Thursday, May 31, 2018

ந்ருஸிம்ஹ தாபினி உபநிஷத்தின் பெருமை - 2

தஸ்ய ஹ வா உக்³ரம் ப்ரத²மம் ஸ்தா²நம் ஜாநீயாத்³யோ
ஜாநீதே ஸோঽம்ருʼதத்வம் ச க³ச்ச²தி வீரம் த்³விதீயம் ஸ்தா²நம்
மஹாவிஷ்ணும் த்ருʼதீயம் ஸ்தா²நம் ஜ்வலந்தம் சதுர்த²ம்
ஸ்தா²நம் ஸர்வதோமுக²ம் பஞ்சமம் ஸ்தா²நம் ந்ருʼஸிம்ஹம்
ஷஷ்ட²ம் ஸ்தா²நம் பீ⁴ஷணம் ஸப்தமம் ஸ்தா²நம்
ப⁴த்³ரமஷ்டமம் ஸ்தா²நம் ம்ருʼத்யும்ருʼத்யும் நவமம் ஸ்தா²நம்
நமாமி த³ஶமம் ஸ்தா²நமஹமேகாத³ஶம் ஸ்தா²நம்
ஜாநீயாத்³யோ ஜாநீதே ஸோঽம்ருʼதத்வம் ச க³ச்ச²தி ஏகாத³ஶபதா³
வா அநுஷ்டுப்³ப⁴வத்யநுஷ்டுபா⁴ ஸர்வமித³ம் ஸ்ருʼஷ்டமநுஷ்டுபா⁴
ஸர்வமித³முபஸம்ஹ்ருʼதம் தஸ்மாத்ஸர்வாநுஷ்டுப⁴ம் ஜாநீயாத்³யோ
ஜாநீதே ஸோঽம்ருʼதத்வம் ச க³ச்ச²தி ||


ந்ருஸிம்ஹனின் மந்த்ரராஜ மந்திரத்தை பற்றி, தேவர்கள் வினவ ப்ரம்மா அவர்களுக்கு உபதேசம் செய்கின்றார். உக்கிரம் வீரம் என்று துவங்கும் ந்ருசிம்ஹனைன் மந்திரத்தை, முழுவதுமாக உபதேசம் செய்கின்றார் ப்ரம்மா. முப்பத்தி இரண்டு அக்ஷரங்களை கொண்ட இந்த அனுஷ்டுப் என்னும் , சந்தஸ்ஸில் உள்ள மந்திரத்தின் மஹிமையை பலவாறாக வர்ணிக்கின்றார் ப்ரம்மா. ஸ்ருஷ்டி, ஸ்திதி , சம்ஹாரம் என்ற முத்தொழில்களுக்கும் ஆதாரம் இந்த அனுஷ்டுப் தான் என்று சொல்கின்றார் ப்ரம்மா. அனுஷ்டுப் சந்தஸ்ஸில் அமைந்துள்ள ந்ரிசிம்மனின் மந்த்ரத்தை , அறிந்தவர்கள் சாகா நிலை (அம்ருதத்வம்) அடைவார்கள் என்கிறார் ப்ரம்மா.

No comments:

Post a Comment