உபநிடதங்களில் முதன்மையானது மாண்டூக்ய உபநிடதம் - இது அதர்வண வேதத்தில் உள்ளது. தன்னுடைய ஆன்மாவை உணர வேண்டும் என்றால் இந்த ஒரு உபநிடதம் போதும் என்கிறார் இராமர். அப்படி என்ன தான் இருக்கின்றது என்றால்? "ஓம் இதி ஏக அக்ஷரம் ப்ரம்ம " என்ற வாக்கியம் அந்த உபநிடதத்தில் உள்ளது. ஓம்காரத்தை மூன்றாகப் பிரித்து, ஆ, ஊ, ம் என்று பிரித்து , அதனை - ஒரு ஜீவனின் மூன்று அவஸ்தைகள் ஜாகிரத் (விழித்து இருத்தல்), ஸ்வப்ன (கனவு) , சுஷுப்தி (ஆழ்ந்த உறக்கம் ) என்ற நிலைகளோடு ஒப்பிட்டு, அந்த மூன்று நிலைகளுக்கும், அப்பாற்பட்டது தான் ஆன்ம போதம் என்று சொல்கின்றது. அதாவது ஓம் என்ற எழுத்தில் மூன்று பாகங்கள், அம்மூன்றயும் தாண்டின நான்காம் பதமே(ஓசை இல்லாதது) ப்ரஹ்மம் என்றும் அதுவே இந்த ஆன்மாவின் மூன்று நிலைகளுக்கும் சாக்ஷி என்றும் சொல்லும் மிக உன்னதமான உபநிடதம் மாண்டுக்யம்.
उपनिषदों मे बाहुतः प्रमाणिक है माण्डुक्य उपनिषद | उसमे बोला गाय है कि ॐ इत्येकाक्षरं ब्रह्म ! उसका मतलब् है, ओंकार हि ब्रम्म क स्वरूप है ! इस जीव के अवस्थावों को तीन भाग कर के, - जाग्रद् स्वप्न सुषुप्ति अवस्थों कि साक्षिभूतः है उस आत्मबोध - ऐसे बोला गाय है उस उपनिषद मे.
उस प्रकार सब् कुछ मन्त्रों ओंकार से हि पैदा हुये! ॐ नम शिवाय - इत्यादि मन्त्रों सुब् ओंकार से हि शुरु होत है. लेकिन राम तारक मन्त्र सिर्फ़् राम है - उस मे ओंकार ओर् कुच नहि है - उस मन्त्र जीव ओर् ब्रम्म के समाधि स्थति के रूप है | इतने गुण है राम मन्त्रे मे | उसको अनवरद जाप् कर्णे से इस आत्मस्वरूप को अपने अन्दर देक सकते हैं |
இந்த ஓம்காரத்தில் இருந்தே எல்லா மந்திரங்களும் பிறந்தன என்பது நம் நம்பிக்கை. அப்படி இருக்க, இராம தாரக மந்திரம் மட்டும் ஓம்காரத்தின் மாற்றுருவமாக உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், எந்த உபதேசமும் இல்லாமல், யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ராமா என்று இடைவிடாது சொல்லிக்கொண்டே இருந்தால் போதும்.வாக்மிகி இதனை சொல்லி என்ன மேன்மைகள் அடைந்தார் என்று நமக்கு எல்லோருக்கும் தெரியும்.
எப்போதும் மந்திரத்தையோ நாமத்தையோ உச்சரித்துக் கொண்டிருப்பது அஜபா எனப்படும். எந்நேரமும் விழித்திருக்கும்போதும் தூங்கும்போதும் எந்நேரமும் எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பது.
இருதயத்தில் இறைவனை உணரும்வரை உச்சரித்துக் கொண்டிருப்பது. இந்த அஜபா ஜபம் உடல் மனம் ஆத்மா உங்கள் உடல் செல்கள் அனைத்திலும் ஊடுருவி பாயும். இறைவனுக்கும நமக்கும் இடைவிடாத தொடர்பு கிடைக்கும்.
இதற்கு உதாரணமாக ராம் அனுமனை சொல்லலாம். சீதாதேவிக்கு எப்போதும் அனுமன் மீது சிறிது பொறாமை ஏனெனில் ராமனும் சீதாவும் ஒன்றாக இருக்கும் போது அனுமன் வந்துவிட்டால் கூட ராமன் அனுமனையே கண்களால் பார்த்துக் கொண்டிருப்பார். இதை ஒருநாள் ராமன் கண்டுபிடித்து விட்டார்.
அனுமனின் உடலிலிருந்து ரோமத்தை பிய்த்து சீதாவின் காதருகில் கொண்டு சென்றார். அந்த ரோமத்திலிருந்து ராம்ராம் என்ற ஓசை கேட்டுக் கொண்டேயிருந்தது. ராமர் சொன்னார் இப்போது புரிகிறதா சீதா நான் அவனைப் பார்க்கவில்லை. அவன் உறுதியான ஜபம் அவனுள் பரவி அது என்னை தானாக அவன் பக்கம் இழுக்கிறது....என்று
No comments:
Post a Comment