ஒண்டி மா நகர் வாழும் பெரிய மாரியம்மன்
ஒண்டிப்புதூர் என்னும் ஊரிலே பிறந்து வளரந்தபடியானாலே, எங்கள் ஊரிலே உள்ள கிராம தேவதைகள் மற்றும் உள்ள தெய்வங்களை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற அவாவோடு இந்த பதிப்பை எழுதுகிற்ன்றேன்.
ஒண்டி மா நகர் என்ற பயிர் - பல தரப்பட்ட மக்கள் உள்ள ஊர். தனிப்பட்ட அக்ராஹாரம் ஒன்றும் கிடையாது. செங்கோடம்மன் , சௌடம்மான், என்று பல கோயில்கள் உள்ளன. ஆனாலும் எங்கள் ஊருக்கே அன்னை, காவல் தெய்வம், எங்கள் பெரிய மாரியம்மன். மிகவும் சக்தி வாய்ந்தவள். ஒவ்வொரு ஆண்டும் , சித்திரை மாதம் (மழை வேண்டி) திருவிழா நடக்கும். கோயில் பிரகாரத்தில் உள்ள காளி அம்மனுக்கு, பலிகள் கொடுக்கப் பெரும் - அதன் பிறகு மஞ்சள் நீராட்டு. ஊரே திரண்டு அன்னைக்கு மாவிளக்கு எடுப்பார்கள். ஒரே கோலாகலமாக இருக்கும். முளைப்பாரி, தீ சட்டி, சக்தி கரகம் என்று ஒரே அமர்க்களமாக இருக்கும்.
அனைவர் உள்ளத்துள்ளும் நிலைத்து நின்று , ஒரு காவல் தெய்வமாகவும், அம்மை போன்ற நோக்கல் வராமல் காக்கும் மருத்துவச்சியாகவும், பர தேவதையின் அம்சமாகவும், ஜமதக்கினி முனிவரின் பத்தினி ரேணுகாவின் அம்சமாக விளங்கும் எங்கள் பெரிய மாரியம்மனுக்கு என்னுடைய ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்.
மாரியம்மன் தாலாட்டு பாடலை, கேட்டால் அன்னையின் திருவுருவம் கண் முன்னே வந்து நிற்கும். என அழகு, என்ன கனிவு, என்ன வாத்சல்யம்? அப்பப்பா...
இருகூர் நீலகண்டேஸ்வரன்
நடந்து சென்றால் ஒரு முப்பது முதல் நாற்பது நிமிடங்கள். அழகான ஊருப் பாதையில் செல்ல வேண்டும். தோட்டங்கள், குயவன் கடை, எல்லாம் தண்டி சென்றால் கோயில் கோபுரமும் , பிரதான துவாரமும் ( வாசல்) தெறியும். பரமேஸ்வரன் கோயிலை அடைந்து விட்டோம் என்று ஒரே பேரானந்தம். சுயம்புவாக தோன்றிய ஈஸ்வரன் - பேரூர் பட்டீஸ்வரன் , வெள்ளியங்கிரி ஆண்டவன் , இருகூர் நீலகண்டேஸ்வரன் ஆகிய மூவருக்கும் ஒரே அளவு லிங்கம். பாண்டியனும் சோழனும் வந்த படியினால் - இன்ஜி இருந்து சிவன் மற்றும் இரண்டு அம்பாள் - பார்வதி சமேத நீலகண்டேஸ்வரர் மற்றும் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர். மிகவும் அழகான ஆலயம். திருநீற்று பதிகம், திருமுறைகள் கேட்கும் பொழுது, நீலகண்டரையே நினைக்க தோணும். வேறு புதியதாக எத்துணை ஆலயங்கள் வந்தாலும் எங்கள் ஊரு சிவன் என்றால் அந்த மகிமையே தனி தான். விசாளாஸ்க்ஹ்ய அன்னை, பதினெட்டு மூலங்களையும் அணிந்து கொண்டு, சதாசிவ பதிவ்ருத்தியாக காட்சி அளிப்பாள். அவளுடைய கருணைக்கு எல்லையே இல்லை.
தமிழ் கடவுள் முருகன், வடக்கிருந்த தக்ஷிணாமூர்த்தி, துர்கை, விநாயகர் , நவகிருஹங்கள் என்று பரிபூரணமான கோயில். நாக லிங்க மரம், வன்னி மரம், அரளி செடி, தீர்த்த கிணறு என்று இயற்கை எழில் வாய்ந்த திருக்கோயில்.
சிவா சொத்து குல நாசம் - என்று கோயிலில் இருந்து பிரசாத பூக்கள், திருநீறு தவிர வேறு ஒன்றுமே கொண்டு வரக்கூடாது என்று சண்டிகேஸ்வரர் இடத்தில கணக்கு காட்டி விட்டு திரும்பும் அந்த ஆனந்தமே ஆனந்தம்!!
ஹரோம் ஹரோம் ஹாரா!
அந்த ஆலய பிராங்கத்திலே, கரி வரதராஜ பெருமாளும் உள்ளார். மிகவும் எழில் மிகுந்த பெருமாள்! ஸ்ரீதேவி பௌதேவி சமேதர் - கருடன், ஆஞ்சநேயர் என்று எல்லோரும் இருக்கின்றனர்! சனிக்கிழமை என்றால் தருளாசி பிரசாதம் இல்லாமல் இருக்காது! மார்கழி மாதங்களில் திருப்பாவை உத்சவம்! அழகான சந்நிதி!
வேதபுரி அக்கிரஹாரம் என்று அக்னிஹோத்ரிகள் நிறைந்த அக்கிரஹாரம் - எங்கள் வீட்டிலிருந்து சுமார் முப்பது நிமிடனால் சைக்கிள் சவாரி. ஆடி மாதங்களில் சாயந்தரம் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், மற்றும் லட்சுமி ஸஹஸ்ரநாம பாராயணம். பகல் பொழுதாக இருந்தால் ஸ்ரீ சூக்தம், புருஷ சூக்தம் முதலியவை இருக்கும். பிரம்மோத்சவம், நவராத்ரி என்றால் அங்கு அக்ராஹாரத்து மாமிகள் வந்து பாட்டுகள் பாடி அசத்தி விடுவார்கள். உலகளந்த பெருமாள் என்ற படியினால் எட்டு கைகள், ஒருகால் மேலே, ஒரு கால் கீழே - மிகவும் எழில் மிகுந்த பெருமாள். அழகான அக்ராஹாரம், (ஏழு வீதிகள்) அதற்கு நடுநாயகமாக பெருமாள். பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்ராஹாரம் மற்றும் கோயில்.