ருʼதம் ஸத்யம் பரம் ப்³ரஹ்ம புருஷம் க்ருʼஷ்ணபிங்க³லம் ।
ஊர்த்⁴வரேதம் விரூபாக்ஷம் ஶங்கரம் நீலலோஹிதம் ॥
ஊர்த்⁴வரேதம் விரூபாக்ஷம் ஶங்கரம் நீலலோஹிதம் ॥
இந்த மந்திரம் நமக்கு அனைவருக்கும் தெரிந்த மந்திரமே. சந்தியா வந்ததில் சமஷ்டி அபிவாதனத்தில் , ஹரிஹர வந்தனம் செய்யும் மந்திரம். உபநிஷத்துக்கள் ஒரு போதும் பேதத்தை போதிக்கத்து. எந்த புருஷன், சத்யமாகவும், பரப்பிரம்ம வடிவாகவும் இருக்கின்றானோ, எவன் திருமாலின் கருநிறத்துடனும், சிவனின் செந்நிறத்துடனும் இருக்கின்றானோ, எவன் சங்கரனாக இந்த உலகை காக்கின்றானோ, எவன் நீல நிறம் உள்ள கழுத்தை உடையவனோ அவனுக்கு நமஸ்காரம். ந்ருஸிம்ஹனும் சிவன் ஒன்று என்று பொருள் படுகின்றது.(எனவே தான் ந்ருஸிம்ஹனுக்கு பிரதோஷ பூஜை செய்ய படுகின்றது. சிவன் வேறு ந்ருஸிம்ஹன் வேறு அல்ல).
உமாபதி: பஶுபதி: பிநாகீ ஹ்யமிதத்³யுதி: ।
ஈஶாந: ஸர்வவித்³யாநாமீஶ்வர: ஸர்வபூ⁴தாநாம்
ப்³ரஹ்மாதி⁴பதிர்ப்³ரஹ்மணோঽதி⁴பதிர்யோ வை யஜுர்வேத³வாச்யஸ்தம்
ஸாம ஜாநீயாத்³யோ ஜாநீதே ஸோঽம்ருʼதத்வம் ச க³ச்ச²தி
ஈஶாந: ஸர்வவித்³யாநாமீஶ்வர: ஸர்வபூ⁴தாநாம்
ப்³ரஹ்மாதி⁴பதிர்ப்³ரஹ்மணோঽதி⁴பதிர்யோ வை யஜுர்வேத³வாச்யஸ்தம்
ஸாம ஜாநீயாத்³யோ ஜாநீதே ஸோঽம்ருʼதத்வம் ச க³ச்ச²தி
எவன் உமாபதியாக, பசுபதியாக, பினாகம் என்னும் வில்லை உடையவனாக, இருக்கின்றானோ , எவன் அணைத்து வித்யைகளுக்கும் முடிவாக இருக்கின்றானோ, அணைத்து படைப்புகளுக்கும் ஈஸ்வரனாக இருக்கின்றானோ, பிரும்மமாகவும், ப்ரும்மாவிற்கு தலைவனாகவும் உள்ளானோ - அவனை அறிவார்கள் அம்ருதத்வம் அடைவார்கள். மேற்கூறிய மந்திரங்கள் அனைத்தும் பஞ்ச ப்ரஹ்மமா உபநிஷத்திலும் இருக்கின்றன. எனவே சிவன் வேறு நரசிம்மன் வேறு அல்ல என்று இந்த உபநிஷதம் சொல்கின்றது.
No comments:
Post a Comment