Friday, January 27, 2017

தர்ம சாஸ்திரத்தில் பசு மாடுகளை பற்றி...



4.59 ந  வாராயேத்  காம் தயந்தீம் ந  சசாக்ஷிதா  கஸ்ய  சித் |
ந  திவி இந்திராயுதம் திருஷ்டவ   கஸ்ய  சித்  தர்ஷயேத்  புத || 

न  वारयेद्  गां  धयन्तीं  न  च अचक्षीत कस्य  चित्  |
न दिवीन्द्रायुधं दृष्ट्वा   कस्य  चिद्  दर्शयेद्  बुधः ||

தன் தாய்ப் பசுவிடம் பால் அருந்தும்   கன்றுக்கு இடையூறு செய்யக் கூடாது.  கண்டும், காணாத மாதிரி இருந்து விட வேண்டும் - யாரிடமும் தான் கண்டத்தைக் கூறக்   கூடாது. அதே போலத் தான் வானவில்லும் (வட மொழியில் இந்திர தனுசு, இந்திர ஆயுதம் என்று பல பெரியார்கள் அதற்கு).
என்ன அழகு பாருங்கள்.

4.72  ந  விகார்ஹய  கதாம்   குர்யாத்  பஹிர்மால்யம்  ந  தாராயேத் |
காவாம்  ச யானம்  ப்ருஷ்டேந  ஸர்வதைவ விகர்ஹிதம் ||

 न विगर्ह्य कथां कुर्याद्  बहिर्माल्यं  न  धारयेत्  |
 गवां  च  यानं  पृष्ठेन  सर्वथैव  विगर्हि तम्   ||

சாஸ்திர விஷயங்களையும், மற்ற தர்ம விஷயங்களையும் பற்றி தேவை இல்லாமல் கோபமாக வாதாடுவது, மலர் மலைகளை அணிந்து கொண்டு வெளியே செல்வது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். அதே போல, மாடு மற்றும் காளைகளின் முதுகில் ஏறிக் கொண்டு சவாரி செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். (விளையாட்டாகக் கூட மாடு / களை முதுகில் சவாரி செய்ய கூடாது).

4.231 வாசோதஷ்      சந்திரசாலோக்யம்ஷ்  அஷ்விஸலோக்யம் அஸ்வதஹ்  |
அநடுஹாஹ்  ச்ரியம்    புஷ்டம்  கோதோ    ப்ரதனஸ்ய  விஷ்டபம்  ||

वासोदश् चन्द्र सालोक्यं अश्विसालोक्यम् अश्वदः ।
अनडुहः  श्रियं  पुष्टं  गोदो  ब्रध्नस्य  विष्टपम्  ॥

இங்கு மனு மிகவும்  அழகாக, பலவிதமான தானங்களைப் பற்றிக் கூறுகின்றார்.
  1. துணி தானம்  - சந்திர லோகத்தை அடைவார்கள் 
  2. குதிரை தானம் - அஷ்வி(ந) லோகத்தை அடைவார்கள்
  3. காளை தானம் - செல்வம், வெற்றி பெறுவார்கள் 
  4. மாடு தானம் - சூரிய லோகத்தை அடைவார்கள்
எல்லா தானங்களிலும்   மிக உத்தமமான தனமாக கோ தானத்தை கூறி உள்ளார் மனு. நம்முடைய கலாச்சாரத்திற்கு மிகவும் நெருங்கிய விலங்கு மாடு மற்றும் காளைகள் எனறு புரிந்து கொள்ள வேண்டும்.

5.8   அநிர்தஷாயா கோஹ்  க்ஷிரம்  ஒஉஷ்ட்ரம்  ஏகஷபம் ததா
ஆவிகம் சந்தினி க்ஷிரம்  விவிதசாயஷ்  ச   கோஹ்  பய  ||

अनिर्दशाया गोः  क्षीरम् औष्ट्रम् ऐकशफं  तथा  |
आविकं  सन्धिनीक्षीरं विवत्सायाश्च  गोः  पयः ||

கன்றினை ஈன்று பத்து நாட்களுக்கு உள்பட்ட பசுவின் பால்,(சீம் பால்), காளை உடன் சேரத் தயார் நிலையில் (இன சேர்க்கை) இருக்கும் மாடு, தன்னுடைய கன்றினை இழந்த மாடு - ஆகிய மூன்று  வகையான மாடுகளின் பாலை அருத்தக் கூடாது என்கிறார் மனு. சீம்பால், கன்றுக்கே உரியது (அதனை நாம் திருடிக் குடிக்கக் கூடாது), கன்றை இழந்த பசுவின் முன்னால் பொம்மைக்   கன்றினை வைத்துப் பால் கறப்பது மிகவும் பாவம், அதே போல இன சேர்க்கைக்குத் தயாராகும் மாட்டின் பாலும் கறப்பது தவறு. அது மட்டும் அல்லாமல் ஒட்டகம் , செம்மறி ஆடுகள், மற்றும் காலில் ஒற்றை நகம் உள்ள மிருகங்களின் பாலை அருந்துவது தடுக்கப் பட வேண்டிய விஷயம் என்று சொல்கின்றார் மனு.  என்ன அற்புதம் பார்த்தீர்களா?

5.87 நாரம் ஸ்ப்ருஷ்ட்வா அஸ்தி  சஸ்நேஹம்  ஸ்நாத்வா  விப்ரோ  விஷுத்யாதி  |
ஆச்சம்ய ஏவ து  நிஹஸ்நேஹம்  காமா லபியார்க்கம்   இக்ஷ்ய  வா ||

नारं  स्पृष्ट्वा अस्थि  सस्ने हं स्नात्वा  विप्रो  विशुध्यति  |
आचम्यैव  तु  निःस्नेहं  गाम् आलभ्यार्क म् ईक्ष्य  वा  || 

எண்ணெய் பசையுடன் இருக்கும் எலும்பினைத் தொட நேரிட்டால் குளிக்க வேண்டும். அப்படி எண்ணெய் பசை இல்லாத எலும்பினைத் தொட நேரிட்டால், மூன்று முறை தண்ணீர் அருந்தி (ஆசமநீயம்) , பிறகு பசு மட்டை தொடவோ அல்லது சூரியனைப் பார்க்கவோ வேண்டும்.

இதில் இருந்தே, மாடுகள் எவ்வளவு புனிதமாகக் கருதப் படுபவை என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

5.124  संमार्जन उपाञ्जनेन सेकेण उल्लेखानेन  च  |
गवां  च  परिवासेन  भूमिः  शुध्यति  पञ्चभिः   ॥

பூமி(வீடு,வாசல் மற்றும் நாம் தாங்கும் இடங்கள்) ஐந்து விதமாக சுத்தம் செய்யப்படும் என்கிறார் மனு.

  1. நன்கு சுத்தமாகப் பெருக்குதுல் 
  2. மாட்டின் சாணியை நிலத்தின் மீது பூசி மெழுகுதல் 
  3. மாட்டின் கோமயம் அல்லது பாலைக் கொண்டு தெளித்தல்
  4. வெடித்துக் கிடைக்குமாயின், நன்றாக சுரண்டி விடுதல் 
  5. பசு மாட்டுக் கூட்டம் வந்து இரவு பகல் தங்குதல் 

நம்முடைய பழங்கால  (இன்றும் கூட) சமுதாயத்தில் மாடு மற்றும் மாட்டில் இருந்து கிடைக்கும் போர்டுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்தது என்று இதன்மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment