Sunday, July 15, 2018

விஷ்ணு சஹஸ்ரநாமம்.....

விஷ்ணு சஹஸ்ரநாமம் உபநிஷத்துக்கள் உட்பொருளை கொண்டது. சாயம் வேளைகளில் ஜபித்தால் மிகவும் ஸ்ரேஷ்டம்..


  • 5 பூதக்ருத் - அனைத்தையும் படைத்தவர். மூவுலகங்களையும் தம் சரீரமாக கொண்டவர் 
  • 6 பூதப்ருத் - படைக்க பெற்ற அனைத்தையும் தங்குவார் 
  • 8 பூதாத்மா - படைக்கப்பெற்ற அனைத்திற்கும் அந்தர்யாமியாக இருப்பவர்.
  • 9 பூதபாவன - படைக்க பெற்ற அனைத்தையும் போஷித்து வளர்ப்பவர் 
  • 11 பரமாத்மா - எல்லா உயிர்களுக்கும் அந்தர்யாமியாக இருந்தும், அனைத்திற்கும் மேலான பரமாத்மாவாக விளங்குபவர்.
  • 12 முத்தானம் பரமா கதி - முத்தர்களின் உன்னதமான கதியாக விளங்குபவர். அவரவர் அனுபூதிக்கேற்ப அவரவர் அடையும் முக்தி நிலையின் முடிவாக, பிரம்மானந்த ஸ்வரூபமாக விளங்கும் சச்சிதானதன்மையன்.
  • 13 அவ்யய - மாறுதல்களுக்கு உட்படாதவர் (உபநிஷத்துக்களில் உள்ள அக்ஷரம், அவ்யயம் போன்ற சொற்களின் சாரம்)
  • 14 புருஷ - வேதங்கள் போற்றும் புருடனாக , புருஷஸுக்தம்   முதலான நூல்களில் போற்றப்பெறும் புருஷனாக விளங்குபவர்.
  • 15 சாக்ஷி  - அனைத்திற்கும் சாட்சியாக விளங்குபவர். (கனவு,நினைவு, உறக்கம் என்ற நிலைகளுக்கு சாட்சியாக விளங்கும் துரீய ஸ்திதி - ப்ரம்மம்)
  • 16 க்ஷேத்ரக்ஞ - க்ஷேத்ரம் என்னும் சரீரத்தில் அறிபவன் (உறைபவன்). 
  • 17 அக்ஷர - கால தேச வர்த்தமானங்களால் மாறாத தன்மை கொண்டவன் 
  • 19 யோக விதாம்நேதா - யோகத்தை அறிபவர்களுக்கெல்லாம் தலைவனாக, யோகேஸ்வரனாக உள்ளவர். கண்ணனை விட பெரிய யோகமும்  இல்லை , சாஸ்திரமும் இல்லை. பகவத் கீதையில் கன்னம் சொல்லும் அனைத்து யோகம்களும் அவனை உணர்வதற்க்கே என்பதை வலியுறுத்தும் உன்னதமான நாமம்.
  • 20 பிரதான புருஷேஸ்வர  - ப்ரக்ருதி, புருஷன் ஆகிய இருவர்க்கும் ஈஸ்வரனாக  விளங்கும் வைபவத்தை கொண்டவர்.
  • 27 ஷிவா - மாண்டூக்ய உபநிஷத்தில் சொல்ல பெற்ற துரீய ஸ்திதியாகி,  முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டு பிரம்மமாக பிரகாசிப்பவர். 
  • 29 பூதாதி - படைக்க பெற்ற வஸ்துக்களுக்கெல்லாம் ஆதியாகி , சர்வாதிஷ்டான ஸ்வரூபியாகி விளங்குபவர்.
  • 40 புஷ்காராக்ஷ - தாமரை இதழ்களை ஒற்றை கண்களை உடையவர் . 
  • 50 விஸ்வகர்மா - ஒரு சிப்பந்தியை போல இந்த உலகத்தை படைத்த பெருமை கொண்ட ஈஸ்வரனாக இருப்பவர் 
  • 290 பூத பவ்ய பவன்நாத - கடந்த காலம், நிகழ் காலம், வரும் காலம் என்று அனைத்திற்கும் ஈஸ்வரனாக விளங்குபவன்.
  • நாரஸிம்ஹ வபு  - மனிதனும் , சிம்மமும் கலந்த உருவம் கொண்ட புண்ணியர்  -நரஹரியாகி பிரகாசிக்கும் கருணாமயன்.


No comments:

Post a Comment