சமஸ்க்ருதத்துக்கும் நம் தமிழுக்கும் நீண்ட நாள் தொடர்பு. சிவபெருமானுக்கு மிகவும் நெருங்கிய மொழி நம் தமிழ் மொழி. அதனால் தானோ என்னவோ, அகஸ்தியரை அனுப்பி தமிழ் வளர்க்க சொன்னார் நம் சிவபெருமான். சிவபெருமான் தானே இவருக்குத் தமிழ் கற்பித்து தென்னாட்டுக்குச் சென்று அதனைப் பரப்புமாறு ஆணை இட்டார் என்பது புராணம்.பொதிகை மலைக்கு வந்து, தமிழ் இலக்கணம் வகுத்து , கபிலர் பரணர் எல்லாரோடும் சங்கம் நிறுவி தமிழ் வளர்த்த பெருமை அவருக்கு உண்டு. அதே போல அத்யாத்ம கிரந்தங்கள் - ஸ்ரீ லலிதா நவரத்தின மலை போன்ற வற்றை இயற்றினார் அவர். ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் , த்ரிஷதி, அஷ்டோத்தரம் எல்லாம் அவருக்கு ஸ்ரீமத் லட்சுமி ஹயக்ரீவரால் உபதேசம் பண்ணப் பட்டது. அவர் கலசத்திலே இருந்து பிறந்தார் என்பதால் குறுமுனி, கும்ப முனி, காலசோத்பவர் என்றெல்லாம் பல பெயர்கள்.கலியுகத்தில் மக்கள் கஷ்டப் படுவார்கள் என்று தவம் புரிந்து ஸ்ரீ லலிதாம்பிக்யைன் ஆயிரம் நாமங்களை நமக்கு அருள பண்ணிய அவருக்கு நாம் எல்லோரும் எப்பொழுதும் கடன் பட்டிருக்கின்றோம்.
- வேதம் - அதர்வண வேதத்தில் அகஸ்த்ய சம்ஹிதை என்னும் பகுதியை இயற்றியவர்.
- பிரம்மாண்ட புராணம் - இந்தப் புராணத்தில் தான் இவர்சொன்ன லலிதா சஹஸ்ரநாமம் இடம் பெற்றுள்ளது
- இராமாயணம் - இராமருக்கு இவர் ஆதித்ய ஹ்ருதயம் என்ற ஸ்லோகத்தை உபதேசம் பண்ணினார்.
- சங்ககாலம் - தமிழ் இலக்கணத்தை தொல்காப்பியர் மற்றும் எல்லாருக்கும் கற்றுக் கொடுத்து அகத்தியம் என்ற கிரந்தத்தை இயற்றினார்.
- ஜோதிடம் - நாடி ஜோதிட சாஸ்திரத்தை இயற்றிய பெருமை கொண்டவர்.
- சித்த மற்றும் ஆயுர் வைத்தியம் - சித்த மருத்துவத்தில் ஒரு பெரும் பங்கு இவருக்கு உண்டு. முதல் சித்தராகக் கருதப் படுபவர். ஆயுர்வேதத்தில் அகஸ்திய சூத்திரம் என்னும் கிரந்தத்தை இயற்றியவர்.
- ஸ்லோகங்கள் - யோகா மீனாட்சி ஸ்தோத்ரம், லலிதா நவரத்தின மாலை , ஆதித்ய ஹிருதயம் மற்றும் பல அறிய ஸ்லோகங்களை இயற்றியவர்.
லோபாமுத்திரை என்ற அவருடைய பத்தினி , ஸ்ரீமத் லலிதாம்பிகையின் சிறந்த பக்தை என்று சொல்லப் பட்டுள்ளது புராணத்தில்.
சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த முனி, சித்த வைத்தியத்தை அளித்த முனி, கும்ப முனி என்றெல்லாம் போற்றப் பெரும் அவர், நம் தமிழகத்திற்கும், தமிழுக்கும் செய்த நன்மைகளுக்காக அவருக்கு அநேக கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள் பண்ணிக்கொண்டு இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment