உலகமெல்லாம் கைதொழுதிட எந்தனாசானே! பிரமத்துள் நீ புகுந்தாய் என் குருநாதா!
கன்னடர்கள் தெலுங்கரெல்லாம் கை தொழுதிடவே பிரமமதாய் காட்சி தந்தாய் என் குருநாதா!
பிறப்பிறப்பு மூப்புபிணி அற்ற வாழ்வினை எந்தனுக்கு அருளிடுவாய் என் குருநாதா!
ஆசைகளின் எல்லையான காமகோடியில் வீற்றிருந்து உலகாளும் அன்னை வடிவே !
புண்ணியத்தின் எல்லையான புண்யகோடியில் வீற்றிருந்து அருள் செய்யும் திருமால் வடிவே !
மாண்டூக்யம் போற்றும் பிரம வடிவினாய்! சுத்தமான சிவத்தன்மை உன்னுள் கண்டேன்!
நின் பொற்றாமரைப் பாதம் எனக்கருள் செய்வாய்! என்ன தவம் செய்தேனோ சத்குருநாதா !
நின் திருவடியைத் தொழுதிடவே சத்குருநாதா ! இப்பிறப்பில் அன்றி இனி எப்பிறப்பிலும் உன்னையன்றி யாருளரோ சத்குருநாதா !
சத்குருவே சங்கரனே காமகோடியே! ஆதி சங்கரன் தன் மருவுருவே சத்குருநாதா! கைவல்லிய அறிவு தந்து எம்மைக் காரும்!
ஆன்மாவின் அறிவும் இந்த சீவன் அறிவும் தந்து! இழிமை கொண்ட இருமை நீக்கி ஒருமை அருள்வாய்!
பிரமமன்றி மற்றொன்றை காணா அறிவை எந்தனுக்கு நீயருள்வாய் சத்குருநாதா !
எம்மைக் காக்க சிறை புகுந்தும் அல்லல் பட்டாய் ! என்சொல்வேன் நின் தவமும் தியாகம் எல்லாம்!
இனி யாருளரோ நானிலத்தில் எம்மைக் காக்க !
சங்கரனே ஹரஹர சதாசிவனே ஹரஹர !
செந்தமிழே ஹரஹர காமகோடி ஹரஹர !
சமக்கிருதமே ஹரஹர காமாட்சி ஹரஹர !
இனி யாருளரோ நானிலத்தில் எம்மைக் காக்க !
No comments:
Post a Comment