிதை என்னும் பகுதியை இயற்றியவர்.
  2. பிரம்மாண்ட புராணம் - இந்தப்   புராணத்தில் தான் இவர்சொன்ன லலிதா சஹஸ்ரநாமம் இடம் பெற்றுள்ளது
  3. இராமாயணம் - இராமருக்கு  இவர் ஆதித்ய ஹ்ருதயம் என்ற ஸ்லோகத்தை உபதேசம் பண்ணினார்.
  4. சங்ககாலம் - தமிழ் இலக்கணத்தை தொல்காப்பியர் மற்றும் எல்லாருக்கும் கற்றுக் கொடுத்து அகத்தியம் என்ற கிரந்தத்தை இயற்றினார். 
  5. ஜோதிடம் - நாடி ஜோதிட சாஸ்திரத்தை இயற்றிய பெருமை கொண்டவர்.
  6. சித்த மற்றும் ஆயுர் வைத்தியம் - சித்த மருத்துவத்தில் ஒரு பெரும் பங்கு இவருக்கு உண்டு. முதல் சித்தராகக் கருதப் படுபவர். ஆயுர்வேதத்தில் அகஸ்திய  சூத்திரம் என்னும் கிரந்தத்தை இயற்றியவர்.
  7. ஸ்லோகங்கள் - யோகா மீனாட்சி ஸ்தோத்ரம், லலிதா நவரத்தின மாலை , ஆதித்ய  ஹிருதயம் மற்றும் பல அறிய ஸ்லோகங்களை இயற்றியவர்.

லோபாமுத்திரை என்ற அவருடைய பத்தினி , ஸ்ரீமத் லலிதாம்பிகையின் சிறந்த பக்தை என்று சொல்லப் பட்டுள்ளது புராணத்தில்.

சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த முனி, சித்த வைத்தியத்தை அளித்த முனி, கும்ப முனி என்றெல்லாம் போற்றப் பெரும் அவர், நம் தமிழகத்திற்கும், தமிழுக்கும் செய்த நன்மைகளுக்காக அவருக்கு அநேக கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள் பண்ணிக்கொண்டு இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.

Monday, July 25, 2016

திருத்தொண்டர் தொகை - தேவாரம் கூறும் மஹாபெரியவரின் மஹாத்ம்யம் ..






        தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
       திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
       இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
       விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

சிவா பக்தர்களின் பெயர்களைச் சொல்லும் பொது நம்முடைய சுந்தரர் முதலில் தில்லை வாழ் அந்தணர்களை பற்றி  சொல்லுகின்றார். முன் சிகை வைதிக கொண்டு , சித்சபையில் நடராஜப் பெருமானுக்கு பணிவிடை செய்வைதை தம்முடைய பிறவி பாக்கியமாகக் கருதும் ஆண்டார்கள். ஞான சம்பந்தர் அவர்களைக் கண்ட பொழுது , சிவா பெருமானுடைய பூத கணங்களாகவே தோன்றினார்கள் அவர்கள். எனவே தான் சிவா பெருமானே இந்த வரியை ஆதி எடுத்துக் கொடுத்தார் நம்முடைய சுந்தரருக்கு. அதன் பிறகு

  1. திரு நீலகண்ட நாயனார்(சிவனடியார்களுக்கு திருவோடு செய்து கொடுத்து திருப்பணி செய்தவர். சிவனே நேரில் வந்து சோதித்து, அவருக்கு என்றும் பதினாறு வயது அருள பெற்ற பெருமை உடையவர்.)
  2. இயற் பகை நாயனார் (இயல்பாக உள்ள மனிதர்களுக்குப் பகையாக உள்ளவர். சிவனடியார்களுக்கு கேட்டவற்றைத் கொடுக்கும் தன்மை உள்ளவர். சிவனே வந்து அவரை சோதிக்க, அவருடைய மனைவியைக் கேட்டு, அவர் புகழை உலகெங்கும் பரவச் செய்த பெருமை கொண்டவர்.)
  3. இளையான் குடி மாறன் நாயனார் . (சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்து, பணிவிடை செய்தவர். ஒரு இரவில், மழை பெய்து வீட்டிற்குள் ஒழுக, உணவும் இல்லாத நேரத்தில் சிவனே அவரைச்  சோதிக்க சிவனடியாராக வேடம் பூண்டு வந்தார். விதைத்த நெல்லை எடுத்த்துக் கொண்டு வந்து ,  தோட்டத்தில் உள்ள கீரையை சமைத்து ,  வீட்டின் உதிரத்தை வெட்டி விறகாக்கி உணவு சமைத்து படைத்தார். சிவன் மெச்சி, அவருக்கு எல்லா சிவனடியார்களுக்கும்  செல்வச்  செழிப்பை வழங்கும் பதவியை அருளினார்.)
  4. மெய்ப்பொருள் நாயனார் .(தன்னுடைய எதிரியே சிவனடியார் வேடம் பூண்டு வந்த பொழுதும், தன்னுடைய உயிரைப் பிரித்த பொழுதும், அவரை சகல மரியாதைகளுடனும் திரும்பி அழைத்துச் செல்லும்படி ஆணை இட்டார்.)
  5. விறன்மிண்ட நாயனார். (சுந்தரர் ஒரு முறை திருவாரூர் கோயிலில் இருந்த அடியார்களை வணங்காமற் சென்றார் என்று அவரை நோக்கி,"அடியார்களை வணங்காமற் செல்கின்ற வன்றொண்டன் அவ்வடியார்களுக்குப் புறகு" என்று சொல்லி, இந்த தொண்டர் தொகை என்னும் நூலை சிவனே சுந்தரருக்கு ஆதி எடுத்துக் கொடுக்க வழி வகுத்த பெருமை வாய்ந்த நாயனார் இவர்.)
  6. அமர்நீதி நாயனார்(சிவனடியார்களுக்கு வஸ்திரமும், கௌபீனமும் அளித்து சேவை செய்தவர். சிவா பெருமான் நடத்திய சோதனையில், தராசோடு சிவலோகம் சென்ற பெருமை பெற்ற நாயனார்.)
ஆகிய அனைவருக்கும் தன்னை அடியவனாகச் சொல்லிக் கொண்டு முதல் பத்தியை முடித்துக் கொள்கிறார் நம் சுந்தரர்.

        இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
       ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
      கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
       எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. எறிபத்த நாயனார்
  2. ஏனாதி நாதா நாயனார்
  3. கண்ணப்ப நாயனார்
  4. குங்குலியாக் களைய நாயனார் 
  5. மனக்கஞ்சாறன் நாயனார் 
  6. அரிவாட்டாய நாயனார் 
  7. ஆனாய நாயனார்

மேல் கூறிய நாயன்மார்களும் எல்லாம் தன்னை அடியவனாகக் கார்த்திக் கொண்டு சிவனடியில் சரணாகதி செய்கிறார்  நம் சுந்தரர்.

       மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
       முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
      திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
      வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. மூர்த்தி நாயனார்
  2. முருக நாயனார்
  3. உருத்திர பசுபதி நாயனார் 
  4. திருநாளை போவார் (நந்தனார்) நாயனார் 
  5. திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் 
  6. சண்டேஷ நாயனார் 

மேற்கண்ட பத்தியில், சண்டேச நாயனரைப் பற்றி சொல்லும் பொழுது மட்டும் மூன்று வரிகள் சொல்லி, அவருக்கும் தன்னை அடியவனாக்கி கொண்டு முடிக்கிறார்.

     திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
       திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
      பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
      ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. திருநாவுக்கரசர் நாயனார் 
  2. குலச்சிறை நாயனார்
  3. பெருமிழலைக் குறும்ப நாயனார்
  4. காரைக்கால் அம்மையார் நாயனார் 
  5. அப்பூதி அடிகள் நாயனார்
  6. திருநீல நக்க நாயனார் 
  7. நமிநந்தி அடிகள் நாயனார்

       வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
       மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
      ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
       நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. திருஞான சம்பந்தர்  நாயனார் (தம்முடைய 3 ஆம் வயதிலே அன்னை உமையிடத்திலே திருப்பால் அமுது செய்து இறைவனை படத்துவங்கியவர். சைவ சமயக் குறவர்களில் முதன்மை பெற்றவர். சமணர்களை வாதத்தில் வென்று மதுரையம்பதியில் சைவ சமயத்தை நிறுவிய பெருமை கொண்டவர்).
  2. கலிக்காம நாயனார்  (சுந்தர பால் கோபம் கொண்டு தன வயிற்றை கிழித்துக்கொண்டு உயிரை நீத்துக் கொண்டு மீடனும் சுந்தரரால் உயிர்ப்பிக்கப் பெற்று சிவத்த தொண்டு செய்தவர்).
  3. திருமூல நாயனார்  (3000 ஆண்டுகள் வாழ்ந்து சிதம்பரத்திலே இருந்து திருமந்திரம் என்னும் அருமையான நூலைப் பாடியவர்.)
  4. தண்டி அடிகள் நாயனார் (பிறவிக்கு குருடனாகி இருந்தும் சிவத்த தொண்டு செய்து இறைவனை வழிபட்டு முக்தி பெற்றவர்)
  5. மூர்க்க நாயனார் (சிவனடியார்களுக்கு அமுது செய்வித்து சிஷுரூஷைகள் எல்லாம் செய்து, தம்முடைய திரவியம் எல்லாம் இழந்த பிறகு, சூதாடி அதனால் வரும் தனத்திலே மஹேஸ்வர பூஜை செய்து சிவபதம் எய்திய பெருமை கொண்டவர்)
  6. சோமாசி நாயனார் (ஷிவா பஞ்சாக்ஷரத்தை ஜபம் பண்ணுவதை தன நித்ய அனுஷ்டானமாகக் கொண்டவர். திருவற்றோரில் சுந்தரர்  இடத்து சென்று அவருடைய திருவடி சம்மந்தத்தினால் சிவபதம் அடைந்த பெருமை கொண்டவர்).

       வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
       மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
      செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்*கழறிற் றறிவார்க்கும் அடியேன்
      கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. சாக்கிய நாயனார்  ( பௌத்த மதத்தை விட்டு சிவா நெறியை தழுவி பெண்களே ரோந்து சிவனை வழிபட்டு முத்தி பெற்றவர்)
  2. சிறப்புலி நாயனார்
  3. சிறுத்தொண்ட நாயனார் ( தன்னுடைய சொந்த பிள்ளையை இறைவனுக்கு கறி அமுது செய்வித்த பெருமை கொண்டவர்)
  4. கழறிற்று அறிவார் நாயனார் 
  5. கணநாத நாயனார் (சீர்காழியில் பிறந்து சிவா தொண்டுகள் செய்து காண சம்பந்த மூர்த்தியை பூஜை செய்து கைலாசம் சென்று பூத கணங்களுக்கு தலைவன் பட்டம் பெற்றார்).
  6. கூற்றுவ நாயனார் (சேர நாட்டில் உதித்து  நடராஜர் உடைய திருப்பதங்களையே திரு முடியாக சூடி உலகத்தை ஆண்ட பெருமை கொண்டவர்).
      பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் 7.48.7
       பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
      விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
      கழற்*சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. பொய்யடிமை இல்லாத புலவர் ( அகதியற்றல் அமைக்கப் பெட்ரா தமிழ்ச் சங்கத்தில் இருந்து கொண்டு பசுமம்  ருத்ரக்ஷதாரிகளாகி, பரமேஸ்வரனான  சோமா சுந்தரக் கடவுள் பால் அடிமை செய்த கபிலர், பரணர், நக்கீரர் போன்ற புலவர்களைக் குறிக்கும் இது.)
  2. புகழ்ச் சோழ நாயனார் (ஷிவாபசாரம்  செய்த பட்டத்து  யானையை கொன்ற எறிபத்த நாயனாரிடத்திலே தன்னையும் கொன்று விடும் படி சொன்ன பெருமை கொண்ட மன்னர். கொங்கு தேசத்திலே கருவூர் என்னும் இடத்திலே ஆட்சி செய்தவர். போரிலே அறியாமல் ஒரு சைவ பக்தனைக் கொன்ற பாபத்திற்காக, அக்னி பிரவேசம் செய்து தன்னுடைய உயிரை நீத்துக் கொண்ட பெருமை வாய்த்த நாயனார் இவர்.)
  3. நரசிங்க முனையரைய நாயனார்
  4. அதிபத்த நாயனார்  (மீனவர் குடலத்திலே நாகப்பட்டநித்திலே பிறந்து, தனக்கு கிடைக்கும் மீன்களில் முதல் மீனை சிவனுக்கென்று விட்டு விடும் தொண்டு  செய்தார். ஓரு நாள் தங்க மீன் அகப்பட அதனையும் சிவனுக்கென்று விட்டு விட்டார். அப்படிப்பட்ட பெருமை கொண்டவர்).
  5. கலிக்கம்ப நாயனார் 
  6. கலிய நாயனார் (திருவிளக்கு ஏற்ற என்னை இன்மையால், தன்னுடைய இரத்தத்தினால் விளக்கேற்ற முயல, சிவன் நேராகத் தோன்றி அனுகிருஹம் செய்தார்).
  7. சத்தி நாயனார் (ஷிவா நிந்தனை செய்பவர்களுடைய நாக்கை அறிந்து விடும் விரதம் கொண்டவர்)
  8. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
      கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண்டிருந்த
       கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
      நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
      தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. கணம்புல்ல நாயனார் (தன்னுடைய செல்வம் எல்லாம் சிவத்தொண்டில் தீர்ந்த பிறகு, புல்லருந்து கொண்டு வந்து விற்று, அந்தப் பணத்தில் இறைவனுக்கு நெய் தீபம் ஏற்றிய பெருமை கொண்டவர்).
  2. காரி நாயனார்
  3. நின்றசீர் நெடுமாற நாயனார்  (கூன் பாண்டியன் என்ற மன்னன், திலகவாத்தியார் உடைய கணவர். சம்பந்தர் அருளால் சைவ நெறியை ஏற்பட்டு, சமணர்களைக் காலு மரத்தில் ஏற்றிய பெருமை கொண்டவர்).
  4. வாயிலார் நாயனார்
  5. முனையடுவார் நாயனார் (கூலிக்குப் போர் புரிந்து , அதனால் வரும் பணத்தில், சிவனடியார்களுக்கு தொண்டு செய்த பெருமை கொண்டவர்)
       கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
       காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
      மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
   பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. கழற்சிங்க நாயனார் (பரம சிவனுடைய பூஜைக்காக இருந்த மலரை முகர்ந்து விட்டாள் என்று இவருடைய  தேவியின் மூக்கை அறுத்தார் செருத்துணை நாயனார். அதைக்  கண்டு மலரை எடுத்த கையைத் தான் முதலில் அறுக்க வேண்டும் என்று, தன் மனைவியின் கையைக் கொய்த பெருமை கொண்டவர்).
  2. இடங்கழி நாயனார் (அரசனாக இருந்து சிவனடியார்களெல்லாரும் நெற்பண்டாரத்தை மாத்திரமின்றி மற்றை நிதிப் பண்டாரங்களையும் எடுத்துக் கொள்க என்று சொன்ன பெருமை கொண்ட வள்ளல்).
  3. செருத்துணை நாயனார் (மேற்கூறிய படி கழற்சிங்க நாயனாரின் மனைவி  சிவாபசாரம்   செய்தார் என்ற ஐயத்தில் , அவருடைய மூக்கைக் கொய்த பெருமை கொண்டவர்).
  4. புகழ்த்துணை நாயனார் (சிவ வேதியர் குலத்திலே உதித்து , பஞ்சம் வந்த போதும்  சிவத்தொண்டு செய்து , இறைவனே கனவில் தோன்றி பஞ்சம் தீரும் வரையில் தினமும் ஓர்  காசு தருவேன் என்று சொல்லப் பெற்ற பெருமை வாய்ந்தவர்).
  5. கோட்புலி நாயனார் (சிவனுக்கென்று வைத்திருந்த நெல்லை உண்டனர் என்று தம்முடைய சுற்றத்தார் எல்லாரையும் வாளால் கொய்திட, சிவனே நேரில் தோன்றி ,"அன்பனே! உன் கைவாளினாலே தங்கள் பாவத்தினின்றும் நீங்கிய உன் சுற்றத்தார்கள் சுவர்க்கத்தை அடைய நீ இந்தப்படியே நம்முடன் வருவாய்" என்று சொல்லி கைலாசத்துக்கு அழைத்துச் சென்ற வைபவம் கொண்ட நாயனார் இவர்.



     பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
       பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
     திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
*முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
    முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. பத்தராய்ப்பணிவார்  - (அளவுக்கடந்த சிவ பகுதி கொண்ட அடியார்கள்)
  2. பரமனையே பாடுவார்  - பரமேஸ்வரனை அல்லது வேறு ஒருவரைத் தம் வாயால் பாடாமல் நரஸ்துதி செய்யாமல் உள்ளவர்கள் என்று பொருள்.
  3. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் - தம்முடைய மனதை,  சிவனிடத்திலே ஸ்திரமாக வைத்தவர்கள் என்று பொருள்.
  4. திருவாரூர்ப் பிறந்தார்கள் - திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லாரும் சிவ பக்தி கொண்டவர்கள் என்று பொருள்.
  5. முப்போதுந் திருமேனி தீண்டுவார் - சிவ வெடியாராக இருந்து கொண்டு பரமேஸ்வர்ஸ் மூர்த்தங்களை த்ரிகாலமும் ஆராதனை பண்ணும் புண்ணியர்
  6. முழுநீறு பூசிய முனிவர் - தம்முடைய மேனி முழுவதும் திருநீரு அணிந்த மெய்யன்பர்கள் 
  7. அப்பாலும் அடிச்சார்ந்தார் - அதாவது நம்முடைய பஹரதேஷம் எங்கும் உள்ள சிவ பக்தர்களும், சுந்தரர் காலத்திற்கு முன்னும் பின்னும் உள்ள அணைத்து சிவனடியார்களையும் இது குறிக்கும்.

மகாபெரியவர்: மேற்கண்ட பத்தியில் சொல்லப்பெற்ற எல்லா லக்ஷணங்களும் உள்ளது நம்முடைய மகா பெரியாருக்கு ஒருவருக்கே. சந்திர மௌளீஸ்ஸ்வரரையும், திரிபுர சுந்தரியையும் த்ரிகாலம் பூஜை பண்ணி கொண்டு, வேதத்தையும், சாஸ்திரத்தையும், ஆகமங்களையும் சதா சர்வகாலமும் ரக்ஷித்துக் கொண்டிருந்த பெருமை இவரை அல்லாது வேறு எவருக்கும் இல்லை இந்தப் புவியிலே.

ஆதி சங்கரர் தம்முடைய அன்னபூர்ணேஸ்வரி அஷ்டகத்திலே,  சிவனே என் தந்தை, பார்வதியே   என்னுடைய அன்னை, சிவ பக்தர்கள் அனைவரையும்  என்னுடய பந்துக்கள் என்று சொன்னார்.  எப்படிப்பட்ட பெருமை பார்த்தீர்களா?

        மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
      வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
     திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
    இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
       ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.


