Sunday, January 8, 2017

உடையவர் இராமானுஜர் 1000ஆம் ஆண்டு சிறப்புக் கட்டுரை

இராமானுஜர் , நம்முடைய தமிழ் மண்ணிலே தோன்றி ஆயிரம் ஆண்டுகள் அகி விட்டன. இவர் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை. இன்றைக்குக் கோயில் வழிபாட்டில் தமிழ் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது என்றால் - அதற்கு காரணம் நம் இராமானுசர் தான் என்று சொன்னால் மிகை ஆகாது. தமிழகம் மட்டும் அல்லது - ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இறைவன் வழிபாட்டில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தந்து, ஆழ்வார்கள் பாடிய தெள்ளு தமிழ்ப் பாசுரங்களை பாட வைத்த பெருமை இவர் ஒருவருக்கே சேரும். இன்றைக்கு தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு , ஆந்திராவில் வசிக்கும் மக்கள் கூட, திருப்பாவை  படிக்கும் அளவுக்கு தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தவர் நம் ராமானுஜர் ஒருவரே.

1000   ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பார்ப்பனர்களும் மற்றவர்களும் பிரம்ம சூத்ர பாஷ்யங்கள் , வேதங்கள் அனைத்தும் உள்ள மொழி சமஸ்கிருதம் என்பதால், அதுவே தேவ பாஷை என்றும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் கூறி வந்தனர். இராமானுசர் - இறைவன் தானே உகந்து ஆழ்வார்கள் வாயில் , பாடவைத்து அனுபவித்த மொழி நம்முடைய தமிழ் மொழி தான் என்று நம் தூய தமிழ் மொழியின் பெருமறையை இந்த உலகிற்குக்  காட்டினார்.  நம்முடைய மரபிலே, ஒருவர் தம்முடைய சித்திதாந்தம்  என்று சொல்லப் பெறும் மரபை நிலை நாட்ட வேண்டும் என்றால், பிரஸ்தானத்ரயம் என்று சொல்லப் பெரும் மூன்று கிரந்தங்கள் - பாத்து முக்கிய உபநிடதங்கள் , பிரம்ம சூத்திரம், பகவத் கீதை ஆகியவற்றிற்கு  உரை எழுத வேண்டும். அந்த உரையானது , சமஸ்கிருதம் என்ற வடமொழியிலேயே அமைத்தல் வேண்டும். ஆழ்வார்கள் கூறிய இறை அன்பு மற்றும் பரிபூரணமான சரணாகதி ஆகிய விடயங்களை ஆதரமாகக் கொண்டு - அந்த மூன்று  கிரந்தங்களுக்கும் பாஷ்யம் அல்லது விரிவுரை எழுதினார். என்னடா இது - தமிழ் நூல்களுக்கு சம்ஸ்கிருதத்தில் உரை எழுதினார் என்று நாம் ஆச்சர்யாப் படுவோம். ஆனால் பக்தி மார்க்கம் என்று சொல்லப் பெறும் , இறை அன்பு நெறியை முதன்மையாகக் கொண்டு ஆழ்வார்கள் பாடிய பாடல்களை இந்த உலகிற்கு உணர்த்தவும் தம்முடைய விஷிஷ்ட அத்துவைத சித்திதான்தந்தை  நிலை நாட்ட இராமானுசர் அந்த உரையை எழுதினார்.

அப்படி வட மொழியில், உரை எழுதிய இராமானுசர் ஆழ்வார்கள் பாடிய திருப்பதிகள் (திவ்ய தேசங்கள்)  மற்றும் ஆழ்வார்கள் பாடிய பாடல்களை பாடுவதே நம் எல்லோருடைய பிறவி நோக்கம் என்று சொன்னார். பொதுவாக வட மொழி நூல்களுக்கு, தமிழில் உரை எழுதுவார் - ஆனால் நம் ராமானுஜர் மிகவும் எதிர் மறையாக தமிழ் பாசுரங்களுக்கு வடமொழியில்  ஸ்ரீ பாஷ்யம் என்னும் உரையை எழுதி - நம்முடைய தமிழ் மொழியின் பெருமையை நிலை நாட்டினார் - என்ன பெருமை என்று பார்த்தீர்களா ?

திருமகள் கேள்வனாகிய எம்பெருமான், திருமால் பள்ளி கொண்டு இருக்கும் அந்த ஆயிரம் தலை கொண்ட ஆதிசேடன் என்று சொல்லப்பெறும் பாம்பு தான் இந்தக் கலியுகத்தில் இறை அன்பையும், பரிபூரணமான சரணாகதி மார்கத்தையம் உலகிற்கு உணர்த்த இராமானுஜராகப் பிறவி எட்டுத்திட்டார் என்பார்கள் பெரியோர். அப்படிப் பட்ட நம், இராமானுஜருக்கு எத்துனை திருநாமங்கள் என்று பார்ப்போமா ?
  1. இளையாழவார்  - இராமாயணத்தில் இராமனுக்குத் தம்பியாக்கப் பிறந்தமையால்  இவருக்கு இந்தப் பெயர்.
  2. இராமானுஜர் - வடமொழியில் அனுஜா என்றால் தம்பி என்று பொருள் படும். எனவே இராமானுஜன் என்றால் இராமானுக்குத் தம்பி என்று பொருள் படும். காஞ்சி வரதராஜப் பெருமாள் இவருக்கு கொடுத்த திருநாமம்.
  3. யதிராஜர் - யதி சென்றால் நீத்தார் அல்லது சன்யாசி என்று பொருள். சந்நியாசிகளுக்குக்கெல்லாம்  அரசரானாகத் திகழுபவர் என்று பொருள்.
  4. உடையவர் - திருவரங்கத்து எம்பெருமானால் கொடுக்கப் பெற்ற திருப்பி பெயர்.
  5. இலக்ஷ்மண முனி  - இராமானுக்குத்தம்பியாகிய இலக்குவனைக் குறிக்கும் பெயர்.
  6. கோதக்ராஜர் - ஆண்டாளால்  கொடுக்கப் பெற்ற நாமம் . ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் அண்ணலே என்று அழைக்கப் பெற்றமையால் இந்தப் பெயர் பெற்றார்கோதை + அக்ராஜ (வடமொழியில் அண்ணன்)  .
  7. அண்ணல் - ஆண்டாளுக்கு அண்ணன் என்று பொருள். 
  8. பாஷ்யக்காரர்   - காலை மகள் ஆகிய சரஸ்வதியால்  கொடுக்கப் பெற்ற பெயர்.
  9. திருப்பாவை ஜீயர்  - திருப்பாவைப் பாசுரங்களை பாடிக் கொண்டு , பெரிய நம்பிகள் மகளை நப்பின்னையாகக் கண்டமையால் இந்தப் பெயர் பெற்றார்.
  10. அப்பனுக்கு  சங்காழி  அளித்த  பெருமாள் - திருமலையுடைய  பெருமாளுக்கு, திருப்பதியில் சங்கும், சக்கரமும் அளித்த பெருமை கொண்டவர்.
  11. எம்பெருமானார்  - திருக்கோட்டியூர் நம்பிகளால் அளிக்கப் பெற்ற திருநாமம். 
என்ன பெருமை  பார்த்தீர்களா? இது மட்டும் அல்ல. இன்னும் இருக்கின்றது. ஜாதி பேதங்களை ஒழிக்க மிகவும் பாடு பட்டவர். தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய பிரதேசங்களில் கோயில்களை நிறுவி அங்கு தமிழ்ப் பாசுரங்களை ஒலிக்கச் செய்த பெருமை கொண்டவர். தீணடமையை   ஒழிக்க, எல்லாக் குலத்தவர்களும் ஆலய பிரவேசம் செய்யலாம் என்று எடுத்துச் சொன்ன பெருமை கொண்டவர்.

அதே போல, இவ்வளவு பெரிய இந்த ஆசிரியனுடைய பெருமையைக் கூற வேண்டும் என்றால், அவருக்கு எத்துணை ஆச்சார்யர்கள்  இருந்தனர் என்று பாருங்களேன்:
  1. திருக்கச்சி நம்பிகள் - காஞ்சிபுரத்தில் இவருக்கு  வைணவத்தை அறிமுகப் படுத்தியவர் .
  2. பெரிய நம்பிகள் - இவரை பூரணமான வைணவனாக ஆக்கி, சமாஸ்ரயணம் என்னும் ஐவகைச் சடங்கை செய்து வைத்தவர்.
  3. திருக்கோட்டியூர் நம்பிகள்   - திருவெட்டெழுத்தின் உணைமயான பொருளை இவருக்கு ஓதியவர்.
பழங்காலத்தில் காஷ்மீர் நகரத்தில் சம்க்ருத பண்டிதர்கள் நிறைந்து இருந்தனர். எப்படி, மதுரை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றம் நடத்துவர்களையோ, அப்படி, காஷ்மீர் பண்டிதர்களிடத்திலே சென்று அரங்கேற்றுவர்கள்சம் சம்ஸ்கிருதக் கவிதைகளை. காஷ்மீர் நகரத்தில் மிகவும் பிரசித்தி பெட்ரா சரஸ்வதி ஆலயமும் இருந்தது. இராமானுசர், அதனால் போதாயன வ்ருத்தி என்னும் நூலைப் பெற காஷ்மீருக்கு தம்முடைய சிஷ்யர் கூரேசருடன் அங்கு சென்றார்.

