ஸர்வால் லோகாந் ஸர்வாந் தே³வாந் ஸர்வாநாத்மந: ஸர்வாணி
பூ⁴தாநி விரமதி விராமயத் யஜஸ்ரம் ஸ்ருʼஜதி விஸ்ருʼஜதி வாஸயதி
யதோ வீர: கர்மண்ய: ஸுத்³ருʼக்ஷோ யுக்தக்³ராவா ஜாயதே
தே³வகாமஸ்தஸ்மாது³ச்யதே வீரமிதி ॥
ப்ரம்மா ந்ருஸிம்ஹனின் மஹிமையையும், அவன் மந்திரத்தின் சிறப்பையும் பலவாறாக போற்றுகின்றார். உக்ரம் என்னும் பதத்தின் விளக்கத்தை நேற்றைய தினம் பார்த்தோம். இனி, ந்ருஸிம்ஹ மந்த்ரராஜ மந்திரத்தில் உள்ள, அடுத்த பதம் ஆகிய வீரம் - என்னும் பதத்தை பற்றி, தேவர்கள் வினவ ப்ரம்மா பின் வருமாறு விளக்குகின்றார்.
தன்னுடைய சொந்த மஹிமையினால், ந்ருஸிம்ஹன் அனைத்து உலகங்களையும், தேவர்களையும், மனிதர்களையும், படைப்புகளையும் ஓய்வு (விராமம்) கொள்ள செய்து, படைத்தும், வளர செய்தும் , தன்பால் ஈர்த்தும் இடை விடாது செய்கின்றான். அசையாத மலையை போலவும், அனைத்து கர்மங்களுக்கு பின்னிருக்கும் ஈஸ்வரனாகவும், தேவர்கள் ஆசைப்படும் அனைத்தையும் அனுகிருஹம் செய்வதாலும் வீரன் என்று புகழ படுகின்றான் ந்ருஸிம்ஹன்.
சர்வேஸ்வரனான ந்ருஸிம்ஹனின் மந்த்ரராஜ மந்திரம், முப்பத்தி இரண்டு எழுத்துக்கள் கொண்ட அனுஷ்டுப் என்னும் சந்தஸிசில் அமைந்துள்ளது. ந்ருஸிம்ஹனின் மந்திரமே படைத்தலுக்கும் மூலம் என்கிறார் ப்ரம்மா.
தேவர்களுக்கு இஷ்டகாம்யாதை அனுகிருஹம் செய்த சர்வேஸ்வரனான ந்ருஸிம்ஹன், திருப்பாதங்கள் நமக்கு துணை.
உபநிஷத்திலேயே , போற்ற பெறுவதால், சர்வேஸ்வரன் ந்ருஸிம்ஹனின் பெருமையை நாம் உணர முடியும். சர்வ தேவதா ஸ்வரூபனாக விளங்கும் ந்ருஸிம்ஹனின் பாதங்களை பற்றி, இந்த சம்சார கடலை தாண்ட முடியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
சர்வம் ஸ்ரீ ந்ருஸிம்ஹர்ப்பணம் அஸ்து.