Monday, January 30, 2017

தர்ம சாஸ்திரத்தில் பசு வதைச் சட்டம்..

பசுக்களைக் கொல்லுதல் என்பது நம்முடைய மதத்திலே மிகப் பெரிய பாவம். அதனை கோ ஹத்தி அல்லது பசு கொலை என்று சொல்லுவார்கள். தெரிந்தோ   தெரியாமலோ, பசுவை ஒருவன் கொன்று விடுவானாயின், அவனுக்கு என்ன தண்டனை என்று மனு இங்கு கூறுகின்றார்.



११.१०८ उपपातक संयुक्तो  गोघ्नो  मासं  यवान्   पिबेत्  |
कृतवापो  वसेद्  गोष्ठे  चर्मणा  तेन  संवृतः ||

11.108 பசு கொலை (உபபாதகம்) செய்தவன், முதலில் தன்னுடைய மேனியில் உள்ள உரோமங்களை எல்லாம் க்ஷவரம் செய்து கொண்டு, முதல் ஒரு மதம் வரை வாற்கோதுமை (பார்லி) தண்ணீரைக் குடிக்க வேண்டும். அப்படி பசு வதை அல்லது கொலை செய்தவன், தான் கொன்ற பசுவின் தோலை, தன் ஆடையாக அணிந்து கொண்டு, மாட்டுத் தொழுவத்தில் வசிக்க வேண்டும்.

११.१०९ चतुर्थकालम् अश्नीयाद् अक्षारलवणं इतम् |
गोमूत्रेण आचरेत्  स्नानं  द्वौ  मासौ  नियतेन्द्रियः ||

11.109  அது மட்டும் அல்ல - அப்படிப் பட்ட பாதகன், இரண்டு மாத காலத்திற்கு உப்பு (லவணம்). காரம்  இல்லாத உணவை நான்கு வேளைகளிலும்  உட்கொள்ள வேண்டும்.  அது மட்டும் அல்ல - தன்னுடைய இந்திரியங்களை எல்லாம் கட்டுப் படுத்திக் கொண்டு பசுவின் முத்திரத்தில் (கோமூத்ரம்) குளிக்க வேண்டும்.

११.११० दिवा अनुगच्छेद् गास्तास्तु  तिष्ठन् ऊर्ध्वं  रजः पिबेत् |
शुश्रूषित्वा  नमस्कृत्य  रात्रौ  वीरासनं  वसेत् ||

11.110 பகலில் மேய்ச்சலுக்குப் போகும் மாடுகளைப் பின் தொடர்ந்து சென்று, பிறகு நின்று  கொண்டு  மாடுகள் காலால் எழுப்பும் புழுதியை  சுவாசிக்க வேண்டும். பிறகு மேய்ந்து முடித்து வீடு திரும்பிய பசுக்களுக்கு எல்லா விதமான பணிவிடைகளும் செய்து, சாஷ்டாங்க நமஸ்கரங்கள் பண்ணி, பிறகு இரவு முழுவதும் சம்மணம் போட்டு (வீராஸனம்) உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டும். (மாடு வெட்டும் / கொல்லும் கலவடிகளுக்கு நல்ல படமாக இருக்கும் இது).

११.१११ तिष्ठन्तीष्व अनुतिष्ठेत्  तु  व्रजन्तीष्व अपि अनुव्रजेत् |
आसीनासु  तथा आसीनो नियतो वीत मत्सरः ||

11.111  அப்படி ஆகத் தானே நிஷ்ட்டையாக இருந்து கொண்டு, தன்னுடைய போட்டி மற்றும் பொறாமைகளை எல்லாம் , அடக்கிக்கொண்டு  - பசுக்களும், கன்றுகளும் நின்றால் இவனும் நிற்க வேண்டும், அவைகள் நடந்தால் இவனும் பின் தொடர்ந்து செல்ல வேண்டும், அதே போல அவைகள் படுத்து உறங்கினால் இவன் உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டும்.

