Thursday, September 1, 2016

ஒளவையார் அருளிய விநாயகர் அகவல்



விநாயகர் சதுர்த்தி என்று சொல்லப்பெறும் பிள்ளையார் நோன்பு , ஆவணி மதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தி திதி அன்று கொண்டாடப் படுகின்றது. வடநாட்டில், மகாராஷ்டிரா மாநிலத்தில் விசேஷமாக, விநாயர் பூஜை செய்யப் படுகின்றது. ரிக் வேதத்திலே உள்ள கணபதி உபநிஷத் என்னும் நூலிலே, விநாயகரை மூல முதற் பொருளாகக் கூறப் படுகின்றது. வேதம், சாஸ்திரம் எல்லாம் தெரிந்தால் தான் அதெல்லாம் நமக்குத் புரியும்.

நம்மடைய   திராவிட நாட்டிலே உதித்து, தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் தன்னுடைய வாழ்க்கையை அர்பணித்துக் கொண்ட நம்  ஒளவைப் பாட்டி பல விதமான, இலக்கிய நூல்களை அருளி இருக்கின்றார். அவற்றுள் ஒன்றான விநாயகர் அகவல் , வேத வேதாந்தங்களின் சாரமாக விளங்குகின்றது. தூய தமிழிலே, விநாயகப் பெருமானின் பெருமைகளை எல்லாம், மிகவும் அழகாக சொல்லி இருக்கின்றார் நம்முடைய ஒளவைப் பாட்டி.

விநாயகப் பெருமானின் அடி முதல் முடி  வரை (பாதாதி எக்ஸம்)  வர்ணனை:


சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வி: குளுமையான சந்தனம் மற்றும் செந்தாமரை போல் மிகவும் அழகான பாதங்களில் சிலம்பு கொஞ்சுகிறது. மேலும், அவருடைய இடுப்பில் பொன்னால் செய்த அரை ஞான் கொஞ்ச, பூ மற்றும் மேகத்தைப் போன்ற வெள்ளை நிற ஆடை , அவருடைய இடுப்பில மின்ன, அழகான கூடை போன்ற வயிறு மற்றும் ஒற்றைக் கொம்பு (ஏக தந்தம்) ஆகியவை அங்கு விளங்குகின்றன.

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 

யானை முகமும், அதன்  மீது இருக்கின்ற சிந்தூரமும், ஐந்து கைகளும் (4 கைகள் + தும்பிக் கை), அந்தக் கைகளில் உள்ள பாச , அங்குசமும், அவருடைய மிகவும் அழகான நீல மேனியும் நெஞ்சிலே   நீங்காமல் இருக்கின்றன என்று கூறுகின்றார் நம் ஒளவையார்.தொங்கும் வாயும், நன்கு தோள்களும் ( 2x2 = 4) (புஜங்கள்) , மூன்று திருக்கண்களும், மதநீர் ஒழுகுவதால் கண்களில் ஆகிய திருச்சுவடும் அவருடைய திரு முக மண்டலத்தில் விளங்குகின்றன.

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! 

ஒளவையார், விநாயகப் பெருமானை இன்னும் அனுபவிக்கின்றார் பாருங்கள். இரண்டு  காதுகளும், மின்னிக் கொண்டு இருக்கும் தங்கக் கிரீடமும், ஒன்றாகத் திரண்டு கிற்கும் பூணூல் (யக்னோபவீதம்)  மின்னும் மார்பும், ஆக விநாயகர் உடைய ஸ்வரூப வர்ணனை ஆகிவிட்டது. இப்பொழுது, அந்த அனுபவத்தின் உச்சத்துக்கே சென்று விட்டார் நம்முடைய ஒளவைப் பாட்டி .  அப்படிப் பட்ட விநாயகர், முக்கணளயும் உண்ணுபவராகவும், மூஷிகம் என்ற  பெருச்சாளியை  தம்முடைய ஊர்தியாகக்(வாகனம்) கொண்டவர் என்கிறார் ஒளவையார்.

