மின்னார் தடமதில் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் கீழ்மையினிற்செரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து
பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத - வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று
பெரியாழ்வார் என்றாலே யார் என்று நமக்கு தெரிந்து இருக்கும். ஸ்ரீ வில்லிபுத்தூர் என்னும் ஊரிலே, வசித்து அங்குள்ள எம்பெருமானுக்கு திருமாலைக் கைங்கர்யம் செய்து, பாண்டிய மன்னன் வைத்த வாதத்திலே வென்று , பொற்கிழி அறுத்து, அந்தப் பணத்தில் கோயில் கட்டிய பெருமை வாய்ந்தவர்.
இன்றைக்குத் தமிழ் நட்டுச் சின்னமாக விளங்கும் அந்த கோபுரம், இவர் தனக்கு கிடைத்த பரிசுப் பணத்தில் கட்டியது தான். அது மட்டுமா? ஆண்டாள் என்னும் பெண் குழந்தயைக் கண்டெடுத்து, வளர்த்தி அவளை, ஸ்ரீ ரங்க நாதருக்கே திருமணஞ் செய்து வைத்த பெருமை கொண்டவர். அந்த ஆண்டாள் பாடிய தமிழ்ப் பாடல்களே நாச்சியார் திருமொழி மற்றும் திருப்பாவை ஆகும். உண்மையான தமிழ் குடும்பம் அவர்கள் தான். என்ன பெருமை பாருங்கள்? தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அவர்கள் செய்த தொண்டு அளவற்றது.
அது மட்டுமா? ஸ்ரீமத் பாகவதம் என்னும் புராணத்தில் சொல்லப்பெற்ற கண்ணனின் லீலைகளை எல்லாம் தெள்ளு தமிழில் பிள்ளைத் தமிழகப் பாடினார் இந்த ஆழ்வார். கண்ணபிரானின் பிறந்தநாள் விழாவாகிய இந்த ஜென்மாஷ்டமி தினத்தில், பெரியாழ்வார் சொன்ன கண்ணன் பெருமைகளை பார்ப்போமா?
பணம் வாங்கிக்கொண்டு ஆபாசக் கவிதைகளை அவிழ்த்து விடும் போலி கவிஞர்களைப்போல அல்லாமல், உலகம் உய்ய, கண்ணன் பெருமையைப் படுகிறார் நம்முடைய பெரியாழ்வார்.
1. கண்ணன் திருவவதாரம்
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அலராயிர்றே
விளக்கம்: திருவாய்ப்பாடியிலே குழந்தைக் கண்ணன் அவதரித்த வைபவத்தை, ஆயர் பெருமக்கள் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். அந்தக் காட்சியை ஆழ்வார் மிக அழகாக்க கூறுகின்றார். வடநாட்டு ஸம்ப்ரதாயத்திலே, விழாக் களங்களில் சுண்ணாப்பு (வெள்ளை) பொடி, மற்றும் எண்ணெய் இவற்றை ஒருவர் மீது ஒருவர் தூவி கொண்டு விளையாடினார்கள். அதனால் கண்ணன் வீட்டு முற்றம் எல்லாம் அந்த சுண்ணாம்புப் பொடி மற்றும் எண்ணெய் கலவையால் அழுக்கு ஆகிற்று என்கிறார் ஆழ்வார்.
ஓடுவார் விழுவார் உகந்தாளிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குதான் என்பார்
பாடுவார்களும் பலபேரை கொட்டானின்று
ஆடுவார் களும் ஆயிற்று ஆய்ப்பாடியே
விளக்கம்: கண்ணன் பிறந்தாயிற்று. திருவாய்ப்பாடியிலே உள்ள ஆயர்கள் எல்லாருக்கும் தலைவன் நந்தகோபன். அவனுக்கு ஆண்பிள்ளை பிறந்த வைபவத்தை, அவர்கள் எல்லோரும் கொண்டாடுகின்றார்கள். மகிழ்ச்சியில் அங்கும் இங்குமாக ஓடுவோர்கள் சில பேர்,ஓட்டத்தினால் தடுக்கிக் கீழே விழுவோர்கள் சில பேர், மிகவும் சந்தோஷமாக கட்டி அணைத்து வாழ்த்துக்கள் சொல்பவர்கள் சிலர் பேர், "குழந்தை எங்கே?" என்று கேட்பவர்கள் சில பேர், சிறு பரைகளை கொட்டிக் கொண்டு ஆடுபவர்கள் சில பேர், பாட்டுப் பாடிக் கொண்டாடுபவர்கள் சில பேர், அப்படி மொத்தம் ஆயர்பாடி என்று சொல்லப்படும் கோகுலமே திருவிழாக்கோலம் பூண்டது. சின்னக் கண்ணன் பிறந்த காட்சியை , தம்முடைய அகக்கண்ணால் கண்டு, நமக்கு எல்லோருக்கும் எதுத்துச் சொல்கிறார் பாருங்கள் இந்த அற்புதமான ஆழ்வார்.
பேணிச்சீருடை பிள்ளை பிறந்தினில்
காணத்தான் புகுவார் புக்குப் பொதுவார்
ஆணொப்பார் இவன் எரில்லைகாண்
திருவோணத்தான் உலகாளும் என்பார்களே
விளக்கம்:ஆண்களில் சமம் ஆனவர் யாருமே இல்லை என்றும், திருவோணத்தில் பிறந்த (அந்த வாமனன்) குழந்தைக்கு வேறு யாருமே சமம் இல்லை என்று எல்லோரும் கண்ணனை கொண்டாடினர்.
உரியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்
நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்
செரிமென் கூந்தல் அவிழ்த்து திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயர்
விளக்கம்:கண்ணன் பிறந்த வைபவத்தைக் கொண்டாட, உரியடி நடத்துகின்றார் ஆயர்கள். அந்த உரிக்கம்பத்தின் மீது பாலும், நெய்யும் எரிந்து விளையாடினார் ஆயர்கள். ஆனால், எல்லோரும் தம்முடைய கூந்தலை அவிழ்த்து விட்டார்கள் - நெய்யும், பாலும் ஆகிய தலை முடியை உலர்த்த - அப்படியாக ஆயர்பாடி ஆயர்கள் எல்லோரும் கண்ணன் கொண்டாட்டத்தில் மூழ்கி இந்த உலக சிந்தகனை இழந்தனர்.
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை இருத்திடும்
ஒடுக்கிப்புலகில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்
விளக்கம்: கண்ணன்பால் கொண்ட தீராத அன்பினால், ஆழ்வார் யசோதயாகவே ஆகிவிட்டார் இங்கே. பிள்ளை பெற்ற தயார் எப்படி சொல்லுவாளோ , அதேபோல் இங்கு அவர் சொல்லுகின்றார். கண்ணனை படுக்க வைத்தால் , தொட்டில் துணி கிழியும் அளவிற்கு உதைப்பானாம் , எடுத்துக் கொண்டால் இடுப்பு வலிக்கும் அளவுக்கு கீழே தாவப் பார்ப்பான், ஆனால், இறுக்கிப் பிடித்துக் கொண்டாலோ, வயிற்றுக்குள்ளே பாயும் அளவுக்கு அமிழ்துவன். கண்ணனுடைய துடுக்குத்தனத்தால் , மிகவும் தளர்ந்து விட்டதாக யசோதை சொல்லுகின்றாள்.யசோதை தன்னுடைய தோழிகள் இடத்தில சொல்லுவது போன்று அமைந்த பாசுரம் இது.
என்ன அருமை பாருங்கள். 5 நிமிடங்களில் நம்மை அயற்படிக்கே அழைத்துச் சென்று விட்டார் ஆழ்வார்.