११.११२ आतुराम् अभिशस्तां  वा  चौर व्याघ्रादिभिर् भयैः |
पतितां  पङ्कलग्नं  वा  सर्वौपायैर्  विमोचयेत्  || 

11.112  மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றிக் கொண்டு , தன்னுடைய தீய உணர்ச்சிகளையம்  அடக்கிக்கொண்டு இருக்கும் அந்த மனிதன் பசுக்களுக்கு வரும் கீழ்க்கண்ட ஆபத்துக்களில் இருந்து அவற்றைக் காப்பாற்ற வேண்டும்:
  1. வ்யாதிகளினால் அவஸ்தைப் படுதல்.
  2. திருடர்கள் பயம்.
  3. புலி முதலான வன விலங்குகள் பயம்.
  4. கீழே விழுதல்.
  5. சேறு மற்றும் குட்டைகளில் மாட்டிக் கொள்ளுதல்.
எல்லா விதமான உபாயங்களையும் செய்து பசுக்களை, மேற்கூறிய ஆபத்துக்களில் இருந்து அவன் காப்பாற்ற வேண்டும்.

११.११३ उष्णे  वर्षति  शीते  वा  मारुते  वाति  वा  भृशं  |
न  कुर्वीत आत्मनस् त्राणं  गोर् अकृत्वा    तु  शक्तितः ||

11.113   வெய்யிலிலும், மழையிலும், கொடும்கற்றிலும் இருந்து முதலில் பசுக்களைக் காப்பாற்றி விட்டு, அதன் பிறகு தன தன்னைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்.

११.११४ आत्मनो यदि  वा अन्येषां  गृहे  क्षेत्रे अथ  वा  खले  |
भक्षयन्तीं न  कथयेत्  पिबन्तं  चैव  वत्सकम् ||

11.114  தான் பராமரிக்கும்  பசுக்கள் தன்னுடைய வீட்டிலோ, தோட்டத்திலோ, போரடிக்கும் இடத்திலோ, மற்றவர்களுடைய தோட்டத்திலோ ஏதேனும் சாப்பிட்டு விட்டாலோ  அல்லது  கன்றுகள் தாய்ப் பசுவிடத்தில் பாலைக் குடிக்க நேரிட்டாலோ   ஒன்றும் பேசாமல் இருந்து விட வேண்டும்.

११.११५ अनेन  विधिना  यस्तु  गोघ्नो  गाम् अनुगच्छति  |
स  गोहत्या कृतं  पापं  त्रिभिर् मासैर् व्यपोहति  || 

11.115 கோஹத்தி என்ற உப்பாதகத்தைச் செய்தவன், மேற்கூறிய முறைப் படி, பசுக்களைப் பராமரித்துக் கொண்டும், தன்னுடைய இந்திரியங்களை அடக்கிக் கொண்டும் வாழ்ந்து வர மூன்று மத காலத்திற்குப் பிறகு அவனுடைய அந்தப் பாபமானது விலக்குகின்றது.

११.११६ वृषभ एकादशा गाश्च  दद्यात् सुचरितव्रतः|
अविद्यमाने सर्वस्वं  वेदविद्भ्यो  निवेदयेत्  ||

11.116 இப்படி எல்லாம் பிராய்சசித்தம்  செய்து தன்னுடைய பாபத்தை விலக்கிக் கொண்ட பிறகு, ஒரு களை மற்றும் பத்து பாற்பசுக்களை, வேத விற்பன்னர்களுக்குத் தனமாகக் கொடுக்க வேண்டும். அப்படி, அவனிடத்தில் பஷுக்கள் இல்லாவிட்டால், தன்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும் அந்த வேத விற்பன்னர்களுக்குக் கொடுத்து விட வேண்டும்.

என்ன அருமை பாருங்கள் ? ஒரு பசுவை எவனாவது கொல்வானாயின் இத்தனை தண்டனைகளை கொடுத்து இருக்கிறார் மனு. இன்றயை காலத்தில் நம் நாட்டில் உள்ள மாடு தின்னிகளுக்கு இது ஒரு நல்ல பாடம்.

No comments:

Post a Comment