Tuesday, June 27, 2017

சின்ன சின்ன ஸ்லோகங்கள் - சிவ மானஸ பூஜை - ஆதி சங்கரர் இயற்றியது


आत्मा त्वं गिरिजा मतिः सहचराः प्राणाः शरीरं गृहं
पूजा ते विषयोपभोगरचना निद्रा समाधिस्थितिः ।
सञ्चारः पदयोः प्रदक्षिणविधिः स्तोत्राणि सर्वा गिरो
यद्यत्कर्म करोमि तत्तदखिलं शम्भो तवाराधनम् ॥४॥


Aatmaa Tvam Girijaa Matih Sahacaraah Praannaah Shariiram Grham
Puujaa Te Vissayo[a-U]pabhoga-Racanaa Nidraa Samaadhi-Sthitih |
San.caarah Padayoh Pradakssinna-Vidhih Stotraanni Sarvaa Giro
Yad-Yat-Karma Karomi Tat-Tad-Akhilam Shambho Tava-Araadhanam ||4||

Meaning:
4.1: O Lord, You are my Atma (Soul), Devi Girija (the Divine Mother) is my Buddhi (Pure Intellect), the Shiva Ganas (the Companions or Attendants) are my Prana and my Body is Your Temple,
4.2: My Interactions with the World are Your Worship and my Sleep is the State of Samadhi (complete absorption in You),
4.3: My Feet Walking about is Your Pradakshina (Circumambulation); all my Speech are Your Hymns of Praises,
4.4: Whatever work I doall that is Your Aradhana (Worship), O Shambhu.


என் ஆன்மா  நீ , என் மதி உமையன்னை,  பஞ்ச பிராணங்களும்  உன் சேவகர்கள், இந்த உடேலே உன் வீடு 
உலகியல் விஷயங்களும் போகமும் உன் திருப்பூசனை ! ஆழ் உறக்கமே சமாதி நிலைமை! 
கால்களால் நடப்பது எல்லாம் உன்னுடய பிரதக்ஷிணம்! நான் சொல்லும் சொற்கள் எல்லாம் உன்னுடைய தோத்திரம்!
அடியேன் செய்யும் எல்லா செயல்களும்  பரமேஸ்வரா உன்னுடைய திருவாராதனம்! 

करचरणकृतं वाक्कायजं कर्मजं वा
श्रवणनयनजं वा मानसं वापराधम् ।
विहितमविहितं वा सर्वमेतत्क्षमस्व
जय जय करुणाब्धे श्रीमहादेव शम्भो ॥५॥


Kara-Caranna-Krtam Vaak-Kaaya-Jam Karma-Jam Vaa
Shravanna-Nayana-Jam Vaa Maanasam Va-Aparaadham |
Vihitam-Avihitam Vaa Sarvam-Etat-Kssamasva
Jaya Jaya Karunna-Abdhe Shrii-Mahaadeva Shambho ||5||

Meaning:
5.1: Whatever Sins have been Committed by Actions Performed by my Hands and FeetProduced by my Speech and BodyOr my Works,
5.2: Produced by my Ears and EyesOr Sins Committed by my Mind (i.e. Thoughts),
5.3: While Performing Actions which are Prescribed (i.e. duties prescribed by tradition or allotted duties in one's station of life), As Well as All other Actions which are Not explicitly Prescribed (i.e. actions done by self-judgement, by mere habit, without much thinking, unknowingly etc); Please Forgive Them All,
5.4: VictoryVictory to You, O Sri Mahadeva Shambho, I Surrender to You, You are an Ocean of Compassion.

கை கால்கள்,வாக்கு ,உடல்   மற்றும் காது,கண்கள், மனம் ஆகியவற்றாலும்  
தெரிந்தும் தெரியாமலும் செய்த அனைத்து பிழைகளையும்  மன்னித்து அருளுதல் வேண்டும் சிவ சிவ கருணை கடலே முக்கண்ணா மகாதேவனே சம்புவே 

Friday, June 23, 2017

தமிழும் ஆரியமும்


தாய் மொழி ஒரு தனி மொழி
ஆன்மீகத்திற்கு ஒரு வட மொழி
வயிற்றைக் கழுவ வெள்ளைக்காரன் மொழி
- இது தான்  யதார்த்தமான நிலைமை

வேதோபநிஷத சாஸ்திர புராணங்கள்  தந்த மொழி சமஸ்கிருதம்
உயிரும் உணர்வும் அன்பும் ஆதரவும் நட்பும் தந்த மொழி தமிழ் மொழி
விருத்தியும் வயிற்றுப பிழைப்பும் வேலையும் வாழ்வும் தந்த மொழி ஆங்கில மொழி
இனி எதற்கு இந்த மொழி துவேஷமும் வெறியும்?

பார்கவர், ஸ்யவனர், ஆப்னவனர், அவ்வுருவர் , ஜமதக்னி - இது ஜமதக்கினி முனிவரின் வம்சம்.  ஜமதக்னியின் மகன் பரசுராமன் - மாலு எரிந்து சேர, சோலஸ் , பாண்டிய நட்டுகளை நமக்கு தந்தவர் . பரசுராமரின் தம்பி த்ரினிதூமக்னி - அகஸ்தியரிடத்தில் தமிழ் பயின்று தொல்காப்பியம் எழுதி நமக்கு இலக்கணத்தைத் தந்தார்.

- இந்த விஷயத்தை பட புத்தகத்தில் மாரியாத்தா வஞ்சகர்களை கடுமையாக கண்டிக்கிறேன்.

தமிழ் மொழியில் அதிகமாக சமஸ்க்ரிப்டுக பாதங்களை உபயோகம் பண்ணலாம் என்று நமக்கு சென்னை திருணதூமாக்னி முனிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.


Sunday, April 30, 2017

எங்கள் ஊரு தெய்வங்கள்

எங்கள் ஊரு தெய்வங்கள்

ஒண்டி மா நகர் வாழும் பெரிய மாரியம்மன் 

ஒண்டிப்புதூர்  என்னும் ஊரிலே பிறந்து வளரந்தபடியானாலே, எங்கள் ஊரிலே   உள்ள கிராம தேவதைகள் மற்றும் உள்ள தெய்வங்களை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற அவாவோடு இந்த பதிப்பை எழுதுகிற்ன்றேன்.

ஒண்டி மா நகர் என்ற பயிர் - பல தரப்பட்ட மக்கள் உள்ள ஊர். தனிப்பட்ட அக்ராஹாரம் ஒன்றும் கிடையாது. செங்கோடம்மன் , சௌடம்மான், என்று பல கோயில்கள் உள்ளன. ஆனாலும் எங்கள் ஊருக்கே அன்னை, காவல் தெய்வம், எங்கள் பெரிய மாரியம்மன். மிகவும் சக்தி வாய்ந்தவள். ஒவ்வொரு ஆண்டும் , சித்திரை மாதம் (மழை வேண்டி) திருவிழா நடக்கும். கோயில் பிரகாரத்தில் உள்ள காளி அம்மனுக்கு, பலிகள் கொடுக்கப் பெரும் - அதன் பிறகு மஞ்சள் நீராட்டு. ஊரே திரண்டு அன்னைக்கு மாவிளக்கு எடுப்பார்கள். ஒரே கோலாகலமாக இருக்கும். முளைப்பாரி, தீ சட்டி, சக்தி  கரகம் என்று ஒரே அமர்க்களமாக இருக்கும்.

அனைவர் உள்ளத்துள்ளும்  நிலைத்து நின்று , ஒரு காவல் தெய்வமாகவும், அம்மை போன்ற நோக்கல் வராமல் காக்கும் மருத்துவச்சியாகவும், பர தேவதையின் அம்சமாகவும், ஜமதக்கினி முனிவரின் பத்தினி ரேணுகாவின் அம்சமாக விளங்கும் எங்கள் பெரிய மாரியம்மனுக்கு என்னுடைய ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்.

மாரியம்மன் தாலாட்டு பாடலை, கேட்டால் அன்னையின் திருவுருவம் கண் முன்னே வந்து நிற்கும். என அழகு, என்ன கனிவு, என்ன வாத்சல்யம்? அப்பப்பா...

இருகூர் நீலகண்டேஸ்வரன் 





நடந்து சென்றால் ஒரு முப்பது  முதல் நாற்பது நிமிடங்கள். அழகான ஊருப் பாதையில் செல்ல வேண்டும். தோட்டங்கள், குயவன் கடை, எல்லாம் தண்டி சென்றால் கோயில் கோபுரமும் , பிரதான துவாரமும் ( வாசல்) தெறியும். பரமேஸ்வரன் கோயிலை அடைந்து விட்டோம் என்று ஒரே பேரானந்தம். சுயம்புவாக தோன்றிய ஈஸ்வரன்  - பேரூர் பட்டீஸ்வரன்  , வெள்ளியங்கிரி ஆண்டவன் , இருகூர் நீலகண்டேஸ்வரன் ஆகிய மூவருக்கும் ஒரே அளவு லிங்கம். பாண்டியனும் சோழனும் வந்த படியினால் - இன்ஜி இருந்து சிவன் மற்றும் இரண்டு அம்பாள் - பார்வதி சமேத நீலகண்டேஸ்வரர் மற்றும் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர். மிகவும் அழகான ஆலயம்.  திருநீற்று பதிகம், திருமுறைகள் கேட்கும் பொழுது, நீலகண்டரையே நினைக்க தோணும். வேறு புதியதாக எத்துணை ஆலயங்கள் வந்தாலும் எங்கள் ஊரு சிவன் என்றால் அந்த மகிமையே தனி தான். விசாளாஸ்க்ஹ்ய அன்னை, பதினெட்டு மூலங்களையும் அணிந்து கொண்டு, சதாசிவ பதிவ்ருத்தியாக காட்சி அளிப்பாள். அவளுடைய கருணைக்கு எல்லையே இல்லை.

தமிழ் கடவுள் முருகன், வடக்கிருந்த தக்ஷிணாமூர்த்தி, துர்கை, விநாயகர் , நவகிருஹங்கள் என்று பரிபூரணமான கோயில். நாக லிங்க மரம், வன்னி மரம், அரளி செடி, தீர்த்த கிணறு என்று இயற்கை எழில் வாய்ந்த திருக்கோயில்.

சிவா சொத்து குல நாசம் - என்று கோயிலில் இருந்து பிரசாத பூக்கள், திருநீறு தவிர வேறு ஒன்றுமே கொண்டு வரக்கூடாது என்று சண்டிகேஸ்வரர் இடத்தில கணக்கு காட்டி விட்டு திரும்பும் அந்த ஆனந்தமே ஆனந்தம்!!
ஹரோம் ஹரோம் ஹாரா!

அந்த ஆலய பிராங்கத்திலே, கரி வரதராஜ பெருமாளும் உள்ளார். மிகவும் எழில் மிகுந்த பெருமாள்! ஸ்ரீதேவி பௌதேவி சமேதர் - கருடன், ஆஞ்சநேயர் என்று எல்லோரும் இருக்கின்றனர்! சனிக்கிழமை என்றால் தருளாசி பிரசாதம் இல்லாமல் இருக்காது! மார்கழி மாதங்களில் திருப்பாவை உத்சவம்! அழகான சந்நிதி!

சிங்காநல்லூர்  பெருமாள்

வேதபுரி அக்கிரஹாரம் என்று அக்னிஹோத்ரிகள் நிறைந்த அக்கிரஹாரம் - எங்கள் வீட்டிலிருந்து சுமார் முப்பது நிமிடனால் சைக்கிள் சவாரி. ஆடி மாதங்களில் சாயந்தரம்  விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், மற்றும் லட்சுமி ஸஹஸ்ரநாம பாராயணம். பகல் பொழுதாக இருந்தால் ஸ்ரீ சூக்தம், புருஷ சூக்தம் முதலியவை இருக்கும். பிரம்மோத்சவம், நவராத்ரி என்றால் அங்கு அக்ராஹாரத்து மாமிகள் வந்து பாட்டுகள் பாடி அசத்தி விடுவார்கள். உலகளந்த பெருமாள் என்ற படியினால் எட்டு கைகள், ஒருகால் மேலே, ஒரு கால் கீழே - மிகவும் எழில் மிகுந்த பெருமாள். அழகான அக்ராஹாரம், (ஏழு வீதிகள்) அதற்கு நடுநாயகமாக பெருமாள். பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்ராஹாரம் மற்றும் கோயில்.

Saturday, April 8, 2017

எண்ணெய் குளியல் - அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

நம் மரபிலே ஆண்கள் புதன் மற்றும் சனி கிழமைகள், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகள் எண்ணெய் தேய்த்து நீராடுவர். அதனை பின்பற்றி நானும் இங்கு சனி கிழமை   "No  soap/shampoo  day" ஆக்கி விட்டேன்.

