Monday, December 10, 2018
பாரதியின் பெருமைகள் - வேதாந்தம் - III
அகம் ப்ரம்ம அஸ்மி என்னும் வேத வாக்கியத்தை தெள்ளு தமிழில் பாடிய பெருமை நம் பாரதிக்கே உண்டு. அத்துவிதம், பூரண ஞானம் என்றெல்லாம் - அனைத்தையுமே தமிழில் பாடலாய் வடித்த பெருந்தகை நம் பாரதி.
நம்முள் இருக்கும் தகராகாசத்தில் (ஞான வானத்தில்) ஒளிரும் சுடரே ஆன்மா என்று உபநிடதங்கள் கூறும் பொருளை இங்கு வடித்துள்ளார். ஆன்ம அறிவை அறிந்த புண்ணியங்களுக்கு , அணைத்து கலைகளும் மிக சுலபம் என்பதற்கு நம் பாரதியே ஒரு பெரிய உதாரணம்.
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன்நான்
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்கு முதற்சோதிநான்.
பாரதியின் பெருமைகள் - II வேதாந்தம்
திருவள்ளுவரும் உபநிடதங்களும் கூறுவதை போலவே, நம் பாரதியும் மாயை என்ற மருளை இகழ்ந்து கண்டனம் செய்து மிக லக்காக பாடுகின்றார். அதாவது பாரமார்த்திகத்தில் , மாயை ஒழிந்து பிரமம் மாட்டும் நிற்கும், வியவஹாரிகத்தில் , மாயை என்பது காமம், குரோதம் போன்றவற்றை தூண்டும் தன்மை உள்ளது - மனதின் கண் புகுந்து என்னும் பொருளில் இங்கு பாடி இருக்கின்றார் .
உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ
மாயையே -- மனத்
திண்மையுள் ளாரைநீ செய்வது மொன்றுண்டோ --
மாயையே.
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே -- நீ
சித்தத் தெளிவெனும் தீயின்முன் நிற்பாயோ --
மாயையே.
பாரதியின் பெருமைகள்...
ஷிவாதி ஷண்மதங்களை போற்றி பாடிய பெருமை பாரதிக்கே உண்டு. சுதந்திர போராட்டம், பெண்ணுரிமை என்று அவர் பாடாத தலைப்பே இல்லை. அவருடைய சூரிய வணக்கம் இதோ:
சுருதி யின்கண் முனிவரும் பின்னே
தூமொ ழிப்புல வோர்பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமையென் றேத்தும்
பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்:
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே,
பானுவே, பொன்செய் பேரொளித் திரளே,
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே
வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாத வார்கடலின்னொலி யோடு
நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்;
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
கடுகி யோடும் கதிரினம் பாடி
ஆத வா, நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
சுருதி யின்கண் முனிவரும் பின்னே
தூமொ ழிப்புல வோர்பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமையென் றேத்தும்
பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்:
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே,
பானுவே, பொன்செய் பேரொளித் திரளே,
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே
வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாத வார்கடலின்னொலி யோடு
நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்;
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
கடுகி யோடும் கதிரினம் பாடி
ஆத வா, நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.
Thursday, December 6, 2018
உணரும் நாள் எந்நாளோ..........
மருள் நீங்கி இருளும் நீங்கி மெய்யுணரும் நாள் எந்நாளோ!
எனச்சான் திருவடியை என் சிரசில் சூடும் நாள் எந்நாளோ!
மாயாதீதமாகி மெய்யுணர்வில் திளைக்கும் நாள் எந்நாளோ!
ஒற்றைக்கோல் மரசொம்பும் தரிக்கும் நாள் எந்நாளோ!
அஹம் பிரம்ம அஸ்மி என்ற வாக்கியத்தை உணரும் நாள் எந்நாளோ!
பரிவிராசகனாகி பணிவுடனே திரியும் நாள் எந்நாளோ!
பாவ புண்ணியங்கள் விலகி போதம் வருநாள் எந்நாளோ!
கோடி சூரிய பிரகாசத்துடன் ஒளிரும் இந்த ஆன்மாவை
நாடி உணரும் நாள் எந்நாளோ!
என்னாசான் திருவருளால் எனை உணர்ந்து ஆன்மாவில்
இருந்து இன்பம் பருகும் நாள் எந்நாளோ!

Monday, December 3, 2018
நரசிம்ம தாபினி என்னும் பனுவல் ..
நான்மறையோர் போற்றும் நூல் நரசிம்மன் பெருமைகள் பேசும் நூல்
நானிலத்தில் நரசிம்ம தாபினி என்னும் பனுவல் !
நான்முகனார் தேவர்க்கு அருளிய பனுவல் அருமறையின் முடிவில்
நாளும் முனிவர் பேணும் நூல் நரசிம்ம தாபினி என்னும் நூலே!
தானே அரியாய் தானே அரனாய் நின்ற நரசிம்மன் பெருமைகள்
உரைத்திடும் பனுவல் நரசிம்ம தாபினி என்னும் நூலே!
நான்மறையின் முடிவில் உண்டாம் வீடு பேற்றின் உபநிடதங்கள்
மாண்டூக்யத்தை தன்னுள் கொண்ட நரசிம்ம தாபினி என்னும் பனுவல்!
கோனென்று நின்ற நரசிம்மன் ஆன்மாவின் அறிவை அருளி நம்மை
பிராமவாதியாய் செய்திடும் பனுவல் நரசிம்ம தாபினி என்னும் நூலே!
நான்மறையில் சிறந்ததொரு அதர்வண வேதத்தில் அமைந்த
நன்னூலாம் நரசிம்மதாபினி என்னும் பனுவல்!
நம்மாசான் அருளினாலே நரசிம்மதாபினி என்னும் பனுவல் தன்
பெருமை இயம்பினேன்! நன்மதியீர் கேட்டு மகிழ்வீரே!
நரசிம்மன் அருளினாலே! நரசிம்ம தாபினியை கற்றிடும் பத்தர்கள்
ஆன்மாவின் அறிவு பெற்று என்றும் பிரமவாதியாய் திகழ்வரே !
Sunday, December 2, 2018
அத்துவித ஆச்சார்ய பரம்பரை
நாரணன் நான்முகன் வசிட்டன் சக்தி பராசரன்
வேத வியாசன் சுகன் தானும்
மாண்டூக்ய காரிகை செய்த கௌடபாதன் தானும்
நர்மதைக்கரையில் தவமிருந்த கோவிந்த யோகியும்
நான் மறையின் விழுப்பொருளாம் அத்துவிதம் எடுத்துரைத்த
நம் சங்கரன் செய்த உரைக்கு வார்த்திகை தந்த நம் சுரேஸ்வரன்
காஞ்சியில் நம்மை ஆளும் நம் ஆசான் சந்திரசேகரன் !
ஜெயேந்திரன் விஜயேந்திரன் திருவடிகளை நம் சிரசில் சூடுவோமே!
அத்துவிதம் எனும் அமுதம் எடுத்துரைத்து வடவாலின் கீழிருந்த
உலகாசிரியன் திருத்தாள்கள் போற்றியே!
வேதோபநிடத சாரத்தை பார்த்தனுக்கு எடுத்துரைத்த நம்மாசான்
கண்ணன் திருப்பாதங்கள் போற்றியே!
நால்வேதம் சாத்திரங்கள் தன் சாரத்தை கீதையாய் மருளும் இருளும்
அழித்து ஆன்ம அறிவை போதித்த கண்ணன் திருத்தாள் போற்றியே!
வேதத்தின் சாரமாம் பிரம சூத்திரங்கள் எடுத்துரைத்து கலியில்
வேதாந்தம் நிறுவிய நம் வியாசன் திருத்தாள் போற்றியே!
கரும மார்க்கத்தை கண்டித்து வேதமார்கத்தை வளர்த்து இப்பாரில்
அத்துவிதம் நிறுவிய நம்மாசான் சங்கரன் தாள் வாழியே!
ஆதி சங்கரனின் மறுபிறவி நம் சந்திரசேகர முனியின் திருத்தாள்கள் நம் சென்னியதே!

Subscribe to:
Posts (Atom)