ரிக் வேதத்தில் கனபாடியாகவும் , ஸ்ரீ மடத்தின் பாடசாலையில் ஆசிரியராகவும் பணி செய்த நம் ஆச்சார்ய ஸார்வ பௌமன், இரு பொழுதும் முத்தீயையும் வணங்கிய பெருமை கொண்டவர். தம் ஆசாரியன் அழைத்தார் என்று, இல்லற சுகத்தை துறந்து துறவறம் மேற்கொண்ட புண்ணிய புருஷர் இவர். உடையவர், ராமானுஜரின் மறு உருவம் நம் ஆசாரியன். அழகிய சிங்கர் ஜீயர் திருவடிகளே சரணம் .
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
மறைமொழி காட்டி விடும்.
கல்விக்கெல்லாம் உயர்ந்ததான வேதத்தை பயின்று, அதன் பின் துறவறம் கொண்ட புண்ணியர்களின் பெருமையை, அந்த வேதமும், உபநிஷத்துக்களுமே காட்டி விடும் என்கிறார் திருவள்ளுவர். பரமஹம்ஸ உபநிஷத் முதலிய வற்றில் சொல்லும் படி, ஏக வஸ்திரம் தரித்து, தங்கம் முதலாகியவற்றை துறந்து , அரிமுகனுக்கே அடிமை செல்லையும் நம் ஜீயரின் பெருமையை , வள்ளுவரும் முக்கூட்டியே சொல்லி விட்டார் போலும்