Monday, April 3, 2017

தமிழ்த் தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை அவர்கள் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 4- 1855)



நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே

கடல், ஆறு போன்றவற்றை தன மீது கொண்டிருக்கும் நில மங்கை மீது, பாரத கண்டத்தில், - மிகவும் சிறப்பு வாய்ந்த தமிழ் நாட்டில் (திராவிட நாடு) , அந்த தமிழ் நாட்டில் அழகான சின்ன நெற்றியும், அதன் மீது மிகவம் வாசனை பொருந்திய திலகமும் தரித்து நம் தமிழன்னை விளங்குகின்றாள். அந்த தமிழ் (திலகம்) மனமானது நன்கு திசைகளிலும் பரவி இடுந்தது என்கிறார் ஆசிரியர். இங்கு திராவிட நாடு என்பது - தென் குமாரி முத்த வாடா வேங்கடம் வரை விளங்கிய தமிழ் நாட்டை குறிக்கும் பெயர். (வட மொழியில் ஆந்திர தேசம், கேரள தேசம், திராவிட தேசம், கன்னட அல்லது கர்நாடக தேசம் என்று தனி தனியே பெயர்கள்  இருந்தன. தெற்கே உள்ள எல்லாமே திராவிடம் என்பது பிற்காலத்தில்  சிலர் கட்டிய கதை).

இங்கு தமிழ் தாயின் பெருமைகளை பாடுகின்றார் ஆசிரியர். வேதாந்தத்தின் உச்சிக்கே சென்றெட்டு விட்டார். வேதாந்தத்தில் ப்ரம்ம என்பது நிர்குணமானது - அந்த ப்ரம்ம மாயையின் சேர்க்கையால் , இந்த உலகம், போன்றவற்றை உண்டாக்குகின்றது. ஆனாலும் தன்னுடைய அந்த (நிர்குணமான) தன்மை மாறாமல் இருக்கின்றது.  அதே போலத்தான் தமிழ் தாயும் - கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் போன்ற மொழிகளை எல்லாம் தோற்றுவித்தாலும், தன்னிலை  மாறாமல், இளமையான கன்னித் தமிழாகவே இருக்கின்றாள். அப்படி இருக்கும் தமிழ் தாயின் , இளமையைக் கண்டு வியப்புற்று , தன்னிலை மறந்து வாழ்த்துகின்றார்   பாடலாசிரியர்.

நம் பகுத்தறிவு சிங்கங்கள் இந்தப் பாடலில் சில வரிகளை எடுத்து விட்டன. ஆனால் அதையும் சேர்த்து பாடினால் தன நம் தமிழுக்கு பெருமை அதிகம். பேசும் மொழி, வாழும் நாடு எல்லாமே அன்னையின் வடிவம்.

இப்படி நம் தமிழ் தாயை பாடி அனுபவித்த ஆசிரியருக்கு ஒரு  நன்றி சொல்ல நாம் எல்லோரும் கடமை பட்டு இருக்கின்றோம்.

No comments:

Post a Comment