Monday, July 25, 2016

திருத்தொண்டர் தொகை - தேவாரம் கூறும் மஹாபெரியவரின் மஹாத்ம்யம் ..






        தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
       திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
       இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
       விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

சிவா பக்தர்களின் பெயர்களைச் சொல்லும் பொது நம்முடைய சுந்தரர் முதலில் தில்லை வாழ் அந்தணர்களை பற்றி  சொல்லுகின்றார். முன் சிகை வைதிக கொண்டு , சித்சபையில் நடராஜப் பெருமானுக்கு பணிவிடை செய்வைதை தம்முடைய பிறவி பாக்கியமாகக் கருதும் ஆண்டார்கள். ஞான சம்பந்தர் அவர்களைக் கண்ட பொழுது , சிவா பெருமானுடைய பூத கணங்களாகவே தோன்றினார்கள் அவர்கள். எனவே தான் சிவா பெருமானே இந்த வரியை ஆதி எடுத்துக் கொடுத்தார் நம்முடைய சுந்தரருக்கு. அதன் பிறகு

  1. திரு நீலகண்ட நாயனார்(சிவனடியார்களுக்கு திருவோடு செய்து கொடுத்து திருப்பணி செய்தவர். சிவனே நேரில் வந்து சோதித்து, அவருக்கு என்றும் பதினாறு வயது அருள பெற்ற பெருமை உடையவர்.)
  2. இயற் பகை நாயனார் (இயல்பாக உள்ள மனிதர்களுக்குப் பகையாக உள்ளவர். சிவனடியார்களுக்கு கேட்டவற்றைத் கொடுக்கும் தன்மை உள்ளவர். சிவனே வந்து அவரை சோதிக்க, அவருடைய மனைவியைக் கேட்டு, அவர் புகழை உலகெங்கும் பரவச் செய்த பெருமை கொண்டவர்.)
  3. இளையான் குடி மாறன் நாயனார் . (சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்து, பணிவிடை செய்தவர். ஒரு இரவில், மழை பெய்து வீட்டிற்குள் ஒழுக, உணவும் இல்லாத நேரத்தில் சிவனே அவரைச்  சோதிக்க சிவனடியாராக வேடம் பூண்டு வந்தார். விதைத்த நெல்லை எடுத்த்துக் கொண்டு வந்து ,  தோட்டத்தில் உள்ள கீரையை சமைத்து ,  வீட்டின் உதிரத்தை வெட்டி விறகாக்கி உணவு சமைத்து படைத்தார். சிவன் மெச்சி, அவருக்கு எல்லா சிவனடியார்களுக்கும்  செல்வச்  செழிப்பை வழங்கும் பதவியை அருளினார்.)
  4. மெய்ப்பொருள் நாயனார் .(தன்னுடைய எதிரியே சிவனடியார் வேடம் பூண்டு வந்த பொழுதும், தன்னுடைய உயிரைப் பிரித்த பொழுதும், அவரை சகல மரியாதைகளுடனும் திரும்பி அழைத்துச் செல்லும்படி ஆணை இட்டார்.)
  5. விறன்மிண்ட நாயனார். (சுந்தரர் ஒரு முறை திருவாரூர் கோயிலில் இருந்த அடியார்களை வணங்காமற் சென்றார் என்று அவரை நோக்கி,"அடியார்களை வணங்காமற் செல்கின்ற வன்றொண்டன் அவ்வடியார்களுக்குப் புறகு" என்று சொல்லி, இந்த தொண்டர் தொகை என்னும் நூலை சிவனே சுந்தரருக்கு ஆதி எடுத்துக் கொடுக்க வழி வகுத்த பெருமை வாய்ந்த நாயனார் இவர்.)
  6. அமர்நீதி நாயனார்(சிவனடியார்களுக்கு வஸ்திரமும், கௌபீனமும் அளித்து சேவை செய்தவர். சிவா பெருமான் நடத்திய சோதனையில், தராசோடு சிவலோகம் சென்ற பெருமை பெற்ற நாயனார்.)
ஆகிய அனைவருக்கும் தன்னை அடியவனாகச் சொல்லிக் கொண்டு முதல் பத்தியை முடித்துக் கொள்கிறார் நம் சுந்தரர்.

        இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
       ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
      கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
       எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. எறிபத்த நாயனார்
  2. ஏனாதி நாதா நாயனார்
  3. கண்ணப்ப நாயனார்
  4. குங்குலியாக் களைய நாயனார் 
  5. மனக்கஞ்சாறன் நாயனார் 
  6. அரிவாட்டாய நாயனார் 
  7. ஆனாய நாயனார்

மேல் கூறிய நாயன்மார்களும் எல்லாம் தன்னை அடியவனாகக் கார்த்திக் கொண்டு சிவனடியில் சரணாகதி செய்கிறார்  நம் சுந்தரர்.

       மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
       முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
      திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
      வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. மூர்த்தி நாயனார்
  2. முருக நாயனார்
  3. உருத்திர பசுபதி நாயனார் 
  4. திருநாளை போவார் (நந்தனார்) நாயனார் 
  5. திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் 
  6. சண்டேஷ நாயனார் 

மேற்கண்ட பத்தியில், சண்டேச நாயனரைப் பற்றி சொல்லும் பொழுது மட்டும் மூன்று வரிகள் சொல்லி, அவருக்கும் தன்னை அடியவனாக்கி கொண்டு முடிக்கிறார்.

     திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
       திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
      பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
      ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. திருநாவுக்கரசர் நாயனார் 
  2. குலச்சிறை நாயனார்
  3. பெருமிழலைக் குறும்ப நாயனார்
  4. காரைக்கால் அம்மையார் நாயனார் 
  5. அப்பூதி அடிகள் நாயனார்
  6. திருநீல நக்க நாயனார் 
  7. நமிநந்தி அடிகள் நாயனார்

       வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
       மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
      ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
       நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. திருஞான சம்பந்தர்  நாயனார் (தம்முடைய 3 ஆம் வயதிலே அன்னை உமையிடத்திலே திருப்பால் அமுது செய்து இறைவனை படத்துவங்கியவர். சைவ சமயக் குறவர்களில் முதன்மை பெற்றவர். சமணர்களை வாதத்தில் வென்று மதுரையம்பதியில் சைவ சமயத்தை நிறுவிய பெருமை கொண்டவர்).
  2. கலிக்காம நாயனார்  (சுந்தர பால் கோபம் கொண்டு தன வயிற்றை கிழித்துக்கொண்டு உயிரை நீத்துக் கொண்டு மீடனும் சுந்தரரால் உயிர்ப்பிக்கப் பெற்று சிவத்த தொண்டு செய்தவர்).
  3. திருமூல நாயனார்  (3000 ஆண்டுகள் வாழ்ந்து சிதம்பரத்திலே இருந்து திருமந்திரம் என்னும் அருமையான நூலைப் பாடியவர்.)
  4. தண்டி அடிகள் நாயனார் (பிறவிக்கு குருடனாகி இருந்தும் சிவத்த தொண்டு செய்து இறைவனை வழிபட்டு முக்தி பெற்றவர்)
  5. மூர்க்க நாயனார் (சிவனடியார்களுக்கு அமுது செய்வித்து சிஷுரூஷைகள் எல்லாம் செய்து, தம்முடைய திரவியம் எல்லாம் இழந்த பிறகு, சூதாடி அதனால் வரும் தனத்திலே மஹேஸ்வர பூஜை செய்து சிவபதம் எய்திய பெருமை கொண்டவர்)
  6. சோமாசி நாயனார் (ஷிவா பஞ்சாக்ஷரத்தை ஜபம் பண்ணுவதை தன நித்ய அனுஷ்டானமாகக் கொண்டவர். திருவற்றோரில் சுந்தரர்  இடத்து சென்று அவருடைய திருவடி சம்மந்தத்தினால் சிவபதம் அடைந்த பெருமை கொண்டவர்).

       வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
       மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
      செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்*கழறிற் றறிவார்க்கும் அடியேன்
      கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. சாக்கிய நாயனார்  ( பௌத்த மதத்தை விட்டு சிவா நெறியை தழுவி பெண்களே ரோந்து சிவனை வழிபட்டு முத்தி பெற்றவர்)
  2. சிறப்புலி நாயனார்
  3. சிறுத்தொண்ட நாயனார் ( தன்னுடைய சொந்த பிள்ளையை இறைவனுக்கு கறி அமுது செய்வித்த பெருமை கொண்டவர்)
  4. கழறிற்று அறிவார் நாயனார் 
  5. கணநாத நாயனார் (சீர்காழியில் பிறந்து சிவா தொண்டுகள் செய்து காண சம்பந்த மூர்த்தியை பூஜை செய்து கைலாசம் சென்று பூத கணங்களுக்கு தலைவன் பட்டம் பெற்றார்).
  6. கூற்றுவ நாயனார் (சேர நாட்டில் உதித்து  நடராஜர் உடைய திருப்பதங்களையே திரு முடியாக சூடி உலகத்தை ஆண்ட பெருமை கொண்டவர்).
      பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் 7.48.7
       பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
      விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
      கழற்*சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. பொய்யடிமை இல்லாத புலவர் ( அகதியற்றல் அமைக்கப் பெட்ரா தமிழ்ச் சங்கத்தில் இருந்து கொண்டு பசுமம்  ருத்ரக்ஷதாரிகளாகி, பரமேஸ்வரனான  சோமா சுந்தரக் கடவுள் பால் அடிமை செய்த கபிலர், பரணர், நக்கீரர் போன்ற புலவர்களைக் குறிக்கும் இது.)
  2. புகழ்ச் சோழ நாயனார் (ஷிவாபசாரம்  செய்த பட்டத்து  யானையை கொன்ற எறிபத்த நாயனாரிடத்திலே தன்னையும் கொன்று விடும் படி சொன்ன பெருமை கொண்ட மன்னர். கொங்கு தேசத்திலே கருவூர் என்னும் இடத்திலே ஆட்சி செய்தவர். போரிலே அறியாமல் ஒரு சைவ பக்தனைக் கொன்ற பாபத்திற்காக, அக்னி பிரவேசம் செய்து தன்னுடைய உயிரை நீத்துக் கொண்ட பெருமை வாய்த்த நாயனார் இவர்.)
  3. நரசிங்க முனையரைய நாயனார்
  4. அதிபத்த நாயனார்  (மீனவர் குடலத்திலே நாகப்பட்டநித்திலே பிறந்து, தனக்கு கிடைக்கும் மீன்களில் முதல் மீனை சிவனுக்கென்று விட்டு விடும் தொண்டு  செய்தார். ஓரு நாள் தங்க மீன் அகப்பட அதனையும் சிவனுக்கென்று விட்டு விட்டார். அப்படிப்பட்ட பெருமை கொண்டவர்).
  5. கலிக்கம்ப நாயனார் 
  6. கலிய நாயனார் (திருவிளக்கு ஏற்ற என்னை இன்மையால், தன்னுடைய இரத்தத்தினால் விளக்கேற்ற முயல, சிவன் நேராகத் தோன்றி அனுகிருஹம் செய்தார்).
  7. சத்தி நாயனார் (ஷிவா நிந்தனை செய்பவர்களுடைய நாக்கை அறிந்து விடும் விரதம் கொண்டவர்)
  8. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
      கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண்டிருந்த
       கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
      நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
      தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. கணம்புல்ல நாயனார் (தன்னுடைய செல்வம் எல்லாம் சிவத்தொண்டில் தீர்ந்த பிறகு, புல்லருந்து கொண்டு வந்து விற்று, அந்தப் பணத்தில் இறைவனுக்கு நெய் தீபம் ஏற்றிய பெருமை கொண்டவர்).
  2. காரி நாயனார்
  3. நின்றசீர் நெடுமாற நாயனார்  (கூன் பாண்டியன் என்ற மன்னன், திலகவாத்தியார் உடைய கணவர். சம்பந்தர் அருளால் சைவ நெறியை ஏற்பட்டு, சமணர்களைக் காலு மரத்தில் ஏற்றிய பெருமை கொண்டவர்).
  4. வாயிலார் நாயனார்
  5. முனையடுவார் நாயனார் (கூலிக்குப் போர் புரிந்து , அதனால் வரும் பணத்தில், சிவனடியார்களுக்கு தொண்டு செய்த பெருமை கொண்டவர்)
       கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
       காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
      மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
   பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. கழற்சிங்க நாயனார் (பரம சிவனுடைய பூஜைக்காக இருந்த மலரை முகர்ந்து விட்டாள் என்று இவருடைய  தேவியின் மூக்கை அறுத்தார் செருத்துணை நாயனார். அதைக்  கண்டு மலரை எடுத்த கையைத் தான் முதலில் அறுக்க வேண்டும் என்று, தன் மனைவியின் கையைக் கொய்த பெருமை கொண்டவர்).
  2. இடங்கழி நாயனார் (அரசனாக இருந்து சிவனடியார்களெல்லாரும் நெற்பண்டாரத்தை மாத்திரமின்றி மற்றை நிதிப் பண்டாரங்களையும் எடுத்துக் கொள்க என்று சொன்ன பெருமை கொண்ட வள்ளல்).
  3. செருத்துணை நாயனார் (மேற்கூறிய படி கழற்சிங்க நாயனாரின் மனைவி  சிவாபசாரம்   செய்தார் என்ற ஐயத்தில் , அவருடைய மூக்கைக் கொய்த பெருமை கொண்டவர்).
  4. புகழ்த்துணை நாயனார் (சிவ வேதியர் குலத்திலே உதித்து , பஞ்சம் வந்த போதும்  சிவத்தொண்டு செய்து , இறைவனே கனவில் தோன்றி பஞ்சம் தீரும் வரையில் தினமும் ஓர்  காசு தருவேன் என்று சொல்லப் பெற்ற பெருமை வாய்ந்தவர்).
  5. கோட்புலி நாயனார் (சிவனுக்கென்று வைத்திருந்த நெல்லை உண்டனர் என்று தம்முடைய சுற்றத்தார் எல்லாரையும் வாளால் கொய்திட, சிவனே நேரில் தோன்றி ,"அன்பனே! உன் கைவாளினாலே தங்கள் பாவத்தினின்றும் நீங்கிய உன் சுற்றத்தார்கள் சுவர்க்கத்தை அடைய நீ இந்தப்படியே நம்முடன் வருவாய்" என்று சொல்லி கைலாசத்துக்கு அழைத்துச் சென்ற வைபவம் கொண்ட நாயனார் இவர்.



     பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
       பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
     திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
*முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
    முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
       ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

  1. பத்தராய்ப்பணிவார்  - (அளவுக்கடந்த சிவ பகுதி கொண்ட அடியார்கள்)
  2. பரமனையே பாடுவார்  - பரமேஸ்வரனை அல்லது வேறு ஒருவரைத் தம் வாயால் பாடாமல் நரஸ்துதி செய்யாமல் உள்ளவர்கள் என்று பொருள்.
  3. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் - தம்முடைய மனதை,  சிவனிடத்திலே ஸ்திரமாக வைத்தவர்கள் என்று பொருள்.
  4. திருவாரூர்ப் பிறந்தார்கள் - திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லாரும் சிவ பக்தி கொண்டவர்கள் என்று பொருள்.
  5. முப்போதுந் திருமேனி தீண்டுவார் - சிவ வெடியாராக இருந்து கொண்டு பரமேஸ்வர்ஸ் மூர்த்தங்களை த்ரிகாலமும் ஆராதனை பண்ணும் புண்ணியர்
  6. முழுநீறு பூசிய முனிவர் - தம்முடைய மேனி முழுவதும் திருநீரு அணிந்த மெய்யன்பர்கள் 
  7. அப்பாலும் அடிச்சார்ந்தார் - அதாவது நம்முடைய பஹரதேஷம் எங்கும் உள்ள சிவ பக்தர்களும், சுந்தரர் காலத்திற்கு முன்னும் பின்னும் உள்ள அணைத்து சிவனடியார்களையும் இது குறிக்கும்.

மகாபெரியவர்: மேற்கண்ட பத்தியில் சொல்லப்பெற்ற எல்லா லக்ஷணங்களும் உள்ளது நம்முடைய மகா பெரியாருக்கு ஒருவருக்கே. சந்திர மௌளீஸ்ஸ்வரரையும், திரிபுர சுந்தரியையும் த்ரிகாலம் பூஜை பண்ணி கொண்டு, வேதத்தையும், சாஸ்திரத்தையும், ஆகமங்களையும் சதா சர்வகாலமும் ரக்ஷித்துக் கொண்டிருந்த பெருமை இவரை அல்லாது வேறு எவருக்கும் இல்லை இந்தப் புவியிலே.

ஆதி சங்கரர் தம்முடைய அன்னபூர்ணேஸ்வரி அஷ்டகத்திலே,  சிவனே என் தந்தை, பார்வதியே   என்னுடைய அன்னை, சிவ பக்தர்கள் அனைவரையும்  என்னுடய பந்துக்கள் என்று சொன்னார்.  எப்படிப்பட்ட பெருமை பார்த்தீர்களா?

        மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
      வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
     திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
    இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
       ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.


  1. பூசலார் நாயனார் (மணக்க கோயில் கட்டி இறைவனை வழிபட்ட பெருமை கொண்டவர்)
  2. மங்கையர்க்கரசியார் (கூன் பாண்டியன் மன்னனின் மனைவி. பாண்டிய நாட்டு அரசி)
  3. நேச நாயனார் ( வஸ்திரமுங் கோவணமும் நெய்து, தம்மிடத்தில் வருஞ் சிவனடியார்களுக்கு இடையறாது கொடுத்து மஹேஸ்வரத் தொண்டு செய்தவர்.)
  4. கோச்செங்கட் சோழ நாயனார் (திருவானைக்காவல் ஸ்தலத்தில் இருந்த சிலந்தியின் அவதாரமாகப் பிறந்து  சிவத்தொண்டு செய்து பல் வேறு கோயில்கள் கட்டிய பெருமை கொண்ட மன்னன்)
  5. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்  (சம்மந்தருடைய பாடல்களை எல்லாம் தமிழ்ப் பண்ணியே இசை அமைத்து யாழில் மேஈட்டிய பெருமை கொண்டவர்).
  6. சடைய நாயனார் (சுந்தரரின் தந்தை)
  7. இசைஞானி அம்மையார் (சுந்தரரின் தாய்)
  8. சுந்தரமூர்த்தி நாயனார் (சுமையாக குறவர்களில் ஒருவரான நம் சுந்தரர்)

மாதாச பார்வதி தேவி பிதாதேவோ மஹேஸ்வர:
பாந்தவாச  சிவ பக்தாஸ்ச ஸ்வதேசோ புவனத்ரயம்  

என்று சொல்லிக் கொண்டு ஆச்சார்யர் திருவடி தொழுது  அடியார்கள் திருவடி தொழுது, திருவாரூர் விதி விடடங்கப் எபிருமானையும் கம்லாமிகையையும் தொழுது இந்தக் கட்டுரையை நம்முடைய மஹாப் பெரியவரின் படாரவிந்தங்களில் சமர்ப்பித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.


3 comments:

  1. கலைமலிந்த சீர்நம்பி means what?

    ReplyDelete
    Replies
    1. Does it mean "the one without proper eye sight" as Kannapar rendered both his eyes to the lord?

      Delete