Monday, February 25, 2019

நின் நாமம் சொல்வதன்றி..

நின் நாமம் சொல்வதன்றி தவமொன்றும் நானறியேன்
என்னப்பனே நரசிம்மா என்னை நீ ஆட்கொள்வாய் என்னேரமும்!

மலமும் சலமும் கழித்து எந்தன் வாயில் உமிழ்நீரும் ஊற
யமபடர்கள் என்னை கயிற்றால் கட்டி இழுக்க
செய்வதறியாது நான் இருக்கும் நேரம் !
நின் திருநாமம் நின் திருவுருவம் எந்தன் சிந்தையில் தோன்றிட வேண்டுமே!
அப்போதும் இப்போதும் என்னை காக்க வேண்டும் என்னப்பனே நரசிம்மா!

ஆன்மாவும் மெய்யும் மருளும் நானறியேனே!
பாவியேன் அறிவதெல்லாம் நின்திருநாமங்களே!
என்னப்பனே நரசிம்மா என்னை தடுத்தாட்கொள்வாய்!

பதுமபாதன் சங்கரன் பிரகலாதன் ஆதிவன் சடகோபர்கான் ஆகியோர்க்கு அருளிய கருணைக்கடலே!
என்னப்பனே நரசிம்மா என்னை தடுத்தாட்கொள்வாய்!

பேராசை என்னும் பேய் என்னைப்பற்றி எந்தன் விவேகத்தை மறைக்குமே !
என்னப்பனே நரசிம்மா என்னை தடுத்தாட்கொள்வாய்!

நின் திருத்தாலும் நின் திருநாமமும் அன்றி வேறொன்று அறியேன் இவ்வுலகில்!
என்னப்பனே நரசிம்மா என்னை தடுத்தாட்கொள்வாய்!