  1. பூசலார் நாயனார் (மணக்க கோயில் கட்டி இறைவனை வழிபட்ட பெருமை கொண்டவர்)
  2. மங்கையர்க்கரசியார் (கூன் பாண்டியன் மன்னனின் மனைவி. பாண்டிய நாட்டு அரசி)
  3. நேச நாயனார் ( வஸ்திரமுங் கோவணமும் நெய்து, தம்மிடத்தில் வருஞ் சிவனடியார்களுக்கு இடையறாது கொடுத்து மஹேஸ்வரத் தொண்டு செய்தவர்.)
  4. கோச்செங்கட் சோழ நாயனார் (திருவானைக்காவல் ஸ்தலத்தில் இருந்த சிலந்தியின் அவதாரமாகப் பிறந்து  சிவத்தொண்டு செய்து பல் வேறு கோயில்கள் கட்டிய பெருமை கொண்ட மன்னன்)
  5. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்  (சம்மந்தருடைய பாடல்களை எல்லாம் தமிழ்ப் பண்ணியே இசை அமைத்து யாழில் மேஈட்டிய பெருமை கொண்டவர்).
  6. சடைய நாயனார் (சுந்தரரின் தந்தை)
  7. இசைஞானி அம்மையார் (சுந்தரரின் தாய்)
  8. சுந்தரமூர்த்தி நாயனார் (சுமையாக குறவர்களில் ஒருவரான நம் சுந்தரர்)

மாதாச பார்வதி தேவி பிதாதேவோ மஹேஸ்வர:
பாந்தவாச  சிவ பக்தாஸ்ச ஸ்வதேசோ புவனத்ரயம்  

என்று சொல்லிக் கொண்டு ஆச்சார்யர் திருவடி தொழுது  அடியார்கள் திருவடி தொழுது, திருவாரூர் விதி விடடங்கப் எபிருமானையும் கம்லாமிகையையும் தொழுது இந்தக் கட்டுரையை நம்முடைய மஹாப் பெரியவரின் படாரவிந்தங்களில் சமர்ப்பித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.


Saturday, July 23, 2016

திருக்குறள் கூறும் மஹாப்பெரியவரின் மகிமைகள்



நீத்தார் பெருமை என்ற தலைப்பிலே, நம்முடைய வள்ளுவர் எழுதினார். ஆனால் அது எல்லாம் , நம்முடைய மஹாப் பெரியவருக்குத் தான் பொருந்தும். பல நூறு ஆண்டுகள் கழித்து அவதாரம் பண்ணப் போகும் ஒரு மஹானைப் பற்றி நம்முடைய வள்ளுவர் எழுதி இருப்பார் போலும்.

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

நீத்தார் என்னும் சொல்லுக்கு எல்லாவற்றையும் துறந்தவர் என்று பொருள் படும். இந்தக் குறளில் , வள்ளுவர் - துறவிகளின் திடமான மன உறுதி , வேதங்களில் புகழப் படும் என்று சொல்கிறார். அந்த வேதத்தையும், மதத்தையும் வளர்த்த மஹான், 100 வருடங்கள் வாழ்ந்து இந்தப் புவியைக் காத்தவர் நம்முடைய பெரியவர்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

நான்காவது, ஆஸ்ரமம் - பிரம்மச்சர்யம், கார்ஹஸ்ப்த்யம், வானப்ரஸ்தம் என்ற மூன்றாயும் தாண்டி நிற்கும் அந்த சந்யாச ஆஸ்ரமம் மேற்கொண்டு, அந்த தர்மத்தைத் தழுவி நிற்கும் மஹான்களின் பெருமையை சொல்ல வேண்டும் என்றால் - இந்த உலகத்தில் இறந்தவர்களை எண்ணுவதை போலத் தான் என்கிறார் வள்ளுவர்.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

இம்மை - இந்த உலகம் வாழ்க்கை, மறுமை - மோக்ஷம் / பிரம்மானந்தம் ஆகிய இரண்டையும் அறுந்து, இந்த உலகம் எல்லாம் வெறும் மாயை என்று உணர்ந்து நிற்கும் ஞானிகளின் பெருமை இந்த உலகில் மிக உயர்ந்தது. இந்தத்தப் பெருமை நம்முடைய மஹாப் பெரியவரைத் தவிர வேறு  யாருக்கும் சேராது என்பதில் எந்த ஐயமுமே  இல்லை.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.

திடமான மன உறுதி  என்ற அங்குசத்தைக் கொண்டு தன்னுடைய பஞ்ச இந்திரியங்களையும்    அடக்கும் தன்மை உடையவன் - மோக்ஷ சாம்ராஜ்யத்திற்கு   வித்தாவான்  . அதாவது - மனதையும், இந்திரியங்களையும்   அடக்குவதே மோக்ஷம் என்று சொல்லப்படும் ஆத்ம ஞானம் பெற வித்து  என்பது இதன் உட்பொருள்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

ஐந்து புலன்களையும் அடக்கித் தபசு பண்ணுகின்றவர்களின் பெருமைக்கு - இந்திரனே சரியான உதாரணம்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

இங்கு பெரியார் என்று மஹாப்பெரியவரைத்  தான் சொல்கிறார் வள்ளுவர். செயற்கரிய காரியங்களை செய்கிறவர் பெரியவர்  என்றும் மற்றவர்கள் எல்லாம் சிறியவர்கள் என்றும் சொல்லுகின்றார். இந்தக் கலியில் வேதங்களை எல்லாம் காப்பாற்றி உயிர்ப்பித்து, ஸ்தாபனம்  பண்ணிய பெருமை நம்முடைய பெரியவருக்கே  உரியதாகும்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

பஞ்ச  இந்திரியங்களை எல்லாம் அடக்கி  இருப்பவர்களைத் தான் இந்த உலகம் போற்றும். நம்முடைய மஹாப் பெரியவர், தனக்கு உணவின் மீது ஆசை வந்து விடக் கூடாது என்று வாரக்  கணக்கில் வெறும் நெல் பொறியைத் தின்று கொண்டும், வெறும் தரையில் படுத்துக்க கொண்டும்,  தன்னுடைய இச்சைகளைக் கட்டுப்படுத்தினர். அவருக்கன்றோ  எல்லாப்புகழும் சேரும்?

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

முற்றும் துறந்த மனிதர்களது , மொழி / சொற்பொழிவை , இந்த உலகத்திலே வேதங்கள் காட்டி விடும். அதாவது ஆத்மஞானம்  உள்ளவர்களுடைய சொற்கள் எல்லாமே   வேதத்திற்கும் , தர்மத்திற்கும் அனுகூலமாகவே இருக்கும். மகாபெரியவர் அந்த வேத வாக்யங்களையே தன்னுடைய உயிர்மூச்சாகக் கொண்டவர்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

பலவிதமான சத்தகுணங்களைக்  கொண்ட, சந்யாசிகள் கோபம், ஒரு க்ஷணம் கூட நிலைக்காது . அதாவது லோக்க க்ஷேமத்திற்காக, நன்மைக்ககாக, மற்றவர்களைக் கடிந்து கொள்ளும் மேன்மக்கள், கோபம் நன்மைக்காகவே உள்ள படியால் - ஒரு கேடும் விளைவிக்காது. மஹாப் பெரியவர் , தன்னுடைய  சிஷ்யகோடிகளை எல்லாம் பெற்ற தயைப் போன்று கடாக்ஷிக்கும் படியினால், அவரது கோபம் லோக கல்யாணத்திற்க்காகவே இருக்கும்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

பூரணமான ஞானம்   பெற்ற பிராம்மணன் , பிரம்மத்தை உணர்ந்தவன் , எல்லா உயிர்களையும் அந்த பிரும்ம ஸ்வரூபமாகவே பார்க்கும்படியினால், எந்த உயிர்களையும் துன்புறுத்த  மாட்டான்.  அதாவது, ப்ரஹ்ம ஞானத்தினால், அன்பு ஏற்பட்டு, எல்லா உயிர்களையும் தன்னுடைய அன்பு  கண்ணோட்டத்தினால் பார்ப்பவன் உண்மையான ப்ராஹ்மணன் . மஹாப்பெரியவர் அல்லாது யாரை  இது குறிக்கும்? ஹிந்துக்கள் மட்டும் அல்லாது மற்ற மதத்தவர்கள் எல்லாம் வந்து அவருடைய பாத தர்ஷனம் பண்ணி கொண்டு அவருடைய அனுகிருஹம் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு  கருணை கடாக்ஷம் பண்ணும் மஹான்  அவர்.

பவ சங்கர தேசிக மே சரணம் என்று சொல்லிக் கொண்டு மஹாப் பெரியவருக்கு  அநேக கோடி நமஸ்காரன்களை பண்ணிக் கொண்டு இந்தக் கட்டுரையை முடித்துக்  கொள்கிறேன்.

Sunday, July 10, 2016

ஒளவைப் பாட்டி அருளிய நல்லுரை

நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ் 
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில் 
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே 
மடக்கொடி இல்லா மனை.

திருநீறு இல்லாத நெற்றி பாழ் நெற்றி
நெய் இல்லாத உணவு பாழ் உணவு
உடன் புரிந்தவர்கள் இல்லாத உடம்பு (பிறவி) பாழ் உடல் 
அழகான கோடி இடை  உள்ள ஒரு பெண் இல்லாத இல்லமும் பாழ் இல்லமே.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை 
தானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின் 
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் 
பசிவந்திடப் பறந்து போம்.

பசி வருங்கால பத்தும் பறந்து விடும் என்று கூறுவார்கள். அந்தப் பத்தும் என்ன என்பதை இங்கு கூறுகின்றார் நம் தமிழ்ப் பாட்டி:
மானம், சாதி வேறுபாடு, பிதற்ற கல்வி,  வலிமை, அறிவு, தானம், தவம், வீரம், பெண்களைக் கண்டால் வரும் ஒரு  ஈர்ப்பு .

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும் 
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை 
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் 
எனையாளும் ஈசன் செயல்.


நாம் ஒரு பொருளை வேண்டும் என்று ஆசைப் படும் பொழுது , அது கிடைக்காமல் போகும். அதே போல், நாம் என்னடா ஒரு பொருள் நம்மை வந்து அடையும். எனவே இது எல்லாம் நம்மை ஆளக்  கூடிய இறைவனாகிய இஷானின் செயல் என்று அறிதல் வேண்டும்.

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் 
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த 
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் 
சாந்துணையும் சஞ்சலமே தான்.

உண்பது என்னவோ ஒரு நாழி (சுட்டி) அரிசி, உடுத்திக் கொள்வது என்னவோ 4 முழம் துணி -ஆனால் அளவுக்கு அதிகமாக ஆசை பட்டுக் கொண்டு கனவுகளைக் கண்டு இருக்கும் மனிதர் வாழ்க்கை   எப்பொழுது உடைந்து போகும் என்று தெரியாத ஓவர் மண் பத்திரத்தைப் போன்று மணக்க கவலைகளும் குறைக்கலாம் நிரந்ததைப் போல் இருக்கும்.

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின் 
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை 
இல்லாளும் வேண்டாள்(;) மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள் 
செல்லா(து) அவன்வாயிற் சொல்.

படிக்காதவன் ஆனாலும்  அவன் கையில் பணம் இருந்தால் எல்லோரும் அவனைச் சென்று அங்கு எதிர் கொள்வார்கள். பணம் இல்லாதவனைத் தன்னுடைய மனைவி, பெற்ற தாய், ஆகிய யாரும் விரும்ப மாட்டார்கள் -அ வானுடைய சொல்லானது எங்கும் எடு படாது.

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் 
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை 
திருவா சகமும் திருமூலர் சொல்லும் 
ஒருவா சகமென் றுணர்.

திருக்குறளும், நன்கு வேதங்களின் முடிவான உபநிஷத்துக்களும், சமயக் குறவர்களான சுந்தரர், அப்பர், சம்பந்தர் ஆகிய மூவரின் பாடல்களும், மாணிக்க வாசகரின் திரு வாசகமும், திரு மூலர் உடைய திரு மந்திரம் ஆகிய எல்லாமே ஒரே வாக்ககம் என்று உணர வேண்டும்.


ஒளவைப் பாட்டி அருளிய கொன்றை வேந்தன் (91)

வடமொழியில் உள்ள வர்கம் என்னும் சொல்லே மருவி வருக்கம் என்று இங்கே கூறப் பட்டுள்ளது. உயிர் மற்றும் மெய் எழுத்துக்களைக் கொண்டு மிகவும் அழகாகவும், ஆழமான கருத்துக்களைக் கொண்டும்  இயற்றப் பட்ட ஒரு அறிய நூல் இது. சிறு பிள்ளைகள் முதல் பெரியயோர் வரை அனைவரும் படித்து மகிழும் அளவுக்கும் நுட்பமான கருத்துக்களைக் கொண்ட தெவிட்டாத தெள்ளமுதம் இந்த நூல்.

கடவுள் வாழ்த்து 

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம் 

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
8. ஏவா மக்கள் மூவா மருந்து.
9. ஐயம் புகினும் செய்வன செய்.
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.

ககர வருக்கம் 

14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.
15. காவல்தானே பாவையர்க்கு அழகு.
16. கிட்டாதாயின் வெட்டென மற.
17. கீழோர் ஆயினும் தாழ உரை.
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.

சகர வருக்கம் 

26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு.
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

தகர வருக்கம் 

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
40. தீராக் கோபம் போராய் முடியும்.
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.

நகர வருக்கம் 

48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
55. நேரா நோன்பு சீராகாது.
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை.

பகர வருக்கம் 

59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
62. பீரம் பேணி பாரம் தாங்கும்.
63. புலையும் கொலையும் களவும் தவிர்.
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
67. பையச் சென்றால் வையம் தாங்கும்.
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.

மகர வருக்கம் 

70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
71. மாரி அல்லது காரியம் இல்லை.
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.
77. மேழிச் செல்வம் கோழை படாது.
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
80. மோனம் என்பது ஞான வரம்பு.

வகர வருக்கம் 

81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.
89. வைகல் தோறும் தெய்வம் தொழு.
90. ஒத்த இடத்து நித்திரை கொள்.
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.

ஒளவைப் பாட்டி அருளிய ஆத்திச்சூடி (109)

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம் 

1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.

உயிர்மெய் வருக்கம் 

14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப் போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. இடம்பட வீடு எடேல்.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
20. தந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர் செய்.
23. மண் பறித்து உண்ணேல்.
24. இயல்பு அலாதன செய்யேல்.
25. அரவம் ஆட்டேல்.
26. இலவம் பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன செய்யேல்.
29. இளமையில் கல்.
30. அரனை மறவேல்.
31. அனந்தல் ஆடேல்.

ககர வருக்கம்

32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட்டு ஒழி.
43. கௌவை அகற்று.

சகர வருக்கம்

44. சக்கர நெறி நில்.
45. சான்றோர் இனத்து இரு.
46. சித்திரம் பேசேல்.
47. சீர்மை மறவேல்.
48. சுளிக்கச் சொல்லேல்.
49. சூது விரும்பேல்.
50. செய்வன திருந்தச் செய்.
51. சேரிடம் அறிந்து சேர்.
52. சையெனத் திரியேல்.
53. சொற் சோர்வு படேல்.
54. சோம்பித் திரியேல்.

தகர வருக்கம்

55. தக்கோன் எனத் திரி.
56. தானமது விரும்பு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
58. தீவினை அகற்று.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
60. தூக்கி வினை செய்.
61. தெய்வம் இகழேல்.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
63. தையல் சொல் கேளேல்.
64. தொன்மை மறவேல்.
65. தோற்பன தொடரேல்.

நகர வருக்கம்

66. நன்மை கடைப்பிடி.
67. நாடு ஒப்பன செய்.
68. நிலையில் பிரியேல்.
69. நீர் விளையாடேல்.
70. நுண்மை நுகரேல்.
71. நூல் பல கல்.
72. நெற்பயிர் விளைவு செய்.
73. நேர்பட ஒழுகு.
74. நைவினை நணுகேல்.
75. நொய்ய உரையேல்.
76. நோய்க்கு இடம் கொடேல்.

பகர வருக்கம் 

77. பழிப்பன பகரேல்.
78. பாம்பொடு பழகேல்.
79. பிழைபடச் சொல்லேல்.
80. பீடு பெற நில்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள்.
84. பேதைமை அகற்று.
85. பையலோடு இணங்கேல்.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
87. போர்த் தொழில் புரியேல்.

மகர வருக்கம் 

88. மனம் தடுமாறேல்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோடு இணங்கேல்.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள்.
96. மை விழியார் மனை அகல்.
97. மொழிவது அற மொழி.
98. மோகத்தை முனி.

வகர வருக்கம் 

99. வல்லமை பேசேல்.
100. வாது முற்கூறேல்.
101. வித்தை விரும்பு.
102. வீடு பெற நில்.
103. உத்தமனாய் இரு.
104. ஊருடன் கூடி வாழ்.
105. வெட்டெனப் பேசேல்.
106. வேண்டி வினை செயேல்.
107. வைகறைத் துயில் எழு.
108. ஒன்னாரைத் தேறேல்.
109. ஓரம் சொல்லேல்.

Friday, July 8, 2016

மூதுரையின் மாணிக்கங்கள் ...

நம்முடைய ஒளவைப்  பாட்டி நமக்கு அளித்த முத்துக்களில், மூதுரை என்னும் இந்த இலக்கியம் மிகவும் அருமை ஆனது. அதில் சில முத்துக்களை இங்கே காண்போம்.

அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய் 
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் 
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு 
சுட்டாலும் வெண்மை தரும்.

திரிந்தாலும் பால் சுவை மாறாது, அதே போலே நம்முடன் நட்பு கொள்ள விருப்பம் இல்லாதவர் என்ன செய்தாலும் நட்பு கொள்ளார். சங்கைத் தீயில் சுட்டாலும் தன்னுடைய வெண்மை நிறம் மாறாது - அதே போல்  தம்முடைய பெருமைகள் கெட்டாலும் நல்ல குலத்திலே பிறந்தவர்கள் (மேன் மக்கள்) எப்பொழுதும் மேன்மக்களே.


நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற 
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத் 
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம் 
குலத்து அளவே ஆகுமாம் குணம் .

எப்படி அல்லி மலரின்  காம்பின் நீளம் நீர் மட்டத்தின் உயரத்தைப் பொறுத்து இருக்குமோ, அதே போல் ஒருவனுடைய ஞானம் , அவன் கற்ற நூல்களின் அளவைப் பொருத்துத் தான் இருக்கும். முற்பிறவாகில் செய்த புண்ணியத்தைப் பொறுத்தே ஒருவனுடைய செல்வம் விளங்கும்  - அதே போல், ஒருவன் பிறந்த குலத்தின் அளவே,  அவனுடைய குணமும் இருக்கும்.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் 
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில் 
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு 
எல்லார்க்கும் பெய்யும் மழை.

எப்படி நெல்லுக்குப் பாய்ச்சப்ப படும் நீரானது , வயலில் உள்ள புல்லுக்கும் பாயுமோ அதே போல், இந்த உலகில் உள்ள நல்லவர்களுக்காகப் பெய்யும் மழை , உலகில் உள்ள அனைவருக்கும் போய்ச் சேரும்.

மடல் பெரிது தாழை (;) மகிழ் இனிது கந்தம் 
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது 
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல் 
உண்ணீரும் ஆகி விடும்.

பெரிய மடல்களை உள்ள தளம் பூ, மிகவும் சிறிய மலரான மகிழ மலரின் மணத்தைக்  கொண்டு உள்ளது. அதே போல் உடலால் சிறியார் என்று எவரையும் எண்ண கூடாது - அவர்களுக்குள்ளே மிகும் நுண்ணிய அறிவு மறைந்து இருக்கும். கடல் எவ்வளவு பெரியதானாலும், அதன் நீரைக் குடிக்க இயலாது - ஆனால் அதன் அருகே உள்ள சிறிய உற்று நீர் ஆனது குடிக்க உகந்ததாக இருக்கும்.

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி 
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன் 
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே 
கல்லாதான் கற்ற கல்வி.

 வானத்தில் மழை வரக் கண்டு  தன்னுடைய அழகான இரக்கைகளை   விரித்துக் கொண்டு ஆடுவதைக் கண்ட  வான்கோழி தன்னுடைய அசிங்கமான சிறகுகளை விரித்து ஆடத்     துடங்கினதாம். அதே போல் மூர்க்கர்கள்(கல்லாதவர்) அதாவது நல்ல விஷயங்களைத் தன்னுள் வைத்துக் கொள்ளாமல், கெட்டதை கிரஹித்துக்கொண்டு விளங்கும் அறிவிலிகள் கற்ற கல்வி ஆனது - வான்கோழியின் நடனத்தைப் போன்றது ஆகும்.

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் 
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில் 
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே 
ஒட்டி உறுவார் உறவு.

ஒரு குளத்தில் உள்ள நீரானது வற்றிப்  போகுங்கால், அக்குளத்தை விட்டு வெளியேறும் கொக்கினத்தை போன்றவர் அல்லர் உறவினர்கள். ஆனால் அக்குளத்திலேயே இருந்து அந்த வறட்சியை அனுபவிக்கும் அல்லி மற்றும் நெய்தல் மலர்ச் செடிகள் போன்றவர்களே உண்மையான உறவினர்கள்.

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா 
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா 
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும் 
அம்மருந்து போல்வாரும் உண்டு.

உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் என்று எண்ணி இயக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய உடலில் பிறந்த பெருநோய் நம்மைக் கொல்லும் - ஆனால் எங்கேயோ இருக்கும் மலை, அந்த நோய்க்கு மருந்தை நல்கும். அந்த மலையைப்போலே , நமக்குச்  சொந்தம் அல்லாதவர்கள் நமக்குப்  பேருதவியைச் செய்வார்கள்.

கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம் 
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய 
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே 
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.

கல்லாதவர்களுக்குக் கற்றவர்களுடைய சொல் எமனாக இருக்கும்.
தீய மனிதர்களுக்கு தர்மம் எமனாக இருக்கும்.
வாழை மரத்திற்குத் தன்னுடைய குலையே எமனாக அமையும்.
வீடிற்ற்கு அடங்காத பெண் அந்த வீட்டிற்கு எமனாக விளங்குவாள் .

நற்றாமரைக் குளத்தில் நல் அன்னம் சேர்தாற்போல் 
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா 
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில் 
காக்கை உகக்கும் பிணம்.

நல்ல அன்னப் பறவை, தாமரைக் குளத்தைச்சென்று சேர்வதைப்போலே, கற்றவர்கள் கற்றவர்களுடனே சென்று சேர்வர். எப்படிப்  பிணம் தின்னும் காக்கைகள் சுடுகாட்டைச்சென்று சேருமோ, அதே போல் தான் மூர்க்கர்கள் மூர்க்கர்களை செண்று அடைவார்கள்.

Sunday, July 3, 2016

தமிழில் உறவு முறைகளின் பெயர்கள்..

இன்றய காலகட்டங்களில், நாம் நம்முடைய உறவிண்கற்களை எப்படி அழைப்பது என்று தெரியாமல் இருக்கிறோம். நம்முடைய தமிழ்ப் பண்பாட்டில் , ஒவ்வொரு உறவுக்கும் தனிப்பட்ட பெயர்கள் உண்டு. அதனை இங்கு காண்போம்:

நம்முடைய மூதாதையர்களின் பெயர்கள்:

  1. தாத்தா /பாட்டி - தந்தை அல்லது தாயின் பெற்றோர்கள் ,(பாட்டன் /பாட்டி ).
  2. கொள்ளு தாத்தா / கொள்ளு பாட்டி - தாத்தா /பாட்டியின் பெற்றோர்கள் 
  3. எள்ளு தாத்தா / எள்ளு பாட்டி  - கொள்ளு தாத்தா / கொள்ளு பாட்டியின் பெற்றோர்கள்.
  4. அத்தைப் பாட்டி - அப்பாவின் அத்தை 
  5. மாமாத்  தாத்தா - அப்பாவின் தாய் மாமா 
வடமொழியில் இதனை இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் கூறுவார்கள்.
  1. பிதாமஹ, பிதாமஹீ - அப்பாவின் தந்தை /தாய் 
  2. ப்ரபிதாமஹ / ப்ரபிதாமஹீ -  அப்பாவின் தாத்தா மற்றும் பாட்டி 
  3. பித்ரு ப்ரபிதாமஹ  / ப்ரபிதாமஹீ - அப்பாவின் கொள்ளு தாத்தா / கொள்ளு பாட்டி
  1. மாதாமஹ / மாதாமஹி - தாயின் தந்தை மற்றும் தாய் 
  2. மாத்ருபிதாமஹ, மாத்ருபிதாமஹீ - தாயின் தாத்தா மற்றும் பாட்டி 
  3. மாத்ருப்ரபிதாமஹ / மாத்ருப்ரபிதாமஹீ - தாயின் கொள்ளு தாத்தா / கொள்ளு பாட்டி
நம் குடும்பத்தாரின் பெயர்கள்:

  1. அப்பா, அம்மா ( இந்த வார்த்தைகள் உருது மொழியில் இருந்து வந்திருக்க வேண்டும். என் என்றால் அவை தமிழ் வார்த்தைகள் அல்ல.)
  2. தந்தை, தாய்  - இவை தூய தமிழ் வார்த்தைகள் ஆகும்.  (திருநெல்வேலிப் பக்கம் ஆச்சி, அத்தன் என்று சொல்லும் வசக்கமும் உண்டு). (ஆத்தா என்ற சொல்லும் தயைக் குறிக்கும்).
  3. அண்ணா - மூத்த சகோதரன் (சஹோதரன் என்ற சொல்லுக்கு ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் என்று பொருள் வட மொழியிலே சக + உதர)
  4. தம்பி - இளைய சகோதரன் 
  5. அக்கா  - மூத்த சகோதரி 
  6. தங்கை - இளைய சோதரி 
  7. அம்பி - அவள்/ அவனுடைய தம்பி
  8. உம்பி - உன்னுடைய தம்பி
  9. இம்பி - இவனுடைய தம்பி 
அக்கா / தங்கையைபப் பொதுவாக தமக்கை என்று சொல்லுவார்கள்.

தாய் வழி உறவுகள்:

  1. தாய் மாமன்  / அம்மான்  - அம்மாவின் சஹோதரன் (வட மொழியிலே உள்ள மாதுல என்ற சொல்லே இப்படி மருவி இருக்க்க வேண்டும் என்பது என் கருத்து).
  2. தாய் மாமனின் மனைவி - மாமி (சிலர் அத்தை என்றும் அழைப்பார்கள்).
  3. மாமன் மகன்- அம்மான்  சேய்/  அம்மாஞ்சி 
  4. மாமன் மகள் - அம்மங்கார் அல்லது அம்மங்காள்
  5. சித்தி,சித்தப்பா - அம்மாவுடன் பிறந்த தங்கை, மற்றும் தங்கையின் கணவர்
  6. பெரியம்மா, பெரியப்பா - அம்மாவின் அக்கா மற்றும் அவர் கணவர்  
அவர்களுடைய பிள்ளைகளை வயதிற்கு ஏற்ப அக்கா,தங்கை, அண்ணன்,தம்பி என்று அழைக்க வேண்டும்).

தந்தை வழி உறவுகள்:

  1. தந்தையின் சஹோதரி (அக்கா / தங்கை) - அத்தை 
  2. அத்தம்பியார் / அத்திம்பார் / மாமா - அத்தையின் கணவர்   /  அக்கா / தங்கையின் கணவர்.
  3. அத்தான்  - அத்தையின் மகன்
  4. அத்தங்கார்  / அத்தங்காள்  - அத்தையின் மகள் 
  5. ஞாதி / தாயாதி / பங்காளி - அப்பாவின் ஒன்று விட்ட சஹோதரர்கள் (ஒரே கோத்ரம் அல்லது குலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும். அவர்கள் சித்தப்பா, பெரியப்பா முறை ஆவார்கள்).
  6. சித்தி,சித்தப்பா - அப்பாவுடன் பிறந்த தம்பி , மற்றும் தம்பியின் மனைவி 
  7. பெரியம்மா, பெரியப்பா - அப்பாவுடன் பிறந்த அண்ணன் , மற்றும் அண்ணனின் மனைவி  
அவர்களுடைய பிள்ளைகளை வயதிற்கு ஏற்ப அக்கா,தங்கை, அண்ணன்,தம்பி என்று  அழைக்க வேண்டும்).
(வடமொழியில் ஞாதி என்றால் தெரிந்தவர்கள் என்று பொருள். அதாவது நமக்குத் தெரிந்து நம் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொருள்)

திருமண உறவுகளின் பெயர்கள் :
  1. மனைவி - பொண்டாட்டி (பெண்டு + ஆட்டி = பெண் தோழி என்று பொருள்), வாழ்க்கைத் துணை , ஆம்படையாள்( அகம் + உடையாள்  அதாவது தான் வீட்டிற்கு உடையவள் என்று பொருள்),தாரம்,அகத்துக்காரி, வீட்டுக்காரி.
  2. கணவன் - ஒரு பெண்ணின் துணைவன், ஆம்படையான் (அகம் + உடையோன் = தான் வீட்டிற்கு உடையவன் என்று பொருள்), புருஷன் (வடமொழியில் புருஷன் என்றால் ஆண் என்று பொருள்),அகத்துக்காரர், வீட்டுக்காரர்.
  3. மகன் /தனயன் - தான் பெற்ற ஆண் பிள்ளை
  4. மகள் - தான் பெற்ற பெண் பிள்ளை
  5. மாற்றுப்பெண் - தன் மகனின் மனைவி (மருமகள்)
  6. மருமகன் - தன் மகளின் கணவன் 
  7. மைத்துனன் - மனைவியின் சஹோதரர்கள். அல்லது கணவனின் மூத்த சஹோதரர்கள்.
  8. கொழுந்தன் - கணவனின் இளைய சஹோதரர்கள்.
  9. கொழுந்தியாள் - மனைவியின் இளைய சகோதரிகள்.
  10. மனைவியின் பெற்றோர்கள் - மாமா, மாமி
  11. கணவனின் பெற்றோர்கள் -  அத்தை / மாமா (ஆனால் ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்க்குப்பி பிறகு கணவனின் சொந்தங்கள் எல்லாம் தன்னுடையவர்கள் அவர்கள். எனவே ஓவர் பெண் தன்னுய மாமனார்/ மாமியாரை அப்ப/அம்மா என்று அழைப்பாப்டு நம் வசக்கம்).
  12. மாமனார் - மனைவி / கணவனின் தந்தை
  13. மாமியார் - கணவனின் / மனைவியின் அன்னை 
  14. சம்பந்தி - மகன் / மக்களின் துணையின் தந்தை. இதனை தமிழிலே கொண்டான்/கொடுத்தான் என்றும் சொல்லுவார்கள். ஆனால் இந்த வடமொழிச் சொல்லே பெரும்பாலும் பயன்படுத்தப் படுகின்றது.
  15. சம்பந்தி அம்மா - மகன் / மக்களின் துணையின் தாய். 
  16. மதினி / அண்ணி - அண்ணன் மனைவி 
  17. மச்சினி - தம்பியின் மனைவி  / மனைவியின் மூத்த சகோதரிகள்
  18. நாத்தனார் /  நங்கையாள் - நாத்தி என்றால் கணவன் உடைய அக்கா / தங்கை. நங்கை என்றால் (கணவன் வீட்டில்) ப்ரிறந்த மங்கை / நங்கை என்று பொருள் படும்.
  19. ஓரகத்தி   / ஓருப்புடி - கணவன் அண்ணன் / தம்பியின் மனைவி 
  20. சடடகன் / சகலை / சஹாபடி - இது வடமொழில்ச் சொல்ல ஆகும். மனைவியின் அக்கா / தனைகளின் கணவன்.
  21. சக்களத்தி - (சக களத்திரா - தன்னுடைய கணவனை மணந்தவள் என்று பொருள்  வடமொழியிலே) தன் கணவனின் மற்றொரு மனைவி என்று பொருள்.