சோழ வளநாட்டின் கண்ணகி தான் போய்
பாண்டி நாட்டரசன் தன தப்பை தட்டிக்கேட்டு
இடமுலை கிள்ளி எரிந்து மதுரையில் கோவத்தால்
மடமுலை பெண்டிர்க்கும் பத்தினிகட்கும் அரசியாய்
இட்டாள் கட்டளை அங்கு அக்கினி தேவனுக்கு
இருபோது முத்தீயும் வழுவாது வணங்கும் பார்ப்பார்
பசுவுடன் முதியவர் குழந்தைகள் கற்புடை பெண்டிர்
இவர்களோடு தம் தருமம் வழுவாத தருமிட்டர்
இவரொழிந்து ஏனைய எல்லோரையும் சுட்டு பொசுக்குக்கும் படி
ஆணை இட்டாள் பத்தினி தெய்வம் நம் கண்ணகி தெய்வம்
விரிதலை செங்கண்ணும் வழிநீரின் கண்கள் கொண்டு
எரிதலை அக்கினியின் சுவாலை தானும் கொண்டு
பத்தினி தெய்வம் பெண்டிர்க்கெல்லாம் தெய்வம்
கொற்றவை காளியின் உருவம் கொண்டு அவளும்
சேரநாடு சென்று இருந்து விமானத்தில் தன் கணவன்
கோவலனுடன் சென்று விண்ணுலகம் ஆள பறந்து சென்றாளே!
பத்தினி தெய்வம் கண்ணகி தானே சென்று இம்மையில்
அனைவர்க்கும் அருளிடவே கொடுங்கல்லூர் எனும் கோயில்
பத்திரகாளியாய் தாருகனை அழித்தவளாய் தேவியாய்
பத்தினி தெய்வம் நம் கண்ணகி வீற்றிருந்தாளே!
No comments:
Post a Comment