Saturday, July 7, 2018

ஸ்ரார்த்த விதி - part 1

ஸ்ரார்தத்திற்கு முன்பு 


  1. ஸ்ரார்த்தம் செய்வதற்கு முன்தினம் கர்த்தா, மற்றும் அவர் குடும்பத்தார்கள் பஞ்சகவ்யத்தை பானம் செய்ய  வேண்டும்.
  2. ஸ்ரார்தத்திர்ற்கு முந்தய தினம், வெள்ளி,பித்தளை , வெண்கல பாத்திரங்களை தேய்த்து, பசுஞ்சாணியால் மெழுகிய இடத்தில வைக்க வேண்டும். 
  3. ஸ்ரார்த்தம் நடக்கும் கிருஹத்தை , அந்த இடத்தை முழுவதுமாக பசும் சாணத்தால் சுத்தம் செய்ய வேண்டும்.
  4. ஸ்ரார்தத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வரை பரான்னம் செய்ய கூடாது.
  5. ஸ்ரார்தத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு வரை ஸ்த்ரீ சங்கம், பாய், மெத்தை கூடாது. (குறைந்தது ஒரு பக்ஷமெனும் வருத்தமாக இருக்க வேண்டும்)
  6. ஸ்ரார்தத்திற்கு ஒரு ஒரு வாரம் முன்பு வரைக்கும் எண்ணெய் தேய்த்து குளித்தல் கூடாது. 
  7. ஸ்ரார்தத்திற்கு ஒரு வாரம் முன்னாவது ஒளபாஸனத்தை துவக்க வேண்டும். 


சிரார்த்தத்தில் போக்கத்தக்களை வரிப்பதற்கு உள்ள நியமங்கள் 


  1. விச்வேதேவர் மற்றும் பித்ருக்களை கால் அலம்பும் இடத்தை பூஜித்து, சுத்தம் செய்ய வேண்டும். 
  2. விச்வேதேவருக்கு சதுரமாகவும், பித்ருக்களுக்கு வட்டமாகவும் நீரால் கோலம் போல இடுவார்கள். (உண்மையிலே அந்த வடிவங்களில் மண்ணில் குழி வெட்ட வேண்டும் என்பது சாஸ்திரம். அது முடியாததால் இந்த ஏற்படு).
  3. விச்வேதேவர் மற்றும் பித்ருக்களாக வரிக்கப்பட்ட ப்ராம்மணர்களின் கணுக்காலை மட்டும் தான் அலம்புதல் வேண்டும்.
  4. விச்வேதேவர் மற்றும் பித்ருக்களின் கால் அலம்பிய ஜாலம் ஒன்றாக சேர கூடாது.
  5. விச்வேதேவர் மற்றும் பித்ருக்கள் வேற்று லோகத்தில் இருந்து ஸ்ரார்தத்திற்கு எவருவதால் தான், அவர்கள் சாப்பிடும் இடம், கால் அலம்பும் இடம் ஆகியவற்றை மந்திரங்களால் சுத்தம் செய்ய வேண்டும். 
  6. மனைவி கர்ப்பமாக  உள்ளவன், பஹிஷ்டயின் கணவன் - இவர்கள் சிரார்த்தத்தில் போக்தாவாக வரிக்க கூடாது.
  7. வயதில் மூத்தவரை பித்ருக்களாகவும், இளையவரை விச்வேதேவராக வரித்தல் வேண்டும்.
  8. ஸ்ராத்தத்தில் வரிக்கப்பட்ட ப்ராம்மணர்களை தங்கள் பித்ருக்களின் ஸ்வரூபமாகவே காணுதல் வேண்டும். 
  9. ஸ்ரார்த்த மந்திரங்களை பொரும்மையாக வேதோக்தமாக ஸ்வரத்துடன் உச்சரிக்க வேண்டும்.
  10. ஒரே சிரார்த்தத்தில் அண்ணன் தம்பி இருவரையும் வரித்தல் கூடாது.
  11. வேதம் அறியாதவர்கள், நோயாளிகள், அனுஷ்டான ஹீனர்களை வரிக்க கூடாது.
  12. மனைவி மக்கள் இல்லாதவரை போக்தாவாக வரிக்க கூடாது.
  13. பத்னி இல்லாவிடினும் புத்ரன் உள்ளவனாய் போக்தாவாக வரித்தல் வேண்டும். 
  14. ஒரு சிரார்த்தத்தில் சாப்பிட்டுவிட்டு மூன்று நாட்களுக்கும் இன்னொரு சிரார்த்தத்தில் போக்தாவாக சாப்பிட கூடாது.

No comments:

Post a Comment