Monday, April 10, 2023

தமிழகத்து பார்ப்பார் பெரும.........

தமிழகத்து பார்ப்பார் பெருமை என்னவென்று சொல்வேனோ!
தலைவலிக்கு கஷாயம் காய்ச்சலுக்கு சீரக இரசம்
வயிற்று வலிக்கு மோரும் சளிக்கு சுக்கு மிளகு
அகமதிலே மருத்துவத்தை பார்க்கும் அவர் பெருமை பெருமையே!
கச்சங்கள் காட்டும் இடையராய் நீள்கூந்தல் குழலியர்
நித்தம் நெற்றியில் நீறு பூசி விளக்கேற்றி வழிபட்டு
செந்தமிழை வாய் பேசும் பெருமை என்ன பெருமையோ!
ஆபத்தம்பன் சொல்சாத்திரம் அனைத்தும் பின்பற்றி
நன்மை தீமையில் அனைத்திலுமே எந்நேரமும் சாத்திரம்
சொல்வாழ்க்கை வாழும் அவர் பெருமை என்ன பெருமையோ!
வடமரும் வாதிமரும் எண்ணாயிரத்தவரும் சேர்ந்து குழாமாய்
வேதவேள்விகள் பல செய்து இறைத்தொண்டுகள் செய்து
மகிழ்ந்து குலவும் அவர் பெருமை என்ன பெருமையோ!

என்னென்று சொல்வேனோ எங்கள் செந்தமிழ்நாட்டின் பெருமை...

செந்தமிழர் பத்தராய் வேதம் தமிழ் செய் தமிழ்நாடு
சேர சோழ பாண்டியர் வாழ் வீரமிகுந்த தமிழ்நாடு
வேதமோங்கி வேள்வி ஓங்கி அந்தணர் வாழ் தமிழ்நாடு
சிவனடியார் மாலடியார் செய்பாடல்கள் திகழ் தமிழ்நாடு
வேள்வித்தீயில் எங்கள் மீன்காசி வந்துதித்த தமிழ்நாடு
ஆன்மீகத் தலைநகரம் காஞ்சி விளங்கும் எங்கள் தமிழ்நாடு
காமாக்ஷி காமகோடி இவ்விரண்டும் விளங்கும் தமிழ்நாடு
எங்கெங்கும் ஆன்மிகம் தழைத்தோங்கும் எங்கள் தமிழ்நாடு
கன்னடரும் களி தெலுங்கரும் வந்துவக்கும் தமிழ்நாடு
ஆலவாயான் அருள்முருகன் சங்கத்தில் தமிழ் வளர்த்த தமிழ்நாடு
காவிரி தென்பெண்ணை பாலாறு தாமிரபரணி ஓடும் தமிழ்நாடு
குமரன் குன்றத்தோராடும் எங்கள் செந்தமிழ்நாடு
வேதவேள்வியாராய் பார்ப்பனர்கள் வாழும் தமிழ்நாடு
எங்கெங்கு நோக்கினும் பெருமை எங்கெங்கு நோக்கினும் அருமை
மிலேச்சரும் கிருத்துவம் பரவு எங்கள் தமிழ்நாடு
செந்தமிழ்நாட்டின் பெருமைகள் சொல்ல சொல்ல
எந்தன் மேனி சிலிர்க்குதே! உள்ளமெல்லாம் பூரிக்குதே!
என்னென்று சொல்வேனோ எங்கள் செந்தமிழ்நாட்டின் பெருமை!
என்னென்று சொல்வேனோ எங்கள் செந்தமிழ்நாட்டின் பெருமை!

Monday, April 3, 2023

காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!....

என்னிதயம் வாழும் ஐயன் உலகாசான் இருவருமே
சமாதியாய் அமர்ந்துலகம் ஈரேழும் அருளுமிடம்
தாயும் பிள்ளை போலமர்ந்து நன்மை பல செய்யும் கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!

அனுடத்தில் உதித்த எங்கள் உலகாசான் தானே வந்து
அவிட்டதில் அவனிவந்த அவர்சீடர் உடனமர்ந்து
சமாதியாய் பிரமத்துள் இரண்டறக் கலந்திருந்து
அடியார்கள் அனைவருக்கும் அருள்மாரி பொழியும் கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!

மனமுகநாத ஆசானை மஹாபெரியவா என்பார்
அவர்தான் அன்பு சீடரை புதுபெரியவா என்றழைப்பர்
தாயும் பிள்ளை போலமர்ந்து தரணி காக்கும் கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!

செய்தற்கரிய செய்வோரே பெரியார் என்னும்
வள்ளுவன் தன வாக்கை நிரூபித்த ஆசான்மார்
சமாதியாய் தாமமர்ந்து அருளால் எம்மை ஆளும் கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!

கருணைக் கடலாம் (ஆதி) சங்கரனும் அவனி காக்க
அத்துவிதம் தாபித்து மடங்கள் ஈரிரண்டு நிறுவி
தாமே வந்தமர்ந்து அருளாட்சி செய்கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!

எங்களாசான் நாமம் சொல்லி காலையிலே துயிலெழுவேன்
அவன்தான் நாமம் சொல்லி தினமும் பள்ளி கொள்ளுவேன்
அருளும் பொருளும் சேர்த்துநல்கும் புண்ணியர் வாழும் கோயில்
காஞ்சியிலே காமகோடி என்றுணர்வாய் மனமே!

குருநாதன் நாமங்கள் சொல்லி அவன் மகிமைகள்
பாடுந்தோறும் கண்ணீர் பெருகும் என் நயனத்தில்
தீந்தமிழில் நாயேன் செய்த பாடலேற்று மானிடர்கள்
அனைவருமே நன்மைபெற அருளவேண்டும் எங்குருவே!