Thursday, February 2, 2023

பிரமத்துள் நீ புகுந்தாய்......

உலகமெல்லாம் கைதொழுதிட எந்தனாசானே! பிரமத்துள் நீ புகுந்தாய் என் குருநாதா!
கன்னடர்கள் தெலுங்கரெல்லாம் கை தொழுதிடவே பிரமமதாய் காட்சி தந்தாய் என் குருநாதா!
பிறப்பிறப்பு மூப்புபிணி அற்ற வாழ்வினை எந்தனுக்கு அருளிடுவாய் என் குருநாதா!
ஆசைகளின் எல்லையான காமகோடியில் வீற்றிருந்து உலகாளும் அன்னை வடிவே !
புண்ணியத்தின் எல்லையான புண்யகோடியில் வீற்றிருந்து அருள் செய்யும் திருமால் வடிவே !
மாண்டூக்யம் போற்றும் பிரம வடிவினாய்! சுத்தமான சிவத்தன்மை உன்னுள் கண்டேன்!
நின் பொற்றாமரைப் பாதம் எனக்கருள் செய்வாய்! என்ன தவம் செய்தேனோ சத்குருநாதா !
நின் திருவடியைத் தொழுதிடவே சத்குருநாதா ! இப்பிறப்பில் அன்றி இனி எப்பிறப்பிலும் உன்னையன்றி யாருளரோ சத்குருநாதா !
சத்குருவே சங்கரனே காமகோடியே! ஆதி சங்கரன் தன் மருவுருவே சத்குருநாதா! கைவல்லிய அறிவு தந்து எம்மைக் காரும்!
ஆன்மாவின் அறிவும் இந்த சீவன் அறிவும் தந்து! இழிமை கொண்ட இருமை நீக்கி ஒருமை அருள்வாய்!
பிரமமன்றி மற்றொன்றை காணா அறிவை எந்தனுக்கு நீயருள்வாய் சத்குருநாதா !
எம்மைக் காக்க சிறை புகுந்தும் அல்லல் பட்டாய் ! என்சொல்வேன் நின் தவமும் தியாகம் எல்லாம்!
இனி யாருளரோ நானிலத்தில் எம்மைக் காக்க !
சங்கரனே ஹரஹர சதாசிவனே ஹரஹர !
செந்தமிழே ஹரஹர காமகோடி ஹரஹர !
சமக்கிருதமே ஹரஹர காமாட்சி ஹரஹர !
இனி யாருளரோ நானிலத்தில் எம்மைக் காக்க !

Friday, January 27, 2023

எந்தன் உளம் புகுந்து எந்தன் வினைகள்.....

எந்தன் உளம் புகுந்து எந்தன் வினைகள் எல்லாம் போக்கி என்னை ஆட்கொண்ட சங்கரன் உறை கோயில் காஞ்சி என்னும் காமகோடியே! ஆவிகள் ஐந்தும் ஒடுங்கி மனத்துட் புகுந்து இந்திரியங்கள் ஐந்தும் ஒடுங்கி எந்தன் பழவினைகள் எல்லாம் ஒடுங்கி எந்தன் அறிவும் ஆற்றலும் ஒடுங்கி ஆத்துமவடிவில் அனைத்தும் அடங்கி பேரானந்தக் கடலில் நான் மூழ்கும் நேரம் என்னப்பன் சங்கரன் கோயில் தம் மணிக்கதவுகள் திறக்கும் நேரம்! அருள் வெள்ளம் மேலிட கருணை என்னும் கடலில் மூழ்கி நான் என்னும் நிலை மறந்து பேரானந்த கடலில் களிப்புற்று என்னப்பன் திருவடிகளை எந்தன் சென்னியில் சூடி அனுபூதி பெறும் நேரம் - என்னப்பன் சங்கரன் கருணைக் கடைக்கண் எந்தன் மீது படும் நேரமே!

சங்கரன் பெருமை

பிறப்பிறப்பு மூப்பு பிணி என்னும் உரோகங்கள் நான்கும் அழித்தென்னை ஆட்கொள்ள நின் தாமரை திருவடிகளை என் சென்னியில் வைத்தருளிய என்னப்பனே சங்கரா ! ஆசைகளின் முடிவாய் அருட்கடலாய் விளங்கும் அன்னை காமாட்சியின் வடிவே! நின் பொற்றாமரை அடிகளை என் சென்னியில் பொருத்தி எந்தன் பழவினைகள் மாற்றிய என்னப்பனே! ஏழுலகும் ற்ற நின்ற என்னப்பனே சங்காரா! வேத்தின் விழுப்பொருளை உலகிற்குறைத்து தத்துவமசி என்னும் வாக்கியம் காட்டி ஆன்மாவின் நிஜ வடிவம் காட்டி என்னுள்ளும் உன்னுள்ளும் உலகனைத்திலும் உறைபொருள் பிரமமமென்று எடுத்துரைத்து உலகமெல்லாம் உய்ய வழிகாட்டி வேத நெறி காட்டி பாஷாண்டிகளாம் பௌத்த சமணர்களை வாதத்தில் வென்று வேதநெறி நிலை நாட்டிய என்னப்பனே சங்கரா! நின்னையல்லால் மற்றொருவர் உண்டோ இவ்வுலகில் எந்தன் பெருவினைகள் போக்கிட! என்ன தவம் செய்தேனோ நின்பதமலரில் சரண் புகுந்திட! உன்னையல்லால் மற்றொருவரை நம்புவேன் அல்லேன்! மாய பிறப்பறுத்து எல்லாம் அறுத்து ஆன்ம வடிவம் காட்டி நின் கருணை காட்டி எந்தனை ஆட்கொண்ட அருட்கடலே! என்னப்பனே சங்கரா ! நின் பாத மலரின் பெருமைகள் சொல்வதை அல்லால் வேறு கைம்மாறு செய்திலேனே!

Wednesday, January 18, 2023

அண்ணல் அமித் ஷாஹ்

நின் முகம் மலரக் கண்டால் எம் அகம் குளிருதே! எம் அண்ணலே!
ஒரு நூற்று இருப்பது கோடி இந்தியர் தம் முகம் மலர செய்ய எங்கள் பாரத தாய் பெற்ற அரும்புதல்வா !
என்சொல்வேன் நின் பெருமை! என் சொல்வேன் நின் பெருமை!
வாழ்க நீடூழி நின் பெருமை!வாழ்க அன்னை பாரதம்! வாழ்க செந்தமிழ்நாடு! வாழ்க இந்த புவியெல்லாம்!

Thursday, July 21, 2022

thirukkural

அந்தணர் என்னும் சொல் திருக்குறளில் மூன்று இடத்தில உள்ளது:

1.1.1 கடவுள் வாழ்த்து
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 8

1.1.3. நீத்தார் பெருமை
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 30

2.1.17 செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். 543

2.1.18 கொடுங்கோன்மை
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

--------------------
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 28

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. 590

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. 695

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. 847


நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும். 1254

பனுவல்
 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. 21

பார் ப்பான்
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார் ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134