Monday, March 6, 2017

திருக்குறளும் தரும சாஸ்திரங்களும் - வர்ணாஸ்ரம தருமம்

द्रविड ग्रन्थ (तिरुक्कुरळ्) च धर्म शास्त्राणि - वर्णस्रम धर्माणि 

தமிழ் மொழியிலே பிராம்மணர்களை மட்டுமே  துவிஜர் அல்லது பார்ப்பனர்கள் என்று கூறுவார். ஆனால் மனு, தம்முடைய தர்ம சாஸ்திரத்தில் முதல் மூன்று வருணங்களையுமே துவிஜர்  என்று சொல்லுகின்றார்- அதாவது பிரம்மோபதேசம் பெற்று, தம்முடைய உண்மையான ஆத்ம ஸ்வரூபம் அல்லது ஆன்ம ஞானம் பெறுபவர்கள் என்று பொருள் படும்.


१.८८ अध्यापनमध्ययनं  यजनं  याजनं  तथा  |
दानं  प्रतिग्रहं  चैव  ब्राह्मणानामकल्पयत्  ||
  1. தானம் அளித்தல் (ஈதல்)
  2. தானம் வாங்கி கொள்ளல் (ஏற்றல்)
  3. வேதங்களைக்  கற்றல், (ஓதல்)
  4. வேதங்களைக்  கற்றுவித்தல் (ஓதுவித்தல்)
  5. வேள்விகளை நிகழ்த்துதல் (வேட்டல்)
  6. வேள்விகளை நிகழ்த்துவித்தல் (வேட்பித்தல்)
ஆகிய 6 தொழில்களை உடையவர்கள் அந்தணர்கள்.
இதனையே திருமூலரும் தெள்ளிய தமிழில் சொல்லியிருக்கின்றார்:

5.1 அந்தணர் ஆவோர் அறு தொழில் பூண்டு உளோர்
செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்
நம்தவ நல் கருமத்து நின்று ஆங்கு இட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே.

१.८९ प्रजानां  रक्षणं  दानमिज्या अध्ययनमेव  च  |
विषयेष्वप्रसक्तिश्च  क्षत्रियस्य  समासतः  ||

அதே போல , க்ஷத்ரியர்கள் எனப்படும் அரசர்கள் - 
  1. நாட்டுப் மக்களைக் காத்தல்
  2. வேள்விகளை நடத்துதல்(அந்தணர்களைக் கொண்டு), 
  3. தானங்கள் கொடுத்தல், 
  4. வேதங்களைக் கற்றல் மற்றும் தம்முடைய (ஐவகை) 
  5. இந்திரியங்களை அடக்கிக்கொள்ளுதல் 
என்ற கடமைகளை செய்ய வேண்டும்.

 இதனைத்தான் நம் வள்ளுவரும்,

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

அதாவது அந்நிய மன்னர்களிடத்தில் இருந்து நாட்டைக் காத்தல், குடி மக்களைக் காத்தல் மற்றும் குற்றம் செய்தவர்களைத் தண்டித்தல் ஆகிய தோழிகளை செய்வது வேந்தர்க்கு அழகு என்கிறார் வள்ளுவர்.

மனு, ஒரு அரசன் இந்திரன், யமன், வருணன், சூரியன் சந்திரன், மற்றும் நிலம் ஆகிய அனைத்துமாய் தன்னுடைய பிரஜைகளைக் காக்க வேண்டும் என்கிறார். 

इन्द्रस्यार्कस्य  वायोश्च  यमस्य  वरुणस्य  च |
चन्द्रस्याग्नेः  पृथिव्याश्च  तेजोवृत्तं  नृपश्चरेत ||
  1. இந்திரன் மழைப் பொழிவிக்கும் கடவுள் - அவனைப் போல தன நாட்டு மக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும்.
  2. சூரியன்   தண்ணீரை ஆவிக்குவான் - அதே போல, மக்களிடத்தில் நியாயமான வரிகளை பெற வேண்டும் 
  3. வாயு எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பான் -அதே  போல அரசன் உளவு  செய்து தன நாட்டு நடப்புகளைத் அறிந்து கொள்ள வேண்டும் 
  4. யமன் காலத்தை வைத்து எல்லோரையும் கண்டிப்பான் - அதே போல ஒரு வேந்தன், விருப்பு வெறுப்பு இல்லாமல் எல்லோரிடத்திலும் தன்னுடைய இராயன்ன்மையை நடத்த வேண்டும்.
  5. வருணன் தன பச்சக் கயிற்றால் தீயோர்களைப் பிடித்து இழுப்பந் - அதே போல் ஒரு அரசனும் தீமை இழப்பவர்களை தண்டிக்க வேண்டும்.
  6. முழு நிலவு எப்படி எல்லோராலும் வரவேற்கப் படுகின்றதோ,  அதே போல் ஒரு அரசனும் தன்னுடைய பிரஜைகளால் வரவேற்கப் பட வேண்டும். 
  7. குற்றம் புரிந்தவர்களையும், சூழ்ச்சி செய்பவர்களையும் அவன் தீயைப் போல அளிக்கட்டும்
  8. பூமித்தாய் எப்படி எல்லோரையும் சமமாகப் பார்க்கின்றாளோ, அதே போல் ஒரு அரசன் தன்னுடைய பிரஜைகள் எல்லோரையும் சமமாகப் பார்க்கட்டும் 
இதனைத்தான் வள்ளுவர் - 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.

அதாவது வேத பராயணத்திற்கும் , தர்ம சாஸ்திரத்திற்கும், (அவற்றை அடிப்படையாகக் கொண்டு) துவக்கமாக இருப்பது அரசுனுடைய செங்கோல் என்று மேற்கூறிய ஸ்லோகத்தை அழகாக்க கூறுகின்றார் நம் வள்ளுவர்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.

வள்ளுவர் இங்கு  கொடுங்கோல் ஆட்சி செய்யும் அரசனுடைய நாட்டில், மாடுகள் பால் கரவாது, அதே போல பார்ப்பனர்கள் வேள்விகள் நடத்த மாட்டார்கள் - அதனால் மழை  இன்றி பஞ்சமும், பட்டினியும் சூழ்ந்து கொள்ளும் அவன் நாட்டில் என்று சொல்கின்றார்.

१.९० पशूनां  रक्षणं  दानमिज्या .अध्ययनमेव  च  |
वणिक्पथं  कुसीदं  च  वैश्यस्य  कृषिमेव  च ||

மூன்றாம் வர்ணமாகிய வைசியர்கள் -
  1. கால்நடைகளைக் காத்தல், 
  2. தானங்கள் அளித்தல்,  
  3. வேதங்களைக் கற்றல், 
  4. வேள்விகள் செய்தல், 
  5. வியாபாரம் செய்தல், 
  6. பணம் (கடன்) கொடுத்தல், 
  7. வேளாண்மை செய்தல் 
ஆகிய கடமைகளை செய்ய வேண்டும். இந்தக் கணக்கில் பார்த்தால் நம் தமிழ் நாட்டில் உள்ள பிரிவுகள் (90 %) மக்கள் எல்லோருமே வைசியர்கள் எனக் கொள்ளல் வேண்டும்.

அதாவது வணிகர் அல்லது வைசியர்களில் மூன்று வகை:

  1. கோ அல்லது பஷு வைசியர் ( கால் நடை பராமரிப்பவர்கள்)
  2. பூ வைசியர் (வேளாண்மை செய்ப்பவர்கள்)
  3. தன வைசியர் (வணிகம், மற்றும் வாங்கி, கடன் கொடுக்கும் செட்டியார்கள்)

நம் நாட்டிலே உள்ள வேளாளர், கால் நடை பராமரிப்பாளர், மற்றும் எல்லா வகையான செட்டியார்கள் எல்லோருமே வைசியர்கள் என்று கொள்ள வேண்டும்.சிரேஷ்டி என்ற வாடா மொழிச் சொல்லே செட்டி அல்லது செட்டியார் என்ற பதம் நம் தமிழிலே வழங்கப் படுகின்றது.

१.९१ एकमेव  तु  शूद्रस्य  प्रभुः  कर्म  समादिशत्  |
एतेषामेव  वर्णानां  शुश्रूषामनसूयया ||

நான்காம் வருணத்தவர்களாகிய சூத்திரர்கள் மேற்கூறிய மூன்று வருணங்களுக்கும் சேவைகள் செய்தல் அல்லது வேலை பார்த்தால் ஆகும். கடும் உழைப்பாளர்கள் ஆகிய படியினால் வேறு விசேஷமான கடமைகள் ஒன்றும் இந்த நான்காம் வருணத்தவர்களுக்குச் சொல்ல படவில்லை. 

No comments:

Post a Comment