Friday, January 27, 2023

சங்கரன் பெருமை

பிறப்பிறப்பு மூப்பு பிணி என்னும் உரோகங்கள் நான்கும் அழித்தென்னை ஆட்கொள்ள நின் தாமரை திருவடிகளை என் சென்னியில் வைத்தருளிய என்னப்பனே சங்கரா ! ஆசைகளின் முடிவாய் அருட்கடலாய் விளங்கும் அன்னை காமாட்சியின் வடிவே! நின் பொற்றாமரை அடிகளை என் சென்னியில் பொருத்தி எந்தன் பழவினைகள் மாற்றிய என்னப்பனே! ஏழுலகும் ற்ற நின்ற என்னப்பனே சங்காரா! வேத்தின் விழுப்பொருளை உலகிற்குறைத்து தத்துவமசி என்னும் வாக்கியம் காட்டி ஆன்மாவின் நிஜ வடிவம் காட்டி என்னுள்ளும் உன்னுள்ளும் உலகனைத்திலும் உறைபொருள் பிரமமமென்று எடுத்துரைத்து உலகமெல்லாம் உய்ய வழிகாட்டி வேத நெறி காட்டி பாஷாண்டிகளாம் பௌத்த சமணர்களை வாதத்தில் வென்று வேதநெறி நிலை நாட்டிய என்னப்பனே சங்கரா! நின்னையல்லால் மற்றொருவர் உண்டோ இவ்வுலகில் எந்தன் பெருவினைகள் போக்கிட! என்ன தவம் செய்தேனோ நின்பதமலரில் சரண் புகுந்திட! உன்னையல்லால் மற்றொருவரை நம்புவேன் அல்லேன்! மாய பிறப்பறுத்து எல்லாம் அறுத்து ஆன்ம வடிவம் காட்டி நின் கருணை காட்டி எந்தனை ஆட்கொண்ட அருட்கடலே! என்னப்பனே சங்கரா ! நின் பாத மலரின் பெருமைகள் சொல்வதை அல்லால் வேறு கைம்மாறு செய்திலேனே!

No comments:

Post a Comment