விநாயகரை பிரும்ம ஸ்வரூபகக் காணல் 

மாண்டூக்ய உபநிஷத்தில் சொல்லப் பெட்ரா பிரம்மத்தின் நிலையை இங்கு சொல்லகின்றார் -> அதாவது உபநிஷத்துக்களையே தலை சிறந்ததான மாண்டூக்ய உபநிஷதத்திலே சொல்லப் பெட்ரா (சதுர்தம்   ப்ரம்ம)  என்ற வசனத்தை  இங்கு சொல்லுகின்றார். அதாவது இறை அனுபவம் அல்லது ப்ரம்மனுபாவம், என்பது சொல்லுக்கெல்லாம் கடந்த நிலை. ஜாகிரத், ஸ்வப்ன, சுஷுப்தி என்ற மூன்று  நிலைகளையும் தாண்டி, நான்காவதாக இருக்கும் நிலையே அந்த பரவசமான சமாதி  நிலை - அதையே இங்கு துரீய (நான்காவது)  நிலை என்றும், ஆத்ம ஞானம்  என்ற மெய் ஞானம் என்றும் , அந்த துரீய ஞானம் நிறைந்த கற்பக மரம் போன்ற யானையே விநாயகர்  என்று போற்றுகின்றார். அதாவது இறைவனுடைய வடிவத்தை அழகாய் வர்ணித்த  ஒளவையார் , இப்பொழுது அந்த நாமம் , ரூபம் என்று சொல்லப் படும் மாயைக்கு அப்பாற்பட்ட  ப்ரம்ம ஸ்வரூபகமாகவே பார்க்கின்றார். என்ன அனுபவம் பாருங்கள்? வேதாந்தம் கற்று கரைகண்ட பெரிய ஞானிகளின் நிலையை நம் தமிழ்ப் பாட்டி அடைந்து விட்டாள் இறைவன் அருளால் . என்ன அற்புதம் பாருங்கள்? இப்படிப் பட்ட ஞானத்தை அருளிய இறைவன் பெரியவனா? அவனுடைய பக்தை ஆகிய ஒளவைப் பாட்டி பெரியவளா? என்ன அற்புதம் பாருங்கள்.


இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 

இந்தக் கணத்திலே வந்து தன்னை ஆட்கிண்டு, தன்னுடைய உணமையான ஆத்ம ஸ்வரூபம் தெறிய  படுத்தி  , பெற்ற தாய் போல அருள் புரிந்தான் விநாயகன் என்கிறாள் ஒளவை பாட்டி. அதே போல், இந்த பிறப்பு, இறப்பு, மூப்பு பிணி என்ற விஷயங்கள் எல்லாம், வெறும்  மாயை என்றும், இறை அனுபவமே (அநுபூதி) நிரந்தரமானது என்றும் உணர்த்தி, வேதங்களுக்கு உட்பொருளாகிய திருவைந்தெழுத்தை, தன்னுடைய உள்ளதினால் நிலை நிறுத்தி, தன் நெஞ்சிலே குடிகொண்டான் விநாயகன் என்கிறார் நம் ஒளவை பாட்டி. 

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் 

அன்னை வடிவமாக வந்த விநாயகப் பெருமான் இப்பொழுது,  குரு வடிவமாகி ஒளவைக்கு மெய்ஞ்ஞானம் புகட்டுகின்றார் என்கிறாள் நம் ஒளவை. விநாயகப் பெருமான், தன்னுடைய திருவடிகளை, இந்தப் புவி மீது வைத்து , இந்த உலகம் எல்லாம் மாயை என்னும் சத்தியத்தை உணர்த்தி, உலக விஷயங்களில் ஈடுபட்டு வருத்தப் படாமல் இருக்கும் வழியை அனுகிருஹம் செய்தார் என்றும், தன்னுடைய கையிலே உள்ள கோடாரியால், எல்லா  விதமான இடர்களையும் களைந்து, தனக்கருள் புரிந்ததாகக் கூறுகின்றாள். அப்படி இடர்களை களைந்து, தன்னுடைய காதினிலே  கேட்க கேட்க தெவிட்டாத உபதேசம் செய்தார் விநாயகப் பெருமான் என்று சொல்கின்றாள் நம்  ஒளவை பாட்டி.

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் 

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் 


புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து 


முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 


எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! 

No comments:

Post a Comment