Saturday, June 2, 2018

ந்ருஸிம்ஹ தாபினி உபநிஷத் - வீர ந்ருஸிம்ஹன்

அத² கஸ்மாது³ச்யதே வீரமிதி யஸ்மாத் ஸ்வமஹிம்நா
ஸர்வால் லோகாந் ஸர்வாந் தே³வாந் ஸர்வாநாத்மந: ஸர்வாணி
பூ⁴தாநி விரமதி விராமயத் யஜஸ்ரம் ஸ்ருʼஜதி விஸ்ருʼஜதி வாஸயதி
யதோ வீர: கர்மண்ய: ஸுத்³ருʼக்ஷோ யுக்தக்³ராவா ஜாயதே
தே³வகாமஸ்தஸ்மாது³ச்யதே வீரமிதி ॥

ப்ரம்மா ந்ருஸிம்ஹனின் மஹிமையையும், அவன் மந்திரத்தின் சிறப்பையும் பலவாறாக போற்றுகின்றார். உக்ரம் என்னும் பதத்தின் விளக்கத்தை நேற்றைய தினம் பார்த்தோம். இனி, ந்ருஸிம்ஹ மந்த்ரராஜ மந்திரத்தில் உள்ள, அடுத்த பதம் ஆகிய வீரம் - என்னும் பதத்தை பற்றி, தேவர்கள் வினவ ப்ரம்மா பின் வருமாறு விளக்குகின்றார்.

தன்னுடைய சொந்த மஹிமையினால், ந்ருஸிம்ஹன் அனைத்து உலகங்களையும், தேவர்களையும், மனிதர்களையும், படைப்புகளையும் ஓய்வு (விராமம்) கொள்ள செய்து, படைத்தும், வளர செய்தும் , தன்பால் ஈர்த்தும்  இடை விடாது செய்கின்றான். அசையாத மலையை போலவும், அனைத்து கர்மங்களுக்கு பின்னிருக்கும் ஈஸ்வரனாகவும், தேவர்கள் ஆசைப்படும் அனைத்தையும் அனுகிருஹம் செய்வதாலும் வீரன் என்று புகழ படுகின்றான் ந்ருஸிம்ஹன்.

சர்வேஸ்வரனான ந்ருஸிம்ஹனின் மந்த்ரராஜ மந்திரம், முப்பத்தி இரண்டு எழுத்துக்கள் கொண்ட அனுஷ்டுப் என்னும் சந்தஸிசில் அமைந்துள்ளது. ந்ருஸிம்ஹனின் மந்திரமே படைத்தலுக்கும் மூலம் என்கிறார் ப்ரம்மா.

தேவர்களுக்கு இஷ்டகாம்யாதை அனுகிருஹம் செய்த சர்வேஸ்வரனான ந்ருஸிம்ஹன், திருப்பாதங்கள் நமக்கு துணை.

உபநிஷத்திலேயே , போற்ற பெறுவதால், சர்வேஸ்வரன் ந்ருஸிம்ஹனின் பெருமையை நாம் உணர முடியும். சர்வ தேவதா ஸ்வரூபனாக விளங்கும் ந்ருஸிம்ஹனின் பாதங்களை பற்றி, இந்த  சம்சார கடலை தாண்ட முடியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சர்வம் ஸ்ரீ ந்ருஸிம்ஹர்ப்பணம் அஸ்து.



Thursday, May 31, 2018

உபநிஷத்தில் உள்ள உக்கிர ந்ருஸிம்ஹனின் வர்ணனம் ...........


தே³வா ஹ வை ப்ரஜாபதிமப்³ருவந்நத² கஸ்மாது³ச்யத
உக்³ரமிதி ஸ ஹோவாச ப்ரஜாபதிர்யஸ்மாத்ஸ்வமஹிம்நா
ஸர்வாꣳல்லோகாந்ஸர்வாந்தே³வாந்ஸர்வாநாத்மந: ஸர்வாணி
பூ⁴தாந்யுத்³வ்ருʼஹ்ணாத்யஜஸ்ரம் ஸ்ருʼஜதி விஸ்ருʼஜதி
விவாஸயத்த்யுத்³க்³ராஹ்யத உத்³க்³ருʼஹ்யதே ஸ்துஹி ஶ்ருதம் க³ர்தஸத³ம்
யுவாநம் ம்ருʼக³ம் ந பீ⁴மமுபஹந்துமுக்³ரம்
ம்ருʼடா³ஜரித்ரே ருத்³ரஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்நிவபந்து ஸேநா:
var ஸிம்ஹஸ்தவாநோ
தஸ்மாது³ச்யத உக்³ரமிதி ॥
இனி தேவர்கள், யாரை உக்கிரன் என்று போற்ற வேண்டும் என்று கேட்க, ப்ரம்மா விளக்கம் தருகின்றார். எவன் தன மகிமையால் அனைத்து உலகத்தையும் , அனைத்து ஜீவர்களையும்,தேவர்களையும் அனைத்து படைப்புகளையும், அனைத்தையும் படைக்கவும் அளிக்கவும் செய்கின்றானோ அவனே உக்கிரன் எனப்படுகின்றன.
அடுத்த படியாக, ஸ்ரீ ருத்ரத்தில் உள்ள ஸ்லோகம் இங்கு வருகின்றனது:
ஸ்துஹி ஶ்ருதம் க³ர்தஸத³ம் யுவாநம் ம்ருʼக³ம் ந பீ⁴மமுபஹந்துமுக்³ரம்
ம்ருʼடா³ஜரித்ரே ருத்³ரஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்நிவபந்து ஸேநா:
எவன் என்னுடைய இதய குகையில் வாழ்கின்றானோ, எவன் அழகு நிறைந்த யுவாவாக இருக்கின்றானோ, எவன் சத்ருக்களை அழிப்பதில் உக்ராமமாய் இருப்பானோ, எவன் சிம்மத்தை போன்ற வீரம் உள்ளவனோ, எவன் மிகவும் ப்ரஸித்தமானவனோ, அவனை துதிக்கின்றேன். அழியக்கூடிய இந்த சரீரத்தில், அழியாத நிரந்தரமான (ஆத்ம ஞானம்) சுகத்தை எனக்கு அளிப்பீர்களாக! தங்களுடைய சைன்யங்கள் எங்கள் சத்ருக்களை அளிக்கட்டும்!
என்ன அற்புதம் என்று பார்த்தீர்களா? லக்ஷ்மிந்ருஸிம்ஹன் தன பரமேரமேஸ்வரன் என்று கொண்டாடும் ஒரு அற்புதமான ஸ்லோகம். பரமேஸ்வரனும், ந்ருஸிம்ஹனும் ஒன்று என்று சொல்லும் உபநிஷத்தை கொண்டாடுவோம்.
உக்கிரம் என்ற பதத்திற்கு மேற்கூறியவாறு ப்ரம்மா விளக்கம் கொடுத்தார்.

ந்ருஸிம்ஹ தாபினி உபநிஷத்தின் பெருமை - 4

ருʼதம் ஸத்யம் பரம் ப்³ரஹ்ம புருஷம் க்ருʼஷ்ணபிங்க³லம் ।
ஊர்த்⁴வரேதம் விரூபாக்ஷம் ஶங்கரம் நீலலோஹிதம் ॥
இந்த மந்திரம் நமக்கு அனைவருக்கும் தெரிந்த மந்திரமே. சந்தியா வந்ததில் சமஷ்டி அபிவாதனத்தில் , ஹரிஹர வந்தனம் செய்யும் மந்திரம். உபநிஷத்துக்கள் ஒரு போதும் பேதத்தை போதிக்கத்து. எந்த புருஷன், சத்யமாகவும், பரப்பிரம்ம வடிவாகவும் இருக்கின்றானோ, எவன் திருமாலின் கருநிறத்துடனும், சிவனின் செந்நிறத்துடனும் இருக்கின்றானோ, எவன் சங்கரனாக இந்த உலகை காக்கின்றானோ, எவன் நீல நிறம் உள்ள கழுத்தை உடையவனோ அவனுக்கு நமஸ்காரம். ந்ருஸிம்ஹனும் சிவன் ஒன்று என்று பொருள் படுகின்றது.(எனவே தான் ந்ருஸிம்ஹனுக்கு பிரதோஷ பூஜை செய்ய படுகின்றது. சிவன் வேறு ந்ருஸிம்ஹன் வேறு அல்ல).
உமாபதி: பஶுபதி: பிநாகீ ஹ்யமிதத்³யுதி: ।
ஈஶாந: ஸர்வவித்³யாநாமீஶ்வர: ஸர்வபூ⁴தாநாம்
ப்³ரஹ்மாதி⁴பதிர்ப்³ரஹ்மணோঽதி⁴பதிர்யோ வை யஜுர்வேத³வாச்யஸ்தம்
ஸாம ஜாநீயாத்³யோ ஜாநீதே ஸோঽம்ருʼதத்வம் ச க³ச்ச²தி
எவன் உமாபதியாக, பசுபதியாக, பினாகம் என்னும் வில்லை உடையவனாக, இருக்கின்றானோ , எவன் அணைத்து வித்யைகளுக்கும் முடிவாக இருக்கின்றானோ, அணைத்து படைப்புகளுக்கும் ஈஸ்வரனாக இருக்கின்றானோ, பிரும்மமாகவும், ப்ரும்மாவிற்கு தலைவனாகவும் உள்ளானோ - அவனை அறிவார்கள் அம்ருதத்வம் அடைவார்கள். மேற்கூறிய மந்திரங்கள் அனைத்தும் பஞ்ச ப்ரஹ்மமா உபநிஷத்திலும் இருக்கின்றன. எனவே சிவன் வேறு நரசிம்மன் வேறு அல்ல என்று இந்த உபநிஷதம் சொல்கின்றது.



ந்ருஸிம்ஹ தாபினி உபநிஷத்தின் பெருமை - 3

ந்ருஸிம்ஹனின் பெருமைகளை என்னவென்று சொல்ல ... 

ருʼதம் ஸத்யம் பரம் ப்³ரஹ்ம புருஷம் க்ருʼஷ்ணபிங்க³லம் ।
ஊர்த்⁴வரேதம் விரூபாக்ஷம் ஶங்கரம் நீலலோஹிதம் ॥
உமாபதி: பஶுபதி: பிநாகீ ஹ்யமிதத்³யுதி: ।
ஈஶாந: ஸர்வவித்³யாநாமீஶ்வர: ஸர்வபூ⁴தாநாம்
ப்³ரஹ்மாதி⁴பதிர்ப்³ரஹ்மணோঽதி⁴பதிர்யோ வை யஜுர்வேத³வாச்யஸ்தம்
ஸாம ஜாநீயாத்³யோ ஜாநீதே ஸோঽம்ருʼதத்வம் ச க³ச்ச²தி


ஸ்ரீ ருத்ரத்திலும், பஞ்ச ப்ரம்ம (சிவ) மந்திரங்களிலும் உள்ள அனைத்துமே ந்ருஸிம்ஹ தாபினி உபநிஷத்தில் உள்ளது. சர்வேஸ்வரனான ந்ருஸிம்ஹன் சிவன் வடிவாகவே உள்ளான். உமையின் பதியாகவும், உலகத்தில் உள்ள (பசு) ஜீவர்களின் தலைவனாகவும், பினாகம் என்னும் வில்லை உடையவனாகவும், அனைத்து உயிர்களுக்கும் ஈஸ்வரனாகவும், ப்ரஹ்மமாகவும், பிரம்மாவுக்கு தலைவனாகவும், எவன் ஒருவன் ஸ்ரீ ந்ருசிம்ஹனை உபாசிக்கின்றானோ அவன் அமர தன்மையை அடைவான் என்கிறது இந்த உபநிஷதம்.


ந்ருஸிம்ஹ தாபினி உபநிஷத்தின் பெருமை - 2

தஸ்ய ஹ வா உக்³ரம் ப்ரத²மம் ஸ்தா²நம் ஜாநீயாத்³யோ
ஜாநீதே ஸோঽம்ருʼதத்வம் ச க³ச்ச²தி வீரம் த்³விதீயம் ஸ்தா²நம்
மஹாவிஷ்ணும் த்ருʼதீயம் ஸ்தா²நம் ஜ்வலந்தம் சதுர்த²ம்
ஸ்தா²நம் ஸர்வதோமுக²ம் பஞ்சமம் ஸ்தா²நம் ந்ருʼஸிம்ஹம்
ஷஷ்ட²ம் ஸ்தா²நம் பீ⁴ஷணம் ஸப்தமம் ஸ்தா²நம்
ப⁴த்³ரமஷ்டமம் ஸ்தா²நம் ம்ருʼத்யும்ருʼத்யும் நவமம் ஸ்தா²நம்
நமாமி த³ஶமம் ஸ்தா²நமஹமேகாத³ஶம் ஸ்தா²நம்
ஜாநீயாத்³யோ ஜாநீதே ஸோঽம்ருʼதத்வம் ச க³ச்ச²தி ஏகாத³ஶபதா³
வா அநுஷ்டுப்³ப⁴வத்யநுஷ்டுபா⁴ ஸர்வமித³ம் ஸ்ருʼஷ்டமநுஷ்டுபா⁴
ஸர்வமித³முபஸம்ஹ்ருʼதம் தஸ்மாத்ஸர்வாநுஷ்டுப⁴ம் ஜாநீயாத்³யோ
ஜாநீதே ஸோঽம்ருʼதத்வம் ச க³ச்ச²தி ||


ந்ருஸிம்ஹனின் மந்த்ரராஜ மந்திரத்தை பற்றி, தேவர்கள் வினவ ப்ரம்மா அவர்களுக்கு உபதேசம் செய்கின்றார். உக்கிரம் வீரம் என்று துவங்கும் ந்ருசிம்ஹனைன் மந்திரத்தை, முழுவதுமாக உபதேசம் செய்கின்றார் ப்ரம்மா. முப்பத்தி இரண்டு அக்ஷரங்களை கொண்ட இந்த அனுஷ்டுப் என்னும் , சந்தஸ்ஸில் உள்ள மந்திரத்தின் மஹிமையை பலவாறாக வர்ணிக்கின்றார் ப்ரம்மா. ஸ்ருஷ்டி, ஸ்திதி , சம்ஹாரம் என்ற முத்தொழில்களுக்கும் ஆதாரம் இந்த அனுஷ்டுப் தான் என்று சொல்கின்றார் ப்ரம்மா. அனுஷ்டுப் சந்தஸ்ஸில் அமைந்துள்ள ந்ரிசிம்மனின் மந்த்ரத்தை , அறிந்தவர்கள் சாகா நிலை (அம்ருதத்வம்) அடைவார்கள் என்கிறார் ப்ரம்மா.