கண்ணனின் பாதாதி கேச வர்ணனை
சீதக்கடலுள் அமுத்தன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்து சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே
பவள வாயீர் வந்து காணீரே
விளக்கம்:குழந்தைக் கண்ணன், தன்னுடைய கால் கட்டை விரலை பிடித்து சுவைத்து உண்ணுகிறான். ஆழ்வார் அதை பார்த்து விட்டார் எல்லோரையும் அழைத்து, தன்னுடைய குழந்தையின் அழகைக் காணுமாறு கேட்டுக் கொள்கின்றார் ஆழ்வார். தேவகி வயிற்றில் பிறந்து , யசோடத்தை வீட்டில் வளரும் அந்தக் குழந்தை , தான் கள் விரலை உண்ணும் காட்சியை வந்து பார்க்குமாறு கோகுலத்துப் பெண்களை எல்லாம், அழைக்கின்றார் ஆழ்வார்.
திருத்தொட்டில் ஆடுதல்
மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்காட்டு
ஆணிப்பொன்னால் செய்த வண்ண சிறு தொட்டில்
பேணி உனக்கு பிரமன் விடுதந்தான்
மாணிக்குறளனே தாலேலோ
வையம் அளந்தானே தாலேலோ
விளக்கம்:பலவிதமான முத்தும், மணிகளும் கட்டிய பொன்னால் ஆன தொட்டில், ப்ரம்மதேவன் கொண்டு வந்து கொடுத்தான், கண்ணனை . அந்த தொட்டிலில் இட்டு, தாலேலோ என்று யசோதாயும், மற்ற ஆயர் பெண்களும் தாலாட்டு படுகின்றார்கள். ஆழ்வார் கண்ணன் இடத்திலே கொண்ட பக்தியின் மிகுதியால், கண்ணன் த்ரிவிக்ரம அவதாரத்தில், குள்ளமான (குறள்) உருவத்தில் பிறந்து உலகங்கள் இரண்டையும் அளந்த பெருமையை இங்கு மிக அழகாக்க காட்டுகின்றார்.
என் சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்
தன் சிறுக்கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்
அஞ்சன வண்ணனோடு ஆடலாட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மாமதீ மகிழ்ந்தோடிவா
விளக்கம்: ஆழ்வார் இங்கு கண்ணனைத் தம்முடைய சிறு குழந்தை, இன்னமுது, என்றும், அந்த குழந்தை தன்னுடைய சிறிய கைகளால் காட்டி காட்டி அழைக்கின்ற அந்த நிலவை, பணியில்/ மேகத்தில் மறையாமல் தம்முடைய குழந்தயுடன் விளையாட வருமாறு அழைப்பு விடுகின்றார்.
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யினும் என்மகன் முகம் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கடவாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்புலீ கடிதோடிவா
விளக்கம்: யசோதை, தன்னுடைய சிசுவின் மீது கொண்ட அளவற்ற அன்பினால், கண்ணன் கூப்பிட கூப்பிட, மதிக்காமல் வானத்திலே செல்லும் அந்த நிலவை இகழ்கின்றாள். கண்ணனின் அழகான முகத்திற்கு ஒவ்வாது - அந்த பௌர்ணமி சந்திரனின் முகம் என்கிறார் ஆழ்வார். தாய்மையின் உச்சத்தையே அடைந்து விட்டார் ஆழ்வார்.அது மட்டும் அல்ல - நிலவைக் கூப்பிட்டிக்கு, தான் குழந்தைக்கு கைகள் வழிப்பதற்குள் அங்கே சீக்கிரமாக வருமாறு கூறுகிறார்.
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டொரு நாள்
ஆலினிலை வளர்ந்த சிறுக்கனவன் இவன்
மேலெழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மாமதீ மகிழ்ந்தோடிவா
விளக்கம்: நிலா, தன்னுடைய குழந்தயை கண்டு கொள்வதில்லை என்று, எச்சரிக்கை விடுகிறாள் யசோதை. சின்னக் குழந்தை, என்று ஏளனமாகப் பார்க்க வேண்டாம், ஊழிக் காலத்தில் ஆலிலையில் பள்ளி கொண்ட பெருமை வாய்ந்தவன் இந்த பாலகன். அவனை மதிக்காமல் சென்று விடாதே - அவனுக்கு கோபம் வரும் அகில் எழுந்து உன்னைப் பிடித்துக் கொள்வான். எனவே மகிழ்வாக வந்து என்னுடைய குழந்தையுடன் விளையாடு என்று சொல்கின்றார் ஆழ்வார்.
சிறியனென்று என் இளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடை சென்றுகேள்
சிறுமைப் பிழைகொள்ளில் நீயும் உன் தேவைக்குரியைகாண்
நிறைமதி நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்.
விளக்கம்: தன்னுடைய குழந்தை சின்னக் குழந்தை என்று ஏளனமாக எண்ணி விட வேண்டாம் - அந்த இளம்சிங்கத்தின் பெருமையை மஹாபலி மன்னனிடத்தில் போய் கேட்டல் தெரியும் - அவன் எப்படி இரண்டு அடிகளில் பூமியையும், வானத்தையும் அளந்தான் என்று என்று யசோதை சொல்வதாக, ஆழ்வார் சொல்லுகின்றார்.சிறுமையை எண்ணி பரிபவம் கொள்ளாதே - உனக்கும் அவனுடைய உதவி வேண்டி வரும் , எனவே விரைந்து ஓடி வந்து விளையாடு என்கிறார் ஆழ்வார்.
செங்கீரை ஆடுதல்
வானவர் தாம் மகிழ வன்சகடம் உருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமது உண்டவனே
கானக வல்விளவின் காயுதிரக் கருதிக்
கன்றது கொண்டெறியும் கரு நிற என்கன்றே
தேனுகனும் முரணும் திண்திறல்வெந்நரகன்
என்பவர் தாம் மடியச் செருவதிரச்செல்லும்
ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ! ஆடுக ஆடுகவே
விளக்கம்: கிருஷ்ணா லீலைகளை எல்லாம் அப்படியே கூறுகின்றார் ஆழ்வார் இங்கு. குழந்தை வளர்ந்து ஒரு 5 மாதங்கள் கழித்து உட்கார்ந்து கொண்டு தலையை காட்டும் பருவம். கண்ணனின் பக்தியில், அன்பில் ஊறிய ஆழ்வார் இங்கு:
- சகடாசுரன் - ஒரு சக்கரத்தின் வடிவில் வந்த அரக்கனைக் கண்ணன் வதம் பண்ணின லீலை.
- பூதனை - மார்பகங்களில் விஷம் வைத்து கண்ணனைக் கொல்ல வந்த அரக்கி - அவளைக் கண்ணன் சம்ஹாரம் பண்ணின லீலை.
- வத்ஸாசுரன்- கன்று குட்டி யின் உருவத்தில் வந்த அரக்கன்.
- கபித்தசுரன்- மேல் கூறிய அரக்கனையும் , இந்த விளா மரத்தின் வடிவில் இருந்த அசுரனையும் ஒன்றாக சம்ஹராம் பண்ணினான் நம் கண்ணன்.
- முரன், நரகன் - நரகாசுரனையும், அவனுடைய சேனைத் தலைவன் முரனையும் கண்ணன் கொன்ற லீலை.
- தேனுகாசுரன் - கழுதை உருவத்தில் இருந்த அரக்கனை, கண்ணன் சம்ஹராம் பண்ணின லீலை.
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐதுநொய்தாக வைத்து *என்
ReplyDeleteமனந்த னுள்ளே வந்துவைகி வாழச்செய்தாய் எம்பிரான்!* பாசுர விளக்கம் வேண்டும்