நாரணன் நான்முகன் வசிட்டன் சக்தி பராசரன்
வேத வியாசன் சுகன் தானும்
மாண்டூக்ய காரிகை செய்த கௌடபாதன் தானும்
நர்மதைக்கரையில் தவமிருந்த கோவிந்த யோகியும்
நான் மறையின் விழுப்பொருளாம் அத்துவிதம் எடுத்துரைத்த
நம் சங்கரன் செய்த உரைக்கு வார்த்திகை தந்த நம் சுரேஸ்வரன்
காஞ்சியில் நம்மை ஆளும் நம் ஆசான் சந்திரசேகரன் !
ஜெயேந்திரன் விஜயேந்திரன் திருவடிகளை நம் சிரசில் சூடுவோமே!
அத்துவிதம் எனும் அமுதம் எடுத்துரைத்து வடவாலின் கீழிருந்த
உலகாசிரியன் திருத்தாள்கள் போற்றியே!
வேதோபநிடத சாரத்தை பார்த்தனுக்கு எடுத்துரைத்த நம்மாசான்
கண்ணன் திருப்பாதங்கள் போற்றியே!
நால்வேதம் சாத்திரங்கள் தன் சாரத்தை கீதையாய் மருளும் இருளும்
அழித்து ஆன்ம அறிவை போதித்த கண்ணன் திருத்தாள் போற்றியே!
வேதத்தின் சாரமாம் பிரம சூத்திரங்கள் எடுத்துரைத்து கலியில்
வேதாந்தம் நிறுவிய நம் வியாசன் திருத்தாள் போற்றியே!
கரும மார்க்கத்தை கண்டித்து வேதமார்கத்தை வளர்த்து இப்பாரில்
அத்துவிதம் நிறுவிய நம்மாசான் சங்கரன் தாள் வாழியே!
ஆதி சங்கரனின் மறுபிறவி நம் சந்திரசேகர முனியின் திருத்தாள்கள் நம் சென்னியதே!
Showing posts with label AdiShankara. Show all posts
Showing posts with label AdiShankara. Show all posts
Sunday, December 2, 2018
Saturday, August 18, 2018
மாயை பற்றி சொன்ன எங்கள் சங்கரன் ...
ஒரே புருடன் ஆனவனை அரியும் அரனும் ஆக்கினாய் !
இறைவனுடல் தன்னில் தோன்றி வாழுகின்ற மானிடரை
சாதி பேதம் செய்து நீயும் பலவாக பிரித்தனை!
கற்றுணர்ந்த மானிடரை காமத்தாலே மாக்களாக்கி
ஜாலங்களை செய்திடுவாய் ! என் சொல்வேன் மாயையே!
மாயை பற்றி சொன்ன எங்கள் சங்கரன் தாள் வாழியே!
அளவில்லா பேரானந்த வடிவான என்னகத்தில் ஜீவபேதம் சமைத்தனை !
கற்றுணர்ந்த பெரியோர்களை நாற்கால் மிருகங்களாய் ஆக்கினை !
பேரானந்த வடிவான ஆன்மாவை ஐம்பூதம் நிறை உடலாக எண்ண செய்தனை !
நிஜபோத வடிவான எம்மை வருண சாதிகளாகி பிரித்தானை!
பிளவு படா பிரமத்தை அறியும் அறனும் ஆக்கினை!
மாயையே ! என்சொல்வேன் உன் பராபவம்!
மாயையை பற்றி ஐந்து பாடல்கள் பாடிய எங்கள் முதலாம் சங்கரன் வாழியவே!
இறைவனுடல் தன்னில் தோன்றி வாழுகின்ற மானிடரை
சாதி பேதம் செய்து நீயும் பலவாக பிரித்தனை!
கற்றுணர்ந்த மானிடரை காமத்தாலே மாக்களாக்கி
ஜாலங்களை செய்திடுவாய் ! என் சொல்வேன் மாயையே!
மாயை பற்றி சொன்ன எங்கள் சங்கரன் தாள் வாழியே!
அளவில்லா பேரானந்த வடிவான என்னகத்தில் ஜீவபேதம் சமைத்தனை !
கற்றுணர்ந்த பெரியோர்களை நாற்கால் மிருகங்களாய் ஆக்கினை !
பேரானந்த வடிவான ஆன்மாவை ஐம்பூதம் நிறை உடலாக எண்ண செய்தனை !
நிஜபோத வடிவான எம்மை வருண சாதிகளாகி பிரித்தானை!
பிளவு படா பிரமத்தை அறியும் அறனும் ஆக்கினை!
மாயையே ! என்சொல்வேன் உன் பராபவம்!
மாயையை பற்றி ஐந்து பாடல்கள் பாடிய எங்கள் முதலாம் சங்கரன் வாழியவே!
Sunday, April 29, 2018
முக்திகோபநிஷத்தில் ராமர் உபதேசிக்கும் சாலோக்கியம், சாரூப்பியம், சாமீப்பியம், சாயுஜ்ஜியம் போன்ற முக்திகள்...
சாலோக்கியம் - இறைவனுடன் ஒரே உலகத்தில் வசிப்பது, சாரூப்பியம் - இறைவனுடைய அதே ரூபத்தை தரிப்பது, சாமீப்பியம் - இறைவனுடன் அருகாமையில் வசிப்பது, சாயுஜ்யம் - இறைவன் திருவைத்யாய் அடைதல்
கைவல்யமுக்திரேகைவ பரமார்தி²கரூபிணீ ।
து³ராசாரரதோ வாபி மந்நாமப⁴ஜநாத்கபே ॥ 18॥
ஸாலோக்யமுக்திமாப்நோதி ந து லோகாந்தராதி³கம் ।
காஶ்யாம் து ப்³ரஹ்மநாலேঽஸ்மிந்ம்ருʼதோ மத்தாரமாப்நுயாத் ॥ 19॥
கைவல்ய முக்தியே மிக சிறந்தது. ஆனால் தீய ஒழுக்கம் உடையவர்கள் கூட, என் நாமத்தை வழிபடுவதால் சாலோக்கியம் போன்ற முக்தியை அடைகின்றார்கள். காசியில் ப்ராம்மணாளம் என்னும் இடத்தில மரிப்பவர்கள், தாமே ராம தாரக மந்திரத்தை பெற்று என்னிடத்தில் வந்து அடைகின்றார்கள் என்கிறார் ராமர்.
புநராவ்ருʼத்திரஹிதாம் முக்திம் ப்ராப்நோதி மாநவ: ।
யத்ர குத்ராபி வா காஶ்யாம் மரணே ஸ மஹேஶ்வர: ॥ 20॥
காசியில் அங்கு இங்கு என்று அனைத்து இடங்களிலும் மரிப்பவர்களுக்கு , சாலோக்கியம் போன்ற முக்தியை அளிக்கின்றார் மகேஸ்வரன். அதாவது ஜனன மரணங்களுக்கு அப்பாற்பட்ட சாலோக்கியாதி நால்வகை முக்தியை அளிக்கின்றார் மகேஸ்வரன்.
ஜந்தோர்த³க்ஷிணகர்ணே து மத்தாரம் ஸமுபாதி³ஶேத் ।
நிர்தூ⁴தாஶேஷபாபௌகோ⁴ மத்ஸாரூப்யம் ப⁴ஜத்யயம் ॥ 21॥
உயிரினங்களின் வலது காதுகளில் ராம தாரக மந்திரத்தை ஓதி, அவர்கள் பாபங்களை அழிக்கின்றார். அதனால் அவர்கள் என்னைப்போலவே உருவம் - சாரூப்பியம் பெற்று, என்னிடத்தில் அடைகின்றனர் என்கிறார் ராமர்.
ஸைவ ஸாலோக்யஸாரூப்யமுக்திரத்யபி⁴தீ⁴யதே ।
ஸதா³சாரரதோ பூ⁴த்வா த்³விஜோ நித்யமநந்யதீ:⁴ ॥ 22॥
இதுவே சாரூப்பியம், சாலோக்கியம் என்ற இருவகை முக்திகள் ஆகும். பிறப்பொழுக்கத்தை கடைபிடிக்கும் துவிஜர்கள் , என்னுடைய அருகாமையை அடைகின்றார்கள்.
மயி ஸர்வாத்மகோ பா⁴வோ மத்ஸாமீப்யம் ப⁴ஜத்யயம் ।
ஸைவ ஸாலோக்யஸாரூப்யஸாமீப்யா முக்திரிஷ்யதே ॥ 23 ||
எந்தனை யார் ஒருவர் அனைத்திலும் உறைபவனாகி , எப்பொழுதும் உபாசிக்கின்றார்களோ, அவர்கள் என்னுடைய சாயுஜ்யத்தை அடைகின்றார்கள். அதே போல சாலோக்கியம், சாரூப்பியம், சாமீப்பியம், சாயுஜ்ஜியம் போன்ற நால்வகை முத்திகளும் எந்தனை வணங்குவதால் அடைய பெரும்.
கு³ரூபதி³ஷ்டமார்கே³ண த்⁴யாயந்மத்³கு³ணமவ்யயம் ।
மத்ஸாயுஜ்யம் த்³விஜ: ஸம்யக்³ப⁴ஜேத்³ப்⁴ரமரகீடவத் ॥ 24॥
ஸைவ ஸாயுஜ்யமுக்தி: ஸ்யாத்³ப்³ரஹ்மாநந்த³கரீ ஶிவா ।
சதுர்விதா⁴ து யா முக்திர்மது³பாஸநயா ப⁴வேத் ॥ 25॥
குருவுபதேசத்தினால் மட்டும் ஒருவன் தியானம் போன்ற வழிமுறைகளால், எவன் எந்தனை உபாசிக்கின்றானோ, அவன் எப்படி ஒரு புழுவானது தேனியாக மாறுகின்றதோ அப்படி என்னுடைய சாயுஜ்யத்தை அடைகின்றான். அந்த சாயுஜ்யம் என்னும் முக்தியே ப்ரம்மானந்தத்தை பிறப்பிக்க கூடியது. அதே போல , சாயுஜ்யம் , சாலோக்கியம், சாமீப்பியம், சாரூப்பியம் என்ற நால் வகை முதிகளையும் அவன் அடைகின்றான்.
Tuesday, April 24, 2018
கீதாச்சார்யன் போதிக்கும் ஞானமும், மாயையும்.....
अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन्।
प्रकृतिं स्वामधिष्ठाय संभवाम्यात्ममायया।।4.6।।
।4.6।। अजोऽपि जन्मरहितोऽपि सन् तथा अव्ययात्मा अक्षीणज्ञानशक्तिस्वभावोऽपि सन् तथा भूतानां ब्रह्मादिस्तम्बपर्यन्तानाम् ईश्वरः ईशनशीलोऽपि सन् प्रकृतिं स्वां मम वैष्णवीं मायां त्रिगुणात्मिकाम् यस्या वशे सर्वं जगत् वर्तते यया मोहितं सत् स्वमात्मानं वासुदेवं न जानाति तां प्रकृतिं स्वाम् अधिष्ठाय वशीकृत्य संभवामि देहवानिव भवामि जात इव आत्ममायया आत्मनः मायया न परमार्थतो लोकवत्।।तच्च जन्म कदा किमर्थं च इत्युच्यते
பிறப்பு அற்றவனாகவும், எப்பொழுதுமே தூய்மையாக இருக்கும் தன்மை உடையனனாகவும், குறைவற்ற, நிலையான சக்தியை உடையவனாகவும்,
ஆத்ம ஸ்வரூபனாகவும், படைப்புகளுக்கு அனைத்திற்கும் ஈஸ்வரனாகவும், இருக்கும் கண்ணன் மாறுதல்களுக்கு அப்பாலாகி இருக்கின்றான். முக்குணங்கள் படைத்தவளாகிய ப்ரக்ருதியியாக இருக்கும் தன் மாயையால், தன்னுடைய சொந்த விருப்பதாலும் பல பிரிவைகளை, - நாம, ரூபங்களை எடுக்கிறான் கண்ணன். ஸர்வவ்யாபியாக , சர்வாந்தர்யாமியாக இருப்பதே கண்ணனின் நிஜ ஸ்வரூபம் . ஆனால், மாயைக்கு உட்பட்டு பல பிறவிகள் (விபவங்கள்) , நாம ரூபங்களை தரிக்கிறான் கண்ணன்.
दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया।
मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते।।7.14।।
।7.14।। दैवी देवस्य मम ईश्वरस्य विष्णोः स्वभावभूता हि यस्मात् एषा यथोक्ता गुणमयी मम माया दुरत्यया दुःखेन अत्ययः अतिक्रमणं यस्याः सा दुरत्यया। तत्र एवं सति सर्वधर्मान् परित्यज्य मामेव मायाविनं स्वात्मभूतं सर्वात्मना ये प्रपद्यन्ते ते मायाम् एतां सर्वभूतमोहिनीं तरन्ति अतिक्रामन्ति ते संसारबन्धनात् मुच्यन्ते इत्यर्थः।।यदि त्वां प्रपन्नाः मायामेतां तरन्ति कस्मात् त्वामेव सर्वे न प्रपद्यन्ते इत्युच्यते
கண்ணன் இங்கு சொல்லும் பொழுது, தன்னுடையதான மாயை முக்குணங்கள் உண்டாயவள். அதாவது , சத்வம், ராஜஸ்ஸு, தமஸ்ஸு என்ற குக்குணங்களும், ப்ரக்ருதி ரூபிணியாக இருப்பவள். எனவே, சாமான்ய ஜீவர்களை மோஹிப்பித்து, அவள் அந்த ஜீவர்களுடைய ஆத்ம ஸ்வரூபத்தை மறைத்து ஜாலம் காட்டுகின்றாள். கண்ணனிடத்தில், மற்ற அனைத்து தர்மங்களையும் ஒழிந்து, எவன் சரணாகதி செய்கின்றானோ, அவனே அந்த
மாயை கடந்து பூர்ண ஞானத்தை அடைகின்றான். அதன் பிறகு, விவேகத்தால் ஆத்மா எது, ஆத்ம எது இல்லை(அனாத்மா) என்று அறிந்து பூர்ண ஞானத்தையும், ஜீவன் முக்தியையும் பெறுகின்றான்.
न मां दुष्कृतिनो मूढाः प्रपद्यन्ते नराधमाः।
माययापहृतज्ञाना आसुरं भावमाश्रिताः।।7.15।।
।।7.15।। न मां परमेश्वरं नारायणं दुष्कृतिनः पापकारिणः मूढाः प्रपद्यन्ते नराधमाः नराणां मध्ये अधमाः निकृष्टाः। ते च मायया अपहृतज्ञानाः संमुषितज्ञानाः आसुरं भावं हिंसानृतादिलक्षणम् आश्रिताः।।ये पुनर्नरोत्तमाः पुण्यकर्माणः
மேற்கூறியபடி , எதனால் சிலர் கண்ணனிடத்தில் சரணாகதி செய்வதில்லை என்பதற்கு கருணாமயனாகிய கண்ணன் இங்கே விளக்கம் தருகின்றான். மாயையால் தங்கள் ஞானத்தை இழந்த மூடர்கள், தீவினைகளை செய்தவர்கள், அந்த கண்ணனிடத்தில் பிரபத்தி பண்ணுவதில்லை. அதனால் அவர்களுக்கு அசுர பாவம் ஏற்படுகின்றது. அதனால் அவர்கள் கொடூரம், பொய் போன்ற தமோ குணவந்தர்களாக ஆகிவிடுகின்றார்கள்.
अव्यक्तं व्यक्ितमापन्नं मन्यन्ते मामबुद्धयः।
परं भावमजानन्तो ममाव्ययमनुत्तमम्।।7.24।।
।।7.24।। अव्यक्तम् अप्रकाशं व्यक्तिम् आपन्नं प्रकाशं गतम् इदानीं मन्यन्ते मां नित्यप्रसिद्धमीश्वरमपि सन्तम् अबुद्धयः अविवेकिनः परं भावं परमात्मस्वरूपम् अजानन्तः अविवेकिनः मम अव्ययं व्ययरहितम् अनुत्तमं निरतिशयं मदीयं भावमजानन्तः मन्यन्ते इत्यर्थः।।तदज्ञानं किंनिमित्तमित्युच्यते
சர்வேஸ்வரனான கோபாலன் இங்கு, தன்னுடைய நிஜ ஸ்வரூபம் அவ்யக்தம் அதாவது , நிர்குண ஸ்வரூபம். நாம் ரூபங்களுக்கு அப்பாற்பட்டதாக ஸ்வரூபமே அவனுடைய ஸ்வரூபம் என்கிறான். ஆத்ம ஞானம் சிந்தித்த பேர்களுக்கே அவனுடைய அந்த ஸ்வரூபம் புலப்படும். ஆனால், ஞானம் அற்ற அஞ்ஞானிகள் அவனை ஒரு வ்யக்தி - அதாவது ஒரு தேவனாகவோ , நாம ரூபங்கள் உள்ளவனாகவோ , மாறுதல்களுக்கு உட்பட்டவனாகவோ நினைத்துக் கொள்கின்றார்கள். ஞானிகளுக்கு மாத்திரமே அவன் அவ்யக்தன்,
ஆத்ம ஸ்வரூபன், மாறுதல்களுக்கு அப்பாற்பட்டவன், என்ற அறிவும், விவேகமும் ஏற்படும்.
नाहं प्रकाशः सर्वस्य योगमायासमावृतः।
मूढोऽयं नाभिजानाति लोको मामजमव्ययम्।।7.25।।
।।7.25।। न अहं प्रकाशः सर्वस्य लोकस्य केषांचिदेव मद्भक्तानां प्रकाशः अहमित्यभिप्रायः। योगमायासमावृतः योगः गुणानां युक्ितः घटनं सैव माया योगमाया तया योगमायया समावृतः संछन्नः इत्यर्थः। अत एव मूढो लोकः अयं न अभिजानाति माम् अजम् अव्ययम्।।यया योगमायया समावृतं मां लोकः नाभिजानाति नासौ योगमाया मदीया सती मम ईश्वरस्य मायाविनो ज्ञानं प्रतिबध्नाति यथा अन्यस्यापि मायाविनः मायाज्ञानं तद्वत्।।
यतः एवम् अतः
கண்ணன், மேற்கூறிய அஞ்ஞானத்திற்கு காரணம் சொல்லுகின்றான் . அனைவருக்கும் பூர்ண ஞானம் , சித்தித்து அவனுடைய நிஜ ஸ்வரூபம் வெளிப்படாமல் இருப்பதற்கு காரணம் யோகமாயை தான். மூடர்களான அந்த அஞ்ஞானிகள், மாயைக்கு உட்பட்டு இருப்பதால், கண்ணனின் நிஜ ஸ்வரூபம் அவ்யயம் - அதாவது வாக் மனங்களுக்கு அப்பாற்பட்டதாக, ஆத்ம ஸ்வரூபமாக, பாரமார்த்திக வஸ்துவாக அவர்களுக்கு புலப்படுவதில்லை. கண்ணனை ஒரு தேவனாகவோ, ஒரு நாம ரூபமாகவோ அவர்கள் மாயை காண்பித்து அவர்களை மூடர்களாக ஆக்குகின்றது.
ईश्वरः सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति।
भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया।।18.61।।
।।18.61।। -- ईश्वरः ईशनशीलः नारायणः सर्वभूतानां सर्वप्राणिनां हृद्देशे हृदयदेशे अर्जुन शुक्लान्तरात्मस्वभावः विशुद्धान्तःकरणः -- अहश्च कृष्णमहरर्जुनं च (ऋ. सं. 6।9।1) इति दर्शनात् -- तिष्ठति स्थितिं लभते। तेषु सः कथं तिष्ठतीति? आह -- भ्रामयन् भ्रमणं कारयन् सर्वभूतानि यन्त्रारूढानि यन्त्राणि आरूढानि अधिष्ठितानि इव -- इति इवशब्दः अत्र द्रष्टव्यः -- यथा दारुकृतपुरुषादीनि यन्त्रारूढानि। मायया च्छद्मना भ्रामयन् तिष्ठति इति संबन्धः।।
ஈஸ்வரன் அனைவரின் ஹ்ருதயத்திலும் வசிக்கின்றான். சர்வேஸ்வரனான ஸ்ரீமன் நாராயணன், அனைத்து உயிர்களின் இதயத்திலும் இருக்கின்றான். அவன் மாயை என்னும் அச்சாணியில் சுற்றும் இயந்திரங்களை போல , அனைத்து உயிர்களையும் சுழல செய்கின்றான். அதவாது மாயையால் மனமானது சுழன்று கொண்டிருக்க, ஈஸ்வரன் இதயத்தில் அசைவின்றி வீற்றிருக்கின்றான். இதனை திரோதானம் என்பார்கள். மாயையால், உலக வஸ்துக்களை மறைத்து வைத்து, உலகத்தை இயக்குபவன் ஈஸ்வரன். இதே அர்த்தத்தில் தான் லலிதா சஹஸ்ரநாமத்திலும் (திரோதானகரீ , ஈஸ்வரி) என்ற நாமங்கள் உள்ளன.
Labels:
AdiShankara,
Advaitham,
BagavadGita,
Bhashyam,
Maya,
Prakruthi,
Upanishads,
Vedantha
Monday, April 23, 2018
ப்ரக்ருதியும் புருஷனும்...
உபநிஷத்துக்கள் நம் பெருமாளையும் தாயரையும் ப்ரக்ருதி புருஷன் என்றே கொண்டாடுகின்றன. ப்ரக்ருதி என்றால் வெறும் ஜடமான இயற்கை மட்டும் அன்று, அதனுள் , முக்குணங்கள், உலகில் உள்ள ஜீவராசிகளை படைத்தல் அனைத்துமே அடங்கும்.
கண்ணன் கீதையில் குணத்ரய விபாக யோகத்தில், கீழ் வருமாறு கூறுகின்றான்:
மம யோநிர்மஹத்³ப்³ரஹ்ம தஸ்மிந் க³ர்ப⁴ம்
த³தா⁴ம்யஹம் । ஸம்ப⁴வ: ஸர்வபூ⁴தாநாம் ததோ ப⁴வதி பா⁴ரத ॥
த³தா⁴ம்யஹம் । ஸம்ப⁴வ: ஸர்வபூ⁴தாநாம் ததோ ப⁴வதி பா⁴ரத ॥
ப்ரக்ருதி என்னும் யோனிக்குள் , என்னால் விதைக்கப் படுகின்ற சைதன்யம், நாம ரூபங்களாக பரிணமிக்கின்றன. அதாவது கண்ணனாகிய திருமால் புருஷன் என்றும், ப்ரக்ருதியாகிய தாயே லட்சுமி என்றும் பொருள் படும் ஸ்லோகம்.
ஆச்சார்யாள் பண்ணிய விஷ்ணு கேஷாதி பாத வருணனை ஸ்லோகத்திலும் இதே போல தான் உள்ளது.
வாக்³பூ⁴கௌ³ர்யாதி³பே⁴தை³ர்விது³ரிஹ முநயோ யாம்
யதீ³யைஶ்ச பும்ஸாம்
காருண்யார்த்³ரை: கடாக்ஷை: ஸக்ருʼத³பி பதிதை: ஸம்பத:³ ஸ்யு: ஸமக்³ரா: ।
குந்தே³ந்து³ஸ்வச்ச²மந்த³ஸ்மிதமது⁴ரமுகா²ம்போ⁴ருஹாம் ஸுந்த³ராங்கீ³ம்
வந்தே³ வந்த்³யாமஸேஷைரபி முரபி⁴து³ரோமந்தி³ராமிந்தி³ராம் தாம் ॥ 8 ॥
யதீ³யைஶ்ச பும்ஸாம்
காருண்யார்த்³ரை: கடாக்ஷை: ஸக்ருʼத³பி பதிதை: ஸம்பத:³ ஸ்யு: ஸமக்³ரா: ।
குந்தே³ந்து³ஸ்வச்ச²மந்த³ஸ்மிதமது⁴ரமுகா²ம்போ⁴ருஹாம் ஸுந்த³ராங்கீ³ம்
வந்தே³ வந்த்³யாமஸேஷைரபி முரபி⁴து³ரோமந்தி³ராமிந்தி³ராம் தாம் ॥ 8 ॥
ஆச்சார்யாள், இங்கு ஸ்ரீ தேவியான லக்ஷ்மியை, அனைத்து தேவதைகளின் ஸ்வரூபியாக, சர்வ ஜெகன் மாதாவாக காண்கிறார். அவளே வாக்தேவி,பூ தேவி, கவுரி, என்று முனிவர்களால் போற்றப் படுகின்றாள். அழகிய கைகளை உடைய அந்த திருமகள், முரன் என்ற அரக்கனை வென்ற திருமாலின் மார்பை உடையவள். அவளுடைய தாமரை முகமானது, அழகிய முல்லைப்பூ போன்ற சிரிப்பாள் மிளிர்கின்றது. அவளுடைய க்ருபா கடாக்ஷம் , அன்பர்கள் மீது படுங்கால், சகல செல்வங்களையும் அவர்கள் பெறுகின்றார்கள்.
யா ஸூதே ஸத்த்வஜாலம் ஸகலமபி ஸதா³ ஸம்நிதா⁴நேந பும்ஸ:
த⁴த்தே யா தத்த்வயோகா³ச்சரமசரமித³ம் பூ⁴தயே பூ⁴தஜாதம் ।
தா⁴த்ரீம் ஸ்தா²த்ரீம் ஜநித்ரீம் ப்ரக்ருʼதிமவிக்ருʼதிம் விஶ்வஶக்திம் விதா⁴த்ரீம்
விஷ்ணோர்விஶ்வாத்மநஸ்தாம் விபுலகு³ணமயீம் ப்ராணநாதா²ம் ப்ரணௌமி ॥ 9
த⁴த்தே யா தத்த்வயோகா³ச்சரமசரமித³ம் பூ⁴தயே பூ⁴தஜாதம் ।
தா⁴த்ரீம் ஸ்தா²த்ரீம் ஜநித்ரீம் ப்ரக்ருʼதிமவிக்ருʼதிம் விஶ்வஶக்திம் விதா⁴த்ரீம்
விஷ்ணோர்விஶ்வாத்மநஸ்தாம் விபுலகு³ணமயீம் ப்ராணநாதா²ம் ப்ரணௌமி ॥ 9
ஸ்ரீமன் நாராயணனுடைய சம்பந்தத்தினால் , அவன் அனைத்து சேதன அசேதனங்களும் பிறப்பிக்கின்றாள். இப்படி அனைத்து சேதன, அசேதனங்களையும் பிறப்பித்து, காத்து, தன்னுள் தாங்கி, இயற்க்கை (ப்ரக்ருதியாகி) , மாறுபாடுகள் விகுர்தி அற்றவளாகி, பிரபஞ்ச ஷக்தியாகி, ஜீவர்களுக்கு அனுகிருஹம் செய்பவளாகி உள்ளாள். எண்ணற்ற கல்யாண குணங்களை உடையவளாகி, சர்வேஸ்வரனான விஷ்ணுவுக்கு மிகவும் உகந்தவளாகி, திருமாலின் உயிர்க்கு உயிரானவளை வணங்குகின்றேன். இவ்வாறாக ஆதி சங்கரர் புராண, உபநிஷத, ஆகம கிரந்தங்களில் உள்ள அனைத்து விஷயங்களையும் இந்த ஸ்லோகத்தில் அருளி உள்ளார்.
ஆச்சார்ய புங்கவனாகிய, நம் ஆதி சங்கரர் - உபநிஷத்துகளில் சொன்ன ஷண்மதங்களின் தேவதைகள் மீதும் இப்படி பக்திபூர்வமாக , பரமாத்புதமான கிரந்தங்களை அருளியுள்ளார்
Labels:
AdiShankara,
Advaitham,
Lakshmi,
Perumal,
Prakruthi,
Purusha,
Upanishads
ஆதி சங்கரரின் உயிர் காத்த லட்சுமி ந்ருஸிம்ஹன் ...
லட்சுமி ந்ருஸிம்ஹரை அனுபவித்த முதல் வேதாந்தி, நம் ஆச்சார்யாள் தான். ப்ரஹ்லாதனை காக்க, நரஹரி ஸ்தம்பத்தில் இருந்து, தான் மட்டுமே அவிப்பாவிதான். ஆனால், ஆச்சார்யாளைக் காக்க, செஞ்சு லட்சுமி தாயாருடன் வந்து அங்கு அனுகிரஹித்தான். ஆச்சார்யாள், அவனை அனுபவிக்கும் விதம் மிக அருமை.
ஸம்ஸாரஸர்பவிஷதி³க்³த⁴மஹோக்³ரதீவ்ர-
த³ம்ஷ்ட்ராக்³ரகோடிபரித³ஷ்டவிநஷ்டமூர்தே: ।
நாகா³ரிவாஹந ஸுதா⁴ப்³தி⁴நிவாஸ ஶௌரே
லக்ஷ்மீந்ருʼஸிம்ஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 7॥
உலகியல் வாழ்க்கை என்னும் சர்ப்பம் தன்னுடைய வாயை திறந்துள்ளது , அதன் விஷமானது மிக கொடியதாகி உள்ளது. அதனுடைய கோரமான விஷப் பற்கள் என்னை அழித்து விட்டன ! நாகங்களின் எதிரியான கருடன் மீது வீற்றிருக்கும் லட்சுமி ந்ருஸிம்ஹனே! எனக்கு உதவிக்கரம் கொடுத்து காத்தருள்வாய்!
அந்த⁴ஸ்ய மே ஹ்ருʼதவிவேகமஹாத⁴நஸ்ய
சோரைர்மஹாப³லிபி⁴ரிந்த்³ரியநாமதே⁴யை: ।
மோஹாந்த⁴காரகுஹரே விநிபாதிதஸ்ய
லக்ஷ்மீந்ருʼஸிம்ஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 11॥
ப்ரபோ! (ஆதாம்நாத்மத்தை பகுத்தறியும் அறிவை) என்னுடைய விவேகத்தை , இந்திரியங்கள் என்னும் திருடர்கள் கவர்ந்து சென்று விட்டார்கள். எனவே நான் குருடனாகி விட்டேன். ஞானம் என்னும் பார்வை இழந்தமையால், மோகம் என்னும் பாழும் கிணற்றுள் விழுந்து விட்டேன்! லட்சுமி ந்ருஸிம்ஹா உன் உதவிக்கரங்களை அளித்து என்னைக் காக்க வேண்டும்!
ப³த்³த்⁴வா க³லே யமப⁴டா ப³ஹு தர்ஜயந்த:
கர்ஷந்தி யத்ர ப⁴வபாஶஶதைர்யுதம் மாம் ।
ஏகாகிநம் பரவஶம் சகிதம் த³யாலோ
லக்ஷ்மீந்ருʼஸிம்ஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 12॥
யமனுடைய சேவகர்கள் ஆயிரக் கணக்கில் பாசக் கயிற்றை என் கழுத்தில் கட்டி, ஆளுக்கு ஓர் பக்கமாக இழுக்கிறார்கள்! இந்த உலகியல் பற்று என்னும் கயிற்றை அவர்கள் என் கழுத்தில் கட்டி இழுக்கின்றார்கள்! தன்னம் தனியாக , மிகவும் சோர்ந்தும், பயமுற்றவனாகவும் உள்ளேன்! கருணைக்கு கடலே! லட்சுமி ந்ருஸிம்ஹா உன் உதவிக்கரங்களை அளித்து என்னைக் காக்க வேண்டும்!
ஏகேந சக்ரமபரேண கரேண ஶங்க²-
மந்யேந ஸிந்து⁴தநயாமவலம்ப்³ய திஷ்ட²ந் ।
வாமேதரேண வரதா³ப⁴யபத்³மசிஹ்நம்
லக்ஷ்மீந்ருʼஸிம்ஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥
ஒரு கையில் சக்கரமும் , மற்றொரு கையில் சங்கமும், மூன்றாவது கைகளால் திருப்பாற்கடல் மன்னனின் மக்களாகிய லக்ஷ்மியை தழுவியபடி, நான்காவது கையால் வரதம், அபாயம் என்ற முத்திரைகளையும், காட்டி லட்சுமி ந்ருஸிம்ஹா உன் உதவிக்கரங்களை அளித்து என்னைக் காக்க வேண்டும்
லக்ஷ்மீந்ருʼஸிம்ஹசரணாப்³ஜமது⁴வ்ரதேந
ஸ்தோத்ரம் க்ருʼதம் ஶுப⁴கரம் பு⁴வி ஶங்கரேண ।
யே தத்பட²ந்தி மநுஜா ஹரிப⁴க்தியுக்தா-
ஸ்தே யாந்தி தத்பத³ஸரோஜமக²ண்ட³ரூபம் ॥ 17॥
இந்த பதினேழு ஸ்லோகங்களை கொண்ட பாடலை படிப்பதால் என்ன பயன் என்று, ஆச்சார்யாள் மிகவும் அழகாக் இங்கு அருளியுள்ளார்.
சங்கரன் என்னும் ஒரு தேனீ லட்சுமி ந்ருஸிம்ஹனின் திருவடிகளின் தேனைப் பருகி பாடிய இந்த பாடலை, ஹரி பக்தியுடன் படிக்கும் அனைத்து மனிதர்களும், அந்த லட்சுமி ந்ருஸிம்ஹனின் திருவடிகளை அடைந்து பூர்ண பிரம்மத்தில் இணைவார்கள்.
தன்னுடைய உயிர் பிரியும் தருணத்திலும் கூட ஆச்சார்யாள், உயிரைக் காத்தமைக்கு நன்றி என்று கூறவில்லை - இந்த சம்சாரத்தில் இருந்து தம்மை காக்கும் படி நம் அனைவர் சார்பிலும் பிரார்திக்கின்றார். ஞானிகளுக்கு சரீர அபிமானம் என்பது எள்ளளவும் இருக்காது என்பதற்கு இது
மிகப் பெரிய ஒரு உதாரணம்.
லட்சுமி ந்ருஸிம்ஹன் அருளால் நாம் அனைவரும் அனைத்து நன்மைகளும் பெற வேண்டும் என்று பிரார்தித்துக் கொள்கிறேன்.
