Monday, February 12, 2018
தத்வ தர்ஷனங்கள்
சைவம், வைணவம் இரண்டுமே ஒரே பரம்பொருளின் வழிபாட்டிற்கு நாம் வைத்த பெயர்கள். அதன் பெயரால் சண்டை போடுவது முட்டாள்தனம்.
ஆதி சங்கரர்,இராமானுஜர், மத்வர் மூவருமே அவதார புருஷர்கள். இறைவனின் அருளால் வேதங்களின் பொருளை நமக்கு சொன்னவர்கள்.
அத்துவைதம் - இரண்டற்ற தன்மை - பாலும் நீரும் போல பிரமத்துள் கலப்பது
(க்ஷீர நீர த்வாத்) இதனையே கைவல்யம் என்கின்றன உபநிஷத்துக்கள்.
விசிஷ்ட அத்துவைதம் - சிறப்பான அத்துவைதம் - லாஃஷா காஷ்ட த்வாத் - விறகு மீது அரக்கை போல - சச்சிதானந்தம் - அரக்கு , ஜீவன் - விறகு
துவைதம் - தில தண்டுல வத்த் - அரிசியும் எள்ளும் போல - இறைவனிடத்தில்
கலக்கவே முடியாது ஜீவனால். அரிசி - இறைவன், எள்ளு - ஜீவன்.
தர்ஷனங்கள் 3 - அத்துவைதம், விசிஷ்ட அத்துவைதம், துவைதம்.
மதங்கள் 6 - காணாபத்யம், கௌமாரம், சாக்தம்,சௌரம், வைணவம் , சைவம்.
ராமாஞ்சநேயர்களின் உரையாடல் - முக்திக உபநிஷத்
கிருஷ்ணார்ஜுனர்களின் உரையாடல் - பகவத் கீதை
அத்துவைதம் - உலகம் மாயை பிரம்மமே சத்தியம் மனம் ஆழ்ந்து விட்டால் ஆன்மாவே இருக்கும் - மனம் மாயை, ஆன்மா பிரமம்.
விசிஷ்ட அத்துவைதம் - ஜீவன்கள் (சேதனம்) ஒன்று, ஜடபொருள் (அசேதனம்)., இறைவன் ஒன்று(ஈஸ்வர) - ஆக 3 பேதங்கள். உலகம் உண்மை
துவைதம் - இறைவன், ஜீவன், ஜடப்பொருள் - ஒவ்வொருவரும் தனி தான் - ஆக மொத்தம் ஐந்து பேதங்கள்.
108 உபநிஷத்துக்கள் உள்ளன. அவற்றுள் மாண்டூக்ய உபநிஷத்தை படித்தாலே ஆன்ம ஞானம் பெறலாம். - இராமர் (முக்திக்கோபனிஷத்)
மாண்டூக்ய உபநிஷத்தை படித்து ஆன்ம ஞானம் பெறாவிடின், முதல் பாத்து உபநிஷத்துக்களை படித்தால் போதும் -இராமர் (முக்திக்கோபனிஷத்)
முதல் பத்து உபநிஷத்துக்களை படித்து ஞானம் பெறாவிடின்,32 உபநிஷத்துக்களை படிக்க வேண்டும் - இராமர் (முக்திக்கோபனிஷத்)
32 உபநிஷத்துக்களை படித்து ஞானம் பெறாவிடின் அனைத்து 108 உபநிஷத்துக்களையும் படிக்க வேண்டும். இராமர் (முக்திக்கோபனிஷத்)
ஓம்காரத்திற்கு மூன்று பாதங்கள் - அ, ஊ, ம் - அம்மூன்றயும் தாண்டி உள்ளது அமைதி. அதுவே பிரமம் - மாண்டூக்ய உபநிஷத்து
ஓம்காரத்தில் உள்ள அ - விழிப்பு நிலை, ஊ - தூக்க நிலை, ம் - ஆழ்தூக்க நிலை - அம்மூன்று நிலைகளுக்கும் சாட்சியாக இருக்கும் ஆத்மாவே பிரமம்.
ஓம்காரம் ஆத்மா. ஆத்மா இரண்டற்றது (அத்துவைதம்), சிவம் , - இதனை உணர்ந்தவன் ஆத்மாவில் ஒன்றென கலப்பான் - மாண்டூக்ய உபநிஷத்
தன்னுள் இருக்கும் அந்த பிரமத்தை, ஆன்மாவை உணர்வதே இந்த மனித பிறப்பான் பயன். சும்மா இருப்பதே சிவம்.
Subscribe to:
Posts (Atom)