Friday, January 31, 2020

என்னப்பனே நரசிங்கா

சிவனது லிங்கத்தில் என் சிங்கத்தை கண்டேனே!
சாளக்கிராமத்தில் அவன் திருமுகம் கண்டேனே!
நிற்பன நடப்பன ஊர்வன பறப்பன  அனைத்திலும்
என்னப்பன் நரசிங்கன் ஒளியாய் ஒளிர்கின்றான்!
என்சொல்வேன் நின் மஹிமை என்னப்பனே நரசிங்கா!

என்னகத்துள் நின்று என்னை ஆட்கொண்டு
என்னகங்காரம் மமதை அழித்து என்னை
நின்னடியானாய் ஆக்கி என்வினைகள் அகற்றி
நின் அகண்ட ஜோதியை எந்தனுக்குக்கு காட்டி
என்சொல்வேன் நின் மஹிமை என்னப்பனே நரசிங்கா!

தாணுவும் மாலும் அயனுமாய் உலகில் உள்ள அனைத்துமாய்
ஆன்மாவாய் பிருமமாய் உலகங்கள் மூன்றுமாய் ஈசுவரனாய் !
படைத்தும் அழித்தும் காத்தும் மறைத்தும் அருளியும்
பஞ்சப்பிரமங்களாய் நின்ற எனப்பனே நரசிங்கா!
நாயேனையும் ஆட்கொண்ட என்னப்பனே நரசிங்கா !

நின் பொற்கழல்கள் என் சென்னியில் வைத்தருளி
நாயேனையும் ஆட்கொண்டு நின்னாடியான் ஆக்கி
மறுமைக்கும் இம்மைக்கும் நன்மைகள் பல செய்தாய்!
நின்னை அல்லால் வேறு தெய்வம் உண்டோ இவ்வுலகில்?
என்சொல்வேன் நின் மஹிமை என்னப்பனே நரசிங்கா!

No comments:

Post a Comment