श्रीमत् आदिशंकारचार्य विरचिथ मातृ पञ्चकं
தன்னுடைய அன்னையை விரும்பாத குழந்தை இந்த உலகத்தில் இருக்கவே இருக்காது. நான்கு வேதங்களையும் கரைத்துக் குடித்து, தன்னுடைய எட்டாவது வயதிலே சன்யாசம் வாங்கிக்கொண்ட ஆதி சங்கரர், தாய்மையின் பெருமையைப் பற்றியும் , தாயைப் போற்றியும் எழுதி இருக்கின்ற இந்த ஸ்லோகத்தை, வட மொழியில் மாத்ரு பஞ்சகம் - அன்னையைப் பற்றிய ஐந்து பாடல்கள் என்று கூறுவார்கள். அந்த மகானின் வாயில், தாய்மையின் பெருமையைப் பற்றிக் கேட்டுக் கொள்வோமா?
आस्तं तावदियं प्रसूतिसमये दुर्वारशूलव्यथा
नैरुच्यं तनुशोषणं मलमयी शय्या च संवत्सरी |
एकस्यापि न गर्भभारभरणक्लेशस्य यस्याक्षमः
दातुं निष्क्रितिमुन्नतोपि तनयस्तस्यै जनन्यै नमः ||
ஒரு குழந்தயைப் பெற்று எடுக்க தாயானவள், தன்னுடைய கர்ப காலத்திலும், பிரசவ காலத்திலும் மிகுந்த அவஸ்தைகளைப் படுகின்றாள். அதன் பிறகு குழந்தை பிறந்து ஒரு வருடம் வரை அதனுடைய மல, மூத்திராதிகளை எல்லாம் சுத்தம் செய்து கஷ்டப் படுகின்றாள். அப்படிப் பிறந்த அழகிய ஒரு மகன்(மகள்) எத்துணை பெரியவன் அனாலும் தன்னுடைய தாய் செய்த தியாகங்களை ஈடு காட்டவே முடியாது. அப்படிப் பட்ட மஹிமை பொருந்திய , தாய்க்கு வணக்கங்கள் என்கிறார். தாய்மையின் பெருமையை இதனை விட சிறப்பாக யாராலும் சொல்லவே முடியாது.
गुरुकुलामुपसृत्य स्वप्नकाले तु दृष्ट्वा
यतिसमुचितवेशं प्रारुदो मां त्वमुच्चैः |
गुरुकुलमथ सर्वं प्रारुदत्ते समक्षं
सपदि चरणयोस्ते मातरस्तु प्रणामः ||
சங்கரருடைய தாய்க்கு அவர் ஒரே மகன். கணவனும் இல்லை- அந்தக் குழந்தை தான் கதி அவளுக்கு. அப்படி இருக்கையில் தன் மகன் குருகுலத்தில் வேதம் படித்துக் கொண்டிருந்த வேளையில், அவன் சன்யாசி (யதி) ஆகப் போவதாக கனவு கண்டு, - ஒரே ஓட்டமாக குருகுலத்திற்குச் சென்று விட்டாள் அந்தத் தாய். அவளுடைய அழுகைக் குரலைக் கேட்டு, குருகுலதத்தில் இருந்த குழந்தைகள் எல்லோரும் அழுதார்களாம். அத்துணை பாசம் கொண்ட , உன்னுடைய திருவடிகளுக்கு என் வணக்கங்கள். என்ன அருமை பாருங்கள் ? தன்னுடைய தாய் இறந்த பொழுது ஆசார்யர் வரும் காலத்தில் பாடிய பாடல் ஆன படியினாலே, தன் இளமைப் பருவத்தில் தன் தாயுடன் நடந்த நிகழ்வுகளை எல்லாம் அழகாக நினைவு கூறுகின்றார்.
न दत्तं मातस्ते मरणसमये तोयमपिवा
स्वधा वा नो दत्ता मरणदिवसे श्राद्धविधिना |
न जप्त्वा मातस्ते मरणसमये तारकमनु-
रकाले सम्प्राप्ते मयि कुरु दयां मातुरतुलाम् ||
ஒருவர் சன்யாசம் வாங்கிக் கொண்டால், அவருடைய வம்சத்தில், ஏழு தலைமுறைக்கு முன்னோர்கள் மோக்ஷ கதி (வீடுபேறு) அடைவார்கள் என்பது சாஸ்திரம். அதனை எல்லாம் தெரிந்த பொழுதிலும் தன்னுடைய தாய் முன், ஒரு சிறு பிள்ளையாக மாறி விட்டார் நம் சங்கரர். அன்னையே, நீ மரணம் அடையும் பொழுது, உனக்கு கங்கை நீர் முதலானவற்றை நான் கொடுக்கவில்லை. அதே போல உனக்கு விதிப்படி மாசியங்கள், முதல் ஆண்டு சிரார்த்தம் போன்றைவைகளை செய்ய முடியாத சன்யாசி அகி விட்டேன். உன் உயிர் பிரியும் நேரத்தில் உன் காதுகளில் இராம தாரக மந்திரத்தை சொல்ல முடியவில்லை. மிகவும் கால தாமதமாக வந்திருக்கிறேன். அன்னையே! என்னையும் மன்னித்து விடு என்று கூறுகின்றார். தாய் மீது உள்ள அன்பின் சிகரத்தையே தொட்டு விட்டார் நம் சங்கரர்.
मुक्तामणि त्वं नयनं ममेति
राजेति जीवेति चिर सुत त्वं |
इत्युक्तवत्यास्तव वाचि मातः
ददाम्यहं तण्डुलमेव शुष्कं||
அன்னைமார்களுக்குத் தங்களுடைய குழந்தைகளைக் கொஞ்சுவது மிகவும் பிடித்த விடயம். சங்கரரின் தாயும் அதற்கு விதி விலக்கு இல்லை. "என் கண்ணே ! என் கண்ணின் கரு விழியே! இராசா ! என் உயிரே! என் மகனே!" இப்படி எல்லாம் சொல்லி, என்னைக் கொஞ்சிய அதை வாய்க்கு, அம்மா காய்ந்து, வறண்ட வெறும் அரிசியைத் தான் நான் தருகிறேன்! என்று தன் தாய்க்கு வாய்க்கரிசி போட்டதனைக் கூறுகின்றார் ஆச்சாரியார்!
अम्बेति तातेति शिवेति तस्मिन्
प्रसूतिकाले यदवोच उच्चैः |
कृष्णेति गोविन्द हरे मुकुन्द
इति जनन्यै अहो रचितो अयं अञ्जलिः ||
பிரசவ காலத்தில், "அன்னையே! தந்தையே! சிவனே! கிருஷ்ணா! கோவிந்தா! ஹரே முகுந்தா!" என்றெல்லாம், வலி பொறுக்க முடியாமல் சத்தம் எழுப்பினாயே! அப்படிப் பட்ட உனக்கு, என்னுடைய இரு கைகளையும் கூப்பி (அஞ்சலி) வணக்கம் செய்து கொளிறேன் அம்மா! என்று கண்ணீர் ததும்பக் கூறுகின்றார்.
பொதுவாக எல்லோருக்குமே, இந்தப் பாடலைப் படித்தால், தங்கள் தாய் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனைகள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்து, கண்களில் கண்ணீர் வந்து விடும். தாயைப் பற்றிய பாடலை, நம் தாய் மொழியில் கேட்பது மிக மிக அருமை.
No comments:
Post a Comment