- அடியேன்னு கூப்பிட பொண்டாட்டியே இல்லை.பிள்ளை பேர் சந்தான கோபால கிருஷ்ண சாமியாம்
- அரிசியேம் கொண்டு அக்காள் ஆத்துக்கு போன போலே!
- அளவுக்கு மீறினால் அம்ருதமும் நஞ்சு
- ஆவணியாவட்டத்திற்கு அசடும் சமைக்கும்!
- இஞ்சிக்கு தோலில் விஷம் ! கடுக்காய்க்கு பருப்பில் விஷம் !
- இரவில் இலைக்கறி உண்ணாதே!
- இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு !
- ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது!
- கடை தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைத்த மாதிரி !
- கலத்திலே உட்கார்ந்தா காசிக்கு போன ப்ராமணனே வந்துடுவான்
- குழம்பில் இட்ட கருவேப்பிலை மாதிரி !
- சக்கைக்கு சுக்கு மருந்து மாங்காய்க்கு தேங்காய் மருந்து!
- சுக்குக் கண்ட இடத்திலே பிள்ளை பெற்றாற்போல!
- சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சின சாமியும் இல்லை!
- சொல்லிக் கொடுக்கிற புத்தியும் ஊட்டிக்கொடுக்கிற சாப்பாடும் நிலைக்காது!
- தனக்கு தனக்கு என்றால் கொழுக்கட்டை பெருசு!
- தனக்கு தானும் பிரைக்குத் தூணும்!
- நுனிப்புல் மேய்ந்து விட்டு வந்து கதை விடறமாரி!
- நெய்யப்பம் தின்னால் ரெண்டுண்டு கார்யம்!
- நெல்லு பழசானா பொன்னு எள்ளு பழசானா பொன்னு!
- பருப்பு இல்லாத கல்யாணமா?
- பாத்திரம் நக்கி வீட்டிலே ஒரு தொன்னை நக்கி
- பாழானது பசுவின் வயிற்றிலே!
- விருந்தும் மருந்தும் மூணு நாள் தான்
Tuesday, May 12, 2020
பழமொழிகள் - I (24)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment