Monday, December 26, 2016

ஆண்டாளும் திருப்பாவையும்..



ஆண்டாள் என்னும் பெண்மணி மிகவும் பெருமை வாய்ந்தவள் - ஏன் தெரியுமா ? நம்முடைய தமிழ்நாட்டிலே பிறந்து , தமிழிலே பாடி, இறைவன் அடியை  சேர்வதற்கு எளிய மார்கத்தை இந்த உலகத்திற்கே காட்டிய பெண் அவள் தான். ஸ்ரீமத் பாகவதம் என்னும் நூல் வடமொழியில் உள்ளது - சாமான்யமாக எல்லோராலும் படித்து, புரிந்து கொள்ள முடியாது. அந்த நூல் மிகவும் அருமையான பக்தி நூல் ஆகும். கண்ணனின் வாழ்கையும், லீலைகளை  எல்லாம்  மிகவும் அருமையாக சொல்ல பட்டுள்ளது அந்த நூலில். அது மட்டும் அல்ல ஒன்பது விதமான பக்தி முறைகளையும் மிகவும் விரிவாக அந்த வடமொழி கிரந்தத்தில் தெள்ளத் தெளிவாகச் சொல்லப் பட்டுள்ளது.

ஒன்பது விதமான பகுதி என்றால் என்ன?
  1. சிரவணம் - இறைவன் புகழை இடைவிடாது கேட்டல் 
  2. கீர்த்தனம் - இறைவன் பெருமைகளை காதால் பாடுதல்
  3. சுமரணம் - இறைவன் பெருமைகளை மனத்தால் நினைத்தல்
  4. பாதசேவகம் - இறைவன் திருவடிகளைத் தொழுதல் 
  5. அர்ச்சனம்  - இறைவனை மலர்களால் பூஜித்தல்
  6. வந்தனம் - இறைவனை வணங்குதல் 
  7. தாஸ்யம் - இறைவனுக்கு அடிமை செய்தல் 
  8. சக்யம் - இறைவனைத்  தன்  நண்பனாக பாவித்து  பக்தி  பண்ணுதல் 
  9. ஆத்ம நிவேதனம் - தன்னையே இறைவனுக்கு அற்பணித்தல்
மேற்கூறிய பக்தி  வகைகளில் ஆண்டாள் செய்யாத பக்தியே இல்லை. அத்தனையும் தாண்டி, கண்ணனுக்கு , சரணாகதி செய்து , தன்னையே அர்பணித்துக் கொண்டாள். அது மட்டுமா? இன்னும் இருக்கின்றது -  பெரியாழ்வார்  என்ற விஷ்ணுசித்தன் தினமும்  இறைவனாகிய வடபத்ரசாயீ எனப்படும் ஆலின் இலை மேல் கிடந்த பெருமாளுக்குத் தொடுத்துச் செல்லும் பூ மாலையைத் தான் அணிந்த பிறகு இறைவனுக்குச் சமர்ப்பித்து - சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற பெயரையும் பெற்றாள் நம் ஆண்டாள். இவ்வளவு பெருமைகள் பெற்ற , நம் ஆண்டாள் - தெள்ளிய தமிழில் அருமையான பாடல்கள் பாடி தன்னுடைய அந்தத் திருமேனியுடன் இறைவனிடத்தில் சென்று அடைந்தாள்.  எப்படிப் பட்ட பெருமை என்று பார்த்தீர்களா? ஒவ்வொரு சாமான்யமான  மனிதனும் எப்படி இறைவனை வணங்க வேண்டும் என்றும், எப்படி இறைத்தொண்டு  செய்ய வேண்டும் என்றும் இந்த உலகத்துக்கே எடுத்து சொன்ன நம்முடைய தமிழ்ப் பெண் ஆண்டாள்.

காசு வாங்கி  கொண்டு கேவலமான கவிதைகளை அவிழ்த்து விட் விட்டு, "சுய மரியாதை" என்று பிதற்றிக் கொண்டிருக்கும் வெட்கம்  கெட்டவர்கள் எல்லாம் - ஆண்டாளின் பக்தியைப் பார்த்து ஒரு நல்ல பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தப் பூவுலக மாந்தர்கள் லோரும் ஒன்றாகச் சென்று  இறைவனைப் பாடினால், மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து, அதன் பிறகு இறைவனைச் சென்று அடையலாம் என்னும் விஷயத்தை , தெள்ளத் தெளிவாக கட்டி விட்டாள் நம் ஆண்டாள்.

திருப்பவவை என்னும் நூலில் 30 பாடல்கள் -  மிகவும் பிரசித்தி பெற்ற பாடல்கள். அந்தப் பாடல்கள் வைணவர்களுள்க்கு மட்டுமே தெரிந்து கொண்டு இருந்தன. கஞ்சி பரமாச்சாரியார், அரியக்குடி இராமானுஜ ஐயங்காரை, அழைத்து அப்பாடல்கள்  முப்பத்தையும் இனிமையான கர்நாடக இராகங்களில்  இசைப் படுத்தும் படி கூறினார். ஆச்சாரியாருடைய வேண்டுகோளுக்கு இணங்க , அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் மிகவும்  அழகான இராகங்களில் இசை அமைத்தார். அவற்றை காலம் சென்ற கலைஞர் திரு  (MLV)  வசந்தகுமாரி அவர்கள் மிகவும் அருமையான குரலில் பாடவும் செய்தார். அப்படி ஆகத்தானே நம் அனைவரும் இன்றைக்கு அப்பாடல்களை, அனுபவித்து வருகின்றோம்.

அதே போல, பாவை நோன்பு இருந்து, அதன் பிறகு ஆண்டாள் இறைவனுடன் திருமணம் நடப்பதை போல கனவு காண்கின்றாள். அந்தக் கனவையும் தெள்ளு தமிழில் வரணமும் ஆரியம் என்று துவங்கும் பிறகு பாடல்களாகப் பாடி உள்ளாள்.

அதன் பிறகு இறைவனை அடைய, அவனுடைய ஆயுதங்களாகிய சங்கு, சக்கரம் போன்றவற்றை தூதாக அனுப்பி பாடல்கள் பாடினாள்.

இப்படியாகத் தானே மொத்தம் நூற்று நாற்பது மூன்று  பாடல்கள் நாச்சியார் திருமொழி என்றும், முப்பது பாடல்கள் திருப்பாவை என்றும் ஒரு நோற்று எழுபது மூன்று பாடல்கள்  பாடி நம் தமிழ் நாட்டு மக்களை மட்டும் அல்லது உலகில் உள்ள யாவரையும்  அனுக்கிரஹம் எய்தல் ஆண்டாள்.

பெரியாழ்வார் ஆண்டாளை ஒரு பல்லக்கில் வைத்து , திருவரங்கத்திற்கு எடுத்துச் செல்ல, ஆண்டாள்   தன்னுடைய அந்த உடலோடு அப்படியே திருவரங்கனுடன் ஒன்றாக இணைந்தாள். தன்னுடைய மக்களை இழந்த சோகம் தாளாமல் , பெரியாழ்வார் இறைவனையும் ஆண்டாளையும், ஸ்ரீ வில்லிப்புத்தூரில்   வந்து வைதிக முறைப் பாடி  திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார். வேதோக்தமாக, எல்லா சடங்குகளையும் செய்து, தன்னுடைய மகளாகிய ஆண்டாளை , திருவரங்க நாதருக்குத் திருமணம்  செய்து கொடுத்த்தார் பெரியாழ்வார். அப்படியாகத்தானே பாண்டிய நாடே மெச்சும் அளவிற்கு  ஆண்டாள், ரெங்கமன்னர் திருமணம் நடந்து முடிந்தது.

தன்னுடைய ஆசை மகளுடைய, ஞாபகத்திற்கு , ஆண்டாள் முகச்சாயல் உடனே ஒரு   விக்ராஹத்தை, நிறுவி அவளுடனே தன்னையும் (தன்னுடைய மருமகன் ஆகிய ரங்கம்னார்யும் சிலை வைடிவமாக நிறுவினார் பெரியாழ்வார். என்ன பெருமை பார்த்தீர்களா? தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும், தமிழர்களுக்கும்  ஆண்டாள்  மற்றும் பெரியாழ்வார் இயற்றிய சேவையை , நம் எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும்.

தமிழர்களுக்கு, இதைவிடப் பெருமை வேறு என்ன இருக்க முடியும் ? அரசியல் காரணங்களுக்கு   ஆகவும், சுயநலமான காரணங்களுக்கு ஆகவும் சுய மரியாதை என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றும் தலைவர்கள் எல்லோரும் ஆண்டாள் செய்த சேவையை மனதில் கொள்ள வேண்டும்.

Sunday, September 4, 2016

விநாயகப் பெருமானின் பெருமைகள்

விநாயக சதுர்த்தி




ஆவணி / புரட்டாசி மாசம் (பாத்ரபத) வரக் கூடிய வளர்பிறை சதுர்த்தி (ஸுக்ல சதுர்த்தி) அன்று செய்யப் படும் வ்ருதம் தான் இந்த விநாயகர் பூஜை. இதற்கு சிறப்பாக வர சித்தி விநாயகர் பூஜை என்று சொல்லப் படுகின்றது. அதாவது, வேனிற்காலம் முடிந்து, மழைக் காலம் துடங்கும்  பொழுது ,  குளிர் / பனிக் காலம் வருவதற்கு முன்பு, இந்த வ்ருதம் அனுஷ்டிக்கப் படுகின்றது.

நாம் வருடம் முழுவதும் செய்யும் மற்ற வ்ருதங்களுக்கும் இந்த  பூசைக்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்திப் பூசையிலே, பச்சை களி மண்ணால், செய்த திருவுருவத்தில் விநாயகப் பெருமானை, எழுந்தருளச்செய்து, 21 விதமான மலர்களையும், இலைகளையும் சமர்ப்பித்து , அதன் பிறகு அடுத்த நாள் (பஞ்சமி) , அந்த களிமண் சிலையை அருகே உள்ள நதியிலோ ஆற்றிலோ விடுவது (விசர்ஜனம்) நம்முடைய சம்ப்ரதாயம்.

நம்முடைய தமிழகத்தில் இந்தப் பழக்கம் இல்லாத பொழுதும், ஆதி சங்கரர் காலத்திற்குப்   பிறகு இங்கு இந்த வ்ருதம் அனுஷ்டிக்கப் பட்டது. மஹாராஷ்டிர மாநிலத்தில் தான் இந்த திருவிழா மிகவும் கோலகலமாகக் கொண்டாடப் பட்டது. கணேஷ் - கௌரி என்ற பெயரிலே 10-11 நாட்கள் வரை (அனந்த சதுர்தசி)  இந்தத் திருவிழா கொண்டாடப் படுகின்றது.

கிணறு, குளம் மற்றும் ஆறுகளில் உள்ள நீர் சுத்தம் அடைவதற்கும், கிருமிகள் அழிவதற்கும்  இந்த இலைகள் மிகவும் துணை புரிகின்றன. நோய்கள் வந்த பிறகு மருத்துவம் செய்வதை விட, வருமுன் காதலே நன்று என்னும் வகையில் தடுப்பு மருந்து கொண்ட மூலிகைகளை, பருகும் நீரை கொண்டு  நீர் நிலைகளில் கரைத்து விடுவது நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத் தந்த அரியதொரு விஷயம்.

அந்த 21 இலைகள் என்ன என்று இங்கே பார்த்து கொள்ளுங்கள்:

http://srimaniv-flowers.blogspot.com/2012/02/eka-dhvim-shathi-21-leaves-for-ganesh.html


அதே போல், 21 பூக்கள் என்ன என்பதை இங்கே பார்த்துக் கொள்ளுங்கள்:

http://srimaniv-flowers.blogspot.com/2012/12/21-flowers-for-ganesh-puja.html


அந்தப் பச்சிலைகள்  எல்லாம் கிடைக்கா விட்டால் அருகம் புல்லை கொண்டு இந்தப் பூஜையை எளிமையாகச் செய்து விடலாம்.  விநாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டை மற்றும் முக்கனி மற்றும் விளம் பழம் ஆகியவை கிடைக்குமாமயின் மிகவும் நன்று.


செயற்க்கைச் சாயம் பூசிய பொம்மைகளை  ஆற்றில் காரைக்காதீர் 

நம்முடைய கலாச்சாரத்தில், சமுதாயத்தில் எல்லா மரபினருக்கும் உரிய பங்கு மற்றும் பெருமை உண்டு. குயவர்கள் மண் பானை மற்றும் மண்ணால் ஆன பொம்மைகளை செய்வதில் வல்லவர்கள். அதாவது , பிரம தேவனைப் போன்று அவர்கள் உருவாக்கும் தொழில் செய்வதனால்  அவர்களை விஸ்வகர்மா அல்லது விஸ்வ பிராம்மணர்கள் என்று கூறுவார்கள். ஆசாரி  , இரும்பு வேலை செய்யும் கொல்லன், தட்டான், குயவன்,கொத்தனார் - இந்த ஐந்து தொழில்களும் புனிதத் தன்மை வாய்ந்தன என்பது நம் தமிழர்களின் நம்பிக்கை. பிறப்பு, இறப்பு, திருமண, திருவிழா என்று எல்லா நேரத்திலும் மிகவும் முக்கியமான பங்கு குயவர்களுக்கு உண்டு. இந்த விநாயக சதுர்த்திக்கு பச்சைக் களிமண்ணால், விநாயகர் சிலைகளை செய்து தருவதில் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. இயற்கையான களிமண்ணால் அல்லாத விநாயகர் சிலைகளை வாங்குவதாலோ,  கடல், ஆறு மற்றும் குளங்களில் கரைப்பதில் நம்முடைய அந்தரிக்ஷம் மாசு படும் என்பதை நாம் மறக்கக் கூடாது. எனவே அப்படி பச்சைக் களிமண் பொம்மைகள் கிடைக்க விட்டால் , நாமே செய்து கொள்ளலாம் (சுத்தமான களிமண்ணைக் கொண்டு).

திருப்புகழில் விநாயகப் பெருமானின் பாடல்கள் 

பொதுவாக விநாயகர் பாடல்களை நாட்டை (தமிழ் பண்) என்னும் ராகத்தில் படுவது நம் மரபு. சங்கீதம் தேறிய விட்டால், வெறுமனே படித்தாலும் போதும். அருணா கிரி நாதர் அருளிய திருப்புகழில்  முதல் மூன்று பாடல்கள்:

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்

வி: தன்னுடைய கைகளில் நிறையக் கூடிய அளவில் உள்ள கனி (வினைத்தொகையாக இருப்பதால் எடுத்து தின்று கொண்டே இருக்கும் என்று பொருள் கொள்ளலாம்)வகைகள் மற்றும் அப்பம், பொரி ஆகியவற்றை அன்புடன் உண்ணும்  யானை முகம் கொண்ட விநாயகனை, எல்லா வரமும் தரும் கற்பக மரம் என்று எண்ணி கொண்டு பக்தி பண்ணினால், எல்லா விதமான ஊழ்வினைகளும் அகன்று  விடும். அப்படிப்பட்ட விநாயகர், மறை நூல்களை கற்றிடும் அன்பர்களது நெஞ்சில் நீங்காது இருப்பவர் என்று அருணகிரிநாதர் இங்கு விநாயகப் பெருமானின் பெருமைகளை எடுத்துச் சொல்கிறார். கேட்டவருக்கு கேட்ட படி வரம் அருளும் கற்பகத தரு போன்றவர் விநயகர் என்பது இந்த வரிகளின் உட்கருத்து.

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

ஊமத்தம் மலர்களையும், நிலவையும் அணிந்த சடையை உள்ள சிவனாரின் மகன், மத்தளத்தை  ஒத்த வயிறை உடையவன், உத்தமியாகிய உமையின் மகன், மல்லியுத்தம் செய்தற்கு ஏற்ற நல்ல திரண்டு விளங்கும் புஜங்களை உடையவன்  ஆகிய விநாயகப் பெருமானை தேன் ஊரும் புதிய மலர்களைக் கொண்டு பூசை செய்வேன் என்று வணங்குகிறார் . முழுமுதற்க்  கடவுளாகிய வினையாகப் பெருமான் பார்வதி மற்றும்  பரமேஸ்வரனின்  குழந்தை என்று இந்த வரிகள் சிறப்பிக்கின்றன.

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

வி: மகா மேரு மலையிலே இயல்,இசை,நாடகம் என்று முத்தமிழ்களையும் தன்னுடைய தந்ததினால் எழுதிய பெருமை கொண்டவனே என்றும், விநாயகர் வணக்கம் செய்யாமல் சென்றமைக்காக திரிபுர ஸம்ஹரம் செய்ய சென்ற சிவ பெருமானுடைய ரத்தத்தின் அச்சை பொடி செய்த பெருமை கொண்டவர் விநாயக பெருமான் என்று சொல்கிறார் இங்கு. விநாயக வணக்கம் செய்யாமல் துவங்கும் எந்த செயலும் தடங்கல் இல்லாமல் முடிவுறாது என்பதற்கு , அவருடைய தந்தை ஆகிய சிவ பெருமானே விதி விலக்கு இல்லை.  எனவே தான் எந்தச் செயல் செய்யும் பொழுதும் விநாயகர் பூசை சிறப்பாகச் செய்யப் படுகின்றது. எல்லா வித்தைகளுக்கும் இவரே ஆதாரம் என்றும், விக்கினங்களையும்  நிவாரணம் செய்யும் பெருமை கொண்டவர் என்பதும் இந்த வரிகளின்  உட்கருத்து.

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.

வள்ளி மீது கொண்ட காதலினால், ஒரு கிழவனைப் போலே வேடம் பூண்ட முருகனை, வள்ளியுடன் சேர்த்து வைப்பதற்காக, தினைப் புனத்தில் ஒரு யானையின் உருவம் தரித்து , அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் முருகனை திருமணம் செய்வித்த பெருமை கொண்டவனே என்று போடுகின்றார். அதாவது விநாயகரைப் பூசை செய்தால் சர்வ மங்களங்களும் உண்டாகும் என்பதற்கு இந்த வரலாறே சான்று.


Thursday, September 1, 2016

ஒளவையார் அருளிய விநாயகர் அகவல்



விநாயகர் சதுர்த்தி என்று சொல்லப்பெறும் பிள்ளையார் நோன்பு , ஆவணி மதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தி திதி அன்று கொண்டாடப் படுகின்றது. வடநாட்டில், மகாராஷ்டிரா மாநிலத்தில் விசேஷமாக, விநாயர் பூஜை செய்யப் படுகின்றது. ரிக் வேதத்திலே உள்ள கணபதி உபநிஷத் என்னும் நூலிலே, விநாயகரை மூல முதற் பொருளாகக் கூறப் படுகின்றது. வேதம், சாஸ்திரம் எல்லாம் தெரிந்தால் தான் அதெல்லாம் நமக்குத் புரியும்.

நம்மடைய   திராவிட நாட்டிலே உதித்து, தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் தன்னுடைய வாழ்க்கையை அர்பணித்துக் கொண்ட நம்  ஒளவைப் பாட்டி பல விதமான, இலக்கிய நூல்களை அருளி இருக்கின்றார். அவற்றுள் ஒன்றான விநாயகர் அகவல் , வேத வேதாந்தங்களின் சாரமாக விளங்குகின்றது. தூய தமிழிலே, விநாயகப் பெருமானின் பெருமைகளை எல்லாம், மிகவும் அழகாக சொல்லி இருக்கின்றார் நம்முடைய ஒளவைப் பாட்டி.

விநாயகப் பெருமானின் அடி முதல் முடி  வரை (பாதாதி எக்ஸம்)  வர்ணனை:


சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வி: குளுமையான சந்தனம் மற்றும் செந்தாமரை போல் மிகவும் அழகான பாதங்களில் சிலம்பு கொஞ்சுகிறது. மேலும், அவருடைய இடுப்பில் பொன்னால் செய்த அரை ஞான் கொஞ்ச, பூ மற்றும் மேகத்தைப் போன்ற வெள்ளை நிற ஆடை , அவருடைய இடுப்பில மின்ன, அழகான கூடை போன்ற வயிறு மற்றும் ஒற்றைக் கொம்பு (ஏக தந்தம்) ஆகியவை அங்கு விளங்குகின்றன.

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 

யானை முகமும், அதன்  மீது இருக்கின்ற சிந்தூரமும், ஐந்து கைகளும் (4 கைகள் + தும்பிக் கை), அந்தக் கைகளில் உள்ள பாச , அங்குசமும், அவருடைய மிகவும் அழகான நீல மேனியும் நெஞ்சிலே   நீங்காமல் இருக்கின்றன என்று கூறுகின்றார் நம் ஒளவையார்.தொங்கும் வாயும், நன்கு தோள்களும் ( 2x2 = 4) (புஜங்கள்) , மூன்று திருக்கண்களும், மதநீர் ஒழுகுவதால் கண்களில் ஆகிய திருச்சுவடும் அவருடைய திரு முக மண்டலத்தில் விளங்குகின்றன.

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! 

ஒளவையார், விநாயகப் பெருமானை இன்னும் அனுபவிக்கின்றார் பாருங்கள். இரண்டு  காதுகளும், மின்னிக் கொண்டு இருக்கும் தங்கக் கிரீடமும், ஒன்றாகத் திரண்டு கிற்கும் பூணூல் (யக்னோபவீதம்)  மின்னும் மார்பும், ஆக விநாயகர் உடைய ஸ்வரூப வர்ணனை ஆகிவிட்டது. இப்பொழுது, அந்த அனுபவத்தின் உச்சத்துக்கே சென்று விட்டார் நம்முடைய ஒளவைப் பாட்டி .  அப்படிப் பட்ட விநாயகர், முக்கணளயும் உண்ணுபவராகவும், மூஷிகம் என்ற  பெருச்சாளியை  தம்முடைய ஊர்தியாகக்(வாகனம்) கொண்டவர் என்கிறார் ஒளவையார்.

விநாயகரை பிரும்ம ஸ்வரூபகக் காணல் 

மாண்டூக்ய உபநிஷத்தில் சொல்லப் பெட்ரா பிரம்மத்தின் நிலையை இங்கு சொல்லகின்றார் -> அதாவது உபநிஷத்துக்களையே தலை சிறந்ததான மாண்டூக்ய உபநிஷதத்திலே சொல்லப் பெட்ரா (சதுர்தம்   ப்ரம்ம)  என்ற வசனத்தை  இங்கு சொல்லுகின்றார். அதாவது இறை அனுபவம் அல்லது ப்ரம்மனுபாவம், என்பது சொல்லுக்கெல்லாம் கடந்த நிலை. ஜாகிரத், ஸ்வப்ன, சுஷுப்தி என்ற மூன்று  நிலைகளையும் தாண்டி, நான்காவதாக இருக்கும் நிலையே அந்த பரவசமான சமாதி  நிலை - அதையே இங்கு துரீய (நான்காவது)  நிலை என்றும், ஆத்ம ஞானம்  என்ற மெய் ஞானம் என்றும் , அந்த துரீய ஞானம் நிறைந்த கற்பக மரம் போன்ற யானையே விநாயகர்  என்று போற்றுகின்றார். அதாவது இறைவனுடைய வடிவத்தை அழகாய் வர்ணித்த  ஒளவையார் , இப்பொழுது அந்த நாமம் , ரூபம் என்று சொல்லப் படும் மாயைக்கு அப்பாற்பட்ட  ப்ரம்ம ஸ்வரூபகமாகவே பார்க்கின்றார். என்ன அனுபவம் பாருங்கள்? வேதாந்தம் கற்று கரைகண்ட பெரிய ஞானிகளின் நிலையை நம் தமிழ்ப் பாட்டி அடைந்து விட்டாள் இறைவன் அருளால் . என்ன அற்புதம் பாருங்கள்? இப்படிப் பட்ட ஞானத்தை அருளிய இறைவன் பெரியவனா? அவனுடைய பக்தை ஆகிய ஒளவைப் பாட்டி பெரியவளா? என்ன அற்புதம் பாருங்கள்.


இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 

இந்தக் கணத்திலே வந்து தன்னை ஆட்கிண்டு, தன்னுடைய உணமையான ஆத்ம ஸ்வரூபம் தெறிய  படுத்தி  , பெற்ற தாய் போல அருள் புரிந்தான் விநாயகன் என்கிறாள் ஒளவை பாட்டி. அதே போல், இந்த பிறப்பு, இறப்பு, மூப்பு பிணி என்ற விஷயங்கள் எல்லாம், வெறும்  மாயை என்றும், இறை அனுபவமே (அநுபூதி) நிரந்தரமானது என்றும் உணர்த்தி, வேதங்களுக்கு உட்பொருளாகிய திருவைந்தெழுத்தை, தன்னுடைய உள்ளதினால் நிலை நிறுத்தி, தன் நெஞ்சிலே குடிகொண்டான் விநாயகன் என்கிறார் நம் ஒளவை பாட்டி. 

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் 

அன்னை வடிவமாக வந்த விநாயகப் பெருமான் இப்பொழுது,  குரு வடிவமாகி ஒளவைக்கு மெய்ஞ்ஞானம் புகட்டுகின்றார் என்கிறாள் நம் ஒளவை. விநாயகப் பெருமான், தன்னுடைய திருவடிகளை, இந்தப் புவி மீது வைத்து , இந்த உலகம் எல்லாம் மாயை என்னும் சத்தியத்தை உணர்த்தி, உலக விஷயங்களில் ஈடுபட்டு வருத்தப் படாமல் இருக்கும் வழியை அனுகிருஹம் செய்தார் என்றும், தன்னுடைய கையிலே உள்ள கோடாரியால், எல்லா  விதமான இடர்களையும் களைந்து, தனக்கருள் புரிந்ததாகக் கூறுகின்றாள். அப்படி இடர்களை களைந்து, தன்னுடைய காதினிலே  கேட்க கேட்க தெவிட்டாத உபதேசம் செய்தார் விநாயகப் பெருமான் என்று சொல்கின்றாள் நம்  ஒளவை பாட்டி.

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் 

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் 


புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து 


முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 


எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! 

Wednesday, August 31, 2016

ஆரிய-திராவிட பொய் கதை - அறிவோமா?

வெள்ளையர்கள் செய்த சதி

வெள்ளையர்கள் பஞ்சு வியாபாரம் செய்ய வந்து, "ஒண்ட வந்த பிடாரி ஊரு பிடாரியை விரட்டின மாதுரி" , நம்முடைய உள்நாட்டவர்களை ஆதிக்கம்   செய்யத் துவங்கினர். மன்னர் ஆட்சியில் இருந்து அவர்களுடைய அரசாங்கம் ஆகி விட்டது.சமய நூல்களையும் வரலாற்றையும் ஆராய்ச்சி செய்கின்றோம் என்று பிதற்றிக் கொண்டு, வேதங்களையும், ஆகமங்களையும்  மொழி பெயர்ந்தது மட்டும் அல்லாது,  அவர்களுடைய சொந்தக் கதையை உள்ளே நுழைத்து விட்டார்கள். சருமத்தின் நிறத்தைக் கொண்டு உயர்வு தாழ்வுகளை உண்டு பண்ணி, கறுப்புத் தோல் கொண்டவர்கள் எல்லாம் வெள்ளை தோல் உள்ளவர்களுக்கு அடிமைகள், என்னும் கருத்தைத் பின்பற்றி வந்த , அந்த  முட்டாள்களுக்கு  அதனைத் தவிர வேறு  ஒன்றும் கண்ணுக்குத் தென்படவில்லை போலும். சமுதாயத்தில் உள்ள மக்கள் தத்தம் தொழில்களுக்கு  ஏற்ப 4 வர்ணங்களாகப் பிரித்து, அவரவர் தொழில்களை அவரவர்  செவ்வனே  செய்து வந்த திறனைக் கண்டு பொறுக்க முடியாமல் போனார்கள் அவர்கள் - வேதத்திலும் இந்த வெள்ளையர் ஆதிக்கமே பேசப் படுகின்றது என்று கட்டுக் கதை கட்டினார்கள்.

வேதங்களின் சிறப்பு 

இதில், ஒன்றாக இருந்த வேதங்களை, வேத வியாசர் கலியுகம் துவங்கும் முன்னே  (3-4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்)  நான்காகப் பிரித்தார்.  அப்படி இருக்க, ரிக் வேதத்தில் உள்ள இந்திரனுக்கும் அரக்கனுக்கும்  நடந்த யுத்தம், வெள்ளை கறுப்பர்களுக்கு இடையே நடந்த யுத்தம் என்றும்,  பிராம்மணர்கள் ஆரியர்கள் என்றும் எல்லாம் அவர்களுடைய கட்டுக் கதைகளை கட்டி விட்டான் மாக்ஸ் முல்லர் என்ற அந்த வஞ்சகன். எழுதா மறை - என்று குரு சிஷ்ய பரமபரையாக, ஓதப் பெற்ற   நம் வேதங்களை குறை கூறி, கதை கட்டினான் அவன்.

ஆரிய - திராவிட கட்டுக் கதை 

ஐயா என்ற சொல்லே ஆர்யா என்று வடமொழியில் வழங்கப் படுகின்றது. அதே போல் வடமொழியிலே நம் தமிழகத்துக்கு பெயர் தான் - திராவிட தேசம் - அதையே நம் தமிழ் தாய் வாழ்த்தில் "திராவிட நல் திருநாடும்" என்று பாடுகின்றோம். சேர, சோழ, பாண்டிய - தேசங்களே நம்முடைய தமிழகத்தில் இருந்தன. நெய்தல், பாலை, குறிஞ்சி, முல்லை,மருதம் என்ற பிரிவுகளே இங்கு ருந்தன. திராவிட  நாடு என்ற பெயர் எந்த இலக்கியங்களிலும் பெரிதாக பார்க்க முடியாது. அப்படி இருக்கையில் , நம்மை எல்லோரையும் முட்டாள் ஆக்கும் வகையிலே இந்தக் கதை அமைந்து உள்ளது.ஆங்கிலத்திலே சார் என்பதை போல், தமிழிலே ஐயா என்பதை போல், வட மொழியிலே மரியாதையைக் குறிக்கும் சொல்லே இந்த ஆர்யா என்பது. மற்றபடி எந்த விதமான பொருளும் அதற்கு இல்ல.

தமிழர்கள் / இந்தியர்கள் ஆகிய நாம் எல்லோரும் ஒன்றே

நம் தமிழகத்தில் உள்ள எல்லோரும் ஒன்றே - அவர்களுடைய மரபணுக்கள் எல்லாம் ஒரே மாதரித்  தான் இருக்கும். அதனை நாம் அந்த வெள்ளைக்காரன் சொல்லித் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை. எல்லாக் குலத்திலும் எல்லா விதமான மக்கள் உள்ளனர் இன்று - கருத்தவர்கள், வெளுத்தவர்கள் எல்லாம் எல்லாக் குலத்திலும் உள்ளனர். இதுவே இந்த  ஆரிய திராவிட  கதை பொய் தான் என்பதற்கு ஒரு பெரிய ஆதாரம்.சைவம் தழைத்து ஓங்கி இருந்த காலத்தில், ஜாதி பேதம் இன்றி(வேளாளர்கள், வணிகர்கள், அரசர்கள், பார்ப்பனர்கள்) எல்லோரும் சேர்ந்து சிவத்  தொண்டு செய்தனர்.  சைவத்துக்கு மிகவும் நெருங்கிய மொழியாகிய நம் தமிழ் மொழி, அகத்திய முனிவரால் வளர்க்கப் பெற்றது என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு உண்மை.  தொல்காப்பியம் போன்ற நூல்களை இயற்றி தமிழ் இலக்கணத்திற்கு வித்து இட்டவர்கள் அவர்கள் தான். ஜாதி மத பேதம் இல்லாமல் எல்லோரும் இணைந்து தமிழ் வளர்த்தனர் ஒரு காலத்தில்..

சங்க இலக்கியங்கள் 

சங்க காலப் புலவர்கள், திருவள்ளுவர்,இளங்கோ அடிகள் - இவர்களுக்கு எல்லாம் தெரியாத விஷயம் இந்த மாக்ஸ்  முல்லர் என்ற வஞ்சனுக்குத் தெரிந்து விட்டது போலும். தமிழ் வளர்த்த கபிலர், பரணர் - அவர்களை எல்லம் விட்டு விட்டு, சங்க  புலவர்களுக்கு எல்லாம் தெரியாத உண்மை அந்த வெள்ளையனுக்குத்  தெரிந்து விட்டது போலும்.நம்முடைய சாஸ்திரங்களும், புராணங்களும், தமிழ் இலக்கியங்களும்  -  இந்த வெள்ளைத்தோலும் கருப்பு மனமும் கொண்ட வஞ்சகர்களுக்கு அப்பாற்பட்டது.
இனி   நம் வேதங்களின் சிறப்பை வள்ளுவப் பெருந்தகை என்ன சொல்கிறர் என்று பார்ப்போம்:

மறப்பினும், ஒத்துக் கொளல் ஆகும்; பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

அதாவது, தான் குருகுலத்தில் கற்ற வேதத்தை மறந்தாலும் கூட மீண்டும் படித்துக் கொள்ளலாம், ஆனால் ஒரு பிராம்மணன், தன்னுடைய பிறப்பொழுக்கம்   (சமஸ்கரம்) - அதனை மறந்தால் எப்பொழுதும் மீண்டும் பெற முடியாது என்கிறார் வள்ளுவர். இதனை ஒரு சாதி அல்லது குலத்தைப் பற்றிச் சொல்லும் குறளாக   எடுத்துக் கொள்ளாமல், சங்க காலத்திலே நம் தமிழகத்தில் வேதங்கள் தழைத்து ஓங்கி இருந்தன என்றும், அதனை செவி வழியாகப் படித்தார் என்றும் புரிந்து கொள்ள முடிகின்றது. அப்படி என்றால், வள்ளுவருக்குத் தெரியாத விஷயம், இந்த வெள்ளையனுக்குத் தெரிந்து விட்டதா? இல்லவே இல்ல.

ஐம்பெரும் காப்பியங்களுள் முதலாவதான சிலப்பதிகாரத்தில் வேதங்களின் சிறப்பைக் காணலாம் இங்கே:

சிலப்பதிகாரத்தில் வஞ்சினமாலை  என்ற சாபம் கொடுக்கும் படலம் 




யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து 45

மகா பதிவ்ருதை ஆகிய நம் கண்ணகித் தெய்வம், தன்னுடைய கணவனைத் தவறாக கொலை புரிந்த பாண்டிய மன்னன் மீதும் அவன் நகரத்தின் மீதும் தீராக்  கோபம் கொண்டாள்.கண்ணகி பாண்டியன் மீது தீராத கோபம்  கொண்டு, தன்னுடைய இடப்பாகத்து  முலையை, தானே தான் கையால் கிழித்து எடுத்து, மதுரை நகரத்தை மும்முறை வலம் வந்து பிறகு  மதுரை மீது தன்னுடைய  தனத்தை எரிந்து சாபம் கொடுக்கின்றாள்.

விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த
நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப் 
பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி
மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள் 50

சினம் கொண்ட கற்புக்கரசி கண்ணகியின் முன்னர், அக்னி பகவான் ஒரு ப்ராஹ்மண வேஷம் கொண்டு தோன்றினான். அந்த   கற்புத் தெய்வத்தின் ஆக்கினையைப் பெற்று அவன் மதுரையை அழிக்கலுற்றான். இங்கு எரியும் மேலாடை அணிந்த வானவன் என்றால் - சிவ பெருமானையும் பொருள் கொள்ளலாம் - நாயன்மார்கள் சிவனை பொன் கழல்  வண்ணன் என்று போற்றுகின்றனர். ஆனால் தர்மஸ்வரூபி ஆக இருக்கும் அக்னியையும் பொருள் கொள்ளலாம் - பஞ்ச  பூதங்களும் இறைவனின் படைப்பே என்பதால், அவர்கட்கு அந்தர்யாமியாக இருக்கும் பரமேஸ்வரனையே குறிக்கும் என்று பொருள் கொள்ளலாம்.

பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்
ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப்
பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய 55

கண்ணகி  தீக்கடவுளுக்கு  ஆணை இட்டாள்.
  1. பார்ப்பனர் (ப்ராஹ்மணர்)
  2. தருமம் தவறாமல் இருக்கும் சான்றோர்கள்
  3. பசு மாடுகள்
  4. பத்தினிப் பெண்கள்
  5. வயது முதிர்ந்த மக்கள்
  6. சின்னக் குழந்தைகள் 
ஆகிய இவர்களை விட்டு மற்றவர்களை எரித்து விடுமாறு அக்னிக்கு ஆணை இட்டாள்   நம் கற்புக்கரசி கண்ணகி. சங்ககாலம் தொட்டதே இந்த மரபு இருந்து வந்தது நமக்குத் தெரிகின்றது. பத்தினிப் பெண்கள் தங்கள் கோபத்திலும் கூட, தர்மத்திற்குப் புறம்பாக நடக்க மாட்டார்கள் என்பதற்கு இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.அதாவது நாடு செழிக்க, அக்னி காரியம் செய்து, நட்டு நலனுக்காக வேள்விகள் நடத்தும் பொருட்டு பிராம்மணரும், தத்தம் வர்ணாஸ்ரம தர்மங்களை எல்லாம் தவறாமல் காப்பாற்றும் தர்மசீலர்களும், தம்முடைய பாலைப் பொழிவதால் பசுக்களையும், தம்மைத் தாமே கத்துக் கொள்ள முடியாத முதியவர் மற்றும் சிறு குழந்தைகள் ஒழிய எல்லோரயும் எரித்து விடுமாறு ஆணை இட்டாள் நம் பத்தினித்தெய்வம் கண்ணகி. தர்மம் சாஸ்திரங்கள் கூறும் விஷயத்தை அப்படியே சொல்லி இருக்கின்றாள் பாருங்கள்.

சிலப்பதிகாரத்தில் கட்டுரைக்கு காதையில்:

வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி 

மதுரை எரித்த கண்ணகிக்கு,  மதுரைத் தெய்வம் மீனாட்சி வரம் கொடுக்க, சேர நாடு நோக்கிச் செல்கின்றாள் - அப்பொழுது பராசரன் என்ற பிராம்மணன் , அவளுக்கு சேர நாட்டின் பெருமைகளை சொல்வது போன்று அமைந்த பாடல் இது.

நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு
ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க 70

சாஸ்திரங்களில் சொல்லப் பெற்ற விஷயங்களை எல்லாம் இளங்கோ அடிகள் மிகவும் துல்லியமாகக் கூறுகின்றார் - இரு பிறப்பாளர்(துவிஜா), 5  வேள்விகள் (ரிஷி,தேவ,பித்ரு,புத்த,அதிதி), 3 தீ  மற்றும் ஆறு தொழில் (வேதம் கற்றல் மற்றும்  கற்றுவித்தல், வேள்விகள் செய்தல்செ மற்றும் செய்வித்தல் , தானம் கொடுத்தால் மற்றும் வாங்கி கொள்ளுதல்) ஆகிய அந்தணர்களை பேணிய மன்னன் - என்று தர்மம் சாஸ்திரங்கள் கூறும் பெருமைகளை எல்லாம் இங்கு சொல்கின்றார் நம் இளங்கோ அடிகள்.

நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப்
பார்ப்பன வாகை சூடி ஏற்புற
நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன்
செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர்
தங்கா லென்ப தூரே அவ்வூர்ப்

இப்படி எல்லாம் உள்ள அந்த பராசரன் என்ற பிராம்மணன் - சேர நட்டு அரசனின் பெருமைகளைப் படும் பொருட்டு சொல்லும் வசனம் இது. என்ன அருமை பாருங்கள்.

வட ஆரியர் படை கடந்து,
தென் தமிழ் நாடு ஒருங்கு காண

அதாவது வட தேசத்தில் இருந்த மன்னர்களை வென்று, இமயம் முதல் குமாரி வர ஒரே அரசாக ஆண்ட பெருமை கொண்ட பாண்டிய மன்னன் என்று கூறுகின்றார் நம் இளங்கோ அடிகள். இங்கு அவர் ஆரியர்   - என்பது ஒரு இனம் என்றெல்லாம் குறிப்பிடவே இல்லை(வட தேசத்து மக்களைக் குறிக்கும் சொல் தான் அது).

தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத் 
தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால்-தெய்வம் ஆய்,
மண்ணக மாதர்க்கு அணி ஆய கண்ணகி 
விண்ணக மாதர்க்கு விருந்து. 

கண்ணகி என்ற பத்தினியின் பெருமை எப்படிப்பட்டது என்று பாருங்கள். புராணத்தில் சொல்லப் பெற்ற சாவித்ரி, நளாயினி போன்று- அதையும் தண்டி தான் கணவனைக் கொன்ற மன்னனையும், அவன் தேசத்தையும்  எரித்து, முன்வினைப் பயனே என்று மதுரைத்தெய்வம்   மீனாட்சி இடத்தில,  சொல்லப்ற்று, தான் கணவனோடு ஒன்றாக ரத்தத்தில் சுவர்க்கம் சென்ற பெருமை கொண்டவள் நம் கண்ணகி. நம் இந்தியர்களுக்கும்  தமிழர்களுக்கும் கற்பு  என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.

தமிழகம் மற்றும் நம் தேசத்தின் பெருமை 

யாராலும் அசைக்க முடியாத நம் கலாச்சாரத்தைக் கண்டு பொறாமை கொண்ட வெள்ளை வஞ்சகர்கள் இந்த மாதிரியான போலிக்  கதைகளை எல்லாம் கட்டினர். இனிமேலேனும் நாம் அனைவரும் முழித்துக் கொள்ள வேண்டும்.இனிமேல் ஆவது நாம் எல்லோரும் ஒன்று என்ற மனோபாவத்துடன் நம் நட்டு முன்னேற்றத்திற்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் பாடு பட வேண்டும்.வெள்ளைக் கலாச்சாரத்திற்கு   கீழானது தான் நம்முடைய நாகரீகம்  என்று வெள்ளைக்காரர்கள் கட்டிய கதை  தான் இது எல்லாம்.

Sunday, August 28, 2016

பெரியாழ்வார் பாடும் கண்ணன் பெருமைகள் - II

சப்பாணிப் பருவம்

அளந்திட்ட   தூணை  அவன்  தட்ட  ஆங்கே
வளர்ந்திட்டு  வாழுகிற  சிங்க  உருவாய்
உளந்தொட்டு  இரணியன்  ஒண்மார்வகலாம்
பிளந்திட்ட  கைகளால்  சப்பாணி
பேய்முலைய  உண்டான சப்பாணி


உட்கார்ந்து கொண்டு, தலை ஆட்டிய கண்ணன், இப்பொழுது சப்பாணி கொட்டுகின்றான் - அதாவது கைகளைத் தட்டிக் கொண்டு விளையாடுகின்றான். அதனை ஆழ்வார் பரவசத்துடன் அனுபவிக்கின்றார். ஹிரண்யகசிபு என்ற அரக்கனைக் கொல்ல, தூணை பிளந்து கொண்டு, (அரி) சிங்க உருவாகி வெளியே வந்து , அந்த அரக்கனை,மார்பைப்  பிளந்து குடலை உருவி மலையாகப் போட்டு கொண்டான் திருமால் - அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த கைகளால் சப்பாணி கொட்டுமாறு கண்ணனைக் கேட்டு கொள்கிறார் இந்த ஆழ்வார். என்ன பெருமை பாருங்கள்? உலகை எல்லாம் காக்கும் அந்தப் பரம்பொருள் சின்னக் குழந்தை அகி ஆழ்வாருக்கு தரிசனம் நல்கினர், அதனை  புகழும் பொழுது திருமாலின் பெருமைகளை எல்லாம் நமக்கு கூறுகிறார் ஆழ்வார். சேர்த்து பூதனை தன்னுடைய முலை உண்டு, அவளை வதைத்த வைபவத்தையும் இங்கு சொல்கின்றார் ஆழ்வார்.

தளர்நடைப் பருவம்

ஒருகாலில்  சங்கு  ஒருகாலில்  சக்கரம்  உள்ளடி  பொறித்து  அமைந்த
இருகாலும்  கொண்டு  அங்கங்கு  எழுதினாற்போல்  இலச்சினைபடநடந்து
பெருகாநின்ற  இன்பவெள்ளத்தின்  மேல்  பின்னையும்  பெய்துபெய்து
கருகார்க்  கடல்  வண்ணன்  காமர்  தாதை  தளர்  நடை  நடவனோ


ஆழ்வார் கண்ணனுடைய பக்தியில் திளைத்து   இங்கு அதன் உச்சத்திற்கே சென்று விட்டார் போலும். கண்ணன், தன்னுடைய திருப்பாதங்கள், கயாவில் உள்ள ஸ்ரீ விஷ்ணு பாதங்களுக்கு ஒப்பிடுகிறார் ஆழ்வார். ஒரு காலில் சங்கும், மற்றொரு காலில் சக்கரமும் பதித்து அழகான இரு கால்களுடன் , கண்ணன் தளர் நடை நடக்கிறான்.அப்படி நடக்கின்ற பொழுது, அந்த சங்கு சக்கரங்களின் அச்சு, தரையில் படியும் படி அழகு பொங்க சின்னக் கண்ணன் நடக்கின்றான். அதனைக் கண்ட ஆழ்வார் மற்றும் ஆயர்கள் நெஞ்சத்திலே பேரின்ப வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடுகின்றது. அத்துனை பெருமைகள் வாய்ந்த, நம்முடைய சின்னக் கண்ணன் - மன்மதன் என்று சொல்லப் படும் காமனுக்குத் தந்தை, கரிய நிறம் கொண்ட மேகம் மற்றும் நீலக் கடல் வண்ணம் கொண்ட எம்பிரான் மெல்லத் தளர் நடை நடக்க மாட்டானோ? என்று தம்முடைய பக்தியையும், எம்பெருமானின் பெருமைகளையும் இங்கு நமக்கு எல்லாம் சொல்லுகின்றார் ஆழ்வார்.

அச்சோப் பருவம்

சின்னக் கண்ணன் வளர்ந்து மெல்ல நடக்கும் பருவம் எய்தி விட்டான். இப்பொழுது அவன் வந்து தம்மை அணைத்துக் கொள்ளும் பருவம் வந்ததனை, ஆழ்வார் கொண்டாடுகின்றார்.

மிக்க  பெரும்புகழ்  மாவலி  வேள்வியில்
தாக்கதிதன்றென்று  தானம்  விளக்கிய
சுக்கிரன்  கண்ணைத்  துரும்பால்  கிளறிய
சக்கரக்  கையனே  அச்சோவச்சோ
சங்கமிடத்தானே  அச்சோவச்சோ


இங்கு மஹாபலி சக்ரவர்த்தியின் வேள்வியில், பகவான் வாமனனாக மூன்றடி மண் கேட்ட வைபவத்தைக் கூறுகின்றார் ஆழ்வார். வந்திருப்பது எம்பெருமானே என்று தெரிந்து கொண்ட அசுரர் குருவாகிய சுக்ராச்சாரியார், தானம் கொடுக்க நீர் வார்க்கும் ஜல பாத்திரத்தில் (கிண்டி) ஒரு வண்டு உருவம் கொண்டு,  நீர் விழாதபடி அடைத்துக் கொண்டார். அதனை, அறிந்த எம்பருமான், ஒரு தர்பைப்புல்லால், குத்தி விட அவரது கண்களில் ஒன்றை இழக்க நேரிட்டது. அந்த சம்பவத்தைச் சொல்லி, வலது கையில்  சக்கரமும், இடது கையில் சங்கும்  கொண்டவனே, அச்சோ - என்று என்னை  வந்து அணைத்துக் கொள் என்கிறார்.

புறம் புகுதல் / முதுகைக் கட்டிக்க கொள்ளும் பருவம்

நாந்தகம்  ஏந்திய  நம்பிசரனென்று
தாழ்ந்த தனஞ்சயர்க்கு ஆகி   தரணியில்
வேந்தர்கள்  உட்கா  விசயன்  மணித்திண்தேர்
ஊர்ந்தவன்  என்னைப்  புறம்  புல்குவான்  
உம்பர்  கோன் என்னைப்  புறம்  புல்குவான்


பாடுதற்குத் தமிழும், அனுபவித்தற்கு குட்டி கண்ணனும், பக்தி நிறைந்திட்ட மனதும் அருள பெற்ற ஆழ்வார் கண்ணனைப் பலவாறாக அனுபவிக்கின்றார். இப்பொழுது சின்னக் கண்ணனனை வந்து தம்முடைய முதுகைக் கட்டிக்கொள்ளும்படி அழைக்கின்றார் ஆழ்வார். நந்தகம் என்னும் வாள்  ஏந்தும்  வீரன் ஆகிய கண்ணன், அரசர்களுக்கு எல்லாம் அரசனாகிய கண்ணன், தனஞ்சயன் என்னும் அர்ஜுனன் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த விஜயன் என்னும் அர்ஜுனனுடைய தேரோட்டியாகப் பணி புரிந்தான். அப்படிப் பட்ட சௌலப்யம் (அடியாருக்கு சுலபமாக இருத்தல்) நிறைந்த எம்பெருமான் வந்து என் முதுகைக் கட்டிக்கொள்ள மாட்டானோ? தேவர்களுக்கு எல்லாம் தலைவன் வந்து என்னுடைய முதுகைக் கட்டிக்கொள்ள மாட்டானோ? என்று கூப்பிடுகின்றார் ஆழ்வார்!

மெச்சூது 

காயும்  நீர்ப்புக்கு  கடம்பேரி
காலியான  தீய  பணத்தில்  சிலம்பார்க்க  பாய்ந்தாடி
வேயின்  குழலூதி  வித்தகனாய்  நின்ற
ஆயன்வந்து  அப்பூச்சி  காட்டுகின்றான்
அம்மனே  அப்பூச்சி  காட்டுகின்றான்




இங்கு பகவன் காளிங்க நர்த்தனம் ஆடிய கட்சியை  மிகவும் அழகாக வர்ணிக்கின்றார் ஆழ்வார். அதாவது , யமுனை நதியிலே , நடுவிலே தன்னுடைய கொடிய பணங்கள் (படங்கள்) மற்றும் தலையைத் தூக்கி ஆடிக்  கொண்டும், நஞ்சைக் கக்கிக் கொண்டும் இருந்த அந்தக் காளிங்கன் மீது ஏறுவதற்காக , கடம்ப மரத்தின் மீது ஏறி, அங்கிருந்து  தாவினார் - காளிங்கன் தலை மேல். அப்படி ஏறி, அவனுடைய வாலைத் தன் கைகளிலே பிடித்துக் கொண்டு பகவான் நர்த்தனம் புரிந்தான் - என்ன அருமை பாருங்கள். 8 வயது பாலகன் , குழல் ஊதுவதில் மட்டும் அன்று , நாட்டியம் ஆடுவதிலும் கெட்டிக்காரன். அத்தனை பெருமைகள் வாய்ந்த எம்பெருமான், பூச்சி காட்டுகின்றான் என்று கண்ணனை மெச்சிக் கொள்கின்றார் ஆழ்வார் இங்கு.

Wednesday, August 24, 2016

பெரியாழ்வார் பாடும் கண்ணன் பெருமைகள்


மின்னார்  தடமதில்  சூழ்  வில்லிபுத்தூர்  என்று  ஒருகால் 
சொன்னார்  கழற்கமலம்  சூடினோம்  - முன்னாள்  
கிழியறுத்தான்  என்றுரைத்தோம்  கீழ்மையினிற்செரும் 
வழியறுத்தோம்  நெஞ்சமே   வந்து  
  
பாண்டியன்  கொண்டாடப்  பட்டர்  பிரான்  வந்தான்  என்று  
ஈண்டிய  சங்கம்  எடுத்தூத  - வேண்டிய  
வேதங்கள்  ஓதி  விரைந்து  கிழியறுத்தான்  
பாதங்கள்  யாமுடைய  பற்று  


பெரியாழ்வாருடைய பெருமைகளை பரை சற்றும் பாடல்கள் இவை. பாண்டிய மன்னன், பர தத்வம் எது என்று வைத்த வாதத்திலே வென்று , பொற்கிழி அறுத்தார். அப்பொழுது பாண்டியன் யானை மீது அவரை ஏற்றிக் கொண்டு ஊர்கோலமாக அழைத்து வந்தார். அப்பொழுது, எம்பெருமான் அவருக்கு கட்சி அளித்தார். அந்த வரலாற்றை கூறும் வகையில் பாண்டிய பட்டரால் இயற்ற  பட்ட பாடல்கள் இவை.

பெரியாழ்வார் என்றாலே யார் என்று நமக்கு தெரிந்து இருக்கும். ஸ்ரீ வில்லிபுத்தூர் என்னும் ஊரிலே, வசித்து  அங்குள்ள எம்பெருமானுக்கு திருமாலைக்  கைங்கர்யம் செய்து, பாண்டிய மன்னன் வைத்த வாதத்திலே வென்று , பொற்கிழி அறுத்து, அந்தப் பணத்தில் கோயில் கட்டிய பெருமை வாய்ந்தவர்.


இன்றைக்குத் தமிழ் நட்டுச் சின்னமாக விளங்கும் அந்த கோபுரம், இவர் தனக்கு கிடைத்த பரிசுப் பணத்தில் கட்டியது  தான். அது மட்டுமா? ஆண்டாள் என்னும் பெண்  குழந்தயைக் கண்டெடுத்து, வளர்த்தி அவளை, ஸ்ரீ ரங்க நாதருக்கே திருமணஞ் செய்து வைத்த பெருமை கொண்டவர். அந்த ஆண்டாள் பாடிய தமிழ்ப் பாடல்களே நாச்சியார் திருமொழி மற்றும் திருப்பாவை ஆகும். உண்மையான  தமிழ் குடும்பம் அவர்கள் தான். என்ன பெருமை பாருங்கள்? தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அவர்கள் செய்த தொண்டு அளவற்றது.

அது மட்டுமா? ஸ்ரீமத் பாகவதம் என்னும் புராணத்தில் சொல்லப்பெற்ற கண்ணனின் லீலைகளை எல்லாம் தெள்ளு தமிழில் பிள்ளைத் தமிழகப் பாடினார் இந்த ஆழ்வார்.  கண்ணபிரானின் பிறந்தநாள் விழாவாகிய இந்த ஜென்மாஷ்டமி தினத்தில், பெரியாழ்வார் சொன்ன கண்ணன் பெருமைகளை பார்ப்போமா?

பணம் வாங்கிக்கொண்டு ஆபாசக் கவிதைகளை அவிழ்த்து விடும் போலி கவிஞர்களைப்போல அல்லாமல், உலகம் உய்ய, கண்ணன் பெருமையைப் படுகிறார் நம்முடைய பெரியாழ்வார்.


1. கண்ணன் திருவவதாரம் 

வண்ண  மாடங்கள்  சூழ்  திருக்கோட்டியூர் 
கண்ணன்  கேசவன்  நம்பி  பிறந்தினில் 
எண்ணெய்  சுண்ணம்  எதிரெதிர்  தூவிடக் 
கண்ணன்  முற்றம்  கலந்து  அலராயிர்றே 

விளக்கம்: திருவாய்ப்பாடியிலே குழந்தைக் கண்ணன் அவதரித்த வைபவத்தை, ஆயர் பெருமக்கள் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். அந்தக் காட்சியை   ஆழ்வார் மிக அழகாக்க கூறுகின்றார். வடநாட்டு ஸம்ப்ரதாயத்திலே, விழாக்  களங்களில் சுண்ணாப்பு (வெள்ளை) பொடி, மற்றும் எண்ணெய் இவற்றை ஒருவர் மீது ஒருவர் தூவி கொண்டு விளையாடினார்கள். அதனால் கண்ணன் வீட்டு முற்றம் எல்லாம்  அந்த சுண்ணாம்புப் பொடி மற்றும் எண்ணெய் கலவையால் அழுக்கு ஆகிற்று என்கிறார்  ஆழ்வார்.

ஓடுவார்  விழுவார்  உகந்தாளிப்பார் 
நாடுவார்  நம்பிரான்  எங்குதான்  என்பார் 
பாடுவார்களும்  பலபேரை  கொட்டானின்று 
ஆடுவார் களும்  ஆயிற்று  ஆய்ப்பாடியே  

விளக்கம்: கண்ணன் பிறந்தாயிற்று. திருவாய்ப்பாடியிலே உள்ள ஆயர்கள் எல்லாருக்கும் தலைவன் நந்தகோபன். அவனுக்கு ஆண்பிள்ளை பிறந்த வைபவத்தை, அவர்கள் எல்லோரும் கொண்டாடுகின்றார்கள். மகிழ்ச்சியில் அங்கும் இங்குமாக ஓடுவோர்கள் சில பேர்,ஓட்டத்தினால் தடுக்கிக் கீழே விழுவோர்கள் சில பேர், மிகவும் சந்தோஷமாக கட்டி அணைத்து வாழ்த்துக்கள் சொல்பவர்கள்  சிலர் பேர், "குழந்தை  எங்கே?" என்று கேட்பவர்கள் சில பேர், சிறு பரைகளை   கொட்டிக் கொண்டு ஆடுபவர்கள் சில பேர், பாட்டுப் பாடிக் கொண்டாடுபவர்கள் சில பேர், அப்படி மொத்தம் ஆயர்பாடி என்று சொல்லப்படும் கோகுலமே திருவிழாக்கோலம் பூண்டது. சின்னக் கண்ணன் பிறந்த காட்சியை , தம்முடைய அகக்கண்ணால்  கண்டு, நமக்கு எல்லோருக்கும் எதுத்துச் சொல்கிறார் பாருங்கள் இந்த அற்புதமான ஆழ்வார்.

பேணிச்சீருடை  பிள்ளை  பிறந்தினில் 
காணத்தான்  புகுவார்  புக்குப்  பொதுவார் 
ஆணொப்பார்  இவன்  எரில்லைகாண்  
திருவோணத்தான்  உலகாளும்  என்பார்களே 

விளக்கம்:ஆண்களில்   சமம் ஆனவர் யாருமே இல்லை என்றும், திருவோணத்தில் பிறந்த (அந்த வாமனன்) குழந்தைக்கு  வேறு யாருமே சமம் இல்லை என்று எல்லோரும் கண்ணனை கொண்டாடினர்.

உரியை  முற்றத்து  உருட்டி  நின்றாடுவார் 
நறுநெய்  பால்தயிர்  நன்றாகத்  தூவுவார்  
செரிமென்  கூந்தல்  அவிழ்த்து  திளைத்து  எங்கும் 
அறிவழிந்தனர்  ஆய்ப்பாடி  ஆயர் 

விளக்கம்:கண்ணன் பிறந்த வைபவத்தைக்   கொண்டாட, உரியடி நடத்துகின்றார் ஆயர்கள். அந்த உரிக்கம்பத்தின்   மீது பாலும், நெய்யும் எரிந்து விளையாடினார் ஆயர்கள். ஆனால், எல்லோரும் தம்முடைய கூந்தலை அவிழ்த்து விட்டார்கள் - நெய்யும், பாலும் ஆகிய தலை முடியை உலர்த்த - அப்படியாக ஆயர்பாடி ஆயர்கள் எல்லோரும் கண்ணன் கொண்டாட்டத்தில் மூழ்கி இந்த உலக சிந்தகனை இழந்தனர்.

கிடக்கில்  தொட்டில்  கிழிய  உதைத்திடும் 
எடுத்துக்  கொள்ளில் மருங்கை  இருத்திடும் 
ஒடுக்கிப்புலகில்  உதரத்தே  பாய்ந்திடும் 
மிடுக்கிலாமையால்   நான்  மெலிந்தேன்  நங்காய் 

விளக்கம்: கண்ணன்பால் கொண்ட தீராத அன்பினால், ஆழ்வார் யசோதயாகவே   ஆகிவிட்டார் இங்கே. பிள்ளை பெற்ற தயார் எப்படி சொல்லுவாளோ , அதேபோல் இங்கு அவர் சொல்லுகின்றார். கண்ணனை படுக்க வைத்தால்  , தொட்டில் துணி கிழியும் அளவிற்கு உதைப்பானாம்  , எடுத்துக் கொண்டால் இடுப்பு வலிக்கும் அளவுக்கு கீழே தாவப்  பார்ப்பான், ஆனால், இறுக்கிப் பிடித்துக் கொண்டாலோ, வயிற்றுக்குள்ளே  பாயும் அளவுக்கு அமிழ்துவன். கண்ணனுடைய துடுக்குத்தனத்தால்   , மிகவும் தளர்ந்து விட்டதாக யசோதை சொல்லுகின்றாள்.யசோதை தன்னுடைய தோழிகள் இடத்தில சொல்லுவது போன்று அமைந்த பாசுரம் இது.

என்ன அருமை பாருங்கள். 5 நிமிடங்களில் நம்மை  அயற்படிக்கே அழைத்துச் சென்று விட்டார் ஆழ்வார்.

கண்ணனின் பாதாதி   கேச வர்ணனை 

சீதக்கடலுள்  அமுத்தன்ன  தேவகி 
கோதைக்  குழலாள்  அசோதைக்குப்  போத்தந்த 
பேதைக்  குழவி  பிடித்து  சுவைத்துண்ணும்  
பாதக்  கமலங்கள்  காணீரே 
பவள  வாயீர்  வந்து  காணீரே

விளக்கம்:குழந்தைக் கண்ணன், தன்னுடைய கால் கட்டை விரலை பிடித்து சுவைத்து உண்ணுகிறான். ஆழ்வார் அதை பார்த்து விட்டார் எல்லோரையும் அழைத்து, தன்னுடைய குழந்தையின்   அழகைக் காணுமாறு கேட்டுக் கொள்கின்றார் ஆழ்வார். தேவகி வயிற்றில் பிறந்து , யசோடத்தை வீட்டில் வளரும் அந்தக் குழந்தை , தான் கள் விரலை உண்ணும் காட்சியை வந்து பார்க்குமாறு கோகுலத்துப் பெண்களை எல்லாம், அழைக்கின்றார் ஆழ்வார்.

திருத்தொட்டில் ஆடுதல்

மாணிக்கம்  கட்டி  வயிரம்  இடைக்காட்டு  
ஆணிப்பொன்னால்  செய்த  வண்ண  சிறு  தொட்டில் 
பேணி  உனக்கு  பிரமன்  விடுதந்தான்  
மாணிக்குறளனே  தாலேலோ 
வையம்  அளந்தானே  தாலேலோ 

விளக்கம்:பலவிதமான முத்தும், மணிகளும் கட்டிய பொன்னால் ஆன தொட்டில், ப்ரம்மதேவன்   கொண்டு வந்து கொடுத்தான், கண்ணனை . அந்த தொட்டிலில் இட்டு, தாலேலோ என்று யசோதாயும், மற்ற ஆயர் பெண்களும் தாலாட்டு படுகின்றார்கள். ஆழ்வார் கண்ணன் இடத்திலே கொண்ட பக்தியின் மிகுதியால், கண்ணன்  த்ரிவிக்ரம அவதாரத்தில், குள்ளமான (குறள்) உருவத்தில் பிறந்து உலகங்கள் இரண்டையும் அளந்த பெருமையை இங்கு மிக அழகாக்க காட்டுகின்றார்.

சந்திரனை  அழைத்தல்

என்  சிறுக்குட்டன்  எனக்கோர்  இன்னமுது  எம்பிரான் 
தன்  சிறுக்கைகளால்  காட்டிக்  காட்டி  அழைக்கின்றான் 
அஞ்சன   வண்ணனோடு  ஆடலாட  உறுதியேல் 
மஞ்சில்   மறையாதே  மாமதீ  மகிழ்ந்தோடிவா  

விளக்கம்: ஆழ்வார் இங்கு கண்ணனைத்   தம்முடைய சிறு குழந்தை, இன்னமுது, என்றும், அந்த குழந்தை தன்னுடைய சிறிய கைகளால் காட்டி காட்டி அழைக்கின்ற அந்த நிலவை,  பணியில்/ மேகத்தில்  மறையாமல் தம்முடைய குழந்தயுடன் விளையாட வருமாறு அழைப்பு விடுகின்றார்.

சுற்றும்  ஒளிவட்டம்  சூழ்ந்து  சோதி  பரந்தெங்கும் 
எத்தனை  செய்யினும்  என்மகன்  முகம்  நேரொவ்வாய் 
வித்தகன்  வேங்கடவாணன்  உன்னை  விளிக்கின்ற 
கைத்தலம்  நோவாமே  அம்புலீ  கடிதோடிவா 

விளக்கம்: யசோதை, தன்னுடைய சிசுவின் மீது கொண்ட அளவற்ற அன்பினால், கண்ணன் கூப்பிட கூப்பிட, மதிக்காமல் வானத்திலே செல்லும் அந்த நிலவை இகழ்கின்றாள். கண்ணனின் அழகான முகத்திற்கு ஒவ்வாது - அந்த பௌர்ணமி   சந்திரனின் முகம் என்கிறார் ஆழ்வார். தாய்மையின் உச்சத்தையே அடைந்து விட்டார் ஆழ்வார்.அது மட்டும் அல்ல - நிலவைக் கூப்பிட்டிக்கு, தான் குழந்தைக்கு கைகள் வழிப்பதற்குள் அங்கே சீக்கிரமாக வருமாறு  கூறுகிறார்.

பாலகன்  என்று  பரிபவம்  செய்யேல்  பண்டொரு  நாள் 
ஆலினிலை  வளர்ந்த  சிறுக்கனவன்  இவன் 
மேலெழப்  பாய்ந்து  பிடித்துக்கொள்ளும்  வெகுளுமேல் 
மாலை  மதியாதே  மாமதீ  மகிழ்ந்தோடிவா 

விளக்கம்: நிலா, தன்னுடைய குழந்தயை கண்டு கொள்வதில்லை என்று, எச்சரிக்கை  விடுகிறாள் யசோதை. சின்னக் குழந்தை, என்று ஏளனமாகப் பார்க்க வேண்டாம், ஊழிக் காலத்தில் ஆலிலையில் பள்ளி கொண்ட பெருமை வாய்ந்தவன் இந்த பாலகன். அவனை மதிக்காமல் சென்று விடாதே - அவனுக்கு கோபம் வரும் அகில் எழுந்து உன்னைப் பிடித்துக் கொள்வான். எனவே மகிழ்வாக வந்து என்னுடைய குழந்தையுடன் விளையாடு என்று சொல்கின்றார் ஆழ்வார்.

சிறியனென்று  என் இளஞ்சிங்கத்தை  இகழேல்  கண்டாய் 
சிறுமையின்  வார்த்தையை  மாவலியிடை  சென்றுகேள் 
சிறுமைப்  பிழைகொள்ளில்  நீயும்  உன்  தேவைக்குரியைகாண்
நிறைமதி  நெடுமால்  விரைந்து  உன்னைக்  கூவுகின்றான்.

விளக்கம்: தன்னுடைய குழந்தை சின்னக் குழந்தை   என்று ஏளனமாக எண்ணி விட வேண்டாம் - அந்த இளம்சிங்கத்தின் பெருமையை மஹாபலி மன்னனிடத்தில் போய் கேட்டல் தெரியும்  - அவன் எப்படி இரண்டு   அடிகளில் பூமியையும், வானத்தையும் அளந்தான் என்று  என்று யசோதை சொல்வதாக, ஆழ்வார் சொல்லுகின்றார்.சிறுமையை எண்ணி பரிபவம் கொள்ளாதே - உனக்கும் அவனுடைய உதவி வேண்டி வரும் , எனவே விரைந்து ஓடி வந்து விளையாடு  என்கிறார் ஆழ்வார்.

செங்கீரை ஆடுதல்

வானவர்  தாம்  மகிழ  வன்சகடம்  உருள 
வஞ்சமுலைப்பேயின்  நஞ்சமது  உண்டவனே 
கானக  வல்விளவின்   காயுதிரக்  கருதிக் 
கன்றது  கொண்டெறியும்  கரு  நிற  என்கன்றே 
தேனுகனும்  முரணும்  திண்திறல்வெந்நரகன்  
என்பவர்  தாம்  மடியச் செருவதிரச்செல்லும் 
ஆனை எனக்கு  ஒருகால்  ஆடுக  செங்கீரை 
 ஆயர்கள் போரேறே ! ஆடுக  ஆடுகவே 

விளக்கம்: கிருஷ்ணா லீலைகளை எல்லாம் அப்படியே கூறுகின்றார் ஆழ்வார் இங்கு. குழந்தை வளர்ந்து ஒரு 5 மாதங்கள் கழித்து உட்கார்ந்து கொண்டு தலையை காட்டும் பருவம். கண்ணனின் பக்தியில், அன்பில் ஊறிய  ஆழ்வார் இங்கு:


  1. சகடாசுரன் - ஒரு சக்கரத்தின் வடிவில் வந்த அரக்கனைக் கண்ணன் வதம் பண்ணின லீலை.
  2. பூதனை - மார்பகங்களில் விஷம் வைத்து கண்ணனைக் கொல்ல வந்த அரக்கி - அவளைக் கண்ணன் சம்ஹாரம் பண்ணின லீலை.
  3. வத்ஸாசுரன்- கன்று குட்டி யின் உருவத்தில் வந்த அரக்கன்.
  4. கபித்தசுரன்- மேல் கூறிய அரக்கனையும் , இந்த  விளா  மரத்தின் வடிவில் இருந்த   அசுரனையும் ஒன்றாக சம்ஹராம் பண்ணினான் நம் கண்ணன்.
  5. முரன், நரகன் - நரகாசுரனையும், அவனுடைய சேனைத் தலைவன் முரனையும் கண்ணன் கொன்ற லீலை. 
  6. தேனுகாசுரன் - கழுதை உருவத்தில் இருந்த அரக்கனை, கண்ணன் சம்ஹராம் பண்ணின லீலை.
எல்லாவற்றையும் சொல்லி, என்னுடைய கரு நிறக் கன்றே, யானையே , உன்னுடைய தலையை ஆட்டி செங்கீரை ஆடு , என்று தன் சிசுவைக் கொஞ்சுகின்றார். என்ன அற்புதம் பாருங்கள்!

Friday, July 29, 2016

அகஸ்திய முனிவரின் பெருமைகள்



சமஸ்க்ருதத்துக்கும் நம் தமிழுக்கும் நீண்ட நாள் தொடர்பு. சிவபெருமானுக்கு மிகவும் நெருங்கிய மொழி நம் தமிழ் மொழி. அதனால் தானோ என்னவோ, அகஸ்தியரை அனுப்பி தமிழ் வளர்க்க சொன்னார்  நம் சிவபெருமான். சிவபெருமான் தானே இவருக்குத் தமிழ் கற்பித்து தென்னாட்டுக்குச் சென்று அதனைப் பரப்புமாறு ஆணை இட்டார் என்பது புராணம்.பொதிகை மலைக்கு வந்து, தமிழ் இலக்கணம் வகுத்து , கபிலர் பரணர் எல்லாரோடும் சங்கம் நிறுவி  தமிழ் வளர்த்த பெருமை அவருக்கு உண்டு. அதே போல அத்யாத்ம கிரந்தங்கள் - ஸ்ரீ லலிதா நவரத்தின மலை போன்ற வற்றை இயற்றினார் அவர். ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் , த்ரிஷதி, அஷ்டோத்தரம் எல்லாம்  அவருக்கு ஸ்ரீமத் லட்சுமி ஹயக்ரீவரால் உபதேசம் பண்ணப் பட்டது. அவர் கலசத்திலே இருந்து பிறந்தார் என்பதால்  குறுமுனி, கும்ப முனி, காலசோத்பவர்  என்றெல்லாம் பல பெயர்கள்.கலியுகத்தில் மக்கள்  கஷ்டப் படுவார்கள் என்று தவம் புரிந்து ஸ்ரீ லலிதாம்பிக்யைன் ஆயிரம் நாமங்களை நமக்கு  அருள பண்ணிய அவருக்கு நாம் எல்லோரும்  எப்பொழுதும் கடன் பட்டிருக்கின்றோம்.

  1. வேதம் - அதர்வண வேதத்தில் அகஸ்த்ய சம்ஹிதை என்னும் பகுதியை இயற்றியவர்.
  2. பிரம்மாண்ட புராணம் - இந்தப்   புராணத்தில் தான் இவர்சொன்ன லலிதா சஹஸ்ரநாமம் இடம் பெற்றுள்ளது
  3. இராமாயணம் - இராமருக்கு  இவர் ஆதித்ய ஹ்ருதயம் என்ற ஸ்லோகத்தை உபதேசம் பண்ணினார்.
  4. சங்ககாலம் - தமிழ் இலக்கணத்தை தொல்காப்பியர் மற்றும் எல்லாருக்கும் கற்றுக் கொடுத்து அகத்தியம் என்ற கிரந்தத்தை இயற்றினார். 
  5. ஜோதிடம் - நாடி ஜோதிட சாஸ்திரத்தை இயற்றிய பெருமை கொண்டவர்.
  6. சித்த மற்றும் ஆயுர் வைத்தியம் - சித்த மருத்துவத்தில் ஒரு பெரும் பங்கு இவருக்கு உண்டு. முதல் சித்தராகக் கருதப் படுபவர். ஆயுர்வேதத்தில் அகஸ்திய  சூத்திரம் என்னும் கிரந்தத்தை இயற்றியவர்.
  7. ஸ்லோகங்கள் - யோகா மீனாட்சி ஸ்தோத்ரம், லலிதா நவரத்தின மாலை , ஆதித்ய  ஹிருதயம் மற்றும் பல அறிய ஸ்லோகங்களை இயற்றியவர்.

லோபாமுத்திரை என்ற அவருடைய பத்தினி , ஸ்ரீமத் லலிதாம்பிகையின் சிறந்த பக்தை என்று சொல்லப் பட்டுள்ளது புராணத்தில்.

சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த முனி, சித்த வைத்தியத்தை அளித்த முனி, கும்ப முனி என்றெல்லாம் போற்றப் பெரும் அவர், நம் தமிழகத்திற்கும், தமிழுக்கும் செய்த நன்மைகளுக்காக அவருக்கு அநேக கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள் பண்ணிக்கொண்டு இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.

Monday, July 25, 2016

திருத்தொண்டர் தொகை - தேவாரம் கூறும் மஹாபெரியவரின் மஹாத்ம்யம் ..






        தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
       திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
       இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
       விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

சிவா பக்தர்களின் பெயர்களைச் சொல்லும் பொது நம்முடைய சுந்தரர் முதலில் தில்லை வாழ் அந்தணர்களை பற்றி  சொல்லுகின்றார். முன் சிகை வைதிக கொண்டு , சித்சபையில் நடராஜப் பெருமானுக்கு பணிவிடை செய்வைதை தம்முடைய பிறவி பாக்கியமாகக் கருதும் ஆண்டார்கள். ஞான சம்பந்தர் அவர்களைக் கண்ட பொழுது , சிவா பெருமானுடைய பூத கணங்களாகவே தோன்றினார்கள் அவர்கள். எனவே தான் சிவா பெருமானே இந்த வரியை ஆதி எடுத்துக் கொடுத்தார் நம்முடைய சுந்தரருக்கு. அதன் பிறகு

  1. திரு நீலகண்ட நாயனார்(சிவனடியார்களுக்கு திருவோடு செய்து கொடுத்து திருப்பணி செய்தவர். சிவனே நேரில் வந்து சோதித்து, அவருக்கு என்றும் பதினாறு வயது அருள பெற்ற பெருமை உடையவர்.)
  2. இயற் பகை நாயனார் (இயல்பாக உள்ள மனிதர்களுக்குப் பகையாக உள்ளவர். சிவனடியார்களுக்கு கேட்டவற்றைத் கொடுக்கும் தன்மை உள்ளவர். சிவனே வந்து அவரை சோதிக்க, அவருடைய மனைவியைக் கேட்டு, அவர் புகழை உலகெங்கும் பரவச் செய்த பெருமை கொண்டவர்.)
  3. இளையான் குடி மாறன் நாயனார் . (சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்து, பணிவிடை செய்தவர். ஒரு இரவில், மழை பெய்து வீட்டிற்குள் ஒழுக, உணவும் இல்லாத நேரத்தில் சிவனே அவரைச்  சோதிக்க சிவனடியாராக வேடம் பூண்டு வந்தார். விதைத்த நெல்லை எடுத்த்துக் கொண்டு வந்து ,  தோட்டத்தில் உள்ள கீரையை சமைத்து ,  வீட்டின் உதிரத்தை வெட்டி விறகாக்கி உணவு சமைத்து படைத்தார். சிவன் மெச்சி, அவருக்கு எல்லா சிவனடியார்களுக்கும்  செல்வச்  செழிப்பை வழங்கும் பதவியை அருளினார்.)
  4. மெய்ப்பொருள் நாயனார் .(தன்னுடைய எதிரியே சிவனடியார் வேடம் பூண்டு வந்த பொழுதும், தன்னுடைய உயிரைப் பிரித்த பொழுதும், அவரை சகல மரியாதைகளுடனும் திரும்பி அழைத்துச் செல்லும்படி ஆணை இட்டார்.)
  5. விறன்மிண்ட நாயனார். (சுந்தரர் ஒரு முறை திருவாரூர் கோயிலில் இருந்த அடியார்களை வணங்காமற் சென்றார் என்று அவரை நோக்கி,"அடியார்களை வணங்காமற் செல்கின்ற வன்றொண்டன் அவ்வடியார்களுக்குப் புறகு" என்று சொல்லி, இந்த தொண்டர் தொகை என்னும் நூலை சிவனே சுந்தரருக்கு ஆதி எடுத்துக் கொடுக்க வழி வகுத்த பெருமை வாய்ந்த நாயனார் இவர்.)
  6. அமர்நீதி நாயனார்(சிவனடியார்களுக்கு வஸ்திரமும், கௌபீனமும் அளித்து சேவை செய்தவர். சிவா பெருமான் நடத்திய சோதனையில், தராசோடு சிவலோகம் சென்ற பெருமை பெற்ற நாயனார்.)
ஆகிய அனைவருக்கும் தன்னை அடியவனாகச் சொல்லிக் கொண்டு முதல் பத்தியை முடித்துக் கொள்கிறார் நம் சுந்தரர்.

        இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
       ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
      கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
       எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. எறிபத்த நாயனார்
  2. ஏனாதி நாதா நாயனார்
  3. கண்ணப்ப நாயனார்
  4. குங்குலியாக் களைய நாயனார் 
  5. மனக்கஞ்சாறன் நாயனார் 
  6. அரிவாட்டாய நாயனார் 
  7. ஆனாய நாயனார்

மேல் கூறிய நாயன்மார்களும் எல்லாம் தன்னை அடியவனாகக் கார்த்திக் கொண்டு சிவனடியில் சரணாகதி செய்கிறார்  நம் சுந்தரர்.

       மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
       முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
      திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
      வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. மூர்த்தி நாயனார்
  2. முருக நாயனார்
  3. உருத்திர பசுபதி நாயனார் 
  4. திருநாளை போவார் (நந்தனார்) நாயனார் 
  5. திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் 
  6. சண்டேஷ நாயனார் 

மேற்கண்ட பத்தியில், சண்டேச நாயனரைப் பற்றி சொல்லும் பொழுது மட்டும் மூன்று வரிகள் சொல்லி, அவருக்கும் தன்னை அடியவனாக்கி கொண்டு முடிக்கிறார்.

     திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
       திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
      பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
      ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. திருநாவுக்கரசர் நாயனார் 
  2. குலச்சிறை நாயனார்
  3. பெருமிழலைக் குறும்ப நாயனார்
  4. காரைக்கால் அம்மையார் நாயனார் 
  5. அப்பூதி அடிகள் நாயனார்
  6. திருநீல நக்க நாயனார் 
  7. நமிநந்தி அடிகள் நாயனார்

       வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
       மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
      ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
       நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. திருஞான சம்பந்தர்  நாயனார் (தம்முடைய 3 ஆம் வயதிலே அன்னை உமையிடத்திலே திருப்பால் அமுது செய்து இறைவனை படத்துவங்கியவர். சைவ சமயக் குறவர்களில் முதன்மை பெற்றவர். சமணர்களை வாதத்தில் வென்று மதுரையம்பதியில் சைவ சமயத்தை நிறுவிய பெருமை கொண்டவர்).
  2. கலிக்காம நாயனார்  (சுந்தர பால் கோபம் கொண்டு தன வயிற்றை கிழித்துக்கொண்டு உயிரை நீத்துக் கொண்டு மீடனும் சுந்தரரால் உயிர்ப்பிக்கப் பெற்று சிவத்த தொண்டு செய்தவர்).
  3. திருமூல நாயனார்  (3000 ஆண்டுகள் வாழ்ந்து சிதம்பரத்திலே இருந்து திருமந்திரம் என்னும் அருமையான நூலைப் பாடியவர்.)
  4. தண்டி அடிகள் நாயனார் (பிறவிக்கு குருடனாகி இருந்தும் சிவத்த தொண்டு செய்து இறைவனை வழிபட்டு முக்தி பெற்றவர்)
  5. மூர்க்க நாயனார் (சிவனடியார்களுக்கு அமுது செய்வித்து சிஷுரூஷைகள் எல்லாம் செய்து, தம்முடைய திரவியம் எல்லாம் இழந்த பிறகு, சூதாடி அதனால் வரும் தனத்திலே மஹேஸ்வர பூஜை செய்து சிவபதம் எய்திய பெருமை கொண்டவர்)
  6. சோமாசி நாயனார் (ஷிவா பஞ்சாக்ஷரத்தை ஜபம் பண்ணுவதை தன நித்ய அனுஷ்டானமாகக் கொண்டவர். திருவற்றோரில் சுந்தரர்  இடத்து சென்று அவருடைய திருவடி சம்மந்தத்தினால் சிவபதம் அடைந்த பெருமை கொண்டவர்).

       வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
       மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
      செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்*கழறிற் றறிவார்க்கும் அடியேன்
      கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. சாக்கிய நாயனார்  ( பௌத்த மதத்தை விட்டு சிவா நெறியை தழுவி பெண்களே ரோந்து சிவனை வழிபட்டு முத்தி பெற்றவர்)
  2. சிறப்புலி நாயனார்
  3. சிறுத்தொண்ட நாயனார் ( தன்னுடைய சொந்த பிள்ளையை இறைவனுக்கு கறி அமுது செய்வித்த பெருமை கொண்டவர்)
  4. கழறிற்று அறிவார் நாயனார் 
  5. கணநாத நாயனார் (சீர்காழியில் பிறந்து சிவா தொண்டுகள் செய்து காண சம்பந்த மூர்த்தியை பூஜை செய்து கைலாசம் சென்று பூத கணங்களுக்கு தலைவன் பட்டம் பெற்றார்).
  6. கூற்றுவ நாயனார் (சேர நாட்டில் உதித்து  நடராஜர் உடைய திருப்பதங்களையே திரு முடியாக சூடி உலகத்தை ஆண்ட பெருமை கொண்டவர்).
      பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் 7.48.7
       பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
      விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
      கழற்*சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. பொய்யடிமை இல்லாத புலவர் ( அகதியற்றல் அமைக்கப் பெட்ரா தமிழ்ச் சங்கத்தில் இருந்து கொண்டு பசுமம்  ருத்ரக்ஷதாரிகளாகி, பரமேஸ்வரனான  சோமா சுந்தரக் கடவுள் பால் அடிமை செய்த கபிலர், பரணர், நக்கீரர் போன்ற புலவர்களைக் குறிக்கும் இது.)
  2. புகழ்ச் சோழ நாயனார் (ஷிவாபசாரம்  செய்த பட்டத்து  யானையை கொன்ற எறிபத்த நாயனாரிடத்திலே தன்னையும் கொன்று விடும் படி சொன்ன பெருமை கொண்ட மன்னர். கொங்கு தேசத்திலே கருவூர் என்னும் இடத்திலே ஆட்சி செய்தவர். போரிலே அறியாமல் ஒரு சைவ பக்தனைக் கொன்ற பாபத்திற்காக, அக்னி பிரவேசம் செய்து தன்னுடைய உயிரை நீத்துக் கொண்ட பெருமை வாய்த்த நாயனார் இவர்.)
  3. நரசிங்க முனையரைய நாயனார்
  4. அதிபத்த நாயனார்  (மீனவர் குடலத்திலே நாகப்பட்டநித்திலே பிறந்து, தனக்கு கிடைக்கும் மீன்களில் முதல் மீனை சிவனுக்கென்று விட்டு விடும் தொண்டு  செய்தார். ஓரு நாள் தங்க மீன் அகப்பட அதனையும் சிவனுக்கென்று விட்டு விட்டார். அப்படிப்பட்ட பெருமை கொண்டவர்).
  5. கலிக்கம்ப நாயனார் 
  6. கலிய நாயனார் (திருவிளக்கு ஏற்ற என்னை இன்மையால், தன்னுடைய இரத்தத்தினால் விளக்கேற்ற முயல, சிவன் நேராகத் தோன்றி அனுகிருஹம் செய்தார்).
  7. சத்தி நாயனார் (ஷிவா நிந்தனை செய்பவர்களுடைய நாக்கை அறிந்து விடும் விரதம் கொண்டவர்)
  8. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
      கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண்டிருந்த
       கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
      நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
      தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. கணம்புல்ல நாயனார் (தன்னுடைய செல்வம் எல்லாம் சிவத்தொண்டில் தீர்ந்த பிறகு, புல்லருந்து கொண்டு வந்து விற்று, அந்தப் பணத்தில் இறைவனுக்கு நெய் தீபம் ஏற்றிய பெருமை கொண்டவர்).
  2. காரி நாயனார்
  3. நின்றசீர் நெடுமாற நாயனார்  (கூன் பாண்டியன் என்ற மன்னன், திலகவாத்தியார் உடைய கணவர். சம்பந்தர் அருளால் சைவ நெறியை ஏற்பட்டு, சமணர்களைக் காலு மரத்தில் ஏற்றிய பெருமை கொண்டவர்).
  4. வாயிலார் நாயனார்
  5. முனையடுவார் நாயனார் (கூலிக்குப் போர் புரிந்து , அதனால் வரும் பணத்தில், சிவனடியார்களுக்கு தொண்டு செய்த பெருமை கொண்டவர்)
       கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
       காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
      மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
   பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. கழற்சிங்க நாயனார் (பரம சிவனுடைய பூஜைக்காக இருந்த மலரை முகர்ந்து விட்டாள் என்று இவருடைய  தேவியின் மூக்கை அறுத்தார் செருத்துணை நாயனார். அதைக்  கண்டு மலரை எடுத்த கையைத் தான் முதலில் அறுக்க வேண்டும் என்று, தன் மனைவியின் கையைக் கொய்த பெருமை கொண்டவர்).
  2. இடங்கழி நாயனார் (அரசனாக இருந்து சிவனடியார்களெல்லாரும் நெற்பண்டாரத்தை மாத்திரமின்றி மற்றை நிதிப் பண்டாரங்களையும் எடுத்துக் கொள்க என்று சொன்ன பெருமை கொண்ட வள்ளல்).
  3. செருத்துணை நாயனார் (மேற்கூறிய படி கழற்சிங்க நாயனாரின் மனைவி  சிவாபசாரம்   செய்தார் என்ற ஐயத்தில் , அவருடைய மூக்கைக் கொய்த பெருமை கொண்டவர்).
  4. புகழ்த்துணை நாயனார் (சிவ வேதியர் குலத்திலே உதித்து , பஞ்சம் வந்த போதும்  சிவத்தொண்டு செய்து , இறைவனே கனவில் தோன்றி பஞ்சம் தீரும் வரையில் தினமும் ஓர்  காசு தருவேன் என்று சொல்லப் பெற்ற பெருமை வாய்ந்தவர்).
  5. கோட்புலி நாயனார் (சிவனுக்கென்று வைத்திருந்த நெல்லை உண்டனர் என்று தம்முடைய சுற்றத்தார் எல்லாரையும் வாளால் கொய்திட, சிவனே நேரில் தோன்றி ,"அன்பனே! உன் கைவாளினாலே தங்கள் பாவத்தினின்றும் நீங்கிய உன் சுற்றத்தார்கள் சுவர்க்கத்தை அடைய நீ இந்தப்படியே நம்முடன் வருவாய்" என்று சொல்லி கைலாசத்துக்கு அழைத்துச் சென்ற வைபவம் கொண்ட நாயனார் இவர்.



     பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
       பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
     திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
*முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
    முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. பத்தராய்ப்பணிவார்  - (அளவுக்கடந்த சிவ பகுதி கொண்ட அடியார்கள்)
  2. பரமனையே பாடுவார்  - பரமேஸ்வரனை அல்லது வேறு ஒருவரைத் தம் வாயால் பாடாமல் நரஸ்துதி செய்யாமல் உள்ளவர்கள் என்று பொருள்.
  3. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் - தம்முடைய மனதை,  சிவனிடத்திலே ஸ்திரமாக வைத்தவர்கள் என்று பொருள்.
  4. திருவாரூர்ப் பிறந்தார்கள் - திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லாரும் சிவ பக்தி கொண்டவர்கள் என்று பொருள்.
  5. முப்போதுந் திருமேனி தீண்டுவார் - சிவ வெடியாராக இருந்து கொண்டு பரமேஸ்வர்ஸ் மூர்த்தங்களை த்ரிகாலமும் ஆராதனை பண்ணும் புண்ணியர்
  6. முழுநீறு பூசிய முனிவர் - தம்முடைய மேனி முழுவதும் திருநீரு அணிந்த மெய்யன்பர்கள் 
  7. அப்பாலும் அடிச்சார்ந்தார் - அதாவது நம்முடைய பஹரதேஷம் எங்கும் உள்ள சிவ பக்தர்களும், சுந்தரர் காலத்திற்கு முன்னும் பின்னும் உள்ள அணைத்து சிவனடியார்களையும் இது குறிக்கும்.

மகாபெரியவர்: மேற்கண்ட பத்தியில் சொல்லப்பெற்ற எல்லா லக்ஷணங்களும் உள்ளது நம்முடைய மகா பெரியாருக்கு ஒருவருக்கே. சந்திர மௌளீஸ்ஸ்வரரையும், திரிபுர சுந்தரியையும் த்ரிகாலம் பூஜை பண்ணி கொண்டு, வேதத்தையும், சாஸ்திரத்தையும், ஆகமங்களையும் சதா சர்வகாலமும் ரக்ஷித்துக் கொண்டிருந்த பெருமை இவரை அல்லாது வேறு எவருக்கும் இல்லை இந்தப் புவியிலே.

ஆதி சங்கரர் தம்முடைய அன்னபூர்ணேஸ்வரி அஷ்டகத்திலே,  சிவனே என் தந்தை, பார்வதியே   என்னுடைய அன்னை, சிவ பக்தர்கள் அனைவரையும்  என்னுடய பந்துக்கள் என்று சொன்னார்.  எப்படிப்பட்ட பெருமை பார்த்தீர்களா?

        மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
      வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
     திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
    இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
       ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.


  1. பூசலார் நாயனார் (மணக்க கோயில் கட்டி இறைவனை வழிபட்ட பெருமை கொண்டவர்)
  2. மங்கையர்க்கரசியார் (கூன் பாண்டியன் மன்னனின் மனைவி. பாண்டிய நாட்டு அரசி)
  3. நேச நாயனார் ( வஸ்திரமுங் கோவணமும் நெய்து, தம்மிடத்தில் வருஞ் சிவனடியார்களுக்கு இடையறாது கொடுத்து மஹேஸ்வரத் தொண்டு செய்தவர்.)
  4. கோச்செங்கட் சோழ நாயனார் (திருவானைக்காவல் ஸ்தலத்தில் இருந்த சிலந்தியின் அவதாரமாகப் பிறந்து  சிவத்தொண்டு செய்து பல் வேறு கோயில்கள் கட்டிய பெருமை கொண்ட மன்னன்)
  5. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்  (சம்மந்தருடைய பாடல்களை எல்லாம் தமிழ்ப் பண்ணியே இசை அமைத்து யாழில் மேஈட்டிய பெருமை கொண்டவர்).
  6. சடைய நாயனார் (சுந்தரரின் தந்தை)
  7. இசைஞானி அம்மையார் (சுந்தரரின் தாய்)
  8. சுந்தரமூர்த்தி நாயனார் (சுமையாக குறவர்களில் ஒருவரான நம் சுந்தரர்)

மாதாச பார்வதி தேவி பிதாதேவோ மஹேஸ்வர:
பாந்தவாச  சிவ பக்தாஸ்ச ஸ்வதேசோ புவனத்ரயம்  

என்று சொல்லிக் கொண்டு ஆச்சார்யர் திருவடி தொழுது  அடியார்கள் திருவடி தொழுது, திருவாரூர் விதி விடடங்கப் எபிருமானையும் கம்லாமிகையையும் தொழுது இந்தக் கட்டுரையை நம்முடைய மஹாப் பெரியவரின் படாரவிந்தங்களில் சமர்ப்பித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.