Friday, January 27, 2023
எந்தன் உளம் புகுந்து எந்தன் வினைகள்.....
எந்தன் உளம் புகுந்து எந்தன் வினைகள் எல்லாம் போக்கி என்னை ஆட்கொண்ட சங்கரன் உறை கோயில் காஞ்சி என்னும் காமகோடியே!
ஆவிகள் ஐந்தும் ஒடுங்கி மனத்துட் புகுந்து இந்திரியங்கள் ஐந்தும் ஒடுங்கி எந்தன் பழவினைகள் எல்லாம் ஒடுங்கி எந்தன் அறிவும் ஆற்றலும் ஒடுங்கி
ஆத்துமவடிவில் அனைத்தும் அடங்கி பேரானந்தக் கடலில் நான் மூழ்கும் நேரம் என்னப்பன் சங்கரன் கோயில் தம் மணிக்கதவுகள் திறக்கும் நேரம்!
அருள் வெள்ளம் மேலிட கருணை என்னும் கடலில் மூழ்கி நான் என்னும் நிலை மறந்து பேரானந்த கடலில் களிப்புற்று என்னப்பன் திருவடிகளை எந்தன் சென்னியில் சூடி அனுபூதி பெறும் நேரம் - என்னப்பன் சங்கரன் கருணைக் கடைக்கண் எந்தன் மீது படும் நேரமே!
சங்கரன் பெருமை
பிறப்பிறப்பு மூப்பு பிணி என்னும் உரோகங்கள் நான்கும்
அழித்தென்னை ஆட்கொள்ள நின் தாமரை திருவடிகளை
என் சென்னியில் வைத்தருளிய என்னப்பனே சங்கரா !
ஆசைகளின் முடிவாய் அருட்கடலாய் விளங்கும் அன்னை காமாட்சியின் வடிவே!
நின் பொற்றாமரை அடிகளை என் சென்னியில் பொருத்தி எந்தன்
பழவினைகள் மாற்றிய என்னப்பனே! ஏழுலகும் ற்ற நின்ற என்னப்பனே சங்காரா!
வேத்தின் விழுப்பொருளை உலகிற்குறைத்து தத்துவமசி என்னும் வாக்கியம் காட்டி ஆன்மாவின் நிஜ வடிவம் காட்டி என்னுள்ளும் உன்னுள்ளும் உலகனைத்திலும் உறைபொருள் பிரமமமென்று எடுத்துரைத்து உலகமெல்லாம் உய்ய வழிகாட்டி வேத நெறி காட்டி
பாஷாண்டிகளாம் பௌத்த சமணர்களை வாதத்தில் வென்று
வேதநெறி நிலை நாட்டிய என்னப்பனே சங்கரா!
நின்னையல்லால் மற்றொருவர் உண்டோ இவ்வுலகில் எந்தன் பெருவினைகள் போக்கிட!
என்ன தவம் செய்தேனோ நின்பதமலரில் சரண் புகுந்திட! உன்னையல்லால் மற்றொருவரை நம்புவேன் அல்லேன்!
மாய பிறப்பறுத்து எல்லாம் அறுத்து ஆன்ம வடிவம் காட்டி நின் கருணை காட்டி எந்தனை ஆட்கொண்ட அருட்கடலே!
என்னப்பனே சங்கரா !
நின் பாத மலரின் பெருமைகள் சொல்வதை அல்லால் வேறு கைம்மாறு செய்திலேனே!
Wednesday, January 18, 2023
அண்ணல் அமித் ஷாஹ்
நின் முகம் மலரக் கண்டால் எம் அகம் குளிருதே! எம் அண்ணலே!
ஒரு நூற்று இருப்பது கோடி இந்தியர் தம் முகம் மலர செய்ய எங்கள் பாரத தாய் பெற்ற அரும்புதல்வா !
என்சொல்வேன் நின் பெருமை! என் சொல்வேன் நின் பெருமை!
வாழ்க நீடூழி நின் பெருமை!வாழ்க அன்னை பாரதம்! வாழ்க செந்தமிழ்நாடு! வாழ்க இந்த புவியெல்லாம்!
ஒரு நூற்று இருப்பது கோடி இந்தியர் தம் முகம் மலர செய்ய எங்கள் பாரத தாய் பெற்ற அரும்புதல்வா !
என்சொல்வேன் நின் பெருமை! என் சொல்வேன் நின் பெருமை!
வாழ்க நீடூழி நின் பெருமை!வாழ்க அன்னை பாரதம்! வாழ்க செந்தமிழ்நாடு! வாழ்க இந்த புவியெல்லாம்!
Subscribe to:
Posts (Atom)