என்னுயிர் நண்பன் நோயுற்றான் என்றறிந்து மாளாத்துயர் கொண்டேன்! என்நண்பனைக் காத்தது போல் ஏழுலகம் காத்து என்னையும் காத்தருள வேண்டுமே !
என்னப்பனே நரசிங்கா! என்சொல்வேன் நின் பெருமை!
என்னாவி இந்திரியமும் என்னகங்காரம் மனமும் ஐம்பொரியும் நினக்கே அளித்திட்டேனே !
என்னப்பனே நரசிங்கா! என்சொல்வேன் நின் பெருமை!
அரியாய் மனிதனாய் அங்கிங்கிலாதபடி எங்குமாய் ஏழுலகமாய்பத்தர்தம் மனதுள் நின்று ஆள்பவனாய் என்னையும் ஆட்கொண்ட
என்னப்பனே நரசிங்கா! என்சொல்வேன் நின் பெருமை!