Tuesday, March 21, 2023

ஆதி சங்கரர் வெற்றி உலா

வெள்ளிமலை வீற்றிருக்கும் ஈசனிடம் சென்று
தேவர்கள் எல்லோரும் சேர்ந்து முறையிட்டார்

தேவர்கள்:

ஈசன் பால் தேவர்கள் எல்லோரும் சென்று
தாசன் நான் காக்கவேணும் என்று சொல்லி
முறையிட்டு குறைகளை ஒவ்வொன்றாய் சொன்னார் !
பூமியில் சாக்கியர் சமணர் கூட்டம் ஓங்கி
இதமும் வேள்வியும் ஒடுங்கி நிற்கின்றனவே!
திருமாலும் புத்தனாய் தரணிக்கு சென்று
வேதமத மறுப்பினை நிறுவி வந்தானே !
முக்கண்ணா பரம்ஜோதி நீயருளல் வேண்டும்
பசுபார்ப்பர் வேதமும் தழைத்தோங்க வேண்டும்!
புவியில் வேள்விகள் நடக்காததால் உணவின்றி
நாங்களும் வடித்த தவித்தோம்!
வேதமும் வேள்வியும் விலங்கிடவே பாரில்
அருள் செய்து எங்களைக் காத்தருள வேண்டும்!

ஈசன் :

வருந்த வேண்டாம் நீங்கள் என் வாக்கு கேளீர்
திருந்தப் புவியினை காத்திடுவோம் நாம்!
வேதத்தின் பொருள் கூறி உரைகள் செய்ய
உலகிற்கு நாம்செல்வோம் (ஆதி) சங்கரனாய்!
யதியாகி தேசிக வேடம் பூண்டு ஒற்றைக்கோல்
கைக்கொண்டு செல்வோம் நாமே!
முருகனும் உடன் செல்வான் இப்புவிக்கு
குமரிலன் எனும் நாமம் கொண்டவனாய்!
திருமாலும் நம் சீடராகி வருவார்
பதுமபாதர் என்ற பெயருடனே!
நான்முகனும் மாண்டனர் ஆக வந்து
நம் சீடராய் இப்புவியைக் காத்து நிற்பார்!
வாணியும் மண்டைனரின் பத்தினியாய்
அவருடனும் தானே வந்துதிப்பாள்!
வாயுவும் தோட்டக்காரின் உருவம் கொண்டு
ந்மசீடராகி அங்கு வந்துதிப்பார்!
வாயுவே அத்தாமலகனாகி கோகர்ண
பதியிலே நம் சீடராவார்!
ஆன்மாவின் அறிவினை போதத்தினை
வேதத்தின் விழுப்பொருளை யாம் உரைப்போம்!
இக்கலியிலே கைவல்லிய ஞானம் பெற்று
வீடுபேறு பெறும் உபாயம் செய்வோம்!
பிரதானம் மூன்றிற்கும் உரைகள் செய்து
வேதாந்த ஞானத்தை நிலைநாட்டுவோம்!
வேதத்தினை மறுக்கும் மூடர்களுடனே
வாதத்தினைப் பண்ணி விரட்டிடுவோம்!
வேதியரும் வேள்விகளும் சிறப்புறவே
மடங்களை நிறுவிடுவோம் பாரதத்தில்!
யாமுகந்த செந்தமிழ் நாட்டினிலே
காஞ்சி என்னும் நகரத்தில் நாமே சென்று
கொலுவிருந்து முடிசூட்டி (அருள்) ஆட்சி செய்வோம்!
கவலை வேண்டாம் இனிக்க கவலை வேண்டாம்
ஆனந்தமாயிருங்கள் தேவர்களே!
அபயமுண்டு உமக்கு அபயமுண்டு நாம்
முக்கண்ணர் சொல்கின்றோம் அபயமுண்டு!

No comments:

Post a Comment