Thursday, July 21, 2022

thirukkural

அந்தணர் என்னும் சொல் திருக்குறளில் மூன்று இடத்தில உள்ளது:

1.1.1 கடவுள் வாழ்த்து
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 8

1.1.3. நீத்தார் பெருமை
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 30

2.1.17 செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். 543

2.1.18 கொடுங்கோன்மை
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

--------------------
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 28

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. 590

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. 695

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. 847


நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும். 1254

பனுவல்
 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. 21

பார் ப்பான்
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார் ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134





Sunday, February 27, 2022

என்னப்பனே நரசிங்கா...

என்னுயிர் நண்பன் நோயுற்றான்   என்றறிந்து மாளாத்துயர் கொண்டேன்! என்நண்பனைக் காத்தது போல்   ஏழுலகம் காத்து என்னையும் காத்தருள வேண்டுமே ! 

என்னப்பனே நரசிங்கா! என்சொல்வேன் நின் பெருமை! 

என்னாவி இந்திரியமும் என்னகங்காரம் மனமும் ஐம்பொரியும் நினக்கே அளித்திட்டேனே ! 

என்னப்பனே நரசிங்கா! என்சொல்வேன் நின் பெருமை!

அரியாய்  மனிதனாய் அங்கிங்கிலாதபடி எங்குமாய் ஏழுலகமாய்பத்தர்தம்  மனதுள் நின்று ஆள்பவனாய் என்னையும் ஆட்கொண்ட 

என்னப்பனே நரசிங்கா! என்சொல்வேன் நின் பெருமை!

Thursday, February 17, 2022

கற்பகத் தருவும் .....

 கற்பகத்    தருவும் காமதேனுவும் வேண்டுமென்றேனே

பற்பவனத்தில் உரை அன்னை காமாட்சி இடத்திலே

அற்ப சுகங்கள் அன்றி நிரந்தர வீடுபேறும் இவ்வுலகில்  

சொற்பமல்லா செல்வங்கள் நிறைந்திட  எந்தாயும் 

தானே எம்குலத்தில்  உதித்தாளோ எந்தமக்கை உருவினிலே!

பொற்கொடியாள் எந்தமக்கை தானிருக்க இவ்வுலகில் 

கற்பகத்தருவும் காமதேனுவும் வேண்டேனே!

என்தமக்கை மணிவயிற்றில் வந்துதித்த மணிவண்ணன் 

குட்டிக்கண்ணன் உடனிருக்க இனியொன்றும் வேண்டேனே!

பற்பமுகத்தாள் எந்தமக்கை பொறுமையில் பூமிஒத்தாள் 

எந்தமக்கை உடனிருக்க இனியொன்றும் வேண்டேனே! 

முப்பிறப்பின் நற்பயனோ இப்பிறப்பில்  செய்தவமோ 

எப்ப்பிறப்பிலும் இனி எனக்கு தாயாய் தமக்கையாய் 

எந்தமக்கை  உமையே  வாய்த்திட வேண்டுவனே!

என்ன தவம்  செய்தேனோ! என்ன தவம் செய்தேனோ! 

 

Thursday, December 2, 2021

எந்தாய் மணிவயிற்றில் வந்துதித்த.....

 எந்தாய் மணிவயிற்றில் வந்துதித்த மாணிக்கமே! என்னன்பு வளர்த்த என்தாயே!என்னை சிங்காரித்து சீவி அழகு பார்த்த என்னன்புத் தெய்வமே !

என்னகத்தில் என்றும் இருந்து என்னை வழிநடத்தும் என்னிதய தெய்வமே! ஒளி சூழ் திருமுகம் பெற்ற மாதர்க்கரசியே!

கற்பக தருவும் காமதேனுவும் வேண்டும் என்றெனக்குஇவ்வுலகில் நின்னை என் தமக்கையாய் செய்தானோ நான்முகனும்   ! 

கடைக்கண்ணால் நோக்கி என்னை கருணை  செய்யும் காமாட்சி தன்னுருவம் நின்னுருவம் தன்னில் கண்டேனே! 

கற்பகக் களிறும் காமதேனுவும் காமாட்சி தன் கடைக்கண்ணும் ஒருசேர பெற்ற என்னக்கா - என்சொல்வேன் நின் பெருமை!

பொறுமையில் பூமியாய் பெருமையின் சிகரமாய் அருமையில்என்தாயாய் ஒப்பில்லாப் புகழ்பெற்று  விளங்கும் என்னக்கா!

என்சொல்வேன் நின் பெருமை! ஏழ்பிறப்பிலும் என்னக்காவாய் வாய்த்தல் வேண்டும் என்று நான்முகனை கோரினேன்!

செந்தாமரை அமர்ந்த திருவே! வெந்தாமரை அமர்ந்த வாணியே!மலையரசன் மகளே ! என்னக்கா ! என்னுள் இருந்து எனையாளும்  அன்னையே! 

இனி வேறில்லை வார்த்தைகள் என்நாவில் நின்பெருமை பாடிடவே!சந்திர சூரியர்  இருக்கும் வரையில் வாழும் நின் பெருமை! 

Friday, August 14, 2020

Spoken Sanskrit...

 कीदृश भोजनं खादितुं  इच्छसि त्वं ?

What kind of food do you like to eat?

अहं  अन्नं खादितुं इछामि |

I like to eat rice.

अध्भुतं | अन्नेन सहा कीदृश व्यञ्जनानि खादितुं  इच्छसि त्वं |

Great! Along with rice what do you like to eat?

अनॆन सहा आज्यं, सूपं, शाकं , उपसेचनम्, उपदंशं, क्वथित, विविध व्यञ्जनानि ,रक्तफलस्य रसं, पायसान्नं, च ददि खादितुम् इच्छामि |

Along with rice I like to eat ghee, dhal, vegetable(curries), chutney, sambhar, tomato rasam, rice pudding and curd.

समीचीनं! भोजनान्तरं त्वं किं करोसि?

Great! After meals what do you do?

भोजनान्तरं अहं हस्तं च पादौ प्रक्षालयामि !

After meals I wash my hand(s), legs.

अध्भुतं! तदनन्तरम् किं करोसि?

great! And after that what do you do?

तदनन्तरम् थम्बूलम् लभति चेत् अहं एला लवङ्ग पूकी फल मुक्ता चूर्णेन शा तम्बूलवल्लि दलानि चर्वयामि |

After that if available I will chew betel leaves with cardamom, cloves, sea-shell calcu, & betel nuts.

परमाध्भुतं! तत् पश्चात् किं करोसि ?

Very excellent. And after that ?

तत् पश्चात् संयम प्राप्नोति चेत्  विश्रामं करोमि !

After that I will take rest for sometime.