குறள் 241:
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
பரிமேலழகர் உரை:
[அஃதாவது, தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை. இல்லறத்திற்கு அன்புடைமைபோல இது துறவறத்திற்குச் சிறந்தமையின் முன் கூறப்பட்டது.)
செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் - செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம், பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள - அஃது ஒழிந்த பொருளான் வரும்செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான். ( அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம், ஏனை நீசர்கண்ணும் உளவாம்பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.).
விவேகசூடா³மணி
து³ர்லப⁴ம் த்ரயமேவைதத்³தே³வாநுக்³ரஹஹேதுகம் ।
மநுஷ்யத்வம் முமுக்ஷுத்வம் மஹாபுருஷஸம்ஶ்ரய:
இறை அருளால் மட்டுமே கிடைக்கப்பெறும் விடயங்கள் மூன்று:
மனிதராய் பிறத்தல், வீடு பேறு (ஆன்ம அறிவு) பெரும் பேரவா,
நல்ல ஆசானை சரண் புகுதல் (மஹா புருஷ ஆஸ்ரயம்)
ஆதி சங்கரர், முமுக்ஷுத்வம் என்னும் வீடு பேறு பெரும் ஆவல், இறைவன் அருளலால் மட்டுமே கிடைக்கும் என்கிறார். செல்வமும், இன்பமும் (அர்த்த காமங்கள்) - இறை அருள் இல்லாத மக்களிடம் கூட இருப்பதால் , அருட் செல்வமே அனைத்திலும் உயர்ந்தது என்கிறார் திருவள்ளுவர்.
இத்துணை, நுண்ணிய கருத்துக்களை கொண்ட நம் திருக்குறளை நாம் படிக்க விட்டால் - வேற்று மதத்தினர் , அது தங்களுடையது என்று போயாக சொந்தம் கொண்டாடுவார்கள்.
இதனை கிருத்துவர், சமணர் போன்றோர் தங்கள் நூல் என்று கூறுகின்ற பொழுதிலும் வைதிக மதத்தின் கோட்பாடுகளை பறை சாற்றும் ஒரு நுண்ணிய நூல் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இனி இறைமறுப்பாளர்களும், பொய்யான திராவிடர்களும், இதனை சொந்தம் கொண்டாடும் பொழுது தக்க பதிலடி கொடுக்க வேண்டும் நாம்.
No comments:
Post a Comment