திருவள்ளுவரும் மனுவும் ஒரே விதமான பார்வையை உடையவர்கள் - இந்த புலால் விஷயத்தில். மனு வாழ்வதற்கான சமுதாய நீதியை கூறுகின்ற படியினால், எல்லா விதமான மக்களுக்கும் வேண்டிய நியமங்களைக் கூறுகின்றார். அவர்கள் இருவரும் கூறும் நியமங்களை இங்கு பார்ப்போம்.
५.२७ प्रोक्षितं भक्षयेन् मांसं ब्राह्मणानां च काम्यया |
यथाविधि नियुक्तस्तु प्राणानामेव चात्यये ||
५.३१ यज्ञाय जग्धिर् मांसस्य इत्येष दैवो विधिः स्मृतः |
अतो अन्यथा प्रवृत्तिस्तु राक्षसो विधिरुच्यते ||
இதனைத்தான் திருவல்லுறவரும் இவ்வாறு கூறுகின்றார்:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
தன்னுடைய உடலை வளர்ப்பதற்காகவே வேற்று உயிர்களின் உடலை உண்பவர்களுக்கு அருள் என்பது இருக்காது என்று. (தன்னலமற்ற செயலாகிய வேள்விகளுக்கு மட்டுமே மாமிசம் உரியவை)
५.३३ नाद्यादविधिना मानसं विधिज्ञो अनापदि द्विजः |
जग्ध्वा ह्यविधिना मांसं प्रेतस्तैरद्यते अवशः ||
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
வள்ளுவர் இங்கு அதே கருத்தைத்தான் சொல்லுகின்றார் - ஒரு உயிரை கொள்ளுதல் புண்ணியம் அல்ல; அதே போல கொன்ற உயிரின் உடலை உண்பது என்பது தருமத்திற்கு உகந்த காரியம் அல்ல. உறியைக் கோலாலம் இருப்பதே புண்ணியம் ஆகும்.
५.३८ यावन्ति पशुरोमाणि तावत्कृत्वो ह मरणं |
वृथापशुघ्नः प्राप्नोति प्रेत्य जन्मनि जन्मनि ||
5-38 அப்படி ஒருவன் உலக நன்மை கருதி வேள்விகள் நடக்கும் சமயத்தில் அல்லாது, தன்னுடைய உடலை வளர்ப்பதற்காக வேற்று உயிரைக் கொல்வான் ஆகில், அந்த ஜென்மத்திற்குப் பின் வரக்கூடிய பல பிறவிகளில் - கொல்லப்பெற்ற மிருகத்தின் உடலில் எத்துணை உரோமங்கள் இருந்தனவோ அத்துணை பிறவிகளில் அவன் எதிர் பாராமல் கொல்லப்பற்று , துன்புறுத்தப்பெறுவான். (மழைக்காகவும் , தேவகாரியத்திற்க்காக்வும் மட்டுமே பலியிட வேண்டும் என்பது திண்ணமாகிறது)
५.३९ यज्ञार्थं पशवः सृष्टः स्वयमेव स्वयंभुवा |
यज्ञो अस्य भूत्यै सर्वस्य तस्माद् यज्ञे वधो अवधः ||
५.४० ओषध्यः पशवो वृइक्षास् तिर्यञ्चः पक्षिणस्तथा |
यज्ञार्थं निधनं प्राप्ताः प्राप्नुवन्त्युत्सृइतीः पुनः ||
5-40 யஞத்தில் பலியிடப் படுகிற பறவைகள், மிருகங்கள், செடி கொடிகள் எல்லாமே அடுத்த பிறவிகளில் மேன்மை அடைகின்றன - ஏனென்றால் உலகத்தின் க்ஷேமத்திற்காக, அவை தம்மைத் தாமே அர்ப்பணித்த படியினால்.