ஸம்ஸாரஸர்பவிஷதி³க்³த⁴மஹோக்³ரதீவ்ர-
த³ம்ஷ்ட்ராக்³ரகோடிபரித³ஷ்டவிநஷ்டமூர்தே: ।
நாகா³ரிவாஹந ஸுதா⁴ப்³தி⁴நிவாஸ ஶௌரே
லக்ஷ்மீந்ருʼஸிம்ஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 7॥
உலகியல் வாழ்க்கை என்னும் சர்ப்பம் தன்னுடைய வாயை திறந்துள்ளது , அதன் விஷமானது மிக கொடியதாகி உள்ளது. அதனுடைய கோரமான விஷப் பற்கள் என்னை அழித்து விட்டன ! நாகங்களின் எதிரியான கருடன் மீது வீற்றிருக்கும் லட்சுமி ந்ருஸிம்ஹனே! எனக்கு உதவிக்கரம் கொடுத்து காத்தருள்வாய்!
அந்த⁴ஸ்ய மே ஹ்ருʼதவிவேகமஹாத⁴நஸ்ய
சோரைர்மஹாப³லிபி⁴ரிந்த்³ரியநாமதே⁴யை: ।
மோஹாந்த⁴காரகுஹரே விநிபாதிதஸ்ய
லக்ஷ்மீந்ருʼஸிம்ஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 11॥
ப்ரபோ! (ஆதாம்நாத்மத்தை பகுத்தறியும் அறிவை) என்னுடைய விவேகத்தை , இந்திரியங்கள் என்னும் திருடர்கள் கவர்ந்து சென்று விட்டார்கள். எனவே நான் குருடனாகி விட்டேன். ஞானம் என்னும் பார்வை இழந்தமையால், மோகம் என்னும் பாழும் கிணற்றுள் விழுந்து விட்டேன்! லட்சுமி ந்ருஸிம்ஹா உன் உதவிக்கரங்களை அளித்து என்னைக் காக்க வேண்டும்!
ப³த்³த்⁴வா க³லே யமப⁴டா ப³ஹு தர்ஜயந்த:
கர்ஷந்தி யத்ர ப⁴வபாஶஶதைர்யுதம் மாம் ।
ஏகாகிநம் பரவஶம் சகிதம் த³யாலோ
லக்ஷ்மீந்ருʼஸிம்ஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ 12॥
யமனுடைய சேவகர்கள் ஆயிரக் கணக்கில் பாசக் கயிற்றை என் கழுத்தில் கட்டி, ஆளுக்கு ஓர் பக்கமாக இழுக்கிறார்கள்! இந்த உலகியல் பற்று என்னும் கயிற்றை அவர்கள் என் கழுத்தில் கட்டி இழுக்கின்றார்கள்! தன்னம் தனியாக , மிகவும் சோர்ந்தும், பயமுற்றவனாகவும் உள்ளேன்! கருணைக்கு கடலே! லட்சுமி ந்ருஸிம்ஹா உன் உதவிக்கரங்களை அளித்து என்னைக் காக்க வேண்டும்!
ஏகேந சக்ரமபரேண கரேண ஶங்க²-
மந்யேந ஸிந்து⁴தநயாமவலம்ப்³ய திஷ்ட²ந் ।
வாமேதரேண வரதா³ப⁴யபத்³மசிஹ்நம்
லக்ஷ்மீந்ருʼஸிம்ஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥
ஒரு கையில் சக்கரமும் , மற்றொரு கையில் சங்கமும், மூன்றாவது கைகளால் திருப்பாற்கடல் மன்னனின் மக்களாகிய லக்ஷ்மியை தழுவியபடி, நான்காவது கையால் வரதம், அபாயம் என்ற முத்திரைகளையும், காட்டி லட்சுமி ந்ருஸிம்ஹா உன் உதவிக்கரங்களை அளித்து என்னைக் காக்க வேண்டும்
லக்ஷ்மீந்ருʼஸிம்ஹசரணாப்³ஜமது⁴வ்ரதேந
ஸ்தோத்ரம் க்ருʼதம் ஶுப⁴கரம் பு⁴வி ஶங்கரேண ।
யே தத்பட²ந்தி மநுஜா ஹரிப⁴க்தியுக்தா-
ஸ்தே யாந்தி தத்பத³ஸரோஜமக²ண்ட³ரூபம் ॥ 17॥
இந்த பதினேழு ஸ்லோகங்களை கொண்ட பாடலை படிப்பதால் என்ன பயன் என்று, ஆச்சார்யாள் மிகவும் அழகாக் இங்கு அருளியுள்ளார்.
சங்கரன் என்னும் ஒரு தேனீ லட்சுமி ந்ருஸிம்ஹனின் திருவடிகளின் தேனைப் பருகி பாடிய இந்த பாடலை, ஹரி பக்தியுடன் படிக்கும் அனைத்து மனிதர்களும், அந்த லட்சுமி ந்ருஸிம்ஹனின் திருவடிகளை அடைந்து பூர்ண பிரம்மத்தில் இணைவார்கள்.
தன்னுடைய உயிர் பிரியும் தருணத்திலும் கூட ஆச்சார்யாள், உயிரைக் காத்தமைக்கு நன்றி என்று கூறவில்லை - இந்த சம்சாரத்தில் இருந்து தம்மை காக்கும் படி நம் அனைவர் சார்பிலும் பிரார்திக்கின்றார். ஞானிகளுக்கு சரீர அபிமானம் என்பது எள்ளளவும் இருக்காது என்பதற்கு இது
மிகப் பெரிய ஒரு உதாரணம்.
லட்சுமி ந்ருஸிம்ஹன் அருளால் நாம் அனைவரும் அனைத்து நன்மைகளும் பெற வேண்டும் என்று பிரார்தித்துக் கொள்கிறேன்.
Thursday, April 19, 2018
ஆச்சார்யாள் பண்ணிய ராம புஜங்கத்தின் பெருமைகள்.....
இன்றைக்கு ஆச்சார்யாள் பண்ணிய ராமபுஜங்கத்தை அனுபவிப்போம் வாருங்கள்
அன்பர்களே. நூற்று எட்டு உபநிஷத்துக்கள் பட்டியலை முக்திக உபநிஷத்தில் சொல்லி உள்ளார் ராமர். அந்த உபநிஷத்தில் ராமர் , தன் நாமத்தை எவன் ஒருவன் ஜெபிக்கின்றானோ அவன் நால்வகை முக்தியை அடைகின்றான் என்கிறார். அதே போல காசியில் மரணிப்பவர்கள் அனைவரும், தங்கள் காதுகளில் சிவ பெருமானால் ராமா ராமா ராமா என்று ஓதப்பெற்று, போக்கு வரத்து இல்லாத பரமபதத்தை அடிக்கின்றனர் என்கிறார் ராமர். ஆசார்யாளும் அதே போல, ராம புஜங்கத்தில் சொல்கின்றார்.
ஶிவம் நித்யமேகம் விபு⁴ம் தாரகாக்²யம்
ஸுகா²காரமாகாரஶூந்யம் ஸுமாந்யம் ।
மஹேஶம் கலேஶம் ஸுரேஶம் பரேஶம்
நரேஶம் நிரீஶம் மஹீஶம் ப்ரபத்³யே ॥ 2 ॥
ஆச்சார்யாள் இந்த ஸ்லோகத்தில் மாண்டூக்கிய உபநிஷத்தில் உள்ள பதங்களை பயன் படுத்தி, ராமரும் அந்த சிவமாகிய பிரம்மத்தின் வடிவமே என்கிறார். அப்படி சிவமாக, நித்தியமாக, தன்னிகரற்றவனாக , தாரக ரூபனாக, சர்வ வ்யாபியாக, சச்சிதானந்த வடிவமாக, உருவம் அற்ற நிர்குண பிரம்மமாக, எல்லோர்க்கும் ஈஸ்வரனாக, பரமேஸ்வரனாக , தனக்கு மேல் எவரும் இல்லாதவனாக, இந்த இயற்கையின் நாயகனாக இருக்கும் ராமனிடத்தில் நான் சரண் புகுகின்றேன் என்கிறார். அதாவது ராமரும் சிவனும் ஒன்று தான் என்று சொல்கின்றார்.
யதா³வர்ணயத்கர்ணமூலேঽந்தகாலே
ஶிவோ ராம ராமேதி ராமேதி காஶ்யாம் ।
ததே³கம் பரம் தாரகப்³ரஹ்மரூபம்
ப⁴ஜேঽஹம் ப⁴ஜேঽஹம் ப⁴ஜேঽஹம் ப⁴ஜேঽஹம் ॥ 3 ॥
Labels:
AdiShankara,
Advaitham,
Anama,
Kashi,
Rama,
RamaBhujangam,
SriRama,
Upanidhad
ஆதி சங்கரர் அருளிய கணேஷ பஞ்சரத்னம் ....
இந்த ஸ்லோகத்தை இங்கே கேட்டு மகிழுங்கள்.
நம் தமிழ் நாட்டில் எளியோர்க்கு எளியோனாக, அரச மரங்களெங்கும், தெருக்கோடிகள் எங்கும், இருந்து அருள் பாலிக்கும் விநாயகப் பெருமானை பற்றி தெறியாத மனிதரே இருக்க மாட்டார். உபநிஷத்துக்கள் விநாயகனை, சிவ பூத கணங்களுக்கு தலைவனாக கொண்டாடுகின்றன. ஆசார்யாளும் உபநிஷத்துக்கள் சாரமாகவே மஹாகணேஷ பஞ்ச ரத்னம் என்ற இந்த ரத்தினம் போன்ற ஸ்லோகத்தை எழுதி அருளினார்.
மிக அழகான இந்த ஐந்து ஸ்லோகங்கள் மிகவும் அருமையாக தளத்துடன் பாட உகந்ததாக உள்ளது.வேத, புராண, உபநிஷத்துக்களின் சாராம்சமாக விளங்கும் இந்த ரத்னத்தை அனுபவிப்போம் வாருங்கள்.
அகிஞ்சநார்திமார்ஜநம் சிரந்தநோக்திபா⁴ஜநம்
புராரிபூர்வநந்த³நம் ஸுராரிக³ர்வசர்வணம் ।
ப்ரபஞ்சநாஶபீ⁴ஷணம் த⁴நஞ்ஜயாதி³பூ⁴ஷணம்
கபோலதா³நவாரணம் ப⁴ஜே புராணவாரணம் ॥ 4॥
தன்னிடத்தில் சரணடையும் பக்தர்களின் வினைகளை அகற்றுபவனே, மிகப் பழைய வேதங்களளால் துதிக்கப் பெறுபவனே , முப்புரம் அழித்த சிவனின் மூத்த மகனே, தேவர்களின் எதிரிகளை தன் வாயில் இட்டு மெல்லுபவனே,
மாயாமயமான பிரபஞ்சத்தின் மாயையை அகற்றும் பயங்கர ஷக்தி படைத்தவனே, கருணா ரசம் பொழியும் கான்னங்களை உடையவனே, புராணங்களில் இருந்து வழியும் புகழை உடையவனே! விநாயகனே ! உன்னை துதிக்கின்றேன்.
நிதாந்தகாந்தத³ந்தகாந்திமந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்தஹீநமந்தராயக்ருʼந்தநம் ।
ஹ்ருʼத³ந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகி³நாம்
தமேகத³ந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம் ॥ 5॥
யமனை அழித்த பரமேஸ்வரனின் மைந்தனே! அன்பர்களின் மனத்தைக் கவரும் ஒற்றை கொம்பை உடையவனே! யோகிகளின் ஹ்ருதயத்தில் நிரந்தரமாக வசிப்பவனே! அந்த ஒற்றை தந்தம் உடையவனை எப்பொழுதும்
வணங்குகின்றேன்!
கணபதி அதர்வஸீர்ஷ உபநிஷத்து இதேபோல தான் சொல்கின்றது.
त्वं गुणत्रयातीतः । त्वं अवस्थात्रयातीतः । त्वं देहत्रयातीतः ।
त्वं कालत्रयातीतः । त्वं मूलाधारस्थितोऽसि नित्यम् । त्वं
शक्तित्रयात्मकः ।त्वां योगिनो ध्यायन्ति नित्यम् । त्वं ब्रह्मा त्वं
विष्णुस्त्वं रुद्रस्त्वमिन्द्रस्त्वमग्निस्त्वं वायुस्त्वं सूर्यस्त्वं
चन्द्रमास्त्वं ब्रह्म भूर्भुवः स्वरोम् ॥ ६॥
விநாயகனே நீ இந்த பிரகிருதியின் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவன். நீ கனவு, நினைவு, உறக்கம் என்ற மூன்று அவஸ்தைகளும் அப்பாற்பட்டவன். ஸ்தூலம், சூக்ஷ்மம், காரணம் என்ற மூன்று உடல்களுக்கும் அப்பாற்பட்டவன்.
நிகழ் காலம், இறந்த காலம், வரும் காலம் என்று மூன்று காலங்களுக்கும் அப்பாற்பட்டவன். மூலாதாரத்தில் நித்யம் வசிப்பவன் நீ. இச்சா ஷக்த்தி, க்ரியா ஷக்தி , ஞான ஷக்தி என்று மூன்று சக்திகளின் வடிவம் நீ. யோகிகளால் நித்யமும் வழிபடப் படுபவன் நீ. ப்ரம்ம, விஷ்ணு, சிவன், சந்திரன், சூரியன் என்று அனைத்துமாகி , பூலோகம், புவர் லோகம், சுவர்க்கம் என்று அனைத்துலகிலும் நிறைந்து, ஓம்கார மயனாகி, பிரம்மமும் ஆகி இருக்கும் விநாயகனே!
மேற்கூறியவாறு அதர்வண வேதத்தில் உள்ள கணபதி அதர்வஸீர்ஷ உபநிஷத் பிள்ளையாரை போற்றுகின்றது. நம் தமிழ் மூதாட்டி ஒளவையாரும் இதே கருத்துக்களை விநாயகர் அகவலில் கூறுகின்றாள்.
Saturday, July 23, 2016
திருக்குறள் கூறும் மஹாப்பெரியவரின் மகிமைகள்
நீத்தார் பெருமை என்ற தலைப்பிலே, நம்முடைய வள்ளுவர் எழுதினார். ஆனால் அது எல்லாம் , நம்முடைய மஹாப் பெரியவருக்குத் தான் பொருந்தும். பல நூறு ஆண்டுகள் கழித்து அவதாரம் பண்ணப் போகும் ஒரு மஹானைப் பற்றி நம்முடைய வள்ளுவர் எழுதி இருப்பார் போலும்.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
நீத்தார் என்னும் சொல்லுக்கு எல்லாவற்றையும் துறந்தவர் என்று பொருள் படும். இந்தக் குறளில் , வள்ளுவர் - துறவிகளின் திடமான மன உறுதி , வேதங்களில் புகழப் படும் என்று சொல்கிறார். அந்த வேதத்தையும், மதத்தையும் வளர்த்த மஹான், 100 வருடங்கள் வாழ்ந்து இந்தப் புவியைக் காத்தவர் நம்முடைய பெரியவர்.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
நான்காவது, ஆஸ்ரமம் - பிரம்மச்சர்யம், கார்ஹஸ்ப்த்யம், வானப்ரஸ்தம் என்ற மூன்றாயும் தாண்டி நிற்கும் அந்த சந்யாச ஆஸ்ரமம் மேற்கொண்டு, அந்த தர்மத்தைத் தழுவி நிற்கும் மஹான்களின் பெருமையை சொல்ல வேண்டும் என்றால் - இந்த உலகத்தில் இறந்தவர்களை எண்ணுவதை போலத் தான் என்கிறார் வள்ளுவர்.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
இம்மை - இந்த உலகம் வாழ்க்கை, மறுமை - மோக்ஷம் / பிரம்மானந்தம் ஆகிய இரண்டையும் அறுந்து, இந்த உலகம் எல்லாம் வெறும் மாயை என்று உணர்ந்து நிற்கும் ஞானிகளின் பெருமை இந்த உலகில் மிக உயர்ந்தது. இந்தத்தப் பெருமை நம்முடைய மஹாப் பெரியவரைத் தவிர வேறு யாருக்கும் சேராது என்பதில் எந்த ஐயமுமே இல்லை.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.
திடமான மன உறுதி என்ற அங்குசத்தைக் கொண்டு தன்னுடைய பஞ்ச இந்திரியங்களையும் அடக்கும் தன்மை உடையவன் - மோக்ஷ சாம்ராஜ்யத்திற்கு வித்தாவான் . அதாவது - மனதையும், இந்திரியங்களையும் அடக்குவதே மோக்ஷம் என்று சொல்லப்படும் ஆத்ம ஞானம் பெற வித்து என்பது இதன் உட்பொருள்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
ஐந்து புலன்களையும் அடக்கித் தபசு பண்ணுகின்றவர்களின் பெருமைக்கு - இந்திரனே சரியான உதாரணம்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
இங்கு பெரியார் என்று மஹாப்பெரியவரைத் தான் சொல்கிறார் வள்ளுவர். செயற்கரிய காரியங்களை செய்கிறவர் பெரியவர் என்றும் மற்றவர்கள் எல்லாம் சிறியவர்கள் என்றும் சொல்லுகின்றார். இந்தக் கலியில் வேதங்களை எல்லாம் காப்பாற்றி உயிர்ப்பித்து, ஸ்தாபனம் பண்ணிய பெருமை நம்முடைய பெரியவருக்கே உரியதாகும்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
பஞ்ச இந்திரியங்களை எல்லாம் அடக்கி இருப்பவர்களைத் தான் இந்த உலகம் போற்றும். நம்முடைய மஹாப் பெரியவர், தனக்கு உணவின் மீது ஆசை வந்து விடக் கூடாது என்று வாரக் கணக்கில் வெறும் நெல் பொறியைத் தின்று கொண்டும், வெறும் தரையில் படுத்துக்க கொண்டும், தன்னுடைய இச்சைகளைக் கட்டுப்படுத்தினர். அவருக்கன்றோ எல்லாப்புகழும் சேரும்?
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
முற்றும் துறந்த மனிதர்களது , மொழி / சொற்பொழிவை , இந்த உலகத்திலே வேதங்கள் காட்டி விடும். அதாவது ஆத்மஞானம் உள்ளவர்களுடைய சொற்கள் எல்லாமே வேதத்திற்கும் , தர்மத்திற்கும் அனுகூலமாகவே இருக்கும். மகாபெரியவர் அந்த வேத வாக்யங்களையே தன்னுடைய உயிர்மூச்சாகக் கொண்டவர்.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
பலவிதமான சத்தகுணங்களைக் கொண்ட, சந்யாசிகள் கோபம், ஒரு க்ஷணம் கூட நிலைக்காது . அதாவது லோக்க க்ஷேமத்திற்காக, நன்மைக்ககாக, மற்றவர்களைக் கடிந்து கொள்ளும் மேன்மக்கள், கோபம் நன்மைக்காகவே உள்ள படியால் - ஒரு கேடும் விளைவிக்காது. மஹாப் பெரியவர் , தன்னுடைய சிஷ்யகோடிகளை எல்லாம் பெற்ற தயைப் போன்று கடாக்ஷிக்கும் படியினால், அவரது கோபம் லோக கல்யாணத்திற்க்காகவே இருக்கும்.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
பூரணமான ஞானம் பெற்ற பிராம்மணன் , பிரம்மத்தை உணர்ந்தவன் , எல்லா உயிர்களையும் அந்த பிரும்ம ஸ்வரூபமாகவே பார்க்கும்படியினால், எந்த உயிர்களையும் துன்புறுத்த மாட்டான். அதாவது, ப்ரஹ்ம ஞானத்தினால், அன்பு ஏற்பட்டு, எல்லா உயிர்களையும் தன்னுடைய அன்பு கண்ணோட்டத்தினால் பார்ப்பவன் உண்மையான ப்ராஹ்மணன் . மஹாப்பெரியவர் அல்லாது யாரை இது குறிக்கும்? ஹிந்துக்கள் மட்டும் அல்லாது மற்ற மதத்தவர்கள் எல்லாம் வந்து அவருடைய பாத தர்ஷனம் பண்ணி கொண்டு அவருடைய அனுகிருஹம் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு கருணை கடாக்ஷம் பண்ணும் மஹான் அவர்.
பவ சங்கர தேசிக மே சரணம் என்று சொல்லிக் கொண்டு மஹாப் பெரியவருக்கு அநேக கோடி நமஸ்காரன்களை பண்ணிக் கொண்டு இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)






