நம் ரிஷிகள் நமக்கு வகுத்துக் கொடுத்த ஸ்ரார்த்த விதியை பற்றி தெரிந்து கொள்வோமா?
சிரார்த்தத்தில் செய்ய வேண்டியவை
- முந்தய தினமே ஸ்ரார்த்தம் நடக்குமிடத்தை பசும் சாணியில் மெழுகுதல் ஸ்ரேஷ்டம்.
- கையில் பவித்ரத்துடன் பிராம்மணர்கள் காலை அலம்புதல் கூடாது.
- ஸ்ரார்தத்திற்கு நெய்யால் தான் பாகம் செய்ய வேண்டும். (நல்லெண்ணெய் , தேங்காயெண்ணை அவரவர் வழக்கத்திற்கேற்ப உபயோகிக்க வேண்டும்).
- போதாக்கள் சாப்பிட்ட இலையை ஸ்வஸ்தி வாசகம் ஆகிய பிறகு எடுத்தல் வேண்டும்.பிண்டப்ரதானம் ஆகிய பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
- ஏகாதசி போன்ற விரத நாட்களிலும் கூட பித்ரு சேஷத்தை சாப்பிடலாம். விரதம் பங்கம் ஆகாது.
சிரார்த்தத்தில் செய்ய கூடாதவை
- சிரார்த்தத்தில் உபயோகிக்கும் திரவ்யங்களை கழுவி சுத்தம் செய்த பின்னரே உபயோகிக்க வேண்டும்.(உப்பு,வெல்லம் இவற்றை ப்ரோக்ஷிக்க வேண்டும்)
- நாம் சாப்பிட்டு மிகுந்த பழங்கள் போன்றவற்றை சிரார்த்தத்தில் உபயோகிக்க கூடாது.
- பஹிஷ்டை (மாத விலக்குற்ற பெண்) ஸ்ரார்தத்திற்கு சமைக்க கூடாது.
- பஹிஷ்டைக்கு காலமாகிய பெண்ணும் சமைக்க கூடாது.
- பஹிஷ்டையாகி அன்றே ஸ்நானம் செய்த பெண்ணும் சமைக்க கூடாது.
- ரக்த சம்மந்தம் இல்லாத வெளி மனிதர்கள் , பெண்கள் ஸ்ரார்தத்திற்கு சமைக்க கூடாது.
- ஈர வஸ்திரத்துடன் ஸ்ரார்தத்திற்கு பாகம் செய்ய கூடாது.
- கர்பிணி, நோயாளி, கச்சம் அணியாதவர், (சிகை உள்ள விதவை) ஆகியோர்கள் சிரார்த்தத்தில் பாகம் செய்ய கூடாது.
- பேசிகொண்டே, பட்டு பாடிக்கொண்டே பாகம் செய்ய கூடாது.
- இரும்பு பாத்திரம், கரண்டிகள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
- அப்படி (ஸ்டீல்) இரும்பு பாத்திரத்தில் சமைத்தாலும் விளம்புவதற்கு வெண்கலம், பித்தளை கரண்டி, பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.
- மணியோசை, இரும்பு ஆகியவை ஸ்ரார்த்த காலத்தில் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
- சோப்பு, எண்ணெய், பவுடர், கண்ணாடி, திலகம், சிகை அலங்காரம் ஆகியவற்றை ஸ்ரார்த்ததன்று தவிர்க்க வேண்டும்.
- பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், அழுதுகொண்டும் , பாகம் செய்ய கூடாது.
- விரிதலை கோலத்துடன் பாகம் செய்ய கூடாது.
- அன்னத்தை கடைசியில் தான் வடிக்க வேண்டும்.
- பிதுர்களுக்கு ஆவி பறக்கும் அன்னமே உசிதம்.
- காராமணி, சுரைக்காய், கத்திரிக்காய், பெருங்காயம், முருங்கைக்காய், துவரம்பருப்பு, மற்றும் சாஸ்திரத்தில் வர்ஜ்யம் செய்யப்பட்ட எந்த வஸ்துக்களையும் சிரார்த்தத்தில் உபயோகித்தால் கூடாது.
- பிராம்மணர்கள் சாப்பிட்ட இலைகளை நாய், மற்றவர்கள் தீண்டுதல் கூடாது. எனவே அவற்றை குழி தோண்டி புதைத்தல் நலல்து.
- போக்தாக்கள் சாப்பிட்ட இலையை மாட்டிற்கு கொடுத்தால் பாபம். எச்சிலை மாட்டிற்கு கொடுக்க கூடாது என்பது சாஸ்திரம்.
- ஏகோதிஸ்தம், மாசிக, அனுமாசிகம், சபிண்டீகரணம் , கயா ஸ்ரார்த்தம் ஆகியவற்றில் அபிசிராவணம் கிடையாது.
- பிராம்மண போஜனம் முடியும் வரை ஹோமாக்னி(ஸ்ரார்த்த ஹோமம்,ஒளபாஸனம்) அணைய கூடாது.
- வாயச பிண்டத்தை காக்கை எடுக்கும் வரை அருகில் இருந்து ரக்ஷிக்க வேண்டும்.
- சதுர்த்தார் பார்த்தாலோ, நாய் முதலியவைகள் பிண்டத்தை புஜிதாலோ புநஸ்ரார்தம் செய்ய வேண்டும். (அன்று உபவாசமாக இருந்து மறுநாளே விதிப்படி ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்)
- பிண்டம் உடைந்தாலோ, போக்தாக்கள் வாந்தி எடுத்தாலோ ஸ்ரார்த்தம் நஷ்டமாகி விடும் - புநஸ்ரார்தம் செய்ய வேண்டும்.
- ஸ்ரார்த்தம் முடியும் வரை கோலம் போடுதல், புண்ட்ரம் அணிதல், ருத்ராக்ஷம் அணிதல் கூடாது.
- பிண்டப்ரதானம் ஆகிய பிறகு சிறிது அன்னத்தை மந்திரம் சொல்லி வாயில் போட்டுக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment