நாரணன் நான்முகன் வசிட்டன் சக்தி பராசரன்
வேத வியாசன் சுகன் தானும்
மாண்டூக்ய காரிகை செய்த கௌடபாதன் தானும்
நர்மதைக்கரையில் தவமிருந்த கோவிந்த யோகியும்
நான் மறையின் விழுப்பொருளாம் அத்துவிதம் எடுத்துரைத்த
நம் சங்கரன் செய்த உரைக்கு வார்த்திகை தந்த நம் சுரேஸ்வரன்
காஞ்சியில் நம்மை ஆளும் நம் ஆசான் சந்திரசேகரன் !
ஜெயேந்திரன் விஜயேந்திரன் திருவடிகளை நம் சிரசில் சூடுவோமே!
அத்துவிதம் எனும் அமுதம் எடுத்துரைத்து வடவாலின் கீழிருந்த
உலகாசிரியன் திருத்தாள்கள் போற்றியே!
வேதோபநிடத சாரத்தை பார்த்தனுக்கு எடுத்துரைத்த நம்மாசான்
கண்ணன் திருப்பாதங்கள் போற்றியே!
நால்வேதம் சாத்திரங்கள் தன் சாரத்தை கீதையாய் மருளும் இருளும்
அழித்து ஆன்ம அறிவை போதித்த கண்ணன் திருத்தாள் போற்றியே!
வேதத்தின் சாரமாம் பிரம சூத்திரங்கள் எடுத்துரைத்து கலியில்
வேதாந்தம் நிறுவிய நம் வியாசன் திருத்தாள் போற்றியே!
கரும மார்க்கத்தை கண்டித்து வேதமார்கத்தை வளர்த்து இப்பாரில்
அத்துவிதம் நிறுவிய நம்மாசான் சங்கரன் தாள் வாழியே!
ஆதி சங்கரனின் மறுபிறவி நம் சந்திரசேகர முனியின் திருத்தாள்கள் நம் சென்னியதே!
No comments:
Post a Comment