காஷ்மீர்  சரஸ்வதி   தேவியே ராமானுஜருடைய , பெருமையையைப் போற்றி , அவரை பாஷ்யகார என்று அழைத்தாள். வாடா மொழியிலே, பாஷ்ய காரா - என்றால், (ப்ரம்ம சூத்திரம், தசோபநிஷடங்கள், பகவத் கீதை எனப்படு பிரஸ்தானத்ரயம் ) விளக்கவுரை எழுதியவன் என்று பொருள் படும்.

இப்படியாகத் தானே 120 வருடங்கள் வாழ்ந்தார் நம் இராமானுஜர். பல விதமான சாதனைகளைக்கும் அற்புதங்களையும் நிகழ்த்தினார் நம் இராமானுஜர். கர்நாடடகத்தில் ஜைன சமயத்தவருடன் நிகழ்ந்த வாதத்தில், தன்னுடைய ஆயிரம் தலை கொண்ட ஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டார். மேலுகோட்டை என்று சொல்லப் படும் க்ஷேத்ரத்தில் , உள்ள செல்வா நாராயணப் பெருமல்ல, தானே நடந்து வந்து இராமானுஜருடைய துடை மீது ஏறி நின்று கொண்டார். இது போல இவர் செய்த அற்புதங்கள் எண்ணில் அடங்காதவை ஆகும்.

இராமானுஜர் மேலுக்கோட்டை என்னும் ஊரை விட்டு வரும் பொழுது, அந்த ஊர் மக்களுக்கு, அருள் வழங்கி, தன்னுடய்ய ஓவர் திருஉருவாகி சிலையை நிறுவி, அதனை, வழிபடுமாறு ஆசி வழங்கினார். அதே போலத் தாம் உதித்த ஊராகிய ஸ்ரீபெம்புதூர் என்னும் ஊரிலிம் (தான் உகந்த திருமேனி) அவருடைய சிலையை நிறுவினார்.அதே போலத்தான், இராமானுஜர் 120  ஆண்டுகளுக்குப் பிறகு, மறைந்த பிறகு திருவரானந்தனும், பெரிய பிராட்டியும் அவருடைய திருமேனியை, அப்படியே என்னை, கற்பூரம் சேர்த்துப் பராமரிக்கும் படி ஆணை இடர்கள். எம்பெருமான் அணைப்பு படி, அவருடைய உடல் இன்றைக்கும் திருவரங்கத்துக்கு கோயிலில் பராமரிக்கப் பட்டு வருகிறந்து. அப்படி அகத்தி தானே அவருக்கு இந்த உலகில் மூன்று திருமேனிகள் - தன உகந்த திருமென்ட், தமருகந்த திருமென்ட் , தம் அனா திருமேனி.



இதனை விட பெருமை வாய்ந்த ஒரு மனிதனை, நம் தமிழகம் கண்டிருக்கவே முடியாது. இந்த உலகில் உள்ள எல்லா மனிதர்களும் இறைவனின் அடிமைகளே என்று சர்வ ஜன சமானத்துவம் எனப்படும் சுய மரியாதையை   நம்மகுப் போதித்து, இறைவனை அடைய ஒரே மார்க்கம்  பக்தி தான் என்று ஆழ்வார்கள் கூறிய விஷயத்தை நமக்கெல்லாம் எடுத்துக் கூறி இன்றளவிலும் திருவரங்க க்ஷேத்ரத்தில் இருந்து கொண்டு உலகில் உள்ள எல்லோரையும் அருள் செய்யும் இராமானுஜர் பெருமை அளவற்றவை.

No comments:

Post a Comment