Tuesday, January 31, 2017

மாத்ரு பஞ்சகம் - அன்னையின் பெருமை கூறும் ஐந்து பாடல்கள்

श्रीमत् आदिशंकारचार्य विरचिथ मातृ  पञ्चकं 

தன்னுடைய அன்னையை விரும்பாத  குழந்தை இந்த உலகத்தில் இருக்கவே இருக்காது. நான்கு வேதங்களையும் கரைத்துக் குடித்து, தன்னுடைய எட்டாவது வயதிலே சன்யாசம் வாங்கிக்கொண்ட ஆதி சங்கரர், தாய்மையின் பெருமையைப் பற்றியும் , தாயைப் போற்றியும் எழுதி இருக்கின்ற இந்த  ஸ்லோகத்தை, வட மொழியில் மாத்ரு பஞ்சகம் - அன்னையைப் பற்றிய ஐந்து பாடல்கள் என்று கூறுவார்கள். அந்த மகானின் வாயில், தாய்மையின் பெருமையைப் பற்றிக் கேட்டுக் கொள்வோமா?

आस्तं  तावदियं  प्रसूतिसमये  दुर्वारशूलव्यथा 
   नैरुच्यं  तनुशोषणं  मलमयी  शय्या  च  संवत्सरी  |
एकस्यापि  न  गर्भभारभरणक्लेशस्य  यस्याक्षमः 
   दातुं  निष्क्रितिमुन्नतोपि  तनयस्तस्यै  जनन्यै  नमः || 

ஒரு குழந்தயைப் பெற்று எடுக்க தாயானவள், தன்னுடைய கர்ப  காலத்திலும், பிரசவ காலத்திலும் மிகுந்த அவஸ்தைகளைப் படுகின்றாள். அதன் பிறகு குழந்தை பிறந்து ஒரு வருடம் வரை அதனுடைய மல, மூத்திராதிகளை எல்லாம் சுத்தம் செய்து கஷ்டப் படுகின்றாள். அப்படிப் பிறந்த அழகிய ஒரு மகன்(மகள்) எத்துணை பெரியவன் அனாலும்  தன்னுடைய தாய் செய்த தியாகங்களை ஈடு காட்டவே முடியாது. அப்படிப் பட்ட மஹிமை பொருந்திய , தாய்க்கு வணக்கங்கள் என்கிறார். தாய்மையின் பெருமையை இதனை விட சிறப்பாக யாராலும் சொல்லவே முடியாது.

गुरुकुलामुपसृत्य  स्वप्नकाले  तु  दृष्ट्वा 
   यतिसमुचितवेशं  प्रारुदो  मां  त्वमुच्चैः  |
गुरुकुलमथ  सर्वं  प्रारुदत्ते  समक्षं 
   सपदि  चरणयोस्ते  मातरस्तु  प्रणामः  ||

சங்கரருடைய தாய்க்கு அவர் ஒரே மகன். கணவனும் இல்லை- அந்தக் குழந்தை  தான் கதி அவளுக்கு. அப்படி இருக்கையில் தன் மகன் குருகுலத்தில் வேதம் படித்துக் கொண்டிருந்த வேளையில்,  அவன் சன்யாசி (யதி) ஆகப் போவதாக கனவு கண்டு,  - ஒரே ஓட்டமாக குருகுலத்திற்குச் சென்று விட்டாள் அந்தத்  தாய். அவளுடைய அழுகைக் குரலைக் கேட்டு, குருகுலதத்தில் இருந்த குழந்தைகள் எல்லோரும் அழுதார்களாம். அத்துணை பாசம்  கொண்ட , உன்னுடைய திருவடிகளுக்கு என் வணக்கங்கள். என்ன அருமை பாருங்கள் ? தன்னுடைய தாய் இறந்த பொழுது ஆசார்யர் வரும் காலத்தில் பாடிய பாடல் ஆன படியினாலே, தன் இளமைப் பருவத்தில்  தன் தாயுடன் நடந்த நிகழ்வுகளை எல்லாம் அழகாக நினைவு கூறுகின்றார்.

न  दत्तं  मातस्ते  मरणसमये  तोयमपिवा 
   स्वधा  वा  नो  दत्ता  मरणदिवसे  श्राद्धविधिना  |
न  जप्त्वा  मातस्ते  मरणसमये  तारकमनु-
   रकाले  सम्प्राप्ते  मयि  कुरु  दयां  मातुरतुलाम् ||

ஒருவர் சன்யாசம் வாங்கிக் கொண்டால், அவருடைய வம்சத்தில், ஏழு  தலைமுறைக்கு  முன்னோர்கள்  மோக்ஷ கதி (வீடுபேறு) அடைவார்கள் என்பது சாஸ்திரம். அதனை எல்லாம் தெரிந்த  பொழுதிலும் தன்னுடைய தாய் முன், ஒரு சிறு பிள்ளையாக மாறி விட்டார் நம் சங்கரர். அன்னையே, நீ மரணம் அடையும் பொழுது, உனக்கு கங்கை நீர் முதலானவற்றை நான் கொடுக்கவில்லை. அதே போல உனக்கு விதிப்படி மாசியங்கள், முதல் ஆண்டு சிரார்த்தம் போன்றைவைகளை செய்ய முடியாத சன்யாசி அகி விட்டேன். உன் உயிர் பிரியும் நேரத்தில் உன் காதுகளில் இராம தாரக மந்திரத்தை சொல்ல முடியவில்லை. மிகவும் கால தாமதமாக வந்திருக்கிறேன். அன்னையே! என்னையும் மன்னித்து விடு என்று கூறுகின்றார். தாய் மீது உள்ள அன்பின் சிகரத்தையே தொட்டு விட்டார் நம் சங்கரர்.

मुक्तामणि  त्वं  नयनं  ममेति 
    राजेति  जीवेति  चिर  सुत  त्वं |
इत्युक्तवत्यास्तव  वाचि  मातः 
   ददाम्यहं  तण्डुलमेव  शुष्कं|| 

அன்னைமார்களுக்குத் தங்களுடைய குழந்தைகளைக் கொஞ்சுவது மிகவும் பிடித்த விடயம். சங்கரரின் தாயும் அதற்கு விதி விலக்கு இல்லை. "என் கண்ணே ! என் கண்ணின் கரு விழியே! இராசா ! என் உயிரே! என் மகனே!" இப்படி எல்லாம் சொல்லி, என்னைக் கொஞ்சிய அதை வாய்க்கு, அம்மா காய்ந்து, வறண்ட வெறும் அரிசியைத் தான் நான் தருகிறேன்! என்று தன் தாய்க்கு வாய்க்கரிசி போட்டதனைக் கூறுகின்றார் ஆச்சாரியார்!

अम्बेति  तातेति  शिवेति  तस्मिन् 
   प्रसूतिकाले  यदवोच  उच्चैः |
कृष्णेति  गोविन्द  हरे  मुकुन्द 
   इति  जनन्यै  अहो  रचितो अयं अञ्जलिः  ||

பிரசவ காலத்தில், "அன்னையே! தந்தையே! சிவனே! கிருஷ்ணா! கோவிந்தா! ஹரே முகுந்தா!" என்றெல்லாம், வலி பொறுக்க முடியாமல் சத்தம் எழுப்பினாயே! அப்படிப் பட்ட உனக்கு, என்னுடைய இரு கைகளையும் கூப்பி (அஞ்சலி) வணக்கம் செய்து கொளிறேன் அம்மா! என்று கண்ணீர் ததும்பக்  கூறுகின்றார்.

பொதுவாக எல்லோருக்குமே, இந்தப் பாடலைப் படித்தால், தங்கள் தாய் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனைகள் எல்லாம்  ஞாபகத்திற்கு  வந்து, கண்களில் கண்ணீர் வந்து விடும். தாயைப் பற்றிய பாடலை, நம் தாய் மொழியில் கேட்பது மிக மிக அருமை.

Monday, January 30, 2017

தர்ம சாஸ்திரத்தில் பசு வதைச் சட்டம்..

பசுக்களைக் கொல்லுதல் என்பது நம்முடைய மதத்திலே மிகப் பெரிய பாவம். அதனை கோ ஹத்தி அல்லது பசு கொலை என்று சொல்லுவார்கள். தெரிந்தோ   தெரியாமலோ, பசுவை ஒருவன் கொன்று விடுவானாயின், அவனுக்கு என்ன தண்டனை என்று மனு இங்கு கூறுகின்றார்.



११.१०८ उपपातक संयुक्तो  गोघ्नो  मासं  यवान्   पिबेत्  |
कृतवापो  वसेद्  गोष्ठे  चर्मणा  तेन  संवृतः ||

11.108 பசு கொலை (உபபாதகம்) செய்தவன், முதலில் தன்னுடைய மேனியில் உள்ள உரோமங்களை எல்லாம் க்ஷவரம் செய்து கொண்டு, முதல் ஒரு மதம் வரை வாற்கோதுமை (பார்லி) தண்ணீரைக் குடிக்க வேண்டும். அப்படி பசு வதை அல்லது கொலை செய்தவன், தான் கொன்ற பசுவின் தோலை, தன் ஆடையாக அணிந்து கொண்டு, மாட்டுத் தொழுவத்தில் வசிக்க வேண்டும்.

११.१०९ चतुर्थकालम् अश्नीयाद् अक्षारलवणं इतम् |
गोमूत्रेण आचरेत्  स्नानं  द्वौ  मासौ  नियतेन्द्रियः ||

11.109  அது மட்டும் அல்ல - அப்படிப் பட்ட பாதகன், இரண்டு மாத காலத்திற்கு உப்பு (லவணம்). காரம்  இல்லாத உணவை நான்கு வேளைகளிலும்  உட்கொள்ள வேண்டும்.  அது மட்டும் அல்ல - தன்னுடைய இந்திரியங்களை எல்லாம் கட்டுப் படுத்திக் கொண்டு பசுவின் முத்திரத்தில் (கோமூத்ரம்) குளிக்க வேண்டும்.

११.११० दिवा अनुगच्छेद् गास्तास्तु  तिष्ठन् ऊर्ध्वं  रजः पिबेत् |
शुश्रूषित्वा  नमस्कृत्य  रात्रौ  वीरासनं  वसेत् ||

11.110 பகலில் மேய்ச்சலுக்குப் போகும் மாடுகளைப் பின் தொடர்ந்து சென்று, பிறகு நின்று  கொண்டு  மாடுகள் காலால் எழுப்பும் புழுதியை  சுவாசிக்க வேண்டும். பிறகு மேய்ந்து முடித்து வீடு திரும்பிய பசுக்களுக்கு எல்லா விதமான பணிவிடைகளும் செய்து, சாஷ்டாங்க நமஸ்கரங்கள் பண்ணி, பிறகு இரவு முழுவதும் சம்மணம் போட்டு (வீராஸனம்) உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டும். (மாடு வெட்டும் / கொல்லும் கலவடிகளுக்கு நல்ல படமாக இருக்கும் இது).

११.१११ तिष्ठन्तीष्व अनुतिष्ठेत्  तु  व्रजन्तीष्व अपि अनुव्रजेत् |
आसीनासु  तथा आसीनो नियतो वीत मत्सरः ||

11.111  அப்படி ஆகத் தானே நிஷ்ட்டையாக இருந்து கொண்டு, தன்னுடைய போட்டி மற்றும் பொறாமைகளை எல்லாம் , அடக்கிக்கொண்டு  - பசுக்களும், கன்றுகளும் நின்றால் இவனும் நிற்க வேண்டும், அவைகள் நடந்தால் இவனும் பின் தொடர்ந்து செல்ல வேண்டும், அதே போல அவைகள் படுத்து உறங்கினால் இவன் உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டும்.

११.११२ आतुराम् अभिशस्तां  वा  चौर व्याघ्रादिभिर् भयैः |
पतितां  पङ्कलग्नं  वा  सर्वौपायैर्  विमोचयेत्  || 

11.112  மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றிக் கொண்டு , தன்னுடைய தீய உணர்ச்சிகளையம்  அடக்கிக்கொண்டு இருக்கும் அந்த மனிதன் பசுக்களுக்கு வரும் கீழ்க்கண்ட ஆபத்துக்களில் இருந்து அவற்றைக் காப்பாற்ற வேண்டும்:
  1. வ்யாதிகளினால் அவஸ்தைப் படுதல்.
  2. திருடர்கள் பயம்.
  3. புலி முதலான வன விலங்குகள் பயம்.
  4. கீழே விழுதல்.
  5. சேறு மற்றும் குட்டைகளில் மாட்டிக் கொள்ளுதல்.
எல்லா விதமான உபாயங்களையும் செய்து பசுக்களை, மேற்கூறிய ஆபத்துக்களில் இருந்து அவன் காப்பாற்ற வேண்டும்.

११.११३ उष्णे  वर्षति  शीते  वा  मारुते  वाति  वा  भृशं  |
न  कुर्वीत आत्मनस् त्राणं  गोर् अकृत्वा    तु  शक्तितः ||

11.113   வெய்யிலிலும், மழையிலும், கொடும்கற்றிலும் இருந்து முதலில் பசுக்களைக் காப்பாற்றி விட்டு, அதன் பிறகு தன தன்னைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்.

११.११४ आत्मनो यदि  वा अन्येषां  गृहे  क्षेत्रे अथ  वा  खले  |
भक्षयन्तीं न  कथयेत्  पिबन्तं  चैव  वत्सकम् ||

11.114  தான் பராமரிக்கும்  பசுக்கள் தன்னுடைய வீட்டிலோ, தோட்டத்திலோ, போரடிக்கும் இடத்திலோ, மற்றவர்களுடைய தோட்டத்திலோ ஏதேனும் சாப்பிட்டு விட்டாலோ  அல்லது  கன்றுகள் தாய்ப் பசுவிடத்தில் பாலைக் குடிக்க நேரிட்டாலோ   ஒன்றும் பேசாமல் இருந்து விட வேண்டும்.

११.११५ अनेन  विधिना  यस्तु  गोघ्नो  गाम् अनुगच्छति  |
स  गोहत्या कृतं  पापं  त्रिभिर् मासैर् व्यपोहति  || 

11.115 கோஹத்தி என்ற உப்பாதகத்தைச் செய்தவன், மேற்கூறிய முறைப் படி, பசுக்களைப் பராமரித்துக் கொண்டும், தன்னுடைய இந்திரியங்களை அடக்கிக் கொண்டும் வாழ்ந்து வர மூன்று மத காலத்திற்குப் பிறகு அவனுடைய அந்தப் பாபமானது விலக்குகின்றது.

११.११६ वृषभ एकादशा गाश्च  दद्यात् सुचरितव्रतः|
अविद्यमाने सर्वस्वं  वेदविद्भ्यो  निवेदयेत्  ||

11.116 இப்படி எல்லாம் பிராய்சசித்தம்  செய்து தன்னுடைய பாபத்தை விலக்கிக் கொண்ட பிறகு, ஒரு களை மற்றும் பத்து பாற்பசுக்களை, வேத விற்பன்னர்களுக்குத் தனமாகக் கொடுக்க வேண்டும். அப்படி, அவனிடத்தில் பஷுக்கள் இல்லாவிட்டால், தன்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும் அந்த வேத விற்பன்னர்களுக்குக் கொடுத்து விட வேண்டும்.

என்ன அருமை பாருங்கள் ? ஒரு பசுவை எவனாவது கொல்வானாயின் இத்தனை தண்டனைகளை கொடுத்து இருக்கிறார் மனு. இன்றயை காலத்தில் நம் நாட்டில் உள்ள மாடு தின்னிகளுக்கு இது ஒரு நல்ல பாடம்.

Friday, January 27, 2017

தர்ம சாஸ்திரத்தில் பசு மாடுகளை பற்றி...



4.59 ந  வாராயேத்  காம் தயந்தீம் ந  சசாக்ஷிதா  கஸ்ய  சித் |
ந  திவி இந்திராயுதம் திருஷ்டவ   கஸ்ய  சித்  தர்ஷயேத்  புத || 

न  वारयेद्  गां  धयन्तीं  न  च अचक्षीत कस्य  चित्  |
न दिवीन्द्रायुधं दृष्ट्वा   कस्य  चिद्  दर्शयेद्  बुधः ||

தன் தாய்ப் பசுவிடம் பால் அருந்தும்   கன்றுக்கு இடையூறு செய்யக் கூடாது.  கண்டும், காணாத மாதிரி இருந்து விட வேண்டும் - யாரிடமும் தான் கண்டத்தைக் கூறக்   கூடாது. அதே போலத் தான் வானவில்லும் (வட மொழியில் இந்திர தனுசு, இந்திர ஆயுதம் என்று பல பெரியார்கள் அதற்கு).
என்ன அழகு பாருங்கள்.

4.72  ந  விகார்ஹய  கதாம்   குர்யாத்  பஹிர்மால்யம்  ந  தாராயேத் |
காவாம்  ச யானம்  ப்ருஷ்டேந  ஸர்வதைவ விகர்ஹிதம் ||

 न विगर्ह्य कथां कुर्याद्  बहिर्माल्यं  न  धारयेत्  |
 गवां  च  यानं  पृष्ठेन  सर्वथैव  विगर्हि तम्   ||

சாஸ்திர விஷயங்களையும், மற்ற தர்ம விஷயங்களையும் பற்றி தேவை இல்லாமல் கோபமாக வாதாடுவது, மலர் மலைகளை அணிந்து கொண்டு வெளியே செல்வது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். அதே போல, மாடு மற்றும் காளைகளின் முதுகில் ஏறிக் கொண்டு சவாரி செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். (விளையாட்டாகக் கூட மாடு / களை முதுகில் சவாரி செய்ய கூடாது).

4.231 வாசோதஷ்      சந்திரசாலோக்யம்ஷ்  அஷ்விஸலோக்யம் அஸ்வதஹ்  |
அநடுஹாஹ்  ச்ரியம்    புஷ்டம்  கோதோ    ப்ரதனஸ்ய  விஷ்டபம்  ||

वासोदश् चन्द्र सालोक्यं अश्विसालोक्यम् अश्वदः ।
अनडुहः  श्रियं  पुष्टं  गोदो  ब्रध्नस्य  विष्टपम्  ॥

இங்கு மனு மிகவும்  அழகாக, பலவிதமான தானங்களைப் பற்றிக் கூறுகின்றார்.
  1. துணி தானம்  - சந்திர லோகத்தை அடைவார்கள் 
  2. குதிரை தானம் - அஷ்வி(ந) லோகத்தை அடைவார்கள்
  3. காளை தானம் - செல்வம், வெற்றி பெறுவார்கள் 
  4. மாடு தானம் - சூரிய லோகத்தை அடைவார்கள்
எல்லா தானங்களிலும்   மிக உத்தமமான தனமாக கோ தானத்தை கூறி உள்ளார் மனு. நம்முடைய கலாச்சாரத்திற்கு மிகவும் நெருங்கிய விலங்கு மாடு மற்றும் காளைகள் எனறு புரிந்து கொள்ள வேண்டும்.

5.8   அநிர்தஷாயா கோஹ்  க்ஷிரம்  ஒஉஷ்ட்ரம்  ஏகஷபம் ததா
ஆவிகம் சந்தினி க்ஷிரம்  விவிதசாயஷ்  ச   கோஹ்  பய  ||

अनिर्दशाया गोः  क्षीरम् औष्ट्रम् ऐकशफं  तथा  |
आविकं  सन्धिनीक्षीरं विवत्सायाश्च  गोः  पयः ||

கன்றினை ஈன்று பத்து நாட்களுக்கு உள்பட்ட பசுவின் பால்,(சீம் பால்), காளை உடன் சேரத் தயார் நிலையில் (இன சேர்க்கை) இருக்கும் மாடு, தன்னுடைய கன்றினை இழந்த மாடு - ஆகிய மூன்று  வகையான மாடுகளின் பாலை அருத்தக் கூடாது என்கிறார் மனு. சீம்பால், கன்றுக்கே உரியது (அதனை நாம் திருடிக் குடிக்கக் கூடாது), கன்றை இழந்த பசுவின் முன்னால் பொம்மைக்   கன்றினை வைத்துப் பால் கறப்பது மிகவும் பாவம், அதே போல இன சேர்க்கைக்குத் தயாராகும் மாட்டின் பாலும் கறப்பது தவறு. அது மட்டும் அல்லாமல் ஒட்டகம் , செம்மறி ஆடுகள், மற்றும் காலில் ஒற்றை நகம் உள்ள மிருகங்களின் பாலை அருந்துவது தடுக்கப் பட வேண்டிய விஷயம் என்று சொல்கின்றார் மனு.  என்ன அற்புதம் பார்த்தீர்களா?

5.87 நாரம் ஸ்ப்ருஷ்ட்வா அஸ்தி  சஸ்நேஹம்  ஸ்நாத்வா  விப்ரோ  விஷுத்யாதி  |
ஆச்சம்ய ஏவ து  நிஹஸ்நேஹம்  காமா லபியார்க்கம்   இக்ஷ்ய  வா ||

नारं  स्पृष्ट्वा अस्थि  सस्ने हं स्नात्वा  विप्रो  विशुध्यति  |
आचम्यैव  तु  निःस्नेहं  गाम् आलभ्यार्क म् ईक्ष्य  वा  || 

எண்ணெய் பசையுடன் இருக்கும் எலும்பினைத் தொட நேரிட்டால் குளிக்க வேண்டும். அப்படி எண்ணெய் பசை இல்லாத எலும்பினைத் தொட நேரிட்டால், மூன்று முறை தண்ணீர் அருந்தி (ஆசமநீயம்) , பிறகு பசு மட்டை தொடவோ அல்லது சூரியனைப் பார்க்கவோ வேண்டும்.

இதில் இருந்தே, மாடுகள் எவ்வளவு புனிதமாகக் கருதப் படுபவை என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

5.124  संमार्जन उपाञ्जनेन सेकेण उल्लेखानेन  च  |
गवां  च  परिवासेन  भूमिः  शुध्यति  पञ्चभिः   ॥

பூமி(வீடு,வாசல் மற்றும் நாம் தாங்கும் இடங்கள்) ஐந்து விதமாக சுத்தம் செய்யப்படும் என்கிறார் மனு.

  1. நன்கு சுத்தமாகப் பெருக்குதுல் 
  2. மாட்டின் சாணியை நிலத்தின் மீது பூசி மெழுகுதல் 
  3. மாட்டின் கோமயம் அல்லது பாலைக் கொண்டு தெளித்தல்
  4. வெடித்துக் கிடைக்குமாயின், நன்றாக சுரண்டி விடுதல் 
  5. பசு மாட்டுக் கூட்டம் வந்து இரவு பகல் தங்குதல் 

நம்முடைய பழங்கால  (இன்றும் கூட) சமுதாயத்தில் மாடு மற்றும் மாட்டில் இருந்து கிடைக்கும் போர்டுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்தது என்று இதன்மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

Sunday, January 8, 2017

உடையவர் இராமானுஜர் 1000ஆம் ஆண்டு சிறப்புக் கட்டுரை

இராமானுஜர் , நம்முடைய தமிழ் மண்ணிலே தோன்றி ஆயிரம் ஆண்டுகள் அகி விட்டன. இவர் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை. இன்றைக்குக் கோயில் வழிபாட்டில் தமிழ் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது என்றால் - அதற்கு காரணம் நம் இராமானுசர் தான் என்று சொன்னால் மிகை ஆகாது. தமிழகம் மட்டும் அல்லது - ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இறைவன் வழிபாட்டில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தந்து, ஆழ்வார்கள் பாடிய தெள்ளு தமிழ்ப் பாசுரங்களை பாட வைத்த பெருமை இவர் ஒருவருக்கே சேரும். இன்றைக்கு தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு , ஆந்திராவில் வசிக்கும் மக்கள் கூட, திருப்பாவை  படிக்கும் அளவுக்கு தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தவர் நம் ராமானுஜர் ஒருவரே.

1000   ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பார்ப்பனர்களும் மற்றவர்களும் பிரம்ம சூத்ர பாஷ்யங்கள் , வேதங்கள் அனைத்தும் உள்ள மொழி சமஸ்கிருதம் என்பதால், அதுவே தேவ பாஷை என்றும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் கூறி வந்தனர். இராமானுசர் - இறைவன் தானே உகந்து ஆழ்வார்கள் வாயில் , பாடவைத்து அனுபவித்த மொழி நம்முடைய தமிழ் மொழி தான் என்று நம் தூய தமிழ் மொழியின் பெருமறையை இந்த உலகிற்குக்  காட்டினார்.  நம்முடைய மரபிலே, ஒருவர் தம்முடைய சித்திதாந்தம்  என்று சொல்லப் பெறும் மரபை நிலை நாட்ட வேண்டும் என்றால், பிரஸ்தானத்ரயம் என்று சொல்லப் பெரும் மூன்று கிரந்தங்கள் - பாத்து முக்கிய உபநிடதங்கள் , பிரம்ம சூத்திரம், பகவத் கீதை ஆகியவற்றிற்கு  உரை எழுத வேண்டும். அந்த உரையானது , சமஸ்கிருதம் என்ற வடமொழியிலேயே அமைத்தல் வேண்டும். ஆழ்வார்கள் கூறிய இறை அன்பு மற்றும் பரிபூரணமான சரணாகதி ஆகிய விடயங்களை ஆதரமாகக் கொண்டு - அந்த மூன்று  கிரந்தங்களுக்கும் பாஷ்யம் அல்லது விரிவுரை எழுதினார். என்னடா இது - தமிழ் நூல்களுக்கு சம்ஸ்கிருதத்தில் உரை எழுதினார் என்று நாம் ஆச்சர்யாப் படுவோம். ஆனால் பக்தி மார்க்கம் என்று சொல்லப் பெறும் , இறை அன்பு நெறியை முதன்மையாகக் கொண்டு ஆழ்வார்கள் பாடிய பாடல்களை இந்த உலகிற்கு உணர்த்தவும் தம்முடைய விஷிஷ்ட அத்துவைத சித்திதான்தந்தை  நிலை நாட்ட இராமானுசர் அந்த உரையை எழுதினார்.

அப்படி வட மொழியில், உரை எழுதிய இராமானுசர் ஆழ்வார்கள் பாடிய திருப்பதிகள் (திவ்ய தேசங்கள்)  மற்றும் ஆழ்வார்கள் பாடிய பாடல்களை பாடுவதே நம் எல்லோருடைய பிறவி நோக்கம் என்று சொன்னார். பொதுவாக வட மொழி நூல்களுக்கு, தமிழில் உரை எழுதுவார் - ஆனால் நம் ராமானுஜர் மிகவும் எதிர் மறையாக தமிழ் பாசுரங்களுக்கு வடமொழியில்  ஸ்ரீ பாஷ்யம் என்னும் உரையை எழுதி - நம்முடைய தமிழ் மொழியின் பெருமையை நிலை நாட்டினார் - என்ன பெருமை என்று பார்த்தீர்களா ?

திருமகள் கேள்வனாகிய எம்பெருமான், திருமால் பள்ளி கொண்டு இருக்கும் அந்த ஆயிரம் தலை கொண்ட ஆதிசேடன் என்று சொல்லப்பெறும் பாம்பு தான் இந்தக் கலியுகத்தில் இறை அன்பையும், பரிபூரணமான சரணாகதி மார்கத்தையம் உலகிற்கு உணர்த்த இராமானுஜராகப் பிறவி எட்டுத்திட்டார் என்பார்கள் பெரியோர். அப்படிப் பட்ட நம், இராமானுஜருக்கு எத்துனை திருநாமங்கள் என்று பார்ப்போமா ?
  1. இளையாழவார்  - இராமாயணத்தில் இராமனுக்குத் தம்பியாக்கப் பிறந்தமையால்  இவருக்கு இந்தப் பெயர்.
  2. இராமானுஜர் - வடமொழியில் அனுஜா என்றால் தம்பி என்று பொருள் படும். எனவே இராமானுஜன் என்றால் இராமானுக்குத் தம்பி என்று பொருள் படும். காஞ்சி வரதராஜப் பெருமாள் இவருக்கு கொடுத்த திருநாமம்.
  3. யதிராஜர் - யதி சென்றால் நீத்தார் அல்லது சன்யாசி என்று பொருள். சந்நியாசிகளுக்குக்கெல்லாம்  அரசரானாகத் திகழுபவர் என்று பொருள்.
  4. உடையவர் - திருவரங்கத்து எம்பெருமானால் கொடுக்கப் பெற்ற திருப்பி பெயர்.
  5. இலக்ஷ்மண முனி  - இராமானுக்குத்தம்பியாகிய இலக்குவனைக் குறிக்கும் பெயர்.
  6. கோதக்ராஜர் - ஆண்டாளால்  கொடுக்கப் பெற்ற நாமம் . ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் அண்ணலே என்று அழைக்கப் பெற்றமையால் இந்தப் பெயர் பெற்றார்கோதை + அக்ராஜ (வடமொழியில் அண்ணன்)  .
  7. அண்ணல் - ஆண்டாளுக்கு அண்ணன் என்று பொருள். 
  8. பாஷ்யக்காரர்   - காலை மகள் ஆகிய சரஸ்வதியால்  கொடுக்கப் பெற்ற பெயர்.
  9. திருப்பாவை ஜீயர்  - திருப்பாவைப் பாசுரங்களை பாடிக் கொண்டு , பெரிய நம்பிகள் மகளை நப்பின்னையாகக் கண்டமையால் இந்தப் பெயர் பெற்றார்.
  10. அப்பனுக்கு  சங்காழி  அளித்த  பெருமாள் - திருமலையுடைய  பெருமாளுக்கு, திருப்பதியில் சங்கும், சக்கரமும் அளித்த பெருமை கொண்டவர்.
  11. எம்பெருமானார்  - திருக்கோட்டியூர் நம்பிகளால் அளிக்கப் பெற்ற திருநாமம். 
என்ன பெருமை  பார்த்தீர்களா? இது மட்டும் அல்ல. இன்னும் இருக்கின்றது. ஜாதி பேதங்களை ஒழிக்க மிகவும் பாடு பட்டவர். தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய பிரதேசங்களில் கோயில்களை நிறுவி அங்கு தமிழ்ப் பாசுரங்களை ஒலிக்கச் செய்த பெருமை கொண்டவர். தீணடமையை   ஒழிக்க, எல்லாக் குலத்தவர்களும் ஆலய பிரவேசம் செய்யலாம் என்று எடுத்துச் சொன்ன பெருமை கொண்டவர்.