५.४५ यो अहिम्सकानि भूतानि हिमस्त्यात्मसुख इच्छया |
स जीवाम्श्च मृतश्चैव न क्वचित् सुखमेधते ||
५.४६ यो बन्धनवधक्लेशान् प्राणिनां न चिकीर्षति |
स सर्वस्य हितप्रेप्सुः सुखमत्यन्तमश्नुते ||
5-46 இப்படி வேற்று உயிர்களைத் துன்புறுத்தாமல் இருப்பவன், எல்லையில்லாத இன்பத்தை அடைகிறான்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
வள்ளுவரும் இதனையே கூறுகின்றார். மற்ற உயிரிகளைக் கொல்லாமல், மாமிசத்தையும் உண்ணாமல் இருப்பவர்களை எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும் என்கிறார். சாஸ்திரங்களின் படி கிருஹஸ்தர்கள் மட்டுமே வேள்வி செய்ய வேண்டும். சன்யாசிகள் யாகங்கள் செய்ய மாட்டார்கள் - எனவே தான் இதனை வள்ளுவர் துறவற நீதியாகக் கூறுகின்றார்.
५.५१ अनुमन्ता विशसिता निहन्त क्रयविक्रयी |
संस्कर्ता चोपहर्ता च खादकश्चेति घातकाः ||
- மிருகக்கொலையை நடத்த அனுமதிப்பவன்
- மிருகத்தைக் கொல்பவன்
- கொன்ற மிருகத்தின் சடலத்தை விற்பவன் மற்றும் வாங்குபவன்
- மாமிசத்தை சமைப்பவன்
- சமைத்த மாமிசத்தைப் பரிமாறுபவன்
- மாமிசத்தை உண்பவன்
தருமத்தின் பிடியில் இருந்து யாருமே தப்ப இயலாது. மேற்கூறிய அனைவருமே கொலையாளிகள் என்கிறார் மனு.
५.५३ वर्षे वर्षे अश्वमेधेन यो यजेत शतं समाः |
मांसानि च न खादेद् यस्तयोः पुण्यफलं समं ||
5-53 ஒரு நூறு வருட காலத்தில், ஒவ்வொரு வருடமும் அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறுகின்றான், மாமிசத்தை உண்ணாமல் இருப்பவன். என்ன பெருமை பாருங்களேன்! (இன்றய களங்களில் யஃனத்தில் அரிசி மாவால் செய்த ஆட்டுக்குட்டியை பாலி கொடுத்து விடுகின்றார்கள். எனவே யஃனத்திலும் கூட பலியிட வேண்டிய அவைசாயமே இல்லை).
நம் வள்ளுவரும் இதனயே:
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
மேற்கூறிய மனுவின் ஸ்லோகத்தின் தமிழாக்கமே இந்தத் திருக்குறள் என்றால் மிகையாகாது! மாமிசத்தை உண்ணாமல் இருப்பது என்பது எத்துணை புண்ணியம் என்று நீங்களே பாருங்களேன்! நெய், அன்னம் ஆகியவற்றை அக்கினியில் சொரிந்து ஆயிரும் வேள்விகள் செய்வதை விடாய் புண்ணியம் தரக்கூடியது ஒரு உயிரைக் கொள்ளாமல் இருப்பதும், அதன் மாமிசத்தை உனது இருந்தாலும் என்கிறார் நம் வள்ளுவர்.
திருமூலரும் இதனையே பின்வருமாறு கூறுகின்றார்:
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே.
५.५६ न मांसभक्षणे दोषो न मद्ये न च मैथुने |
प्रवृत्तिरेषा भूतानां निवृत्तिस्तु महाफल ||
5-56 இந்த சமுதாயத்திற்கு வேண்டிய நீதிகளை வழங்கும் பொருட்டு இங்கு மனு சொல்கின்றார் - மது அருந்துதல், மாமிசம் உண்ணுதல் மற்றும் உடலுறவு கொள்ளுதல் (கலவி) - ஆகிய இந்த மூன்று செயல்களுமே சாமான்ய மனிதர்களின் வாழ்க்கை முறை. இவற்றைச் செய்வதினால் எந்தப் பாபமும் இல்லை - ஆனால் இவற்றைத் தவிர்ப்பதால் பெரிய அளவில் நற்பயன்கள் கிடைக்கும் என்கிறார் மனு.
இன்றய சமுதாயத்திற்கு ஏற்ற ஸ்லோகம் இதுவே என்று கொள்ள வேண்டும். ஆனால் பல இடங்களிலும் மாமிசத்தை உண்பவனும், கள்ளைக் குடிப்பவனும் ஜாதி பிரஸ்தம் - குலம் தாழ்ந்தவன் ஆகி விடுகின்றான் என்று மனுவே சொல்லுகின்றார்.
No comments:
Post a Comment