தலைக்கு - என் அம்மா தயாரித்த மூலிகை போடி எண்ணெய்
உடலுக்கு - நல்லெண்ணெய்/ தேங்காய் எண்ணெய் மிளகு, அரிசி, கபூரும் இட்டு காய்ச்சியது

தலைக்கு - அரப்பு / சேவாக்கை பொடி கலவை
உடலுக்கு - பச்சை பயிறு மாவு / கடலை மாவு

சோப்பு இருக்கும் கெமிக்கல்ஸ் - அவை நம்முடைய சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிப்பவை.இந்த எண்ணெய் குளியல்   சாமான்கள்   எல்லாமே "bio-degradable"  வஸ்துக்கள்.

எண்ணெய் குளியல் தினத்தில் கடை பிடிக்க வேண்டிய நிபந்தனைகள் :


  1. எண்ணெய் தேய்த்து அரை மணி முதல் ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு குளிக்க வேண்டும்.
  2. தயிர், இளநீர், பழைய சாதம், வாழை பழம்  போன்ற குளிர்ச்சி தரும் உணவுகளை உண்ண கூடாது.
  3. பகலில் உறங்க கூடாது.
  4. காலை எட்டு மணிக்கு முன்பே குளித்து விட வேண்டும்.
  5. குளித்து முடித்து தலையை நன்கு  காய வைத்து உச்சந்தலையில் விபூதி அல்லது இராசனாதி பொடி தேய்க்க வேண்டும். (நீர் இறங்கி சளி பிடிக்காமல் இருக்கும்)



http://www.haja.co/importance-of-taking-oil-bath-on-saturdays/#ixzz4dgmkXMTR

Monday, April 3, 2017

தமிழ்த் தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை அவர்கள் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 4- 1855)



நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே

கடல், ஆறு போன்றவற்றை தன மீது கொண்டிருக்கும் நில மங்கை மீது, பாரத கண்டத்தில், - மிகவும் சிறப்பு வாய்ந்த தமிழ் நாட்டில் (திராவிட நாடு) , அந்த தமிழ் நாட்டில் அழகான சின்ன நெற்றியும், அதன் மீது மிகவம் வாசனை பொருந்திய திலகமும் தரித்து நம் தமிழன்னை விளங்குகின்றாள். அந்த தமிழ் (திலகம்) மனமானது நன்கு திசைகளிலும் பரவி இடுந்தது என்கிறார் ஆசிரியர். இங்கு திராவிட நாடு என்பது - தென் குமாரி முத்த வாடா வேங்கடம் வரை விளங்கிய தமிழ் நாட்டை குறிக்கும் பெயர். (வட மொழியில் ஆந்திர தேசம், கேரள தேசம், திராவிட தேசம், கன்னட அல்லது கர்நாடக தேசம் என்று தனி தனியே பெயர்கள்  இருந்தன. தெற்கே உள்ள எல்லாமே திராவிடம் என்பது பிற்காலத்தில்  சிலர் கட்டிய கதை).

இங்கு தமிழ் தாயின் பெருமைகளை பாடுகின்றார் ஆசிரியர். வேதாந்தத்தின் உச்சிக்கே சென்றெட்டு விட்டார். வேதாந்தத்தில் ப்ரம்ம என்பது நிர்குணமானது - அந்த ப்ரம்ம மாயையின் சேர்க்கையால் , இந்த உலகம், போன்றவற்றை உண்டாக்குகின்றது. ஆனாலும் தன்னுடைய அந்த (நிர்குணமான) தன்மை மாறாமல் இருக்கின்றது.  அதே போலத்தான் தமிழ் தாயும் - கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் போன்ற மொழிகளை எல்லாம் தோற்றுவித்தாலும், தன்னிலை  மாறாமல், இளமையான கன்னித் தமிழாகவே இருக்கின்றாள். அப்படி இருக்கும் தமிழ் தாயின் , இளமையைக் கண்டு வியப்புற்று , தன்னிலை மறந்து வாழ்த்துகின்றார்   பாடலாசிரியர்.

நம் பகுத்தறிவு சிங்கங்கள் இந்தப் பாடலில் சில வரிகளை எடுத்து விட்டன. ஆனால் அதையும் சேர்த்து பாடினால் தன நம் தமிழுக்கு பெருமை அதிகம். பேசும் மொழி, வாழும் நாடு எல்லாமே அன்னையின் வடிவம்.

இப்படி நம் தமிழ் தாயை பாடி அனுபவித்த ஆசிரியருக்கு ஒரு  நன்றி சொல்ல நாம் எல்லோரும் கடமை பட்டு இருக்கின்றோம்.