அதே போல, இவ்வளவு பெரிய இந்த ஆசிரியனுடைய பெருமையைக் கூற வேண்டும் என்றால், அவருக்கு எத்துணை ஆச்சார்யர்கள்  இருந்தனர் என்று பாருங்களேன்:
  1. திருக்கச்சி நம்பிகள் - காஞ்சிபுரத்தில் இவருக்கு  வைணவத்தை அறிமுகப் படுத்தியவர் .
  2. பெரிய நம்பிகள் - இவரை பூரணமான வைணவனாக ஆக்கி, சமாஸ்ரயணம் என்னும் ஐவகைச் சடங்கை செய்து வைத்தவர்.
  3. திருக்கோட்டியூர் நம்பிகள்   - திருவெட்டெழுத்தின் உணைமயான பொருளை இவருக்கு ஓதியவர்.
பழங்காலத்தில் காஷ்மீர் நகரத்தில் சம்க்ருத பண்டிதர்கள் நிறைந்து இருந்தனர். எப்படி, மதுரை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றம் நடத்துவர்களையோ, அப்படி, காஷ்மீர் பண்டிதர்களிடத்திலே சென்று அரங்கேற்றுவர்கள்சம் சம்ஸ்கிருதக் கவிதைகளை. காஷ்மீர் நகரத்தில் மிகவும் பிரசித்தி பெட்ரா சரஸ்வதி ஆலயமும் இருந்தது. இராமானுசர், அதனால் போதாயன வ்ருத்தி என்னும் நூலைப் பெற காஷ்மீருக்கு தம்முடைய சிஷ்யர் கூரேசருடன் அங்கு சென்றார்.

காஷ்மீர்  சரஸ்வதி   தேவியே ராமானுஜருடைய , பெருமையையைப் போற்றி , அவரை பாஷ்யகார என்று அழைத்தாள். வாடா மொழியிலே, பாஷ்ய காரா - என்றால், (ப்ரம்ம சூத்திரம், தசோபநிஷடங்கள், பகவத் கீதை எனப்படு பிரஸ்தானத்ரயம் ) விளக்கவுரை எழுதியவன் என்று பொருள் படும்.

இப்படியாகத் தானே 120 வருடங்கள் வாழ்ந்தார் நம் இராமானுஜர். பல விதமான சாதனைகளைக்கும் அற்புதங்களையும் நிகழ்த்தினார் நம் இராமானுஜர். கர்நாடடகத்தில் ஜைன சமயத்தவருடன் நிகழ்ந்த வாதத்தில், தன்னுடைய ஆயிரம் தலை கொண்ட ஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டார். மேலுகோட்டை என்று சொல்லப் படும் க்ஷேத்ரத்தில் , உள்ள செல்வா நாராயணப் பெருமல்ல, தானே நடந்து வந்து இராமானுஜருடைய துடை மீது ஏறி நின்று கொண்டார். இது போல இவர் செய்த அற்புதங்கள் எண்ணில் அடங்காதவை ஆகும்.

இராமானுஜர் மேலுக்கோட்டை என்னும் ஊரை விட்டு வரும் பொழுது, அந்த ஊர் மக்களுக்கு, அருள் வழங்கி, தன்னுடய்ய ஓவர் திருஉருவாகி சிலையை நிறுவி, அதனை, வழிபடுமாறு ஆசி வழங்கினார். அதே போலத் தாம் உதித்த ஊராகிய ஸ்ரீபெம்புதூர் என்னும் ஊரிலிம் (தான் உகந்த திருமேனி) அவருடைய சிலையை நிறுவினார்.அதே போலத்தான், இராமானுஜர் 120  ஆண்டுகளுக்குப் பிறகு, மறைந்த பிறகு திருவரானந்தனும், பெரிய பிராட்டியும் அவருடைய திருமேனியை, அப்படியே என்னை, கற்பூரம் சேர்த்துப் பராமரிக்கும் படி ஆணை இடர்கள். எம்பெருமான் அணைப்பு படி, அவருடைய உடல் இன்றைக்கும் திருவரங்கத்துக்கு கோயிலில் பராமரிக்கப் பட்டு வருகிறந்து. அப்படி அகத்தி தானே அவருக்கு இந்த உலகில் மூன்று திருமேனிகள் - தன உகந்த திருமென்ட், தமருகந்த திருமென்ட் , தம் அனா திருமேனி.



இதனை விட பெருமை வாய்ந்த ஒரு மனிதனை, நம் தமிழகம் கண்டிருக்கவே முடியாது. இந்த உலகில் உள்ள எல்லா மனிதர்களும் இறைவனின் அடிமைகளே என்று சர்வ ஜன சமானத்துவம் எனப்படும் சுய மரியாதையை   நம்மகுப் போதித்து, இறைவனை அடைய ஒரே மார்க்கம்  பக்தி தான் என்று ஆழ்வார்கள் கூறிய விஷயத்தை நமக்கெல்லாம் எடுத்துக் கூறி இன்றளவிலும் திருவரங்க க்ஷேத்ரத்தில் இருந்து கொண்டு உலகில் உள்ள எல்லோரையும் அருள் செய்யும் இராமானுஜர் பெருமை அளவற்றவை.