Sunday, July 15, 2018

க³ணேஶதாபிந்யுபநிஷத்..



நம் வைதீக மதத்திற்கு ஆதாரம் உபநிஷத்துக்கள். விநாயகர் , முருகன், சிவன், அம்பாள், விஷ்ணு, சூரியன் என்று மறையே இந்த ஆறு தேவதைகளும் உபநிஷத்துக்களில் போற்றப்பட்டுள்ளன. எனவே நம் ஜெகதாச்சார்யாள் இந்த ஆறு மதங்களை ஸ்தாபித்தார்.

கணபதி - சிவ பூத கணங்களுக்கு அதிபதி. அவர்தான், சேனை தலைவர் - முருகனுக்கும் சேனானி என்ற பெயர் உண்டு. ஷக்தி தேவியின் அம்சமாக உள்ளபடியினால் விநாயகனை செந்நிறம் உள்ளவனாக உபநிஷத்து வர்ணிக்கின்றது.

அதர்வ வேதத்தில் உள்ள கணபதி அதர்வஸீர்ஷ உபநிஷத்து, மிக தெளிவாக , கணேஷா காயத்ரி, கணேஷா மந்திரம் , கணபதியின் ஸ்வரூபம் ஆகியவற்றை விளக்குகிறந்து. இந்த உபநிஷத்து கணபதி ஹோமத்தின் முடிவில் பாராயணம் செய்யப்படும்.

ஏகத³ந்தம் சதுர்ஹஸ்தம் பாஶமங்குஶதா⁴ரிணம் । ரத³ம் ச வரத³ம்
ஹஸ்தைர்பி³ப்⁴ராணம் மூஷகத்⁴வஜம் । ரக்தம் லம்போ³த³ரம் ஶூர்பகர்ணகம்
ரக்தவாஸஸம் । ரக்தக³ந்தா⁴நுலிப்தாங்க³ம் ரக்தபுஷ்பை: ஸுபூஜிதம் ।
ப⁴க்தாநுகம்பிநம் தே³வம் ஜக³த்காரணமச்யுதம் । ஆவிர்பூ⁴தம் ச
ஸ்ருʼஷ்ட்யாதௌ³ ப்ரக்ருʼதே: புருஷாத்பரம் । ஏவம் த்⁴யாயதி யோ நித்யம் ஸ
யோகீ³ யோகி³நாம் வர: ॥ 9॥

ஒற்றைக் கொம்பும், நான்கு கைகளும், பாசம், அங்குசம் , அபயம் வரதம் தரித்த கைகளும், மூஷிகம் என்னும் எலிக் கொடியும், சிவப்பு நிறமும், பேழை வயிறும், பெரிய காதுகளும், செந்நிற சந்தனத்தை பூசிய உடம்பும், பக்தர்களை காப்பவனும், படைப்புக்கு முன்பே தோன்றியவனும், ப்ரக்ருதி புருஷர்களுக்கு அப்பாலாகி உள்ளவனும், - இப்படி எவர் நம் பிள்ளையாரை தியானிப்பார்களோ அவர்கள் சிறந்த யோகிகளாக இருப்பர்கள்.

ஒளவை   பாட்டி அருளிய விநாயகர் அகவலும் இதே கருத்தில் தான் இருக்கும். விநாயகரை சதுர்த்தி ஹடோறும் வாங்க அணைத்து வினைகளும் நீங்கி சகல நன்மைகளும் அடைவர் என்பதில் எந்த ஐயமும் இல்ல.

No comments:

Post a Comment