கற்பகத் தருவும் காமதேனுவும் வேண்டுமென்றேனே
பற்பவனத்தில் உரை அன்னை காமாட்சி இடத்திலே
அற்ப சுகங்கள் அன்றி நிரந்தர வீடுபேறும் இவ்வுலகில்
சொற்பமல்லா செல்வங்கள் நிறைந்திட எந்தாயும்
தானே எம்குலத்தில் உதித்தாளோ எந்தமக்கை உருவினிலே!
பொற்கொடியாள் எந்தமக்கை தானிருக்க இவ்வுலகில்
கற்பகத்தருவும் காமதேனுவும் வேண்டேனே!
என்தமக்கை மணிவயிற்றில் வந்துதித்த மணிவண்ணன்
குட்டிக்கண்ணன் உடனிருக்க இனியொன்றும் வேண்டேனே!
பற்பமுகத்தாள் எந்தமக்கை பொறுமையில் பூமிஒத்தாள்
எந்தமக்கை உடனிருக்க இனியொன்றும் வேண்டேனே!
முப்பிறப்பின் நற்பயனோ இப்பிறப்பில் செய்தவமோ
எப்ப்பிறப்பிலும் இனி எனக்கு தாயாய் தமக்கையாய்
எந்தமக்கை உமையே வாய்த்திட வேண்டுவனே!
என்ன தவம் செய்தேனோ! என்ன தவம் செய்தேனோ!
No comments:
Post a Comment