Thursday, May 31, 2018

உபநிஷத்தில் உள்ள உக்கிர ந்ருஸிம்ஹனின் வர்ணனம் ...........


தே³வா ஹ வை ப்ரஜாபதிமப்³ருவந்நத² கஸ்மாது³ச்யத
உக்³ரமிதி ஸ ஹோவாச ப்ரஜாபதிர்யஸ்மாத்ஸ்வமஹிம்நா
ஸர்வாꣳல்லோகாந்ஸர்வாந்தே³வாந்ஸர்வாநாத்மந: ஸர்வாணி
பூ⁴தாந்யுத்³வ்ருʼஹ்ணாத்யஜஸ்ரம் ஸ்ருʼஜதி விஸ்ருʼஜதி
விவாஸயத்த்யுத்³க்³ராஹ்யத உத்³க்³ருʼஹ்யதே ஸ்துஹி ஶ்ருதம் க³ர்தஸத³ம்
யுவாநம் ம்ருʼக³ம் ந பீ⁴மமுபஹந்துமுக்³ரம்
ம்ருʼடா³ஜரித்ரே ருத்³ரஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்நிவபந்து ஸேநா:
var ஸிம்ஹஸ்தவாநோ
தஸ்மாது³ச்யத உக்³ரமிதி ॥
இனி தேவர்கள், யாரை உக்கிரன் என்று போற்ற வேண்டும் என்று கேட்க, ப்ரம்மா விளக்கம் தருகின்றார். எவன் தன மகிமையால் அனைத்து உலகத்தையும் , அனைத்து ஜீவர்களையும்,தேவர்களையும் அனைத்து படைப்புகளையும், அனைத்தையும் படைக்கவும் அளிக்கவும் செய்கின்றானோ அவனே உக்கிரன் எனப்படுகின்றன.
அடுத்த படியாக, ஸ்ரீ ருத்ரத்தில் உள்ள ஸ்லோகம் இங்கு வருகின்றனது:
ஸ்துஹி ஶ்ருதம் க³ர்தஸத³ம் யுவாநம் ம்ருʼக³ம் ந பீ⁴மமுபஹந்துமுக்³ரம்
ம்ருʼடா³ஜரித்ரே ருத்³ரஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்நிவபந்து ஸேநா:
எவன் என்னுடைய இதய குகையில் வாழ்கின்றானோ, எவன் அழகு நிறைந்த யுவாவாக இருக்கின்றானோ, எவன் சத்ருக்களை அழிப்பதில் உக்ராமமாய் இருப்பானோ, எவன் சிம்மத்தை போன்ற வீரம் உள்ளவனோ, எவன் மிகவும் ப்ரஸித்தமானவனோ, அவனை துதிக்கின்றேன். அழியக்கூடிய இந்த சரீரத்தில், அழியாத நிரந்தரமான (ஆத்ம ஞானம்) சுகத்தை எனக்கு அளிப்பீர்களாக! தங்களுடைய சைன்யங்கள் எங்கள் சத்ருக்களை அளிக்கட்டும்!
என்ன அற்புதம் என்று பார்த்தீர்களா? லக்ஷ்மிந்ருஸிம்ஹன் தன பரமேரமேஸ்வரன் என்று கொண்டாடும் ஒரு அற்புதமான ஸ்லோகம். பரமேஸ்வரனும், ந்ருஸிம்ஹனும் ஒன்று என்று சொல்லும் உபநிஷத்தை கொண்டாடுவோம்.
உக்கிரம் என்ற பதத்திற்கு மேற்கூறியவாறு ப்ரம்மா விளக்கம் கொடுத்தார்.

No comments:

Post a Comment